என் மலர்tooltip icon

    சீனா

    • சீன அதிபர் ஜின்பிங் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.
    • சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் நடக்கிறது.

    பீஜிங்

    சீன அதிபர் ஜின்பிங், 2-வது தடவையாக அதிபராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.

    இருப்பினும், அதிபருக்கான 10 ஆண்டு பதவிக்கால உச்சவரம்பு கடந்த 2017-ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டு விட்டது. இதனால், ஜின்பிங் தனது ஆயுட்காலம் வரை அதிபராக இருக்கலாம்.

    சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். 2017-ம் ஆண்டுக்கு பிறகு, அடுத்த மாதம் இந்த மாநாடு நடக்கிறது.

    மாநாட்டில், கட்சியின் சட்ட திட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவர் தற்போது, அதிபராக மட்டுமின்றி, ராணுவத்தின் தலைவராகவும், கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.

    இனிமேல், அவர் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக உயர்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த நிறுவனர் மாவோ மட்டுமே கட்சி தலைவர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு பிறகு ஜின்பிங் தலைவர் ஆகிறார். ஏற்கனவே அவருக்கு 'முக்கிய தலைவர்' என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஜின்பிங் இன்னும் 5 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கோ அதிபராக இருப்பதற்கு கட்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதுவரை, மறைந்த மாவோ மட்டுமே 2 தடவைக்கு மேல் அதிபராக இருந்துள்ளார். மாவோவுக்கு பிறகு அந்த பெருமையை ஜின்பிங் பெறுகிறார்.

    இதுதவிர, கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், புதிய பிரதமர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏனென்றால், தற்போதைய பிரதமர் லி கேகியாங் ஓய்வுபெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

    கட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் ஜின்பிங்கின் கரம் வலுவடையும் என்றும், அவருக்கு சவால்களே இருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • சீனாவில் படிப்பதில் உள்ள சிரமங்களையும், விதிகளையும் பட்டியலிட்டுள்ளது.
    • சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பினாலும் இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்.

    பீஜிங்

    இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படித்தார்கள். ஆனால் கொரோனா காரணமாக நாடு திரும்பிய அவர்கள் விசா தடை காரணமாக வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் தற்போது 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் சீன பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர்.

    2 ஆண்டு விசா தடைக்கு பின்னர் இப்போதுதான் சீனா குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு, அங்கு வருவதற்கு விசா வழங்க தொடங்கி உள்ளது. ஆனால் அவர்களில் பலரும் நேரடி விமான சேவையின்றி தவிக்கின்றனர். இதையொட்டி இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை இன்னும் நீடிக்கிறது.

    இதற்கு மத்தியில் சீன மருத்துவ கல்லூரிகள் இந்தியா உள்ளிட்ட பிற மாணவர்களை மருத்துவ படிப்புக்காக பதிவு செய்யத்தொடங்கி உள்ளது.

    இந்தநிலையில் சீனாவில் மருத்துவம் படிக்க விரும்புகிற மாணவர்களுக்கு விரிவான ஆலோசனை குறிப்புகளை பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதில் சீனாவில் இந்திய மாணவர்கள் அனுபவிக்கிற சிரமங்கள், இந்தியாவில் மருத்துவ பயிற்சி பெறுவதற்கு எதிர்கொள்ள வேண்டிய கடுமையான நடைமுறைகள் உளளிட்டவை கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளன.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் பெற்ற இந்திய மாணவர்கள் 40 ஆயிரத்து 147 பேர், இந்திய மருத்துவ கவுன்சில் தேர்வினை 2015-2021 கால கட்டத்தில் எழுதினர். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 6,387 பேர் மட்டும்தான்.

    * சீனாவில் அந்த காலகட்டத்தில் 45 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 16 சதவீதத்தினர்தான். சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    * சீனாவில் கட்டணங்கள் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழகம் மாறுபடுகின்றன. சேர்க்கைக்கு முன்பாக மாணவர்கள் பல்கலைக்கழகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு இதுபற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

    * சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டு, 5 ஆண்டு மருத்துவ படிப்பு, அத்துடன் ஓராண்டு பயிற்சிக்கு பட்டியலிடப்பட்டுள்ள 45 மருத்துவ கல்லூரிகளைத் தவிர்த்து வேறு எங்கும் சேரக்கூடாது.

    * சீன அரசு ஆங்கில மொழியில் 45 பல்கலைக்கழகங்களில்தான் மருத்துவ படிப்பை வழங்குகிறது

    * மருத்துவ பயிற்சி அமர்வுக்கு சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். அதுவும் எச்.எச்.கே.-4 அளவுக்கு கற்க வேண்டும். இந்த திறன் இல்லாதோருக்கு பட்டம் வழங்கப்பட மாட்டாது.

    * சீனாவில் டாக்டர் தொழில் நடத்துவதற்கு அங்கு அதற்கான உரிமம் பெற வேண்டும்.

    * 5 ஆண்டு மருத்துவ படிப்பும், ஓராண்டு பயிற்சியும் முடித்தவர்கள் சீன மருத்துவ தகுதி தேர்வில் வெற்றி பெற்று, டாக்டருக்கான தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.

    * சீனாவில் மருத்துவம் படித்து இந்தியாவில் டாக்டர் தொழில் செய்வதற்கு, இந்தியாவில் நடத்தப்படுகிற தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும்.

    * சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பினாலும் இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றாக வேண்டும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க இது அவசியம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலநடுக்கம் எதிரொலியாக 50000-க்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
    • சீனாவின் செஞ்சிலுவை சங்கம், அவசரகால நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது

    பீஜிங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் லூடிங் கவுன்டியில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. இதனால், பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

    நிலநடுக்கத்திற்கு பின்னர் அருகேயுள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்டு உள்ளன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் ரிக்டரில் 3.0 அளவிலான மொத்தம் 10 நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. நிலநடுக்கம் எதிரொலியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

    சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு விதித்த தடையை அடுத்து 2.1 கோடி மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனை தொடர்ந்து, இந்த பகுதியில் அதிகாரிகள் பல பசுமை வழிகளை ஏற்படுத்தி, மீட்பு பணியாளர்கள் லூடிங் பகுதிக்கு செல்வதற்கு ஏற்ற வகையில் வழி ஏற்படுத்தி தந்துள்ளனர். நிவாரண பணி மேற்கொள்ள வசதியாக விரைவு சாலை வழியே செல்ல 700 சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1,900-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆயுத போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலநடுக்கம் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இறந்தவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டவண்ணம் உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    நேற்று மாநில நிலவரப்படி 65 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் இன்று மேலும் 9 பேரின் இறப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

    உயிர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து வித நிவாரண முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும்படி சீன அதிபர் ஜின்பிங், அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். சீனாவின் செஞ்சிலுவை சங்கம், அவசரகால நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கூடாரங்கள், நிவாரண தொகுப்புகள், மடிப்பு படுக்கைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக பணியாளர் குழு ஒன்றையும் அந்த அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதியிலுள்ள 22 ஆயிரம் வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நிலைமை சீர் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியை இணைக்கும் சாலைகளும் சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாக்ஸி என்கிற வரலாற்று சிறப்புமிக்க பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி மேலும் 37 பேர் பலியாகியுள்ளனர்.
    • 50 ஆயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமைடந்துள்ளனர்.

    சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

    வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

    பிறகு, சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்ததாக மீட்புக்குழு தெரிவித்தது.

    இந்நிலையில், கார்ஸ் திபெட்டன் நகரத்தில் உள்ள மாக்ஸி என்ற வரலாற்று சிறப்புமிக்க பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி மேலும் 37 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 150 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் ஷிமியான் என்கிற மாகாணத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர். 248 பேர் படுகாயங்களுடன் மீட்ட நிலையில், காணாமல் போன 12 பேரை மீப்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

    சீனாவில் பல்வேறு மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • முதல் கட்ட தகவலில் 21 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
    • நிலநடுக்கத்தில் மேலும் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால் லூடிங் நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவும் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    முதல் கட்ட தகவலில் 21 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.

    இவர்கள் லூடிங் நகரை சேர்ந்த 29 பேர், யாயன் நகரத்தை சேர்ந்த 17 பேர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிலநடுக்கத்தில் மேலும் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.

    பீஜிங்:

    சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு சிச்சுவானின் வென்சுலானி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்ததால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    பிஜீங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணம் காங்டிங் நகருக்கு தென் கிழக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவானது.

    இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்ததால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. உடனே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    கடந்த 2008-ம் ஆண்டு சிச்சுவானின் வென்சுலானி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செங்டு நகரில் ஊரடங்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்த நகரில் 2 கோடியே 10 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

    பீஜிங் :

    சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. அங்கு சிச்சுவான் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாளில் 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் ஊரடங்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 4-ந்தேதி வரையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வரலாம், ஆனால் அவர்கள் கொரோனா இல்லை என 24 மணி நேரத்துக்கு முன்னர் பெற்ற 'நெகடிவ்' சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நகரில் 2 கோடியே 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டாலும் சூப்பர் மார்க்கெட்டுகள், விவசாயிகள் சந்தைகள், மருந்துகடைகள், ஆஸ்பத்திரிகள், உணவு வினியோக சேவைகள் உள்ளிட்டவை தடங்கல் இன்றி தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் சேவை நிறுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு.
    • வட்டி மானியம் வசதியான வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக புகார்.

    ஹெனான்:

    சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பல கிராமப்புற வங்கிகளில் நிதி மோசடி நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சட்டவிரோதமாக பெறப்பட்ட நிதியின் ஒரு பகுதியை வங்கி அதிகாரிகள் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்

    வங்கிகளின் வட்டி மானியம் தரகர்களால் சுரண்டப்பட்டதாகவும்  பணக்கார வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அது வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ஹெனான் மாகாணத்தில் உள்ள நான்கு கிராமப்புற வங்கிகள் தங்கள் ஆன்லைன் சேவைகளை நிறுத்திவிட்டன, இதனால் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வங்கிகள் நிதி முறைகேடு சீன மக்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீன மத்திய வங்கியின் கிளைக்கு வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் வைப்பு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக 234 அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கப்பல் வருகையை தள்ளி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண் டது.
    • உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தலையிட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது.

    பிஜீங்:

    சீனாவின் உளவு கப்பலான 'யுவான் வாங்-5' சமீபத்தில் இலங்கையின் ஹம்பாந் தோட்டை துறைமுகத்துக்கு வந்தது.

    இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கப்பல் வருகையை தள்ளி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டது.

    ஆனால் அதை சீனா ஏற்க மறுத்ததால் இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன கப்பல், துறைமுகத்துக்கு வர இலங்கை அனுமதி அளித்தது. உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தலையிட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா மிரட்டல் விடுத்துள்ளது. இலங்கைக்கான சீன தூதர் ஜென்ஹாங், ஒரே சீனா கொள்கையில் இருந்து யுவான் வாங்-5 வரை என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கையை சில நாடுகள் எப்போதும் கொடுமைப்படுத்துதற்கும் அந்நாட்டின் இறைாண்மை மற்றும் சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கவும் பல்வேறு ஆதாரமற்ற தகவல்களை கூறுகின்றன.

    இலங்கை மக்கள் இன்னும் பொருளாதார மற்றும் மனிதாபிமான சிக்கல்களை எதிர் கொண்டுள்ள நிலையில், மனித உரிமைகள் பற்றி எப்போதும் பேசும் அந்த நாடுகள், இலங்கையின் மனித உரிமைகளை நெருக்கடியை தீர்க்க உதவுவார்களா? அல்லது இலங்கை உள் விவகாரங்களில் தலையிட்டு அந்நாட்டு மக்களின் காயத்தில் தொடர்ந்து உப்புத் தேய்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இலங்கையின் தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் எந்தவிதமான மீறல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது.

    சீன ஆராய்ச்சி கப்பல் 'யுவான் வாங்-5' இலங்கைக்கு பயணம் செய்ய அங்கீகரிப்பது இலங்கை அரசாங்கத்தால் முழுமையாக அதன் இறையாண்மைக்குட்பட்டு எடுக்கப்பட்ட முடிவாகும்.

    பாதுகாப்பு கவலைகள் என்று கூறி தடைகள் ஏற்படுத்துவது, சிலர் ஆதாரம் இல்லாமல் இலங்கை உள் விவகாரங்களில் தலையிடுவது நடைமுறையில் உள்ளது. அதிர்ஷ்டவசமாக சீனா, இலங்கையின் கூட்டு முயற்சியுடன் பிரச்சினையின்றி சரியாக தீர்க்கப்பட்டது.

    இது இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் சர்வதேச நியாயத்தையும் நீதியையும் மீண்டும் பாதுகாக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற் கொண்டதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    • விலா எலும்புகள் உடைந்ததால் இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார்.
    • கட்டிப் பிடித்ததால் தான் இப்படி ஆனது என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? என நண்பர் கேட்டதால் நீதிமன்றத்தை நாடினார்

    பீஜிங்:

    அன்பு மிகுதியால் கட்டியணைப்பது எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் சரியான நபரிடமிருந்து சரியான சமயத்தில் அந்த அரவணைப்பை பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆனால், அதுவே விலா எலும்புகளை உடைக்கும் அளவுக்கு முரட்டு அணைப்பாக இருந்தால் எப்படி இருக்கும்? அத்தகைய வலி நிறைந்த அனுபவத்தை பெற்றுள்ளார் சீனாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்.

    சீனாவின் ஹுனான் மாகாணம், யுயாங் நகரைச் சேர்ந்த அந்தப் பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் தனது அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென கட்டி அணைத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார். இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் விடுமுறை எடுத்து விட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார்.

    தொடர்ந்து வலி அதிகமாக இருந்ததால் 5 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அதில் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார்.

    இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த அந்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான பில்களை காட்டி பணம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர், ``நான் கட்டிப் பிடித்ததால் தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன உள்ளது?" எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்து விட்டார்.

    அதையடுத்து இளம்பெண் கோர்ட்டை நாடியிருக்கிறார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், ``மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்த அந்த 5 நாட்களில் எலும்பு முறிவு ஏற்படக் கூடிய எந்தச் செயலிலும் அந்தப் பெண் ஈடுபட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்" என உத்தரவிட்டனர்.

    • தைமூர் கப்பலை ஆகஸ்ட் 15-ந் தேதி கராச்சிக்கு கொண்டு செல்ல சீனா திட்டம்.
    • தைமூரை சட்டோகிராம் துறைமுகத்தில் நிறுத்த பங்களாதேஷ் அனுமதி மறுப்பு.

    இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த கப்பல் இன்று இலஙகை வருகிறது. 17-ந்தேதி வரை இலங்கை துறைமுகத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, பாகிஸ்தானுக்காக சீனா, பி.என்.எஸ் தைமூர் என்ற போர் கப்பலை தயாரித்துள்ளது. ஷாங்காயில் உள்ள டோங் துறைமுகத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டதாகும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி கராச்சிக்கு இதை கொண்டு செல்ல சீனா திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த கப்பலை பங்களாதேஷ் கடல் பகுதி வழியே பாகிஸ்தானுக்குள் கொண்டு செல்ல அந்நாட்டு அரசிடம் சீனா அனுமதி கோரியிருந்தது. ஆனால் சட்டோகிராம் துறைமுகத்தில் அந்த கப்பலை நிறுத்த பங்களாதேஷ் அரசு அனுமதி மறுத்து விட்டது.

    இதையடுத்து பாக் போர் கப்பலான தைமூரை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படையில் இணைப்பதற்காக செல்லும் வழியில், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    ×