என் மலர்tooltip icon

    சீனா

    • சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது.
    • அமெரிக்காவுடன் மோதல், தைவான் விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 2013-ம் ஆண்டு முதல், அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் இருந்து வருகிறார்.

    சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார்.

    இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது. இதில் 3-வது முறையாக அதிபராக நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஜின்பிங் தீவிரமாக செயல்பட்டார்.

    ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இதில் அதிபர் ஜின்பிங் பேசியபோது, தனது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும் எதிர்க்கட்சி நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

    2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற சீன ஆளும் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கட்சி செயல்பாடு, அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.

    மாநாட்டில் 205 உறுப்பினர்களை கொண்ட புதிய மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழு இன்று காலை கூடி கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்தது.

    ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.

    7 பேர் கொண்ட கட்சியின் உயர்மட்ட புதிய பொலிட்பீரோ நிலைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழுவுக்கு ஜின்பிங் தலைமை தாங்குகிறார்.

    கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜின்பிங் உரையாற்றினார். அவர் கூறும்போது, "நமது பலத்தை ஒன்றாக இருந்து ஒற்றுமையுடன் முன்னேறுவோம் என்றார்.

    சீனாவில் ஒருவர் 2 முறை மட்டும்தான் அதிபராக இருக்கலாம் என்ற விதிமுறையை 2018-ம் ஆண்டு அதிபர் ஜின்பிங் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவுடன் மோதல், தைவான் விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

    நேற்றைய கூட்டத்தில் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவ், திடீரென்று எழுந்து அதிபர் ஜின்பிங் அருகே சென்றார். உடனே ஹு ஜிண்டாங்கை அதிகாரிகள் வலுகட்டாயமாக அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சி விளக்கம் அளித்தது. அதில் ஹு ஜிண்டாங் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.

    Heading

    Content Area

    • பீஜிங் உள்பட 8 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • பொது குளியலறை சுவர்களில் ஜின்பிங்குக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

    சீனாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. அதிபராக ஜி ஜின்பிங் உள்ளார். ஆளுங்கட்சியின் உயர்மட்ட முக்கிய கூட்டம் கடந்த 16-ந் தேதி தலைநகர் பீஜிங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

    இதற்கிடையே ஜின்பிங் மீண்டும் அதிபராவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீஜிங் நகரில் சீன அரசின் கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிராக பேனர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதிபர் ஜின்பிங்குக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பீஜிங்கை போல் மற்ற நகரங்களிலும் மக்களின் போராட்டம் பரவியுள்ளது.

    பீஜிங் உள்பட 8 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள பொது குளியலறை சுவர்களில் ஜின்பிங்குக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழக வளாகங்களில் சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடந்தது.

    • ஹாங்காங்கை சீனா முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.
    • குழப்பம் முடிவுக்கு வந்து ஹாங்காங் சீன ஆட்சிக்கு கீழ் மாறியுள்ளது.

    பிஜீங்:

    கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் சீனாவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை அக்கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும். அந்த மாநாடடில் கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு இன்று தொடங்கியது. 


    ஒரு வாரம் நடைபெறும் இந்த மாநாட்டை சீன அதிபரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஹாங்காங்கை சீனா முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது என்றார். இதனால் குழப்பம் முடிவுக்கு வந்து ஹாங்காங் சீன ஆட்சிக்கு கீழ் மாறியுள்ளது என அவர் தெரிவித்தார். அதேபோல் பிரிவினைவாதம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான தைவான் நிலைப்பாட்டை எதிர்ப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும், இதற்கான பெரும் போராட்டத்தையும் நடத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 867 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது.

    கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

    இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 867 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 711 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சட்டவிரோத காவல் நிலையங்கள் தொடர்பாக புலனாய்வு இதழான ரிபோர்டிகா செய்தி வெளியிட்டுள்ளது.
    • கனடாவில் கிரேட்டர் டொரோன்டோவில் மட்டும் 3 போலீஸ் நிலையங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    உலக வல்லரசாக உருவெடுக்கும் முயற்சியாக, கனடா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கிலும் ஏராளமான சட்டவிரோத காவல் நிலையங்களை சீனா திறந்துள்ளது. இது மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக உள்ளூர் ஊடக தகவல்களை மேற்கோள் காட்டி, புலனாய்வு இதழான ரிபோர்டிகா செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கனடா முழுவதும் பொது பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து முறையற்ற காவல் சேவை நிலையங்களை சீனா திறந்திருப்பதாகவும், இதில் 3 போலீஸ் நிலையங்கள் கிரேட்டர் டொரோன்டோவில் மட்டும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த சட்டவிரோத காவல் நிலையங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் தேர்தலிலும் சீனா தனது ஆதிக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக ரிபோட்டிகா செய்தி கூறுகிறது.

    இதுவரை சீனா 21 நாடுகளில் 30 சட்டவிரோத காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சீனாவின் பஸ்ஹோ நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

    குறிப்பாக உக்ரைன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற சீன காவல் நிலையங்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நாடுகளின் தலைவர்கள் சீனாவின் செயல்பாடுகள் குறித்தும், அந்நாட்டில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேள்வி எழுப்பி வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பீஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார்.

    பீஜிங்:

    வடக்கு எல்லையில் சீனப்படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16-ம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஜி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் 80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனினும், இந்த தகவல் அனைத்தும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படவில்லை.

    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பீஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார். இதன்மூலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு அதிபர் ஜி ஜிங்பிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • 80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.
    • புதிதாக பரவும் வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பெய்ஜிங்:

    வடக்கு எல்லையில் சீன படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் 80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் வணிகப் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால், ஜி ஜின்பிங்கின் கைது பற்றிய தகவல்கள் பெய்ஜிங்கிலும் உலகளாவிய இணையத்திலும் பரவுகின்றன.

    சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சிலர் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    சீனாவில் கிட்டத்தட்ட 60% விமானங்கள் எந்த விளக்கமும் இல்லாமல் வெள்ளிக்கிழமை தரையிறக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நியூஸ் ஹைலேண்ட் விஷனின் மற்றொரு தகவலில் முன்னாள் சீன அதிபர் ஹு ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் சீன அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 22ஆம் தேதி, பெய்ஜிங் நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதாகவும் ஊடகங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    எனினும், இந்த தகவல் அனைத்தும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு ஊடகத்திலோ இன்னும் அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை. எனினும், சீன அரசியலில் இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். "புதிதாக பரவும் வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும்: ஜி ஜிங்பிங் பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளாரா? ஜி ஜின்பிங் சமீபத்தில் சமர்கண்டில் இருந்தபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், கட்சியின் ராணுவப் பொறுப்பில் இருந்து ஜியை நீக்கியதாகக் கருதப்படுகிறது. அதன்பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் வதந்தி பரவுகிறது" என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். அவரது ட்வீட்டுக்கு சிலர் பதில் அளித்து, தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

    • சீனாவின் முன்னாள் நீதித்துறை மந்திரி பு ஜெங்குவா (வயது 67).
    • இவர் ஊழல் செய்து சுமார் ரூ.138 கோடி மதிப்புள்ள பணம் பெற்றார் என்பதுதான் குற்றச்சாட்டு.

    பீஜிங் :

    சீனாவைப் பொறுத்தமட்டில் 2012-ம் ஆண்டு, ஜின்பிங் அதிபர் பதவி ஏற்றது முதல், ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறார். அவர் பதவிக்காலத்தில் இதுவரை சீன கம்யூனிஸ்டு கட்சியின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சீன ராணுவத்தின் டஜன் கணக்கிலான அதிகாரிகள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

    ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், அதிபர் ஜின்பிங் தனது செல்வாக்கை, அதிகார தளத்தை வலுப்படுத்தி நிலைநிறுத்திக்கொள்ள உதவி இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    சீனாவின் முன்னாள் நீதித்துறை மந்திரி பு ஜெங்குவா (வயது 67).

    இவர் தனது பதவியை, அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி, பலரது தொழில், வணிக நடவடிக்கைகள், உத்தியோக நிலைகள், சட்ட வழக்குகளில் போன்றவற்றில் உதவிக்கரம் நீட்டி, அதற்காக ஆதாயங்கள் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்தது.

    பு ஜெங்குவா ஊழல் வழக்கில் சிக்கியது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குறிப்பாக பீஜிங் மாநகராட்சி பொது பாதுகாப்பு பணியகத்தின் தலைவராகவும், பொது பாதுகாப்பு துணை மந்திரியாகவும், நீதித்துறை மந்திரியாகவும் பணியாற்றியபோது இவர் ஊழல் செய்து 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.138 கோடி) மதிப்புள்ள பணம், பரிசுகளை நேரடியாகவோ, தனது உறவினர்கள் மூலமாகவோ பெற்றார் என்பதுதான் குற்றச்சாட்டு.

    இது தொடர்பான வழக்கை சாங்சூன் நகர இடைநிலை மக்கள் கோர்ட்டு விசாரித்தது.

    விசாரணை முடிவில் பு ஜெங்குவா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கருதிய கோர்ட்டு, அவருக்கு 2 ஆண்டு கால அவகாசத்துடன் கூடிய மரண தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    இதை அந்த நாட்டின் அரசு இணைய ஊடகம் உறுதி செய்துள்ளது. இந்த அதிரடி தீர்ப்பு சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதிபர் ஜின்பிங் பதவிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு அடைய உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு அடுத்த மாதம் 16-ந் தேதி பீஜிங்கில் நடக்க உள்ளது. அதில் ஜின்பிங் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • காற்றில் வைரஸ் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி மூலம் அணிந்திருப்பவருக்குக் காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    பீஜிங்:

    சீனாவில் 2019-ம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் முற்றாக ஒழியாமல் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் உயிர் காக்கும் கவசமாக முக கவசம் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காற்றில் வைரஸ் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி மூலம் அணிந்திருப்பவருக்குக் காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நவீன முககவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும்போது, அவரைச் சுற்றிலும் இருக்கும் காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, முககவசம் அணிந்திருப்பவரை எச்சரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி, முக கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான யின் பாங் கூறுகையில், "முக கவசம் அணிவது நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் என்று முந்தைய ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே, காற்றில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அணிபவரை எச்சரிக்கும் முக கவசத்தை உருவாக்க விரும்பினோம். எங்கள் முக கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில், அதாவது 'லிப்ட்' அல்லது மூடிய அறைகள் போன்றவற்றில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் நன்றாக வேலை செய்யும்" என கூறினார்.

    • கடந்த மார்ச் மாதத்தில் சீன பயணிகள் ஜெட் விபத்துக்குள்ளானதில் 132 பேர் பலியாகினர்.
    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    தென்மேற்கு சீனா கிராமப்புற குய்சோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் 47 பேரை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் 27 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கபட்டு சிகிச்சையில் உள்ளனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    குய்சோ மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் அதிவேக ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்தார். இதேபோல் கடந்த மார்ச் மாதத்தில் சீன பயணிகள் ஜெட் விபத்துக்குள்ளானதில் 132 பேர் பலியாகினர். இது சீனாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாகும்.

    • அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா டெலிகாம் அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பீஜிங்:

    சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. கட்டிடத்தில் இருந்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏராளமான வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்ததால் தீயணைப்பு வீரர்களால் கட்டிடத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 715 அடி உயரம் உள்ள அந்த கட்டிடம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்தில் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா டெலிகாம் அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
    • கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக அவர் எந்த வெளிநாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளாமல் இருந்துவந்தார்.

    பீஜிங்:

    கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் அதிபர் ஜின்பிங் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்கட்டமாக 14-ம் தேதி கஜகஸ்தான் செல்லும் அவர், பின்னர் அங்கிருந்து உஸ்பெகிஸ்தானுக்குச் செல்கிறார். அங்கு சமர்கண்ட் நகரில் 15, 16 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார் என தெரிவித்துள்ளது.

    அதிபர் ஜி ஜிங்பிங் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 நாள் பயணமாக மியான்மருக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×