என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ம.தி.மு.க. தொகுதிகளை குறைத்துக் கொள்ளவும் தயார்- துரை வைகோ | MDMK
    X

    ம.தி.மு.க. தொகுதிகளை குறைத்துக் கொள்ளவும் தயார்- துரை வைகோ | MDMK

    • எந்த முடிவு எடுத்தாலும் சுமூக தீர்வு காணப்படும்.
    • தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி.

    சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர் நிலைக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன ராஜ் தலைமையில், பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்றது. இதில், உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. எங்களால் எந்த பிரச்சனையும் வராது. நிபந்தனையற்ற ஆதரவை தி.மு.க.விற்கு வழங்கி வருகிறோம். எங்கள் பேச்சுவார்த்தை குழுவினர் தி.மு.க.விடம் பேசி வருகிறார்கள்.

    எந்த சின்னம், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது பற்றியெல்லாம் பேசியிருக்கிறோம். அவர்களின் சூழ்நிலையை சொல்லி இருகிறார்கள். அது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    எந்த முடிவு எடுத்தாலும் சுமூக தீர்வு காணப்படும். தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி. நாங்கள் கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். இந்த முறை கூடுதல் கட்சிகள் இணைந்துள்ளதால் கூட்டணி மேலும் வலிமை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

    ம.தி.மு.க நலனை விட தமிழக நலன் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொது நோக்கில் செயல்படுகிறது. இரு முறை மத்திய மந்திரி பதவியை வைகோ வேண்டாம் என்றார்.

    இந்த தேர்தலில் எங்களுக்குள் (தி.மு.க) எந்த பிரச்சனையும் வராது. தொகுதி பங்கீட்டில் எந்தவிதமான காலதாமதமும் இல்லை.

    பொதுவான நோக்கமான பா.ஜ.க தமிழகத்தில் நுழைய கூடாது என்ற அடிப்படையில் இணைந்து உள்ளோம். அதற்காக தொகுதிகளை விட்டு கொடுக்க தயாராக உள்ளோம்.

    சிலிண்டர் எரிவாயு பிரச்சனை அத்தியாவசியம் என்பதால் துரித நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். மாற்று வழிகளை மத்திய அரசு யோசித்து உள்ளது. தமிழகத்தில் உரிய பாதிப்பு இல்லாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×