search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு என்ன செய்தது? மு.க.ஸ்டாலின் கேள்விக்கு குஷ்பு காட்டமான பதில்
    X

    தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு என்ன செய்தது? மு.க.ஸ்டாலின் கேள்விக்கு குஷ்பு காட்டமான பதில்

    • விவசாயிகளுக்கு வருடம் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
    • மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்குமான அரசு எல்லா மாநில வளர்ச்சிக்குமான திட்டங்களை செயல்படுத்துகிறது.

    சென்னை:

    9 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என்று மத்திய மந்திரி அமித்ஷா பட்டியல் வெளியிட தயாரா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமித்ஷா பதில் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்த அமித் ஷாவை வரவேற்க வந்த நடிகை குஷ்புவிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா அரசு ஆட் சிக்கு வந்த 9 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக செய்துள்ள திட்டங்கள் பற்றி அமித்ஷா சொல்லி வருகிறார். விவசாயம், கல்வி, தொழில் என்று எல்லா துறைகளின் முன்னேற்றத்துக்கும் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருடம் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. பயிர் காப்பீடு திட்டம் உள்ளது.

    ஆயுஷ்மான் திட்டத்தில் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ், குழந்தைகளின் எதிர்காலத்துக்காக செல்வ மகள் திட்டம், சாதாரண மக்கள் முன்னேற முத்ரா கடன் உதவி, 4 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 14 கோடி வீடுகளுக்கு கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்குமான அரசு எல்லா மாநில வளர்ச்சிக்குமான திட்டங்களை செயல்படுத்துகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் இந்த திட்டங்கள் எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்காதது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறுதான். தமிழ்நாட்டில் விவசாயிகள், பெண்களுக்கு மத்திய அரசின் திட்டங்களால் பலன் இல்லை என்று சொல்ல முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×