என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசிய காட்சி.
    X
    ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசிய காட்சி.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதை ஒத்து கொள்ளாமல் மறைக்கிறார்கள்: தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதை ஒத்து கொள்ளாமல் மறைக்கிறார்கள் என தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
    பவானி:

    பவானியில் நடந்த பா.ம.க பொதுக்கூட்டத்தில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அவர் பேசியதாவது:-

    காவிரிநீர் பங்கீடு என்பது 130 ஆண்டுகால பிரச்சனை. 1924-ம் ஆண்டு, ஒரு ஆண்டுக்கு 575 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தரவேண்டும் என்று மைசூர் மாகாணத்துக்கும், மெட்ராஸ் மாகாணத்துக்கும் 50 ஆண்டுகால ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டு அப்போது தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அரசு புதுப்பித்து இருக்கவேண்டும். ஆனால் இந்திராகாந்தியின் நிர்பந்தத்துக்கு பணிந்து எதுவும் செய்யவில்லை.

    ஜூன் 12-ந் தேதி காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இதனால் 12 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுவிட்டது. 18 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. சுமார் 5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முறையாக தடுப்பணைகள் கட்டாமல் இந்த 10 ஆண்டுகளில் 900 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துவிட்டது.

    உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 50 ஆண்டுகளாக காவிரிநீர் பிரச்சனையில் தமிழக மக்களை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வஞ்சித்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அன்புமணி ராமதாஸ் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    எங்களுடைய நோக்கம் காவிரி ஆற்றை பாதுகாக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க.செய்த துரோகத்தால் தான் இன்று காவிரியில் தண்ணீர் இல்லை.

    50 ஆண்டுகள் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தமிழகத்தை சீரழித்து விட்டது. எனவே எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தை கல்வி, மருத்துவத்தில் முன்னேற்றம் காண செய்வோம்.

    ஆடி 18 அன்று மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் இருக்கும். ஆனால் இன்று வெறும் 25 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    டெங்கு காய்ச்சல் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தர்மபுரி வேகமாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் தான்.

    மாநில அரசு டெங்கு காய்ச்சல் இருப்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இதை மறைக்கிறார்கள். இது மிக பெரிய தவறு. அப்போது தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×