என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் அல்காரஸ் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-4, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சீனாவின் ஜாங் ஜீஜெனுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 6-3, 6-1 என கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார்.
    • ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.

    அமெரிக்காவின் அர்கன்சாசில் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னார்ட் டொமிக் மற்றும் ஜப்பானை சேர்ந்த யுடா ஷிமிசு மோதினர். சர்வதேச தரவரிசையில் இவர்கள் முறையே 247 மற்றும் 265 இடங்களில் உள்ளனர்.

    இத்தகைய போட்டிகளில் விளையாடி தனது தரவரிசையை முன்னேற்றி, போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார். எனினும், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.

    போட்டியின் போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பலமுறை கூறிய டொமிக், மருத்துவர்கள் உதவியை நாடினார். எனினும், களத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறி போட்டி நடுவர் அவரை விளையாடுமாறு கூறியுள்ளார்.

    இதனிடையே இந்த போட்டியை காண டொமிக்-இன் காதலி கீலி ஹண்ணா வந்திருந்தார். போட்டியின் போது டொமிக் மற்றும் அவரது காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விளையாடிய அவர் போட்டியில் கவனம் செலுத்த முடியாதவராக காணப்பட்டார்.

    இரண்டாவது செட்-இல் 5 புள்ளிகளை மட்டும் பெற்ற டொமிக் அதன்பிறகு போட்டியில் இருந்து வெளியேறினார். உடல்நிலை மோசமாவதால், தொடர்ந்து விளையாட முடியாது என்று கூறி டொமிக் போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து டொமிக்-இன் காதலியும் களத்தில் இருந்து வெளியேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியா வீரர் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷிய வீரரான ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டுடன் மோதினார்.

    இதில் அர்னால்டு 7-6 (8-6), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 4-வது சுற்றில் அர்னால்டு, சிட்சிபாசை சந்திக்கிறார்.

    • செர்பியா வீராங்கனையான ஓல்கா டானிலோவிச் குரோஷிய வீராங்கனையான டோனா வெகிக்கை எதிர் கொண்டார்.
    • 4-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.

    பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான கோகோ காப் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.

    இதேபோல செர்பியா வீராங்கனையான ஓல்கா டானிலோவிச் குரோஷிய வீராங்கனையான டோனா வெகிக்கை எதிர் கொண்டார். இதில் முதல் செட்டை ஒரு புள்ளி கூட எடுக்காமல் இழந்த அவர் அடுத்த 2 செட்டுகளை வென்றார். இதன் மூலம் 0-6, 7-5, 7-6 (8) என்ற செட் கணக்கில் ஓல்கா டானிலோவிச் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ராபர்டோவுடன் மோதினார். இதில் 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செர்பியாவின் மியோமிருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் 5-0 என முன்னிலை பெற்ற நிலையில், மியோமிர் காயத்தால் விலகினார்

    இதனால் மெத்வதேவ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் அல்காரஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்குடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மையருடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் முதல் இரு செட்டை 6-3, 6-2 என எளிதில் கைப்பற்றினார். 3-வது செட்டை டேனியல் 7-6 (7-2) என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட சிட்சிபாஸ் 4-வது செட்டை 6-4 என கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா 2-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 7-6 (7-1), 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று ஒசாகாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அசரென்கா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பொடோ ரோஸ்காவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை எரிகா ஆன்ட்ரிவா மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஹெர்பர்ட்டுடன்

    மோதினார். இதில் 6-4, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் டொமினிக் கோபருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 6-3, 6-4 என எளிதில் கைப்பற்றினார். 3வது செட்டை டொமினிக் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்துக்கொண்ட மெத்வதேவ் 4வது செட்டை 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான சுமித் நாகல் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.
    • கரேன் கச்சனோவ் 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார்.

    பாரீஸ்:

    இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான சுமித் நாகல் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கரேன் கச்சனோவ் 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இதையடுத்து முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நாடல், ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    14 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    முன்னதாக ரபேல் நடால் தனது 19 ஆண்டுகால பிரெஞ்சு ஓபன் வாழ்க்கையை இந்த சீசனுடன் முடித்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பிரெஞ்சு ஓபனில் அவர் புரிந்த சாதனை மற்றும் நற்பெயரை ஒருபோதும் ஒப்பிட முடியாது. இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பிரெஞ்சு ஓபனில் வென்றுள்ளார். களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

    22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்பெயின் வீரர் நடால், 2005 ம் ஆண்டில் ரோலண்ட் கரோசில் தனது முதல் பட்டத்தை வென்றார். இன்னும் ஒரு வாரத்தில் ( வரும் திங்கட்கிழமை) அவர் தனது 38-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான் என நடால் கூறியுள்ளார்.

    இது குறித்து ரசிகர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-

    முந்தைய போட்டிகளை விட இந்த போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று உணர்ந்தேன். ஆனால் எனக்கு முன்னால் ஒரு கடினமான எதிரி இருந்தார். அவர் நன்றாக விளையாடினார்.

    உங்கள் முன் நான் விளையாடிய கடைசி பிரெஞ்சு ஓபன் இதுவா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான். இன்று என்னால் எதுவும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் இதே மைதானத்தில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். மேலும் எனக்கு நிறைய விளையாடுவது மற்றும் எனது குடும்பத்துடன் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.

    என்று நடால் கூறினார்.

    • பிரெஞ்சு ஓபனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும்.
    • அவர் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் (ஜப்பான்) நாளை மோத உள்ளார்.

    ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) தன்னை எதிர்த்த தகுதி நிலை வீராங்கனை ஜியான்ஜியானை (பிரான்ஸ்) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் ஊதித்தள்ளினார். பிரெஞ்சு ஓபனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும். அவர் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் (ஜப்பான்) நாளை மோத உள்ளார்.

    இதே போல் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் சச்சியா விக்கெரியை (அமெரிக்கா) வெளியேற்றினார். தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ஜூலியா அவ்டீவாவை (ரஷியா) விரட்டினார். வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி), லேலா பெர்னாண்டஸ் (கனடா), சம்சோனோவா (ரஷியா) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

    ×