என் மலர்
டென்னிஸ்
- நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார்.
- முதல் சுற்றில் செரீனாவை வீழ்த்தி ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மிக உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர், ரபேல் நடால் - அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார். இறுதியில் 6-4,6-3,3-6,6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானை, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். 40 வயதான செரீனா காயம் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் 7-5 1-6 7-6 (10-7) என்ற செட்கணக்கில் ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.
- நார்வே, இங்கிலாந்து வீரர்களும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில், துனிசியா வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில், மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நேற்று தொடங்கின.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், தென்கொரியாவின் சூன்வோகிவோனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் ஜான் லெனார்ட் ஸ்ட்ரஃப்பை 4-6, 7-5, 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதேபோல் கேஸ்பர் ரூட் (நார்வே), கேமரூன் நோரி (இங்கிலாந்து) உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர், சுவீடனின் மிர்ஜாம் பிஜோர்க்லுன்டை 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார்.
- விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.
- செரீனா வில்லியம்ஸ் ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புகிறார்.
லண்டன்:
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அவர்களுக்கு ஆதரவு தந்த பெலாரஸ் ஆகிய இரு நாட்டு வீரர், வீராங்கனைகள் விம்பிள்டனில் பங்கேற்க போட்டி அமைப்பு குழு தடை விதித்து விட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றிக்கு தரவரிசை புள்ளிகள் வழங்கப்படாது என்று அறிவித்தது. இந்த சலசலப்புக்கு மத்தியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சுக்கும் (செர்பியா), முன்னாள் சாம்பியன் ரபெல் நடாலுக்கும் (ஸ்பெயின்) இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனையும், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனை வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து) பட்டம் வெல்லபிரகாசமான வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த முறை அதிக கவனத்தை ஈர்த்துள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புகிறார். 40 வயதான செரீனா 7 முறை விம்பிள்டன் உள்பட 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற அனுபவசாலி. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்து விடுவார்.
இந்த விம்பிள்டன் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.387 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் கோப்பையை ஏந்தும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.19¼ கோடி கிடைக்கும். 2-வது இடத்தை பெறுவோருக்கு ரூ.10 கோடி வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடி ரூ.5¼ கோடியை பரிசாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் போலந்து வீரரிடம் தோல்வி அடைந்தார்.
- ஏ.டி.பி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி கடந்த வாரம் முதலிடம் பிடித்தார் மெத்வதேவ்.
ஹாலே:
ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹாலேயில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், போலந்தைச் சேர்ந்த வீரர் ஹூபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஹர்காக்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- நோவக் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி மெத்வதேவ் முதலிடம் பிடித்தார்.
- டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏ.டி.பி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 7,950 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7,075 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறினார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,770 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 4-வது இடம் பிடித்துள்ளார்.
- 2022-ம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஆண், பெண் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 19 கோடி வழங்கப்படுகிறது.
கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த பரிசுத்தொகை ரூ. 392 கோடி ஆகும்.
ஆண், பெண் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 19 கோடி வழங்கப்படுகிறது. ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோற்பவர்கள் ரூ.9.5 கோடி பெறுவார்கள்.
- பாதத்தில் ஏற்பட்ட காயத்துடன் தான் பிரெஞ்சு ஒபன் போட்டியில் நடால் ஆடினார். இந்த காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளார்.
- ஊசி போட்டுக் கொண்டு தன்னால் விம்பிள்டனில் விளையாட இயலாது என்று நடால் தெரிவித்து இருக்கிறார்.
லண்டன்:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.
டென்னிஸ் போட்டிகளில் இதுதான் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஒபனிலும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஒபனிலும் ரபெல் நடால் (ஸ்பெயின்) சாம்பியன் பட்டம் பெற்றார். இதன் மூலம் அவர் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அடுத்து நடைபெற இருக்கும் விம்பிள்டன் போட்டியிலும் நடால் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிசில் நடால் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
பாதத்தில் ஏற்பட்ட காயத்துடன் தான் பிரெஞ்சு ஒபன் போட்டியில் நடால் ஆடினார். இந்த காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஊசி போட்டுக் கொண்டு தன்னால் விம்பிள்டனில் விளையாட இயலாது என்று நடால் தெரிவித்து இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் விம்பிள்டனில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
விம்பிள்டன் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது.
- ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
- 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் நடால்
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம் 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன், இது அவருக்கு 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த வீரர் கேஸ்பருடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும், அவரது சாதனைகளுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடால் குறிப்பிட்டார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ரபெல் நடாலுடன் கேஸ்பர் ரூட் இன்று மோதுகிறார். பாரீஸ், 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் 13 முறை சாம்பியனும், 5-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவருமான ஒலிம்பிக் சாம்பியன் (ஜெர்மனி) அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.
இதில் ரபெல் நடால் 7-6 (10-8), 6-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து 'களிமண் தரை போட்டியின் மன்னன்' என்று வர்ணிக்கப்படும் நடால் 14-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடாலுடன், நார்வேயின் கேஸ்பர் ரூட் இன்று மோதுகிறார்.
இறுதிப்போட்டி என்பதால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை யார்? வெல்வார்கள் என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 14வது முறையாக பிரெஞ்சு ஓபனை ரபெல் நடால் வெல்வாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்ப்பில் உள்ளனர்.
- இது, இகா ஸ்வியாடெக் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம்.
- தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் . இது அவர் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம் ஆகும்.
பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றி மூலம், தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை இகா ஸ்வியாடெக் பெற்றுள்ளார். இதன் மூலம் வீனஸ் வில்லியம்சின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.






