என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது.
    • இதில் ரிபாகினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை சந்தித்தார்.

    இதில் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரிபாகினா வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லே- பிரிட்டனின் நியல் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-3 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 2-6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயைக்கும் மூன்றாவது செட்டை 10-8 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

    இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து பெற்ற தொடரில் கோப்பை வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை போபண்ணா படைத்துள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் இறுதிக்கு முன்னேறினர்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் மெத்வதேவ் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் முதல் முறையாக இண்டியன்வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சபலென்கா, ரிபாகினா இறுதிக்கு முன்னேறினர்.
    • நேற்று நடந்த அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முதல் ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ரிபாகினா இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ரிபாகினாவுடன் மோத உள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், இத்தாலி வீரர் சின்னரை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் அகர் அலிசமெவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அல்காராஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். முதல் செட்டை 6-4 என சின்னர் கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-4 என பிரிட்ஸ் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றினார்.

    இதன்மூலம் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், சின்னருடன் மோத உள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் டேவிடோவிச்

    போகினாவை சந்தித்தார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை மெத்வதேவ் 6-3 என எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார்.

    இதன்மூலம் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்ற மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    • ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் அல்காரஸ் பெற்ற 100-வது வெற்றி இதுவாகும்.
    • இவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமை பெற்றார்

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூரை சந்தித்தார்.

    இதில் அல்காரஸ் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் 132-வது ஆட்டத்தில் ஆடிய அல்காரஸ் ருசித்த 100-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அமெரிக்க ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோ 131 ஆட்டங்களில் 100-வது வெற்றியை அடைந்து முதலிடத்தில் உள்ளார்.

    • சர்வதேச டென்னிஸ் அரங்கில் மார்டா கோஸ்ட்யுக் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.
    • போட்டி முடிவடைந்ததும் பரஸ்பரம் வீராங்கனைகள் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் மார்டா கோஸ்ட்யுக், வர்வரா கிரச்சேவாவுடன் கைகுலுக்காமல் விலகிச் சென்றார்.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் மகளிருக்கான ஏடிஎக்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

    இதன் இறுதிப்போட்டியில் 52-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக், 66-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் வர்வரா கிரச்சேவாவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 20 வயதான மார்டா கோஸ்ட்யுக் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    சர்வதேச டென்னிஸ் அரங்கில் மார்டா கோஸ்ட்யுக் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். வர்வரா கிரச்சேவாவை வீழ்த்தியதும் டென்னிஸ் களத்தில் கண்ணீர் விட்டு அழுதார் மார்டா கோஸ்ட்யுக். போட்டி முடிவடைந்ததும் பரஸ்பரம் வீராங்கனைகள் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் மார்டா கோஸ்ட்யுக், வர்வரா கிரச்சேவாவுடன் கைகுலுக்காமல் விலகிச் சென்றார்.

    மார்டா கோஸ்ட்யுக் கூறும்போது, "தற்போது நாங்கள் இருக்கும் நிலையில் இந்த பட்டத்தை வென்றதை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். இந்த கோப்பையை உக்ரைனுக்கும், களத்தில் போராடி இறக்கும் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார்.

    ஏடிஎக்ஸ் தொடரில் பட்டம் வென்றதன் மூலம் மார்டா கோஸ்ட்யுக், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 40-வது இடத்துக்கு முன்னேறினார்.

    • செர்பிய வீரர் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
    • இதனால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் துபாய் ஓபன் டென்னிசில் அரையிறுதியில் தோற்ற போதிலும் ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் முதலிடத்தில் இருப்பது இது 379-வது வாரமாகும். அதிக வாரங்கள் முதலிடத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.

    இந்நிலையில், இண்டியன்வெல்ஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் முறையே வருகிற 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும், 22-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரையும் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடைக்காததால் 'நம்பர் ஒன்' வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகி இருக்கிறார்.

    கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோகோவிச் தனக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர் இந்தப் போட்டியில் இருந்து பின்வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொள்ள மெல்போர்ன் சென்ற ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    இதேபோல் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியையும் அவர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத்தில் தனது கடைசி போட்டியில் சானியா மிர்சா ஆடினார்.
    • கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.

    ஐதராபாத்:

    டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த மாதம் துபாய் ஓபன் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.

    36 வயதான சானியா மிர்சா 2005-ம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் ஐதராபாத் ஓபனை வென்றார். அவர் கைப்பற்றிய ஒரே டபிள்யூ.டி.ஏ. பட்டம் இதுதான். அதே சமயம் கிராண்ட்ஸ்லாமில் 6 இரட்டையர் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். கிராண்ட்ஸ்லாம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.

    இந்நிலையில், சானியா மிர்சாவின் சொந்த ஊரான தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அவருக்கு பிரிவுபசாரம் அளிக்கும் வகையில் கண்காட்சி டென்னிஸ் போட்டிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வந்த சானியாவுக்கு இளம் ரசிகைகள் இருபுறமும் பேட்டை உயர்த்தி நின்று கவுரவம் அளித்தனர்.

    தனது கடைசி டென்னிஸ் போட்டியில் அடியெடுத்து வைத்த சானியாவுடன் சக நாட்டு வீரர் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோர் இணைந்து விளையாடினர். இரு கலப்பு காட்சி போட்டியிலும் சானியா மிர்சா வெற்றி பெற்றார். அப்போது சானியா மிர்சா உருக்கமுடன் பேசியதாவது:

    2002-ம் ஆண்டு இங்கு தேசிய விளையாட்டில் பதக்கம் வென்றதில் இருந்து எனது டென்னிஸ் பயணம் தொடங்கியது. இந்தியாவுக்காக 20 ஆண்டு விளையாடியது சிறந்த கவுரவமாகும்.

    இந்தியாவுக்காக சாதிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளின் கனவாக இருக்கும். அதை நான் நிறைவு செய்து விட்டேன். நினைத்ததை விட அதிகமாக சாதித்து இருக்கிறேன். எனது கடைசி போட்டியை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடியது, பரவசமளிக்கிறது. அவர்களின் ஆதரவும், உற்சாகமும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது. இதை விட சிறந்த வழியனுப்பு விழாவை நான் எதிர்பார்க்க முடியாது. இனி களத்தில் உங்களை (ரசிகர்கள்) எல்லாம் தவற விடப்போகிறேன்.

    தெலுங்கானா மாநில அரசுடனும், மாநில விளையாட்டு ஆணையத்துடனும் இணைந்து பணியாற்றி இன்னொரு சானியாவை நிச்சயம் உருவாக்குவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன். நமக்கு இன்னும் நிறைய சானியாக்கள் தேவை. அதற்காக பணியாற்றுவேன் என குறிப்பிட்டார்.

    • துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவின் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
    • இதில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தினார்.

    துபாய்:

    துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஏற்கனவே, மெத்வதேவ் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெத்வதேவ் இந்த ஆண்டில் ரோட்டர்டாம், தோஹா மற்றும் துபாய் என தொடர்ச்சியாக 3 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

    • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 2ம் சுற்று போட்டி நடந்தது.
    • இதில் வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

    துபாய்:

    துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

    இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்து வீரர் தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்,

    ×