என் மலர்
விளையாட்டு
கோவா:
11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது.
சென்னையின் எப்.சி. 4 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி 5-வது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) இன்று மாலை 5 மணிக்கு எதிர்கொள்கிகறது.
தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்ற சென்னையின் எப்.சி. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கவுகாத்தியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
அதேநேரத்தில் கவுகாத்தி அணியை வீழ்த்துவது சென்னைக்கு சவாலானதே. கவுகாத்தி அணி 2 வெற்றி, 3 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
தோல்வியை சந்திக்காத நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சென்னையை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்களூர்-கேரளா அணிகள் மோதுகின்றன.
பெங்களூர் அணி ஒரு வெற்றி, 3 டிராவுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திலும், கேரளா 2 டிரா, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளன.
பெங்களூர் அணி 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. கேரளா முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
வெலிங்டன்:
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்தது. ஹென்றி நிக்கோலஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 174 ரன்னும் , வாக்னர் 66 ரன்னும் எடுத்தனர். கேப்ரியல் , அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டும், செமர் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 இழப்புக்கு 124 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. பாலோ ஆனை தவிர்க்க மேலும் 137 ரன் தேவை, கைவசம் 2 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து விளையாடியது.
வெஸ்ட் இண்டீஸ் அணி மேலும் 7 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 2 விக்கெட்டை இழந்தது. அந்த அணி 56.4 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் பாலோ ஆன் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் சவுத்தி, ஜேமிசன் தலா 5 விக்கெட் வீழ்த்தினார்கள். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை துவம்சம் செய்து விட்டனர்.
பாலோஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 329 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.
நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 2-வது இன்னிங்சிலும் திணறியது. 170 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டை இழந்தது. கேம்பல் அதிகபட்சமாக 68 ரன்னும், புரூக்ஸ் 36 ரன்னும் எடுத்தனர். போல்ட் 3 விக்கெட்டும், ஜேமிசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
7-வது விக்கெட்டான கேப்டன் ஹோல்டர்- ஜோஸ்வா ஜோடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 244 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்த டெஸ்டிலும் நியூசிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அணி ஹேமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 134 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இதன்மூலம் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது. ஏற்கனவே 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை அந்த அணி 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது. கோவா வீரர் இகோர் அன்குலோ 45-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். பதில் கோல் திருப்ப ஒடிசா அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 5-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் களம் கண்ட ஒடிசா அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-சென்னையின் எப்.சி. (மாலை 5 மணி), பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
பனாஜி:
7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
25-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஒடிசா-கோவா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
வெலிங்டன்:
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து இருந்தது. ஹென்றி நிக்கோலஸ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 117 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.
நிக்கோலஸ் தொடர்ந்து அபாரமாக ஆடி 174 ரன் குவித்து ஆட்டம் இழந்தார். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 162 ரன் எடுத்ததே அவருக்கு அதிகபட்சமாக இருந்தது.
நியூசிலாந்து அணி 114 ஓவர்களில் 460 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. வாக்னர் 42 பந்தில் 66 ரன் (8 பவுண்டரி, 4 சிக்சர் ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டும், செமர் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. 29 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது.
பிராத்வெயிட் (0), டாரன் பிராவோ (7 ரன்) ஆகியோரை சவுத்தியும், கேம்பல் (14 ரன்), ரோஸ்டன் சேஸ் (0) ஆகியோரை ஜேமிசனும் அவுட் ஆக்கினார்கள்.
பிளாக்வுட் ஜோடி நிதானத்துடன் ஆடி அரை சதத்தை கடந்த அவர் 69 ரன்னில் ஆட்டம் இழந்தார். புரூக்ஸ் 14 ரன்னும் கேப்டன் ஹோல்டர் 9 ரன்களும் ஜோசப் 0 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை சவுத்தி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆக்லாந்து:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. 20 ஓவர் தொடர் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வில்லியம்சன், போல்ட் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். வில்லியம்சன் முதல் போட்டியில் ஆட மாட்டார். 2-வது மற்றும் 3-வது போட்டிக்கு கேப்டனாக இருப்பார். முதல் ஆட்டத்தில் சான்ட்னெர் கேப்டனாக பணியாற்றுவார்.
இதற்கிடையே கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடு காரணமாக நியூசிலாந்து பயணத்தில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.






