என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 75 டெஸ்டில் 386 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர் 61 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவருக்கு இந்த போட்டி 75-வது டெஸ்டாகும். 75 டெஸ்டில் அஸ்வின் 386 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    அவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஸ்டெய்னை முந்தினார். ஸ்டெய்ன் 75 டெஸ்டில் 383 (142 இன்னிங்ஸ்) விக்கெட் கைப்பற்றி இருந்தார். அஸ்வின் 140 இன்னிங்சில் 386 விக்கெட்டை தொட்டார்.

    இலங்கையை சேர்ந்த முரளீதரன் 75-வது டெஸ்டில் 420 விக்கெட்டை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை அஸ்வின் பிடித்து சாதித்தார்.

    அஸ்வின் 28-வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்களில் இலங்கையை சேர்ந்த ஹெராத்துடன் இணைந்து 3-வது இடத்தை பிடித்தார். முரளீதரன் 75 டெஸ்டில் 35 முறையும், ரிச்சர்டு ஹேட்லி (நியூசிலாந்து) 33 முறையும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர்.

    அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். ஏற்கனவே மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகிய மைதானங்களில் 3 தடவை 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி இருந்தார்.

    அஸ்வின் ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து தொடக்க வீரரை பர்ன்ஸ்சை அவுட் செய்தார். இதன் மூலம் 100 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இதற்கு முன்பு 1907-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெர்ட் ஓக்ளர் என்ற சுழற்பந்து வீரர் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

    சென்னையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
    சென்னை:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்தது. இந்தியா 337 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. 

    எனினும் பாலோ ஆன் கொடுக்காமல் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 241 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய இங்கிலாந்து அணி, வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிரடியாக அடித்து ஆடியது. ஆனால் அஸ்வின், ஷபாஸ் நதீம் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்து அணியின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்தினார்கள்.

    இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 46.3 ஓவர்களில் 178 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. 

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 381 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 192 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்கள், சுப்மன் கில 50 ரன்கள் எடுத்தனர். 

    ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்திய இந்திய அணி, சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. 

    இன்றைய வெற்றியின் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    மெல்போர்ன்:

    ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான 39 வயது செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 51-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் லாரா சிஜ்முன்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் இது அவரது 100-வது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-1, 6-2 என்ற நேர்செட்டில் 39-வது இடத்தில் உள்ள ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் லிஜிட்டி காப்ரிராவை வெளியேற்றினார்.

    மற்ற ஆட்டங்களில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கிவிடோவா (செக்குடியரசு), மார்கெட் வான்ட்ரோசோவா (செக்குடியரசு), சபலென்கா (பெலாரஸ்), அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி கண்டனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-1, 6-2 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான டொமினிக் திம் (ஆஸ்திரியா) 7-6 (7-2), 6-2, 6-3 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 40 நிமிடம் நீடித்தது.

    மற்ற ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), மிலோஸ் ராவ்னிக் (கனடா), காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), டிமிட்ரோவ் (பல்கேரியா), டிகோ ஸ்வார்ட்ஸ்மான் (அர்ஜென்டினா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.
    சென்னை டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 300 விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

    2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியது அவரது 300-வது விக்கெட்டாகும். இதன்மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 300 விக்கெட்டை வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    கபில்தேவ் 434 விக்கெட்டுக்களும், ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    300 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா 400 விக்கெட் வீழ்த்த விரும்புகிறேன் என அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஷ்வின் கூறுகையில் ‘‘இஷாந்த் சர்மா மிகவும் கடின உழைப்பை கொண்டுள்ள கிரிக்கெட்டர். நான் பார்த்த வரைக்கும் இந்திய அணி அறைகளில் இவர்தான்.

    மிகவும் அதிகமான உழைப்பாளர். 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட அவருக்கு, ஒரு தொழில் மூலம் நிர்வகிக்க நிறைய அம்சங்கள் தேவைப்படுகின்றன, இது இப்போது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் பரவியுள்ளது.

    இஷாந்த் சர்மா 2007-08-ல் ஆஸ்திரேலியா சென்று ரிக்கி பாண்டிங்கை வீழ்த்தினார். அப்புறம் ஏராளமான தொடர்களுக்கு சென்றுள்ளார். ஏராளமான காயங்கள் போன்றவற்றுடன் 100 டெஸ்ட் போட்டியை (98-வது போட்டிகளில் விளையாடி வருகிறார்) நெருங்குவது ஜோக் அல்ல. மிக மிக சாதனை. 

    நான் 400, 500 விக்கெட் நோக்கி செல்ல முடியும். ஆனால் அவர் 400 விக்கெட், 500 விக்கெட் வீழ்த்துவதை பார்க்க விரும்புகிறேன். இது ஏராளமான இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சரியான முன்னுதாரணமாக இருக்கும்.

    அவரைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், அவருடைய மிகப்பெரிய பலம் சிரிப்புதான். எப்போதும் சிரித்து கொண்டிருப்பார். அவர் மிகவும் சோர்வாக இருந்தால் கூட சிரித்துக் கொண்டிருப்பார்.

    இன்று நகைச்சுவைக்காக அவரிடம், நீங்கள் பந்து வீச முடியாது என்றேன். உடனே அவர் சரி என்றார். ஏனென்றால் அவர் மிகவும் சோர்வாக இருந்தார். மிகவும் வேடிக்கையான குணம் கொண்ட நபர்’’ என்றார்.
    சென்னை சேப்பாக்கம் டெஸ்டில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 178 ரன்களில் ஆல்அவுட் ஆக இந்தியாவுக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 218 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 337 ரன்னில் சுருண்டது. ரிஷப் பண்ட் 91 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 85 ரன்களும், புஜாரா 73 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டும் ஆண்டர்சன், ஆர்சர், ஜேக் லீச் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அஷ்வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. 2-வது இன்னிங்சில் முதல் பந்திலேயே ரோரி பேர்ன்ஸை வீழ்த்தி அசத்தினார்.

    ஜோ ரூட் அதிகபட்சமாக 40 ரன்கள் அடித்தார். ஒல்லி போப் 28 ரன்களும், ஜோஸ் பட்லர் 24 ரன்களும், டாம்  பெஸ் 25 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 178 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அஷ்வின் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 241 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஓட்டுமொத்தமாக 419 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    ராவல்பிண்டியில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கராச்சியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    2-வது போட்டி ராவல்பிண்டியில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 272 ரன்கள் அடித்தது. தென்ஆப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ஜே 5 விக்கெட்டும், மகாராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் விளையாடியது. வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 5 விக்கெட் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 201 ரன்னில் சுருண்டது.

    71 ரன்கள் முன்னிலைப் பெற்ற பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் விளாச 298 ரன்கள் குவித்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 370 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.

    எய்டன் மார்கிராம், வான் டெர் துஸ்சென் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தென்ஆப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிராம் 59 ரன்களுடனும், வான் டெர் துஸ்சென் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா அணிக்கு 9 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் 243 ரன்கள் தேவைப்பட்டது.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மார்கிராம் சிறப்பாக விளையாடி வான் டெர் துஸ்சென் நேற்றைய 48 ரன்னிலேயே ஹசன் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டு பிளிஸ்சிஸ் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
    ஹசன் அலி

    மறுமுனையில் மார்கிராம் 108 ரன்கள் விளாசினார். டெம்பா பவுமா 61 ரன்னில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 5 விக்கெட்டும், ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால், இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 எனக்கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.
    ஐசிசி அறிமுகம் செய்துள்ள மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ரிஷப் பண்ட் முதல் வீரராக வென்றுள்ளார்.
    ஐசிசி மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்க முடிவு செய்தது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் ரிஷப் பண்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட், அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் பெயரை ஐசிசி பரிந்துரை செய்திருந்தது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருந்தார். சிட்னியில் நடைபெற்ற டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 97 ரன்களும், பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 89 ரன்களும் விளாசினர். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை ருசித்தது. இதனால் ரிஷப் பண்ட் பெயரை ஐசிசி பரிந்துரை செய்தது.

    இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 228 ரன்களும், 2-வது டெஸ்டில் 186 ரன்களும் விளாசினார். இதனால் இங்கிலாந்து 2-0 என இலங்கையை வீழ்த்தியது. இலங்கை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததால் ஜோ ரூட் பெயரையும் பரிந்துரை செய்தது.

    அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டியில் 3 சதம் விளாசினார். இதனால் அவரது பெயரையும் பரிந்துரை செய்தது.

    இதில் ரிஷப் பண்ட் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீராங்கனைகளில் தென் ஆப்பிரிக்காவின் ஷப்னீம் இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி அறிமுகம் செய்துள்ள இந்த விருதை முதன்முறையாக வென்ற வீரர் என்ற பெமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.

    வோட்டிங் அகாடமி சிறந்த வீரரை தேர்வு செய்யும். வோட்டிங் அகாடமியில் மூத்த பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், ஒளிப்பரப்பாளர்கள், ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் உறுப்பினர்களில் சிலர் இடம் பிடித்துள்ளனர்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்துள்ளது.
    சென்னை:

    இந்தியா -இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்து ரன்மழை பொழிந்த இங்கிலாந்து அணி 2-வது நாள் 8 விக்கெட்டுக்கு 555 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218 ரன்) அடித்தார்.

    இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து மொத்தம் 578 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. டாம் பெஸ் 34 ரன்னிலும், ஆண்டர்சன் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஜாக் லீச் 14 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா (6 ரன்) வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் சிக்கினார். நீண்ட நேரம் நிலைக்காத சுப்மான் கில்லும் (29 ரன், 28 பந்து, 5 பவுண்டரி) ஆர்ச்சரின் பந்துவீச்சில் வீழ்ந்தார். தொடக்க ஜோடியின் விக்கெட் இவ்வளவு எளிதில் கிடைக்கும் என்று இங்கிலாந்து வீரர்களே எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

    இதன் பின்னர் புஜாராவும், கேப்டன் விராட்கோலியும் கைகோர்த்தனர். எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி (11 ரன், 48 பந்து) ஏமாற்றம் அளித்தார். அவர் டாம் பெஸ்சின் சுழலில் பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது அருகில் நின்ற ஆலி போப்பிடம் கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே (1 ரன்) டாம் பெஸ்சின் ஓவரில் சில அடி இறங்கி வந்து பந்தை ‘கவர்’ திசையில் விரட்டிய போது ஜோ ரூட் பாய்ந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து அசத்தினார். அப்போது இந்தியா 73 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது. ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்ட போதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக கணித்து செயல்படாமல் சொதப்பி விட்டனர்.

    இந்த நெருக்கடிக்கு மத்தியில் புஜாராவுடன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். புஜாரா நிதானத்தை காட்ட, பண்ட் கவலைப்படாமல் பட்டாசு போல் வெடித்தார். ஜாக் லீச்சின் சுழலில் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து பறக்க விட்டார். தொடர்ந்து அவரது பந்து வீச்சை துவம்சம் செய்தார். எந்த பவுலரையும் பண்ட் விட்டுவைக்கவில்லை. அற்புதமாக ஆடிய இந்த ஜோடி புஜாராவின் துரதிர்ஷ்டவசமான ஒரு ஷாட்டால் பிரிய நேர்ந்தது.

    அணியின் ஸ்கோர் 192 ரன்களாக உயர்ந்த போது புஜாரா (73 ரன், 143 பந்து, 11 பவுண்டரி) டாம் பெஸ்சின் பந்து வீச்சில் வித்தியாசமான முறையில் ஆட்டம் இழந்தார். அதாவது அவர் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை பவுண்டரி நோக்கி ஓங்கி அடித்த போது பந்து அருகில் நின்ற பீல்டர் ஆலி போப்பின் தோள்பட்டையில் பட்டு தெறித்தது. அதை ரோரி பர்ன்ஸ் கேட்ச் செய்தார். சிறிது நேரத்தில் ரிஷாப் பண்ட் (91 ரன், 88 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) டாம் பெஸ்சின் பந்து வீச்சில் சிக்சருக்கு முயற்சித்த போது கேட்ச் ஆகிப்போனார். இதனால் இந்திய அணியின் நிலைமை பரிதாபமானது.

    இதன் பின்னர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், அஸ்வினும் ஜோடி சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தனர்.

    வாஷிங்டன் சுந்தரும், அஷ்வினும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய 321 ரன்கள் பின்தங்கியது.

    இந்நிலையில் இன்று 4- நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்தார். அஸ்வின் அவருக்கு உறுதுணையாக விளையாடினார். ஆனால் 31 ரன்களில் அஸ்வின் அவுட்டானது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதன் பின்பு வந்த ஷபாஸ் நதீம், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் அற்புதமாக விளையாடிய இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இந்தியா 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

    241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாட உள்ளது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 91, வாஷிங்டன் சுந்தர் 85* புஜாரா 73 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 4, வீச், ஆர்ச்சர், ஆண்டர்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா பாலோ ஆன் முடிவை தவிர்க்க 41 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என புஜாரா தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் வெளியேறினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

    இந்நிலையில், ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என புஜாரா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் புஜாரா கூறியதாவது: 

    அதிரடி ஆட்டம் ரிஷப் பண்டின் இயல்பான ஆட்டம். அதனால் அவரை நிறைய கட்டுப்படுத்த முடியாது. அவரால், பெரிதளவில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால், அவர் விரைவில் ஆட்டமிழந்து விடுவார். ஆனால், சில தருணங்களில் ஷாட்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். 

    எந்த ஷாட்களை விளையாட வேண்டும், எந்த ஷாட்களை விளையாடக் கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரிஷப் பண்ட் எப்போது நீண்ட நேரம் பேட் செய்தாலும் பெரிய ரன்களை அடித்துவிட்டே ஆட்டமிழக்கிறார். எனவே அவர் அதை நிச்சயம் உணருவார் என குறிப்பிட்டார்.
    ராவல்பிண்டி டெஸ்டில் கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ள நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 243 ரன்கள் தேவைப்படுகிறது.
    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 77 ரன்னில் அவுட்டானார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஃபவாத் அலாம் 45 ரன்னில் ரன்அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் பஹீம் அஷ்ரப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பஹீம் அஷ்ரப் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 விக்கெட்டும், கேஷவ் மகாராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தென்ஆப்பிரிக்காவில் பவுமா 44 ரன்னும், முல்டர் 33 ரன்னும், மாக்ரம் 32 ரன்னும், டி காக் 29 ரன்னும் எடுத்தனர்.
    இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில்  ஹசன் அலி 5 விக்கெட்டுகள் வீசி அசத்தினார்.

    71 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அசார் அலி 33 ரன்னும், பஹிம் அஷ்ரப் 29 ரன்னும் எடுத்தனர். பொறுப்புடன் ஆடிய மொகமது ரிஸ்வான் சதமடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நௌமான் அலி 45 ரன்கள் எடுத்து ரிஸ்வானுக்கு உதவியாக இருந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 298 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
     
    தென்ஆப்பிரிக்கா சார்பில் ஜார்ஜ் லிண்டே 5 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 17 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் அரை சதமடித்தார்.

    நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிராம் 59 ரன்னுடனும், வான் டெர் டுசன் 48 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    கடைசி நாளான இன்று கைவசம் 9 விக்கெட் உள்ள நிலையில், வெற்றிக்கு தேவையான 243 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா ஆடுகிறார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, மிஹாலா புஜர்னிஸ்குவுடன் (ருமேனியா) ஜோடி சேர்ந்து களம் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் ஓபன் எரா (1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 

    நிருபமா மன்கட், நிருபமா வைத்தியநாதன், சானியா மிர்சா, ஷிகா ஓபராய் ஆகிய இந்திய வீராங்கனைகள் ஏற்கனவே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள்.
    டெஸ்ட் வரலாற்றிலேயே 4-வது இன்னிங்சில் அதிக ரன்களை சேசிங் செய்து 5-வது முறையாக வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
    வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 

    முதல் டெஸ்டில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 430 மற்றும் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டு இழப்புக்கு 223 ரன்களும் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்தது.  2-வது இன்னிங்சில் 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. 

    போட்டியின் இறுதி நாளில் அந்த அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். வெஸ்ட் இண்டீசில் அறிமுக வீரராக விளையாடிய கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவி புரிந்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

    இந்நிலையில், டெஸ்ட் வரலாற்றில் 4-வது இன்னிங்சில் அதிக ரன்களை சேசிங் செய்து 5-வது முறையாக வெற்றி பெற்றதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    இதுதொடர்பாக, ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கைல் மேயர்சின் 210 நாட் அவுட், அந்த அணி வங்காளதேச அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிகாட்டியுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் 5-வது முறையாக 4-வது இன்னிங்சில் அதிக ரன்கள் வெற்றிகரமுடன் சேசிங் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    ×