என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 7 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
    சென்னையில் ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபி-யுடன் கடும் போட்டியிட்டது. 14 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டது. ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு கேட்க சென்னை சூப்பர் கிங்ஸ் அதற்கு மேல் கேட்கவில்லை.

    மொயீன் அலியை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் கடும் போட்டியிட்டது. பஞ்சாப் கிங்ஸ் 6.75 கோடி ரூபாய் வரை கேட்டது. பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் மொயீன் அலி விசில் போடு குரூப்பில் இணைகிறார்.
    ஐபிஎல் ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. ஸ்மித்தை 2.2 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியுள்ளது.
    ஐபிஎல் சீசன் 2021-க்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. 8 அணிகளும் 139 வீரர்களை தக்கவைத்துள்ளது. 57 வீரர்களை விடுவித்துள்ளது. 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.

    இன்றைய ஏலத்தில் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஜேசன் ராய், அலேக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    ஸ்மித்தை 2.2 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. மேக்ஸ் வெல்லை ஏலம் எடுக்க சென்னை - ஆர்சிபி அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

    கருண்நாயர் -  எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

    அலேக்ஸ் ஹேல்ஸ் - எந்த அணியும்  ஏலம் எடுக்கவில்லை

    ஜேசன் ராய் - எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

    ஸ்டீவ் ஸ்மித் - ரூ. 2.20 கோடி - டெல்லி கேப்பிட்டல்ஸ்

    ஆரோன் பிஞ்ச் - எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

    ஹனுமா விஹாரி - எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை 

    மேக்ஸ்வெல் ரூ. 14.25 கோடி- ஆர்சிபி #IPLAuction #IPLAuction2021
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்கோவாவை வீழ்த்தி அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் பிராடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன, முதல் ஆட்டத்தில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி செக்குடியரசின் கரோலினா முச்கோவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜெனிபர் பிராடி 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை 6-4 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    வெற்றி பெற்ற ஜெனிபர் பிராடி இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொள்கிறார்.
    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா சர்தார் படேல் மைதானத்தில் நடத்தப்படுகிறது.

    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

    முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா சர்தார் படேல் மைதானத்தில் நடத்தப்படுகிறது.

    3-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல்-இரவாக நடக்கிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    மோதிரா சர்தார் படேல் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். இங்கு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளது.

    முதலில் இங்கு 49 ஆயிரம் பேர் அமர முடியும். மறு சீரமைப்புக்கு பிறகு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆனது. மெல்போர்ன் ஸ்டேடியத்தில் 90 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது. அதை அகமதாபாத் ஸ்டேடியம் முறியடித்தது.

    சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் அதி நவீன வசதிகள் உள்ளன. மைதானத்தில் வீரர்களுக்காக 4 டிரெஸ்சிங் ரூம்கள் உள்ளன.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி 3-வது டெஸ்ட் போட்டிக்கு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அங்கு 55 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. சீரமைப்புக்கு பிறகு முதல் சர்வதேச போட்டி நடைபெறுவதால், அங்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் வரை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியை நேரில் ரசித்தனர்.

    ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கவுள்ள நிலையில் ஏலத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் மார்க்வுட் திடீரென விலகி உள்ளார்.
    சென்னை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது.

    ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த ஏலம் நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164 பேர் இந்திய வீரர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். 3 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

    இதில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக 8 அணிகளும் ரூ.196.60 கோடி வரை செலவழிக்கின்றன.

    பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக ரூ.53.2 கோடி இருக்கிறது. ராஜஸ்தான் ரூ.37.85 கோடியும், பெங்களூர் ரூ.35.4 கோடியும், மும்பை ரூ.15.35 கோடியும், சென்னை ரூ.19.9 கோடியும் டெல்லி ரூ.13.4 கோடியும் ஐதராபாத், கொல்கத்தா ஆகியவை தலா ரூ.10.75 கோடியும் ஐ.பி.எல். ஏலத்தில் செலவழிக்கலாம்.

    மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவலாம். இருவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இருவரும் கடந்த சீசனில் முறையே பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளில் விளையாடினார்கள். மேக்ஸ்வெலுக்கும், சுமித் துக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல ஜேசன் ராய், ஆரோன் பிஞ்ச், டேவிட் மலன் உள்ளிட்டோரும் அதிக விலைக்கு ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலப் பட்டியலில் ஷாருக்கான், பெரியசாமி, முகமது, அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த் உள்பட 8 தமிழக வீரர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் மார்க்வுட் திடீரென விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐ.பி. எல்லில் இருந்து விலகுவதாக அவர் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

    மார்க்வுட்டுக்கு அடிப்படை விலை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவரது விலகலால் ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் வீரர்களின் எண்ணிக்கை 291 ஆக குறைந்தது.

    மார்க்வுட்டுக்கு இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. எஞ்சிய 2 டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக அவர் அணியோடு இணைந்துள்ளார்.

    குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழிக்க வேண்டி இருப்பதால், மார்க்வுட் ஐ.பி.எல்லில் இருந்து விலகி உள்ளார். 2018-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடினார்.

    கடந்த முறை அவரை மும்பை அணி ஒப்பந்தம் செய்ய முயன்றது கடைசி நேரத்தில் அது பலன் இல்லாமல் போனது. மார்க்வுட் 18 டெஸ்ட், 53 ஒருநாள் போட்டி மற்றும் பதினோரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நவோமி ஒசாகா முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்)- 10-வது நிலையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா).

    இதில் ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 2019-ம் ஆண்டு சாம்பியன் ஆன அவர் 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். செரீனா 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தார்.

    2-வது அரை இறுதி ஆட்டத்தில் 22-வது வரிசையில் உள்ள ஜெனீபர் பிராடி (அமெரிக்கா)- 25-ம் நிலை வீராங்கனையான கரோலினா முச்கோவா மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் இறுதி போட்டியில் ஒசாகாவுடன் மோதுவார்.

    ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் ஜோகோவிச் (செர்பியா), கராட்சேவ் (ரஷியா), மெட்வதேவ் (ரஷியா)- சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகிறார்கள்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ மீண்டும் இணைந்துள்ளது.
    ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் விவோ ஸ்பான்சரானது. 

    சீனாவுடனான எல்லை பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து கடந்தாண்டு விவோ நிறுவன ஸ்பான்சர் ரத்து செய்யப்பட்டது. 

    கடந்தாண்டு டிரீம்11 நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த நிலையில் சீன நிறுவனம் விவோ மீண்டும் ஸ்பான்சராகிறது.  இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சீனாவின் விவோ நிறுவனத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளது ஐபிஎல்.
    ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது.
    சென்னை:

    8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணி நிர்வாகமும், தக்கவைக்கப்பட்ட மற்றும் கழற்றிவிடப்பட்ட வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டன. ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அதிரடி ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணியும், மற்றொரு ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித்தை ராஜஸ்தான் அணியும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோரை பெங்களூரு அணியும் விடுவித்தன.

    ஐ.பி.எல்.



    கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங், முரளிவிஜய் உள்பட 6 பேரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேற்றியது. பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.

    விடுவிக்கப்பட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் ஏலத்திற்கு வருகிறார்கள். அத்துடன் நிறைய பேர் ஏலத்திற்கு புதிதாக தங்கள் பெயரை பதிவு செய்தனர். மொத்தம் 1,114 வீரர்கள் ஏலத்திற்கு விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஐ.பி.எல் நிர்வாகம், அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு 292 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை அறிவித்தது.

    ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 292 வீரர்களில் 164 பேர் இந்தியர்கள் ஆவர். 65 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 35 பேர் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் 17 பேரும் உள்ளனர்.

    இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் ஏலம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்கும் இந்த ஏலம் நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அணி நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    ஒவ்வொரு அணி நிர்வாகமும் வீரர்களை வாங்க மொத்தம் ரூ.85 கோடி செலவு செய்யலாம். இதில் ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்குரிய ஊதியம் போக மீதி தொகையை கொண்டு தான் இந்த ஏலத்தில் வீரர்களை வாங்க முடியும். அந்த வகையில் அதிகபட்சமாக பெயர் மாற்றத்துடன் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் ரூ.53.2 கோடி கையிருப்பு வைத்துள்ளது. அந்த அணிக்கு மொத்தம் 9 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரூ.19 கோடியே 90 லட்சம் இருப்பு வைத்திருக்கிறது. ஒரு வெளிநாட்டவர், 5 இந்தியர் என்று 6 பேரை சென்னை அணி எடுக்கலாம்.

    ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 22 பேரும் அதிகபட்சமாக 25 வீரர்களையும் வைத்துக் கொள்ள முடியும். அதன் அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு அணியும் காலியான இடங்களை முழுமையாக நிரப்பினால் மொத்தம் 61 வீரர்கள் இன்றைய ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.

    ஏலப்பட்டியலில் மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், ஷகிப் அல்-ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், பிளங்கெட், ஜாசன் ராய், மார்க்வுட், கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங் ஆகிய 10 பேரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்களை ரூ.2 கோடியில் இருந்து ஏலத்தில் கேட்பார்கள். இதில் சுமித், மேக்ஸ்வெல், மொயீன் அலி, கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங் ஆகியோர் அதிக விலை போவதற்கு வாய்ப்புள்ளது.

    சென்னை அணியில் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று விட்டதால் சரியான கலவைக்கு அதிரடியான வெளிநாட்டு வீரர் அவசியமாகும். அனேகமாக மேக்ஸ்வெல், மொயீன் அலி, மார்னஸ் லபுஸ்சேன் (தொடக்க விலை ரூ.1 கோடி) ஆகியோரில் ஒருவரை சென்னை அணி நிர்வாகம் குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு கே.கவுதம், ஜலஜ் சக்சேனாவை கவனத்தில் கொண்டுள்ளனர்.

    உலகின் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் டேவிட் மலான், அலெக்ஸ் ஹாலஸ் (தொடக்க விலை தலா ரூ.1½ கோடி), ஆரோன் பிஞ்ச், ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் (தலா ரூ.1 கோடி), கைல் ஜாமிசன், கிறிஸ் மோரிஸ் (ரூ.75 லட்சம்), ஷிவம் துபே (ரூ.50 லட்சம்) ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இந்திய வீரர் புஜாரா (ரூ.50 லட்சம்) மீது இந்த தடவையாவது அணிகள் கரிசனம் காட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    ஏலப்பட்டியலில் ஷாருக்கான், பெரியசாமி, முகமது, அருண்கார்த்திக், ஹரி நிஷாந்த் உள்பட 8 தமிழக வீரர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் தொடரில் அதிரடி காட்டி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்த ஷாருக்கானை எடுக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இவரது ஆரம்ப விலை ரூ.20 லட்சம் ஆகும். தெண்டுல்கரின் மகன் அர்ஜூனும் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

    ஏலம் நிகழ்ச்சியை பிற்பகல் 3 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காலிறுதியில் கடும் போராட்டத்திற்குப்பின் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதலாவதாக நடைபெறும் ஆஸ்திரேலியா ஓபன் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் தலைசிறந்த வீரரும், 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், 4-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை ரபெல் நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டையும் 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் நடால் எப்படியும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வீறுகொண்டெழுந்த சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இருவரும் அடுத்தடுத்து கேம்ஸ்களை கைப்பற்ற 3-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சிட்சிபாஸ் 7(7)-6(4) என 3-வது செட்டை கைப்பற்றினார். அந்த வேகத்தோடு 4-வது செட்டையும் 6-4 எனக் கைப்பற்றினார்.

    ரபேல் நடால், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்

    வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினார். என்றாலும் சிட்சிபாஸ் கையே ஓங்கியது. 5-வது செட்ட 7-7 எனக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    முதல் இரண்டு செட்டுகளையும் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற முடியாத ஏமாற்றத்தோடு ரபேல் நடால் வெளியேறினார்.
    நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலியை 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. 3-வது நாள் ஆட்டத்தில் கடைசி ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். ஜோ ரூட் பந்தை எதிர்கொண்டார்.

    பந்து ஜோ ரூட் கால் பேடில் பட்டு சென்றது. இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்டனர். நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால் ரீ-பிளே-யில் அம்பயர்ஸ் ஹால் என வந்தது. இதனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடுவர் நிதின் மேனனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அவர் அவுட் கொடுத்தால் அவுட், அவுட் இல்லை என்றால் அவுட் இல்லை என்ற கணக்கில் கேப்டன் செல்ல வேண்டும். 

    விராட் கோலியின் செயலை விமர்சனம் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாயிட், விராட் கோலியை 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேவிட் லாயிட் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வார்த்தைகள் இல்லைய? இதனால் நான் விரக்தியடைகிறேன். கிரிக்கெட் மிகவும் பழமையானது. ஒரு அணியின் கேப்டன் நடுவரை விமர்சனம், கேலி, துன்புறுத்த, மிரட்ட அனுமதிக்கப்படுகிறார். தொடர்ந்து அவர் 2-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்.

    இதுமட்டும் வேறொரு போட்டியாக இருந்தால், விராட் கோலி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பார். கோலியை அகமதாபாத் 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு இடமில்லை.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

    3-வது மற்றும் 4-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொதேரா மைதானத்தில் நடக்கிறது. 3-வது டெஸ்ட் 24-ந்தேதி தொடங்குகிறது. இது பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

    இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா தொடரின்போது காயம் அடைந்த ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. உமேஷ் யாதவ் உடற்தகுதி பெற்றால் அணியுடன் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூர் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட்  கோலி, 2. ரோகித் சர்மா, 3. மயங்க் அகர்வால், 4. ஷுப்மான் கில், 5. புஜாரா, 6. ரஹானே, 7. கேஎல் ராகுல், 8. ஹர்திக் பாண்ட்யா, 9. ரிஷப்  பண்ட், 10. சாஹா, 11. அஷ்வின், 12. குல்தீப் யாதவ், 13. அக்சார் பட்டேல், 14. வாஷிங்டன் சுந்தர், 15. இஷாந்த் சர்மா, 16. பும்ரா, 17 முகமது சிராஜ்.

    அபிமன்யு ஈஸ்வரன்,  ஷாபாஸ் நதீம், பிரியங்க் பன்சால் ஆகியோர் விஜய் ஹசரே டிராபி தொடருக்கான விடுவிக்கப்பட்டுள்ளனர்.
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடைபெற உள்ள நிலையில் மேக்ஸ்வெல் ,ஸ்டீவ் சுமித் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவலாம்.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது.

    இதற்காக ஒவ்வொரு அணிகளும் ஏற்கனவே தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்றவர்களை விடுவித்தன.

    ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நாளை (18 ந் தேதி) நடக்கிறது. மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த ஏலம் நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164 பேர் இந்திய வீரர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். 3 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

    மொத்தம் 1114 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து இருந்தனர். இதில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 292 வீரர்களாக குறைத்து இறுதிப் பட்டியலை வெளியிட்டது.

    இதில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக 8 அணிகளும் ரூ196.60 கோடி வரை செலவழிக்கின்றன.

    இந்தியாவை சேர்ந்த ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் மற்றும் மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா), மொய்ன் அலி, ஜேசன் ராய், மார்க்வுட், சாம்பில்லிங்ஸ் பிளங்கெட் (இங்கிலாந்து), சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) ஆகிய 10 வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 12 வீரர்களுக்கு ரூ ரூ.1.5 கோடியும், 11 வீரர்களுக்கு ரூ.1 கோடியும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    மேக்ஸ்வெல் ,ஸ்டீவ் சுமித் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவலாம். இருவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இருவரும் கடந்த சீசனில் முறையே பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளில் விளையாடினார்கள்.

    இதேபோல ஜேசன் ராய், ஆரோன் பிஞ்ச், டேவிட் மலன் உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐ.பி.எல்.போட்டியில் சிறப்பாக ஆடவில்லை. முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. ஆனாலும் அந்த அணி 18 வீரர்களை தக்க வைத்தது.

    ஹர்பஜன் சிங், பியுஸ் சாவ்லா, கேதர் ஜாதவ், முரளி விஜய், மோனு சிங் மற்றும் ஓய்வு பெற்ற வாட்சன் ஆகிய 6 பேர் விடுவிக்கப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் இருந்து ராபின் உத்தப்பா வாங்கப்பட்டார்.

    சி.எஸ்.கே. விடம் ரூ.19.9 கோடி இருக்கிறது. 6 வீரர்களை தான் ஏலத்தில் எடுக்க முடியும். வெளிநாட்டு வீரர்களில் ஒருவரை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். மேக்ஸ்வெல், சுமித், ஜேசன் ராய், மொய்ன் அலி ஆகியோரில் ஒருவரை எடுக்க முயற்சிக்கும்.

    பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக ரூ.53.2 கோடி இருக்கிறது. ஐ.பி.எல் ஏலத்தில் ராஜஸ்தான் ரூ.37.85 கோடியும், பெங்களூர் ரூ.35.4 கோடியும், மும்பை ரூ.15.35 கோடியும், டெல்லி ரூ.13.4 கோடியும் ஐதராபாத், கொல்கத்தா ஆகியவை தலா ரூ.10.75 கோடியும் செலவழிக்கலாம். 


    ×