என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் போட்டியை 3-1 என்ற கணக்கிலும், டி 20 போட்டியை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் 30 வயதான குருணால் பாண்ட்யா சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அறிமுகத்திற்குரிய தொப்பியை அவரது தம்பி ஹர்திக் பாண்ட்யா வழங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார்.
அதன்பிறகு களம் இறங்கி 26 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் இவர் தான்.
இதற்கு முன் 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அறிமுக வீரர் ஜான் மோரிஸ் 35 பந்துகளில் அரைசதம் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த 31 ஆண்டு கால சாதனையை குருணால் பாண்ட்யா முறியடித்தார்.
இன்னிங்ஸ் முடிந்ததும் ஒளிபரப்பு நிறுவனம் அவரிடம் பேட்டி கண்ட போதும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். அவரது தந்தை கடந்த ஜனவரி மாதம் மறைந்தார். அந்த சோகத்தை நினைத்து உருகிய குருணால் பாண்ட்யாவுக்கு பேச முடியாமல் நாக்கு தழுதழுத்தது.
அரை சதத்தை மறைந்த தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கூறியபடி கண்ணீர் சிந்தினார். பிறகு அவரது சகோதரர் ஹர்திக் பாண்ட்யா், அவரை கட்டித் தழுவி ஆறுதல் கூறி தேற்றினார்.
போட்டியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தனது தந்தையை நினைவுபடுத்தி குருணால் பாண்ட்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒவ்வொரு பந்திலும் என்னுடைய மனதிலும், இருதயத்திலும் நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் என்னுடன் இருந்தீர்கள் என உணர்ந்தேன். எனது முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. எனக்கு வலிமையாக இருந்ததற்கும், எனக்கு மிக பெரிய உறுதுணையாக இருந்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்களை பெருமையடைய செய்து விட்டேன் என நம்புகிறேன். இது உங்களுக்கானது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கானது என பதிவிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் களமிறங்கியது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே மட்டும் அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார்.
விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 69.4 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டும், ரோச்3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 291 ரன்னில் ஆல் அவுட்டானது. கார்ன்வெல் 61 ரன்னிலும், பானர் 31 ரன்னிலும், கேம்ப்பெல் 42 ரன்னிலும், கைல் மேயர்ஸ் 45 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல் 5 விக்கெட்டும், சமீரா மற்றும் பெர்னான்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
102 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லஹிரு திரிமான்னே பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார். அவர் 76 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடிய ஒஷாடா பெர்னாண்டோ 91 ரன்னில் வெளியேறினார்.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செய டி சில்வா 46 ரன்னுடனும், நிசாங்கா 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வெஸ்ட் இண்டீசைவிட இலங்கை அணி கூடுதலாக 153 ரன்கள் சேர்த்துள்ளது.

புனே:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது.
வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.
இதேபோல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.
டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட்கோலி ஒரு சதம் அடித்தால் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்து பாண்டிங் சாதனையை முறியடிப்பார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச போட்டிகளில் கேப்டன் பதவியில் 41 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலியும், சர்வதேச போட்டிகளில் கேப்டன் பதவியில் 41 செஞ்சுரி அடித்து, பாண்டிங்குடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.
ஒருநாள் தொடரில் ஒரு சதம் அடித்து பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தெண்டுல்கர் 20 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். வீராட்கோலி இதுவரை சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் 19 சதங்கள் அடித்துள்ளார்.
இந்த தொடரில் அவர் தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றை சதத்தில் 2 சாதனைகளை கோலி இந்த தொடரில் முறியடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏனென்றால் அவர் சமீபத்தில் முடிந்த 20 ஓவர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா.
இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், பாரிஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மார்கன், ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கரன், டாம் கரன், அடில் ரஷீத், மார்க் வுட்.
லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஜிபுஸ்கோவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி, ரியல் சோசிடாட்டை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட்டை எளிதில் தோற்கடித்தது.
பார்சிலோனா அணியில் லயோனல் மெஸ்சி, செர்ஜினோ டெஸ்ட் தலா 2 கோலும், அன்டோன் கிரிஸ்மேன், ஒஸ்மானி டெம்பிலி தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி (62 புள்ளிகள்) நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்டை (60 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ மாட்ரிட் 66 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்த போட்டியின் மூலம் பார்சிலோனா கிளப் அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக அவர் விளையாடிய 768-வது ஆட்டம் இதுவாகும். இதன் மூலம் பார்சிலோனா அணிக்காக அதிக போட்டிகளில் ஆடியவர் என்ற பெருமையை மெஸ்சி தனதாக்கினார். இதற்கு முன்பு ஸ்பெயின் முன்னாள் வீரர் ஸாவி ஹெர்னாண்டஸ் அந்த அணிக்காக 767 ஆட்டங்களில் ஆடியதே அதிகபட்சமாக இருந்தது.
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் களமிறங்கியது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே மட்டும் அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார்.
விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 69.4 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டும், ரோச்3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து,
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வெயிட் மற்றும் கேம்ப்பெல் களமிறங்கினர்.
பிராத்வெயிட் 3 ரன்னிலும், பானர் 31 ரன்னிலும், கேம்ப்பெல் 42 ரன்னிலும், கைல் மேயர்ஸ் 45 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து திணறியது. விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வா, ரக்கீம் கார்ன்வெல் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்து அசத்தியது.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணியை விட தற்போது 99 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். கார்ன்வெல் 60 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல் 5 விக்கெட்டும், துஷ்மந்த சமீரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

புனே:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி தொடர் நடக்கிறது. கடைசி 2 டெஸ்டும், 20 ஓவர் போட்டிகளும் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடந்தது. தற்போது 3 ஒருநாள் போட்டிகளும் மராட்டிய மாநிலமபுனேயில் நடத்தப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி புனேயில் நாளை (23-ந் தேதி) நடக்கிறது.
இந்திய அணி இந்த தொடரில் கடைசி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இங்கிலாந்து அணியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். இரு அணிகளும் கடைசியாக 2019 உலக கோப்பையில் மோதின. இதில் இங்கிலாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 20 ஓவர் தொடரில் 5 ஆட்டத்தில் 231 ரன்கள் எடுத்தார். இதில் 3 அரை சதம் அடங்கும். அதிக பட்சமாக 80 ரன் குவித்தார்.
இதே போல ரோகித் சர்மா, ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், நடராஜன், யசுவேந்திர சாஹல் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
டெஸ்ட், 20 ஓவர் தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரையாவது கைப்பற்றி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது.
மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பட்லர், பேர்ஸ்டோவ், பென்ஸ்டோக்ஸ், ஜேசன்ராய், மார்க்வுட், மொய்ன்அலி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 101-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 100 ஆட்டத்தில் இந்தியா 53-ல், இங்கிலாந்து 42-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் பகல் இரவாக நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






