என் மலர்
விளையாட்டு
ஆட்டநேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை தவறவிட்டன. ஆட்டநேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பில் அர்ஜென்டினா 3 கோல்களும், பிரான்ஸ் ஒரு கோலும் அடித்தது. இதனால் அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பிரான்ஸ் அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.
புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. மைதானத்தில் பவுண்டரி கோடு அருகே ஈரப்பதம் காணப்பட்டதால் போட்டி 9.30 மணிக்குப் பதில் 11.30 மணிக்கு தொடங்கியது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். ரகானே, ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷுப்மான் கில் 44 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த புஜாரா, விராட் கோலி கோலி டக்அவுட்டில் வெளியேறினர். இதனால் இந்திய அணி 90 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
4-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 119 பந்தில் அரைசதம் அடித்தார்.
ஷ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் வெளியேறினார். இருந்தாலும் இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. 5-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால் உடன் சகா ஜோடி சேர்ந்தார்.
மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 196 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். முதல் டெஸ்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் சதம் விளாசி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதற்கிடையே இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்துள்ளது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, இன்றைய ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.
பாலி:
இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை போன்பவி சோச்சுவாங்கை பி.வி. சிந்து எதிர்கொண்டார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, இன்றைய ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.
ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், பி.வி.சிந்து 12-21 21-19 14-21 என தோல்வியடைந்தார். 2016 உலக ஜூனியர் சாம்பியனான சோச்சுவாங்குடன் பி.வி.சிந்து இதுவரை ஏழு முறை விளையாடி உள்ளார். இதில், மூன்று முறை சிந்து தோல்வி அடைந்துள்ளார்.
இதன்மூலம், குரூப்-ஏ பிரிவில் சிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். சோச்சுவாங் முதலிடத்தில் உள்ளார். இதேபோல் குரூப்-பி பிரிவில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, கொரிய வீராங்கனை ஆன் சே யங் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். அரையிறுதியில் பி.வி.சிந்து யாருடன் மோத உள்ளார் என்பது பின்னர் தேர்வு செய்யப்படும்.
முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், தனது கடைசி லீக் ஆட்டத்தில் மலேசிய வீரர் லீ ஜி ஜியாவிடம் தோல்வியடைந்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 4 பந்துகளை சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
மயங்க் அகர்வால்- ஷுப்மான் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 27.3 ஓவரில் 80 ரன்கள் சேர்த்தது. ஷுப்மான் கில் அஜாஸ் பட்டேல் பந்தில் ராஸ் டெய்லரிடம் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து புஜாரா களம் இறங்கினார். 30-வது ஒவரின் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டானார். 5 பந்துகளை சந்தித்த புஜாரா ரன் கணக்கை தொடங்காமல் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். இதே ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி எல்.பி.டபிள்யூ ஆகி டக்வுட் ஆனார். இவர் 4 பந்துகளில் ரன்கள் அடிக்கவில்லை. இந்த இரண்டு விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் வீழ்த்தினார்.
இந்த டக்அவுட் மூலம் விராட் கோலி மோசமான சாதனைகளில் தனது பெயரை இணைத்துள்ளார். இது டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியின் 10-வது டக்அவுட் இதுவாகும். இதன்மூலம் கேப்டனாக அதிகமுறை டக்அவுட் ஆகிய வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.

நியூசிலாந்து அணியின் ஸ்டீபன் பிளமிங் 13 முறை டக்அவுட் ஆகியுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 10 முறை டக்அவுட் ஆகியுள்ளார். தற்போது இவருடன் விராட் கோலி இணைந்துள்ளார்.
எம்.எஸ். டோனி, ஆதர்டன், குரோஞ்ச் ஆகியோர் தலா 8 முறை டக்அவுட் ஆகி கடைசி இடத்தில் உள்ளனர்.
விராட் கோலி இந்திய கேப்டனாக ஒரு வருடத்தில் இதன்மூலம் நான்கு முறை டக்அவுட் ஆகியுள்ளார். இதன்மூலம் ஒரே வருடத்தில் அதிகமுறை டக்அவுட் ஆகிய இந்திய கேப்டன்கள் என்ற மோசமான சாதனையில் பிஷன் பெடி (1976), கபில் தேவ் (1983), எம்.எஸ். டோனியுடன் (2011) இணைந்துள்ளார்.
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடாத நிலையில், டாம் லாதம் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. வழக்கமாக 9 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டு, 9.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
இன்று பவுண்டரி எல்லை அருகே ஈரப்பதம் இருந்ததால் டாஸ் சுண்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது. நடுவர்கள் மைதானத்தை அய்வு செய்து 12 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவித்தனர். அதன்படி 11.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ரகானே, ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இந்திய அணி விவரம்:-
1. மயங்க் அகர்வால், 2. ஷுப்மான் கில், 3. புஜாரா, 4. விராட் கொலி, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. சகா, 7. அஸ்வின், 8. அக்சார் பட்டேல், 9. ஜயந்த் யாதவ், 10. உமேஷ் யாதவ், 11. முகமது சிராஜ்.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் காயம் காரணமாக மூன்று முக்கிய வீரர்கள் களம் இறங்கமாட்டார்கள் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் காலை 9 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பவுண்டரி எல்லை அருகே ஈரப்பதமாக இருப்பதால், டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கான்பூர் டெஸ்டில் விளையாடிய இஷாந்த் சர்மா, ஜடேஜா மற்றும் ரகானே ஆகியோர் காயம் காரணமாக இன்றைய போட்டியில் களம் இறங்கமாட்டார்கள் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இந்திய ஆடுகளத்தில் ரகானே தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் காலை 9 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பவுண்டரி எல்லை அருகே ஈரப்பதமாக இருப்பதால், டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் எதிர்பாராத வகையில் மழை பெய்ததால் மைதானங்கள் ஈரப்பதமாக காணப்பட்டது,
நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
மும்பை:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை இந்தியா 3-0 என்று கைப்பற்றி அசத்தியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையே கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
டி20 தொடர் மற்றும் முதல் டெஸ்டில் ஒய்வு அளிக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுவார் என்பதால் இந்திய அணி பேட்டிங்கில் கூடுதல் பலத்துடன் காணப்படும். விராட் கோலி அணிக்கு திரும்பி இருப்பதால் இந்திய அணியில் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது .
மொத்தத்தில் இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி வீரர் தனஞ்செயா டி சில்வா மற்றும் லசித் எம்புல்டெனியா ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்துள்ளது.
காலே:
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா 73 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெயிட் 74 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட்டும், எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறியது. அந்த அணியின் நிசங்கா அரை சதமடித்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தனஞ்செயா டி சில்வா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
இறுதியில், நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செயா டி சில்வா 153 ரன்களும், லசித் எம்புல்டெனியா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் இலங்கை அணி வெஸ்ட் இண்டீசை விட 279 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பெர்மவுல் 3 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்...உலக டூர் பைனல்ஸ்- அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
வரும் ஆஷஸ் தொடரில் நாதன் லயன் சரியாக விளையாடவில்லை எனில் அதுவே அவருக்கு கடைசித் தொடராக இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் மிகப் பிரபலமானது. இந்த ஆண்டின் ஆஷஸ் தொடர் வரும் 8ம் தேதி தொடங்குகிறது. ஆக்ரோஷம், விறுவிறுப்பு, சர்ச்சைகளுக்கு துளியும் பஞ்சமில்லாத டெஸ்ட் தொடராக ஆஷஸ் டெஸ்ட் பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய வீரர் டிம் பைன் களத்துக்கு வெளியே தகாத முறையில் நடந்து கொண்டதற்காக டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, பவுலரான பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு பவுலரை கேப்டனாக நியமனம் செய்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
அதேபோல், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் அடிக்கடி நிறவெறி மற்றும் மதம் சார்ந்த சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். இரு அணிகளும் கடுமையான சர்ச்சைகளுடன் களமிறங்குவதால், 2021-2022 ஆஷஸ் தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், “இரு அணிகள் தரப்பிலும் தவறுகளும், சர்ச்சைகளும் இருக்கின்றன. ஆனாலும், இவையெல்லாவற்றையும் புறந்தள்ளுங்கள். டிசம்பர் 8ம் தேதி போட்டியின் விறுவிறுப்புக்காக காத்திருப்போம். என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஃபார்மில் இல்லை. வேகப்பந்து வீச்சாளரின் தலைமையின் கீழ் நாதன் லயன் எப்படி செயல்பட போகிறார் என தெரியவில்லை. இந்த தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை எனில் அதுவே அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
பாலி:
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார். 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-16 என்ற நேர்செட்டில் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கினார்.
இதனையடுத்து, அடுத்த லீக் ஆட்டத்தில் யோனி லியை (ஜெர்மனி) எதிர்கொண்டார் சிந்து. இந்த போட்டியில், 21-10, 21-13 என்ற செட் கணக்கில் லியை வீழ்த்தினார். 31 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல் மற்றொரு வீரர் லக்சயா சென்னும் அரையிறுதியை உறுதி செய்தார். ஸ்ரீகாந்த் மற்றும் மகளிர் இரட்டையர் ஜோடியான அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது. இதேபோல் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டர்கள் பலர் இருந்தபோதும் தன் மனதுக்கு சட்டென நினைவுக்கு வருவது அஸ்வின்தான் என மெக் மில்லன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல் ரவுண்டர் எப்போதும் கபில்தேவ் தான். இருப்பினும், தற்போது அஷ்வின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்வதாக நியூசிலாந்தின் ஆல் ரவுண்டர் மெக் மில்லன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சமீப காலமாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதுதவிர 2755 ரன்கள் குவித்துள்ளார். அதில் 5 சதங்கள் அடங்கும். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அஷ்வின் அசத்தி வருகிறார்.
குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் மிக முக்கியமான கட்டத்தில் அஸ்வினும், ஷ்ரேயாஸ் அய்யரும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு அபாரமாக விளையாடினர். அந்தப் போட்டியில் அஸ்வின் 32 ரன்களை குவித்தார்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிரேக் மெக்மில்லன், அஸ்வினின் ஆட்டம் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவைப் பொருத்தவரை சிறந்த ஆல் ரவுண்டராக எப்போதும் கபில்தேவ் திகழ்கிறார். அந்த இடத்தை நெருங்குவதற்கு அஸ்வினுக்கு வெகுதூரம் இல்லை. இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டராக அஜித் அகர்கர், இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இருந்தாலும், என் மனதுக்கு சட்டென நினைவுக்கு வருவது அஸ்வின்தான். அவருக்குப் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை என நினைக்கிறேன்.
அவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மட்டுமல்லாமல், இந்திய அணிக்காக சதங்களை விளாசியவர். குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது. முக்கியமான அந்த நேரத்தில் களமிறங்கிய அஸ்வின், பிரமாதமாக விளையாடி சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார்.
இவ்வாறு மெக் மில்லன் கூறினார்.
இதையும் படியுங்கள்... இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு






