என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அர்ஜென்டினா அணி வீரர்கள்
    X
    அர்ஜென்டினா அணி வீரர்கள்

    ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை- பிரான்ஸ் அணியின் கனவை தகர்த்த அர்ஜென்டினா

    ஆட்டநேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை தவறவிட்டன. ஆட்டநேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இந்த வாய்ப்பில் அர்ஜென்டினா 3 கோல்களும், பிரான்ஸ் ஒரு கோலும் அடித்தது. இதனால் அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பிரான்ஸ் அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.
    Next Story
    ×