search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி டக்அவுட்
    X
    விராட் கோலி டக்அவுட்

    வான்கடே டெஸ்டில் டக்அவுட்: மோசமான சாதனை பட்டியலில் இணைந்தார் கேப்டன் விராட் கோலி

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 4 பந்துகளை சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    மயங்க் அகர்வால்- ஷுப்மான் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 27.3 ஓவரில் 80 ரன்கள் சேர்த்தது. ஷுப்மான் கில் அஜாஸ் பட்டேல் பந்தில் ராஸ் டெய்லரிடம் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து புஜாரா களம் இறங்கினார். 30-வது ஒவரின் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டானார். 5 பந்துகளை சந்தித்த புஜாரா ரன் கணக்கை தொடங்காமல் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். இதே ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி எல்.பி.டபிள்யூ ஆகி டக்வுட் ஆனார். இவர் 4 பந்துகளில் ரன்கள் அடிக்கவில்லை. இந்த இரண்டு விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் வீழ்த்தினார்.

    இந்த டக்அவுட் மூலம் விராட் கோலி மோசமான சாதனைகளில் தனது பெயரை இணைத்துள்ளார்.  இது டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியின் 10-வது டக்அவுட் இதுவாகும். இதன்மூலம் கேப்டனாக அதிகமுறை டக்அவுட் ஆகிய வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.

    அஜாஸ் பட்டேல்

    நியூசிலாந்து அணியின் ஸ்டீபன் பிளமிங் 13 முறை டக்அவுட் ஆகியுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 10 முறை டக்அவுட் ஆகியுள்ளார். தற்போது இவருடன் விராட் கோலி இணைந்துள்ளார்.

    எம்.எஸ். டோனி, ஆதர்டன், குரோஞ்ச் ஆகியோர் தலா 8 முறை டக்அவுட் ஆகி கடைசி இடத்தில் உள்ளனர்.

    விராட் கோலி இந்திய கேப்டனாக ஒரு வருடத்தில் இதன்மூலம் நான்கு முறை டக்அவுட் ஆகியுள்ளார். இதன்மூலம் ஒரே வருடத்தில் அதிகமுறை டக்அவுட் ஆகிய இந்திய கேப்டன்கள் என்ற மோசமான சாதனையில் பிஷன் பெடி (1976), கபில் தேவ் (1983), எம்.எஸ். டோனியுடன் (2011) இணைந்துள்ளார்.
    Next Story
    ×