என் மலர்
விளையாட்டு
+2
- கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார்.
- 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது.
மிர்புர்:
வங்காளதேசம் மற்றம் இந்திய அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. மெகிடி ஹசன் மிராஸ் சதம் அடித்தார். மஹ்முதுல்லா 77 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி (5 ரன்), ஷிகர் தவான் (8 ரன்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி 82 ரன்கள் விளாசினார். அக்சர் பட்டேல் 56 ரன்கள் சேர்த்தார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் போதிய ரன்ரேட்டை எட்டவில்லை.
கடைசி நேரத்தில் போராடிய கேப்டன் ரோகித் சர்மா, பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விரட்டி வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.
50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என கைப்பற்றியது. வங்காளதேசம் தரப்பில் எபடோட் உசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மெஹிடி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் அசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
- வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது.
- 8வது வீரராக களமிறங்கிய மெகிடி ஹசன் மிராஸ் சதம் அடித்து அசத்தினார்
மிர்புர்:
வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறிய நிலையில், 6வது வீரராக களமிறங்கிய மஹ்முதுல்லா 77 ரன்களும், 8வது வீரராக களமிறங்கிய மெகிடி ஹசன் மிராஸ் 100 ரன்களும் விளாசியதால் அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உம்ரான் மாலிக், முகமது சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
- இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
மிர்புர்:
வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் அனாமுல் ஹக் 11 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்திய வீரர் சிராஜ் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
- காலிறுதிச் சுற்றில் 8 நாடுகள் விளையாடுகின்றன.
- இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும். நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், நாக் அவுட் சுற்றுகள் நள்ளிரவுடன் முடிந்தது. நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை மறுதினம் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் குரோசியா, பிரேசில் அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 10-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது காலிறுதியில் மொராக்கோ, போர்ச்சுக்கல் அணியும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 3-வது காலிறுதியில் நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகளும் மோதுகின்றன. நான்காவது காலிறுதி டிசம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
- இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
மும்பை:
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வத்தை ரசிகர்களிடயே அதிகரிக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டது.
முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இதில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.
தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கை அணியும், 4வது இடத்தில் இந்திய அணியும், 5வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.
பாகிஸ்தான் அணி தற்போது தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருந்தது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தோல்வியால் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும். அதன்பின் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கூட இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இது பாகிஸ்தான் அடைந்த தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சாதகமாக கருதப்படுகிறது.
- முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- இரண்டாம் பாதியிலும் போர்ச்சுக்கல் 4 ஒரு கோல் அடித்து அசத்தியது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் போர்ச்சுக்கலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் போர்ச்சுக்கல் கோல் மழை பொழிந்தது. போர்ச்சுக்கலின் ராமோஸ் 51-வது நிமிடத்திலும், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், ராமோஸ் 67-வது நிமிடத்திலும், 92-வது நிமிடத்தில் ரபேல் லியோ தலா ஒரு கோல் அடித்தனர்.
சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
- ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாஹின் ஷா அப்ரிடி இடம்பிடித்துள்ளார்.
- சிறந்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் 2 வீரர்கள் இடம் பெற்றனர்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பந்துவீச்சாலர் ஷாஹின் ஷா அப்ரிடி, இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அடில் ரஷீத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி டி20 உலக கோப்பை தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து பந்து வீச்சாளர் அடில் ரஷீத் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியன் மூலம் இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
- ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
- இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவே முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இரு அணியும் 0 - 0 என சமனிலை வகித்தது.
இதையடுத்து, கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
இறுதியில், மொராக்கோ அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
- மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிர்பூர்:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்தியா-வங்காளதேச அணிகள் மேலும் 2-வது ஒரு நாள் போட்டி மிர்பூரில் நாளை (7-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தோற்றால் ஒரு நாள் தொடரை இழந்துவிடும். இதனால் இந்திய அணி வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல் ஒருவரே நிலைத்து நின்று ஆடினார். அதுவும் கடைசிகட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள். இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இதேபோல பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர் முக்கியமான கட்டத்தில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இது அணியின் வெற்றியை பாதித்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லிட்டன் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. முதல் போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு நம்பிக் கையை அதிகரித்துள்ளது.
கேப்டன் லிட்டன் தாஸ், சகீப்-அல்-ஹசன், முஸ்பிகுர் ரகீம், ஹசன் மிராஸ், எபொதத் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
வெற்றி நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
- குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர்.
- ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.
மிர்பூர்:
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர். இதனால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 80 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.
- முதல் பாதியில் பிரேசில் அணி 4 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- இரண்டாம் பாதியில் தென் கொரியா அணி ஒரு கோல் அடித்தது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.
- முதல் பாதியில் ஜப்பான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- இரண்டாம் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் ஜப்பான், குரோசியா அணிகள் மோதின.
தொடக்கத்தில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என சமனிலை வகித்தன.
கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
இறுதியில், குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.






