என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • நல்லவர்களோடு கொள்கிற நட்பு வளர்பிறை போல வளருமாம்.
    • உலகியலில், மனித உறவுகளுக்கென சில உரிமைகளும் கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன

    நட்பு என்னும் நற்குணத்தை என்றென்றும் போற்றிப் பாதுகாத்திட விரும்பிடும் அன்பு வாசகர்களே! வணக்கம்!.

    உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் ஒன்றினோடு ஒன்று கலந்து உறவாடிட உறவுமுறைச் சொற்களும், உரிமைவழிச் சொந்தங்களும் உருவாயின. எத்தனை வகையான ரத்தவழிச் சொந்தங்கள் உருவாகிப் பிணைந்து நின்றாலும் 'நட்பு' என்கிற உணர்வுவழி உறவுக்கு ஈடாக உலகில் வேறொன்றும் இதுவரை உருவாகவில்லை என்றே கூற வேண்டும்.

    ரத்தவழிச் சொந்தங்களும் உறவுமுறைகளும் பிறப்பின்வழியே உருவானவை; இந்தவகை உறவுகள் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவை; விதிவழியே உருவானவை. ஆனால் ரத்தவழிச் சொந்தமற்ற மனிதர்களுக்கிடையே உருவாகும் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவும், ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும், பெருகிவரும் பாச உணர்வைப் பரிமாறிக்கொள்ளவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கையைப் புலப்படுத்திக் கொள்ளவும் 'நட்பு' என்கிற புதிய உறவு புனித உணர்வாய்ப் போற்றப்படுகிறது.

    எத்தனை விதமான உறவுகள் இயல்பாகவே அமைந்து சூழ்ந்து நின்றாலும், உருவாக்கி உறவுகொள்ளும் சிறப்புத் தன்மை வாய்ந்த நட்பை வெல்வதற்கு மற்றெவற்றாலும் முடியாது. ஏனெனில், நாம் செய்கிற எந்தவொரு செயலாக இருந்தாலும், அது உறவுகளால் சூழ்ந்து நிற்பதைவிட நட்புகளால் சூழ்ந்து நிற்பதே பெரு வெற்றிகளைக் குவிக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. திருவள்ளுவர் தமது திருக்குறளை 133 அதிகாரங்களாக வகுத்து ஆகச்சிறந்த பொருண்மைகளுக்கு அதிகாரங்களைப் பகுத்துக் கொடுத்திருந்தாலும், 'நட்பு' என்பதற்கு மட்டும் ஐந்து விதமான அதிகாரங்களைத் தாராளமாக வழங்கியுள்ளார். 'நட்பு', நட்பாராய்தல்','தீ நட்பு', கூடா நட்பு', 'பழைமை' என்பவை அவ்வதிகாரங்கள்.

    மனித உறவாடல்களில் ஆகச் சிறந்த உறவாடல் 'நட்பு' மட்டுமே என்பதால், அதனை ஆராய்ந்து தெளிந்து, தீயவற்றையும், கூடாதவற்றையும் விலக்கி, கொள்வனவற்றை ஏற்று, நட்பைக் கொள்ள வேண்டும் என்பதற்காக வள்ளுவர் ஐந்து அதிகாரங்களை மனித குலத்திற்கு வழங்கி வழிகாட்டி உள்ளார்.

    நல்லவர்களோடு கொள்கிற நட்பு வளர்பிறை போல வளருமாம்; தீயவர்களோடு கொள்கிற நட்பு, தேய்பிறை போலத் தேய்ந்து போகுமாம். நல்ல நண்பர்களோடு நட்புக்கொண்டு பழகுவதும், நல்ல இலக்கிய நூல்களை நாள்தோறும் பயில்வதும் ஒருதன்மையான நன்மை பயப்பவை ஆகும். நல்ல நூல்களைப் படிக்கப் படிக்கப் புதிதுபுதிதான சிந்தனையோட்டங்களும் நலம்நலமான நயமான திறங்களும் வெளிப்பட்டுத் தோன்றும். அவை நமது வாழ்வியல் போக்குகளைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கும் தன்மையைத் தரும். அதைப்போல நல்ல பண்புநலனும் அன்புநயமும் உடைய நண்பர்களோடு பழகத் தொடங்கினால், அந்த நட்பும், தடைகளாலும் தோல்விகளாலும் துவண்டு நிற்கும் தருணங்களிலெல்லாம் நம்மைத் தூக்கி நிறுத்தும் ஊக்கிகளாகச் செயல்படும்.

    உலகியலில், மனித உறவுகளுக்கென சில உரிமைகளும் கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. தாய்,தந்தை பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், பிள்ளைகள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள உரிமைகள், சகோதர- சகோதரிகள், அத்தை-மாமா, மாமனார்-மாமியார், அங்காளி பங்காளிகள், மாமன்-மைத்துனர்கள் இவர்களுக்கிடையேயுள்ள உரிமைகளும் கடமைகளும்… இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். இந்த உறவுகளுக்கு இடையேயுள்ள உரிமைகளும் கடமைகளும் விதிகளுக்கு உட்பட்டவை; தவறினால் கேள்விகளுக்கு உட்படுத்தப்படும் சமூகத்தன்மை வாய்ந்தவையும்கூட.

    ஆனால் நட்பிற்கு எந்த வரையறுக்கப்பட்ட உரிமையும் கிடையாது; கட்டாயப்படுத்தப்பட்ட கடமையும் கிடையாது. மகிழ்ச்சித் தருணங்களில் கொண்டாடி மகிழ்வதற்கு மட்டுமல்ல நட்பு; வாழ்நெறி தவறிப் பிழையான பாதையில் செல்லத் தொடங்கும்போது, இடித்துக்கூறித் திருத்தும் தன்மை வாய்ந்தது நட்பு. நாள்தோறும் நேரில் சந்தித்து மணிக்கணக்கில் அரட்டையடித்து மகிழ்ந்துபேசி முகத்தளவில் சிரித்துப், பிரிந்து போவதல்ல நட்பு; சந்தித்தாலும் சந்திக்காவிட்டாலும் அகத்தளவில் அடைகாத்து வளர்க்கப்படுவதே இனிய நட்பு.

    நண்பர்கள் என்றால் அடிக்கடி கூடி மகிழ்வதும் உண்டுமகிழ்வதும் மட்டுமே நினைவுக்கு வந்தால் அவர்கள் நட்பைப் பொழுதைக் கழிப்பதற்கான கருவியாக மட்டுமே கருதுகிறார்கள் என்று பொருள். நட்பைத் திருவள்ளுவர், இருவகைப்படுத்திப் பெருமைப் படுத்துகிறார்; 'அல்லல் அழிப்பதாம் நட்பு', 'இடுக்கண் களைவதாம் நட்பு' என்கிறார்.

    ஒரு நண்பனுக்குத் துன்பம் என ஒன்று வந்தவுடன் ஓடிச்சென்று, அவனுக்கு நேர்ந்துள்ள துன்பத்தை நீக்கி, அந்தத் தீமையிலிருந்து வெளியேறும் வழிமுறைகளைக்கூறி, தேவைப்பட்டால் அவனது துன்பத்தில் பங்கு போட்டுத் தாங்கிக் கொள்வதுதான் நட்பாம்.

    "அழிவினவை நீக்கி ஆறுய்த்து

    அழிவின்கண்

    அல்லல் உழப்பதாம் நட்பு"

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    ஒரு நண்பன் துன்பத்தில் தவிக்கும்போது, அவன் உதவிசெய் என்று கேட்காமலேயே, அவனையுமறியாமலேயே ஓடிச்சென்று உதவி செய்து துன்பத்தைத் தீர்ப்பதுதான் நட்பாம். எப்படியென்றால், உடுத்தியிருக்கிற ஆடை நழுவும்போது, நமது கைகள், நம்மையுமறியா மலேயே அனிச்சையாக ஓடிச்சென்று ஆடையைச் சரி செய்வதுபோலத் துயரப்படும் நண்பனுக்கு உதவ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். நட்பு, விளம்பரங்களுக்கும் விதிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது.

    "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

    இடுக்கண் களைவதாம் நட்பு".

    நட்பின் மேன்மையை விளக்கும், 'கிம்' மற்றும் 'டிம்' என்கிற இரண்டு மேனாட்டு நண்பர்களின் கதை மிகவும் உருக்கமானது. கிம் மற்றும் டிம் இருவரும் ஒரே ஊரில், ஒரே தெருவில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் ஒரே ஆண்டில், ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து பாடம் கற்றவர்கள். இணைபிரியாத தோழமையோடு கல்லூரிப் படிப்புவரை கற்று, அந்த நாட்டின் ராணுவப் படைப்பிரிவில் ஒன்றாகப் பணியாற்றத் தொடங்கினர்.

    ராணுவத்திலும் ஒரே குழுவில் இருவரும் பணியாற்றி வந்தனர். அப்போது அவர்களது நாட்டிற்கும் அண்டை நாட்டிற்கும் சண்டை மூண்டது. கிம்மும் டிம்மும் தங்களது படைக்குழுவோடு போர்க்கள எல்லையில் சண்டையில் பங்கேற்றனர். எல்லையில் இருபுறமும் பதுங்கு குழிகள் அமைத்து இருநாட்டுப் படைகளும் கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றன. துரதிர்ஷ்ட வசமாக, கிம் எதிரிநாட்டு எல்லைக்குள் சென்றுவிட்டான்; பலத்த காயம் வேறு; அங்கிருக்கும் பதுங்கு குழிக்குள் குற்றுயிரும் கொலை உயிருமாகக் கிடந்து கிம் முனகும் முனகல் சத்தம், எல்லைக்கு இந்தப்பக்கமாகப் பதுங்கு குழிக்குள் இருக்கும் நண்பன் டிம்முக்கு நன்றாகவே கேட்கிறது.

    " நண்பா! டிம்! நான் இங்கு உன்னைக் காணவேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறேன்!. வா நண்பா! வந்து என்னை மீட்டுக்கொண்டு செல்!" என்று கிம் அழைக்கும் முனகலோசை டிம்முக்குக் கேட்கிறது. தனது குழுவின் தளபதியிடம் அனுமதி கேட்கிறான் டிம்," எப்படியாவது எதிரிநாட்டின் எல்லைக்குள் சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் என் நண்பனை மீட்டு வருகிறேன்! அனுமதி தாருங்கள்!". தளபதி அனுமதி மறுக்கிறார், " நீ அங்கு சென்றால், எதிரிப்படை உன்னையும் பிடித்துக் கொன்றுவிடும். நமக்கு இழப்பு இரட்டிப்பு ஆகிவிடும்; அதனால் போகாதே!" என்று தடுக்கிறார்.

    நட்பின் வேகம் பொங்கிப் பிரவாகம் எடுக்க, தளபதியின் கால்களில் விழுந்து," தயவு செய்து அனுமதி கொடுங்கள்!. நிச்சயம் என் நண்பனை உறுதியுடன் மீட்டுக்கொண்டு வருகிறேன்! இது எனது நட்பின்மீது ஆணை!" என்று கெஞ்சுகிறான் டிம். "சரி. தொலைந்து போ! என்று வேண்டா வெறுப்புடன் அனுமதிக்கிறார் தளபதி.

    எதிரிப்படையின் கண்களில் மண்ணைத் தூவி, எல்லைதாண்டி நுழைந்த டிம், உயிர் நண்பன் கிம் இருக்கும் பதுங்கு குழியைக் கண்டுபிடிக்கிறான். நண்பன் வந்துவிட்டதைத் தனது இரண்டு கண்களால் கண்ட கிம் ஆனந்தக் கண்ணீரை மாலைமாலையாக உகுத்து டிம்மை ஆரத் தழுவுகிறான். " வந்து விட்டேன் கிம்! இனி ஆபத்தில்லை! நாம் பாதுகாப்பாக நம்மிடத்திற்குச் சென்று விடுவோம்!" என்று ஆறுதலாக டிம் கூறியதைக் கேட்டுக்கொண்டே உயிர் துறக்கிறான் கிம். உயிரிழந்த நண்பனது உடலைச் சுமந்துகொண்டு, தனது படை தங்கியுள்ள பகுதிக்கு வந்து சேர்கிறான் டிம். பார்க்கிறார் தளபதி. "இதற்காகத்தான் உன்னை அங்கே போகாதே என்று சொன்னேன். சிக்கியிருந்தால் உன்னையும் அவர்கள் கொன்று போட்டிருப்பார்கள்!. பார் உன் நண்பனையாவது காப்பாற்ற முடிந்ததா?" என்று கேட்டார்.

    டிம் பதில் சொன்னான். " நான் அங்கு சென்று என் நண்பனை உயிரோடு இங்கு கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை. நண்பன் செத்து விட்டான்; ஆனால் எப்படியாவது தனது உயிர் நண்பன், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன்னை நிச்சயம் காண வருவான் என்று அவன் என் மீது கொண்டிருந்த நம்பிக்கையைச் சாகடிக்காமல் நான் காப்பாற்றியிருக்கிறேன். நண்பன் வந்து விட்டான் என்கிற நம்பிக்கையோடுதான் அவன் உயிர் துறந்திருக்கிறான். நண்பர்கள் செத்துப்போகலாம்!; ஆனால் அவர்கள் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை என்றுமே செத்துப் போகக்கூடாது".

    என்னே அமரத்துவமான நட்பின் நம்பிக்கை வரிகள்!.

    வெளிநாட்டில் மட்டுமா இதைப்போன்ற அமரத்துவமான நட்பின் கதைகள் இருக்கின்றன? இங்கே நமது தமிழ் வரலாற்றில், இறுதிவரை, காணாமலேயே நட்புப் பூண்டு, நிறைவாக மரணத்தில் ஒன்றிணைந்த கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பிற்கு ஈடு இணை இந்த உலக வரலாற்றில் வேறு எதுவுமுண்டோ?.

    முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் என நட்புப் பதாகை தாறுமாறாகப் பறந்து கொண்டிருக்கிற இன்றைய சமூகஊடகக் காலத்தில், ஒருவரை ஒருவர் காணாமலேயே நட்புக் கொண்டிருந்த வரலாறு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அதுவும் ஒருவர் ஒரு நாட்டின், சோழ சாம்ராஜ்யத்தின் ராஜா! இன்னொருவரோ பாட்டுமட்டுமே இயற்றத் தெரிந்த ஏழைப்புலவர். இருவரும் ஒரே நாட்டினரும் அல்லர்; ஒருவர் சோழ நாடு. மற்றவர் பாண்டியநாட்டில் பிசிர் என்னும் சிற்றூர். இணைத்து வைக்க எந்த இணைய வசதியும் இல்லாத காலத்தில் எப்படிக் காணாமலேயே நட்பில் இணைந்திருந்தார்கள்?. மானம் காக்க வடக்கிருந்து உயிர் துறப்பது என முடிவெடுத்தபின், தன்னை அடக்கம் செய்யப்போகும் இடத்திற்கு அருகிலேயே, தன்னுடைய உயிர்நண்பர் பிசிராந்தையாருக்கும் ஓரிடம் தயார் செய்துவையுங்கள்! என்று கோப்பெருஞ்சோழன் கட்டளையிட்டது எந்த உள்ளுணர்வின் அடிப்படையில்? . நூற்றுக்கணக்கான கல் தொலைவுகளுக்கு அப்பாலிருந்த பிசிராந்தையார் சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது எந்த உள்ளுணர்வின் அடிப்படையில்?.

    எல்லாம் நட்பு என்னும் நல்லுணர்வு செய்யும் மாயம்தான்.

    தொடர்புக்கு 94431 90098

    • மனிதனுடைய ஆரோக்கியமான வாழ்வுக்கு அறுசுவையும் தேவை.
    • சாப்பிடும் முன்னும் பின்னும் 20 நிமிடம் நீர் எடுக்கக் கூடாது.

    நாம் பொதுவாக உணவு உண்ணும்போது, பேசிக்கொண்டே தான் சாப்பிடுவோம். பெரியவர்கள், உணவு உண்ணும்போது, வாயை மூடிக்கொண்டு உணவு எடு என்பார்கள். காரணம் என்னவென்றால் வாயை மூடிக்கொண்டு சாப்பிடுவது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழியாகும். ஏனெனில், உடலை வளர்ப்பது உணவுதான்.

    நமது வாயில் உணவு உள்ளே சென்ற பிறகு, உதடுகளை மூடிக்கொண்டு, பற்களால் நன்றாக அரைத்து உணவை கூழாக்கி அதனோடு வாயில் சுரக்கும் எச்சங்களை சேர்த்து உள்ளே அனுப்பும்போது அது சரியான முறையில் ஏழு தாதுகளாக மாற்றம் பெறும்.

    நமது பற்கள், உணவை உடைப்பதற்கும் கிழிப்பதற்கும், கூழாக்குவதற்கும் ஆன மூன்று முறைகளிலே இறைவனால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த பொருள் வாயில் சென்றாலும் நாம் விழுங்கக் கூடாது. அப்படி செய்தால் உடல் உணவை ஜீரணம் ஆக்காது. மாறாக உடலுக்கு பல துன்பங்களை ஏற்படுத்தும்.

    பொதுவாக நாம் மூன்று வேலை உணவு எடுத்து கொள்வோம். ஒரு வேளை உணவு உண்டால் அவர்களை யோகி என்றும், இரண்டு வேளை உணவு உண்டால் அவர்களை போகி என்றும், மூன்று வேளை உணவு உண்டால் அவர்களை ரோகி என்றும் அதற்குமேல் அதிகமாக உணவு எடுப்பவர்களை துரோகி என்றும் கூறுவர். இந்த வார்த்தைகளை நாம் கவனத்தில் நிறுத்தி நம்முடைய உடல் தகுதி, வேலைக்கு ஏற்றவாறு நம்முடைய உணவுகளை அளவாக எடுக்க வேண்டும்.

    பொதுவாக உணவு என்பது இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என்கின்ற ஆறு சுவைகளை உடையது என்று நமக்கு நன்றாக தெரியும். இந்த ஆறு சுவைகளையும் சமமாகவும் அளவாகவும் எடுத்துக்கொள்ளும்போது உடலில் வியாதிகள் வராது.

    மனிதனுடைய ஆரோக்கியமான வாழ்வுக்கு அறுசுவையும் தேவை. ஆனால், நாம், கசப்பு மற்றும் துவர்ப்பு உணவுகளை பொதுவாக எடுத்து கொள்வதில்லை. இப்படி சுவைகளில் ஏற்றம் இறக்கம் இருப்பதால்தான் உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் என்று சொல்லப்படும் மூன்று தோஷங்களும் சமன்படுவது இல்லை.

    இவை சமன்படாவிட்டால் உடலில் நோய்கள் தலைதூக்கும். எனவே நம் அன்றாட உணவிலே கசப்பு சுவையை கொடுக்கக்கூடிய பாகற்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ போன்ற உணவுகளையும் அதே போல துவர்ப்பு தன்மை உடைய நெல்லிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற உணவுகளையும் அடிக்கடி எடுத்து வந்தால் உடலில் வாதம், பித்தம், கபம் சமன்படும். இதனால் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளில் இருந்து நாம் தப்பித்து கொள்ளலாம்.

    பொதுவாக நாம் உணவை உண்பதற்கு நம் முன்னோர்கள் சில விதிமுறைகளை கடைப்பிடித்தார்கள்.

     

    தரையில் அமர்ந்து உணவு அருந்த வேண்டும்.

    சாப்பிடும் முன்னும் பின்னும் 20 நிமிடம் நீர் எடுக்கக் கூடாது.

    விக்கல் வந்தால் வாயை திறக்காமல் உணவை வாயில் மெல்ல வேண்டும். முடியவில்லை என்றால் மட்டுமே நீர் அருந்த வேண்டும்.

    உதடுகளை பிரிக்காமல் உணவை 36 முறை (அதிகபட்சம்) 20 முறை (குறைந்தபட்சம்) மென்று விழுங்க வேண்டும்.

    உணவு அருந்தும்போது, போன் பேசக்கூடாது. தொலைகாட்சி பார்க்கக்கூடாது. கூடுமான வரை யாரிடமும் பேசாமல், கவனம் முழுவதும் உணவிலேயே இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

    பழங்களை உணவுக்கு முன் எடுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மலச்சிக்கல் வராது.

    முடிந்தவரை நெல்லிக்காய் ஒன்றை பகலில் எடுத்து கொள்ள வேண்டும்.

    உணவு உண்ணும்போது இந்த உணவு எனக்கு வருவதற்கு உதவி புரிந்தவர்கள், இந்த உணவை இவ்வளவு ருசியாக செய்தவர்கள் அனைவரையும் வாழ்த்தி இந்த உணவு என் உடலுக்குள் சென்று நன்றாக சீரணம் ஆகி உடலுக்கு நல்ல பலத்தை கொடுத்து ஆரோக்கியமாகவும், நலமாகவும், நோய் இல்லாமலும் வாழ வேண்டும் என்று தன்னைத் தானே வாழ்த்தி கொள்ள வேண்டும்.

    பொதுவாக நமது உடல் வாத உடலா? பித்த உடலா? அல்லது கப உடலா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப அறுசுவை உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு என்ன வழி என்று பார்த்தால் எந்த சுவை எதனோடு தொடர்பு உடையது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அறுசுவை உணவுகள், வாத, பித்த, கபத்தோடு தொடர்பு பற்றி பார்ப்போம்.

    அறுசுவை

    இனிப்பு - கபத்தை கூட்டும். வாதம், பித்தத்தை குறைக்கும்.

    புளிப்பு - பித்தம், கபம் கூடும். வாதத்தை குறைக்கும்.

    உப்பு - பித்தம், கபம், கூடும். வாதத்தை குறைக்கும்.

    காரம் - வாதம், பித்தம் கூடும். கபத்தை குறைக்கும்.

    கசப்பு - வாதம் கூடும். பித்தம், கபத்தை குறைக்கும்.

    துவர்ப்பு - வாதம் கூடும். பித்தம், கபத்தை குறைக்கும்.

     

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்போன்: 9444234348

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    போன்: 9444234348

    பொதுவாக காலை நேரத்தை கப காலம் என்றும், மதிய நேரத்தை பித்த காலம் என்றும், இரவு நேரத்தை வாத காலம் என்றும் கூறுவர். பொதுவாக உணவு சீரணம் ஆகும்போது பித்தம் என்றும், உண்ட உணவு சீரணம் ஆன பிறகு வாதம் என்றும் அதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து கபம் என்றும் கூறுவர்.

    வாதம், பித்தம், கபம் மூன்றும் பஞ்ச பூதத்தின் கூட்டாகும். பொதுவாக வாதம் என்பது இதயத்தின் கீழ் வாயு என்றும், பித்தம் என்பது நாடிகள் முதல் இதயம் வரை நெருப்பு என்றும், கபம் என்பது இதயத்திற்கு மேல் நிலம் என்றும் கூறுவர். இந்த மூன்று தோஷங்களும்தான் நமது உடலுக்கு உள் இருந்து நோய்களை உருவாக்குகிறது. இதன் தன்மைகள் என்னவென்பதை பார்ப்போம்.

    அது தெரிந்தால் தான் உணவில் நமக்கு அளவு முறை வரும். அப்போது தான் அளவு குறையாமலும், அளவு மிகாமலும் பார்த்து கொள்ள முடியும்.

    வாதம் என்பது காய்ந்த தன்மை உடையது. எடை குறைவானது. குளிர்ச்சி, சொர சொரப்பு உடையது. கண்ணுக்கு தெரியாதது.

    பித்தம் என்பது எண்ணெய்க்குரிய குணம் ஆகும். வழவழப்பு தன்மை உடையது. உஷ்ணம் உடையது. ஊடுருவும் தன்மை கொண்டது. லேசானது. வியர்வை நாற்றம் உடையது. தண்ணீர் அதிகம் கொண்டது. முடி உதிருதல் தன்மை கொண்டது. கண் எரிச்சல், சூடு படுதல், வாய் மற்றும் வயிறு புண்களை உருவாக்க கூடியது.

    கபம் என்பது உறைந்த தன்மை, வழவழப்பு உடையது. குளிர்ச்சி கொண்டது. சதையை அதிகம் வளர வைக்கும். மந்த குணம் உடையது. பிசுபிசுப்பு மற்றும் ஸ்திர தன்மை உடையது.

    எனவே உணவு விஷயத்தில் ஒழுங்கு முறை கடைபிடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான உடற்பயிற்சி தினமும் 30 நிமிடம் செய்ய வேண்டும். 20 நிமிடம் மனம் அமைதிக்காக தியானம் செய்ய வேண்டும். உயிரை நீண்ட ஆயுளாக மாற்ற 5 நிமிடம் காய கல்பம் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

    இப்படி ஆரோக்கியமாக வாழ்ந்தால் பிறவியின் நோக்கத்தை அறிந்து இன்பமாக வாழலாம். இதற்கான பயிற்சிகள், வேதாத்திரி மகரிஷியால் வடிவமைக்கப்பட்ட அனைத்தும் ஆழியாறு அறிவு திருக்கோவில் (பொள்ளாச்சி) மற்றும் உலகம் எங்கிலும் உள்ள அறிவு திருக்கோவில்கள், அறக்கட்டளைகள் மற்றும் தவ மையங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    • பயமற்ற வாழ்க்கையில் ஒழுக்கம் இருக்காது.
    • பயம் என்பதே ஒழுக்கம்தான்.

    'உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு, பயம் உங்களுக்கு உதவுகிறது. பயம் என்பது கோழைத்தனம் அல்ல; புத்திசாலித்தனம்.'

    -ஓஷோ

    துடிப்பான ஓர் இளைஞன். பன்னிரெண்டாம் வகுப்பு வரை, அவனிடத்தில் 'கெட்ட பழக்கம்' என்று பெரிதாக எதுவும் இருந்ததில்லை. 'டியூஷன் கிளாஸ்' என்று சொல்லிவிட்டு, சில திரைப்படங்களுக்குத் திருட்டுத்தனமாகச் சென்று வந்திருக்கின்றான். அவ்வளவுதான்!

    ஆனால், கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாளிலேயே, ஒரு புதிய பழக்கம் அவனைத் தொற்றிக் கொண்டது. பல்வேறு நண்பர்களின் அறிமுகம். பள்ளியின் கெடுபிடிகளைக் கடந்து வந்துவிட்ட உற்சாகம். 'பெரிய மனிதன்' ஆகிவிட்டது போன்ற ஓர் உணர்வு. அதன் அடையாளமாய், புகைபிடிக்கும் பழக்கம் ஆரம்பமானது.

    அந்தப் பழக்கம் அவனுக்குள் ஒருவித கிறுகிறுப்பையும் திமிரையும் ஏற்படுத்தியது. 'இதுகூட இல்லை என்றால், கல்லூரி வாழ்க்கை அர்த்தமற்றது' என்று எண்ணத் தோன்றியது. சிகரெட் சுவையை அவன் ரசித்தான்; சிலாகித்தான்.

    கண்ணியமான பெற்றோர். கனிவும் கண்டிப்பும் கொண்டவர்கள். அவனின் புகைப்பழக்கம் அவர்களுக்குத் தெரியவர, அதிர்ந்து போனார்கள். பெரிதும் கவலை கொண்டனர்.

    அவனிடம் பக்குவமாகப் பேசினார்கள். புகைப்பழக்கம் கூடவே கூடாது என்று எச்சரித்தனர். 'இப்போதே விட்டுவிட வேண்டும்' என்று அவர்கள் சொல்ல, அவன் தலையாட்டினான். 'இனி தொடவே மாட்டேன்' என்று உறுதி அளித்தான்.

    அந்த உறுதிமொழி அவன் உள்ளத்திலிருந்து வரவில்லை; உதட்டிலிருந்து வந்தது. புகைப்பழக்கம் தொடர்ந்தது. சிகரெட் புகையில் மனம் லயித்தான். அந்தந்த நேரத்தில் சிகரெட் பிடித்தாக வேண்டும். இல்லை என்றால், பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தது.

    ஆலோசனைகள் அவனுக்கு அற்பமாகத் தெரிந்தன. அனைத்தையும் புறந்தள்ளினான். சிகரெட் புகைப்பதனால் ஏற்படக்கூடிய பயங்கரமான பின்விளைவுகளைப் பற்றிய எண்ணமே அவனிடத்தில் இல்லை.

    கல்லூரிப் படிப்பை முடித்துப் பல ஆண்டுகளாய் புகைப்பழக்கம் அவனை விட்டபாடில்லை. நண்பர்கள் கூடிவிட்டால், பாட்டும் இசையும் புகையும் அதகளப்படும். பொதுவாக, ஒருவனின் ரசனைகளில் மாற்றம் ஏற்படுவது கடினம்.

    ஆனால், அந்த இளைஞனின் வாழ்வில் திடீரென ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பல்லாண்டு காலப் புகைப்பழக்கம் பட்டென்று நின்று போயிற்று. எப்படி?

    ஒருநாள் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவு படுபயங்கரமாக இருந்தது.

    அகோரக் காட்சிகள் நிறைந்த ஓர் இடம். அங்கு இருக்கின்ற அனைவருமே மரண நோயாளிகள். பலருக்குக் கைகால்கள் உருகி வழிந்து கொண்டிருந்தன. சிலரின் மார்புப் பகுதியிலிருந்து குபுகுபு என்று புகை வெளியேறிக் கொண்டிருந்தது. பலருடைய முகத்தில் சதையே இல்லை. பற்கள் மட்டும் தெரிகின்றன. எல்லோரின் கைகளிலும் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. ஒரே அழுகுரல், அலறல்!

    தியாரூ

    தியாரூ

    பயத்தில் கத்தியபடி அவன் எழுந்துவிட்டான். கண்டது கனவா தரிசனமா...கலங்கினான். உடலெங்கும் வியர்த்துக் கொட்டியது. நெஞ்சு படபடத்தது. கைகால்கள் குழலாடின. அச்சம் தொண்டையைக் கவ்வியது. வார்த்தை வரவில்லை. தட்டுத் தடுமாறி எழுந்து நின்று, நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். குளித்து வந்தவன்போல் நனைந்திருந்தான்.

    அத்தருணத்தில்தான் தன்னை அவன் உணர்ந்தான். வாங்கி வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து, ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்தான். புகைப்பழக்கத்தை அன்று விட்டவன், அதன்பின் தொடவே இல்லை.

    ஆயிரம்பேர் அறிவுரை சொன்னாலும் ஏற்காத ஒரு மனம், ஒரே இரவில் எப்படி மாறியது? பயம்தான், வேறென்ன! கனவில் கண்ட கோரக் காட்சிகள், அவனுக்குள் நரகவதை பயத்தை ஏற்படுத்தின. அந்த பயம்தான், அவன் தவறை அவனுக்கு உணர்த்தி எச்சரித்தது. அழிவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு, அந்தப் பயமே அவனுக்குப் பலமான சக்தியாக மாறியது.

    எனவே, பயம் நல்லது. தேவையற்ற ஒன்றில் ஈடுபடுவதற்கு முன்னரே, ஏற்படுகின்ற பயம் மிகவும் நல்லது. ஏனெனில், ஆரம்பத்திலேயே அது நம்மைத் தடுத்து நிறுத்தி, ஆபத்திலிருந்து நம்மை விலக்கிவிடுகிறது.

    மாணவனுக்கு ஆசிரியர் மீது பயம் இல்லை என்றால், படிப்பு மண்டையில் ஏறாது. பயமற்ற வாழ்க்கையில் ஒழுக்கம் இருக்காது. ஒழுக்கமற்ற வாழ்க்கையில் உயர்வு இருக்காது.

    பயம் என்பதே ஒழுக்கம்தான். அந்த ஒழுக்கம் இல்லாததால்தான், இன்று சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    பிள்ளைகளுக்குப் பெற்றோரிடத்தில் பயமில்லை. பெற்றோருக்குப் பிள்ளைகளைக் கண்டிக்க முடியவில்லை. பையன் எங்கே போகிறான், என்ன செய்கிறான், எப்போது வருகிறான் என்பதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குப் பல பெற்றோர்கள் விரும்புவதில்லை. இன்று அப்படி ஒரு நிலை!

    கண்மூடித்தனமாகத் திரிவதில் சிலருக்கு ஆனந்தம். முட்டி மோதி மூக்குடைந்து போகும்வரை, அவர்கள் ஆபத்தை உணர மாட்டார்கள். வவ்வாலுக்குப் பார்வைத்திறன் மிகமிகக் குறைவு. தெளிவாகப் பார்க்க முடியாது. எனவே, அது ஒலியை உன்னிப்பாகக் கவனிக்கிறது. பறக்கும் போது ஒலிகளை எழுப்பிக் கொண்டே பறக்கின்றது.

    'அல்ட்ரா சவுண்ட்' என்னும் இந்த ஒலி, எதிரில் இருக்கும் பொருள், உயிரினம் போன்றவற்றில் பட்டு வவ்வாலிடத்திற்கு அதிவேகமாகத் திரும்பிவரும். அதன்மூலம், தனக்கு எதிரில் பொருளோ எதிரியோ இருப்பதை அறிந்து, உடனடியாகத் திசையை மாற்றிக் கொண்டு வவ்வால் பறந்துவிடும்.

    தலைகீழாய்த் தொங்குகின்ற வவ்வாலுக்கு, அப்படி ஓர் அற்புதமான நுண்ணறிவு. ஆனால், மனிதன்? மதி மயங்குகிறான். விழித்துக் கொண்டே பள்ளத்தில் போய் விழுகின்றான். சிறகுகள் முறிபடும் வலியை அவன் உணர்வதில்லை. ஆறறிவையும் மழுக்கிவிட்டபின், வாழ்வைக் குறித்த பயம் எங்கிருந்து வரும்!

    மரத்தடியில் குருவைச் சுற்றி அவரின் சீடர்கள் அமர்ந்திருந்தனர். குரு அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார்.

    'வாழ்க்கையில் துணிச்சல் மட்டும் போதாது; துணிச்சலுடன் பயமும் அவசியம்' என்றார்.

    சீடர்களுக்குப் புரியவில்லை. ஒருவரையொருவர் பார்த்தனர். குருவிடம் கேட்பதற்குத் தயங்கினர். குரு புரிந்து கொண்டார்.

    'என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா, கேளுங்கள்' என்றார்.

    ஒரு சீடன் எழுந்து நின்றான்.

    'குருவே, துணிச்சலும் பயமும் இருதுருவங்கள். அவை எப்படி இணைந்திருக்க முடியும்?'

    குரு அமைதியாக இருந்தார். பின்னர் சொன்னார்:

    'நீ ஆற்றுக்குப் போகும் போது அங்கு பெருவெள்ளம். அக்கரையில் ஒரு சிறுவன் சிக்கிக் கொண்டான். அவனை இக்கரைக்குக் கொண்டுவர வேண்டும். நீ என்ன செய்வாய்?'

    'நான் ஆற்றில் குதித்துச் சென்று, அந்தச் சிறுவனை பத்திரமாக இக்கரைக்குக் கொண்டு வந்துவிடுவேன்'.

    'ஆற்றில் இறங்கினால், உன்னை வெள்ளம் இழுத்துச் சென்றுவிடுமே'.

    'அப்படி சும்மா இறங்கிவிடுவேனா? ஆற்றங்கரையில் உள்ள மரத்தில், பெரிய கயிற்றின் ஒரு முனையைக் கட்டி, மறுமுனையை என் இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொள்வேன். இரண்டு பேரைக் கரையில் நிறுத்தி, கயிற்றை நன்கு பிடித்துக் கொள்ளச் சொல்வேன். அதன்பின் ஆற்றில் இறங்கி அக்கரைக்குச் சென்று, அந்தச் சிறுவனை மீட்டு வருவேன்' என்றான் சீடன்.

    குரு கலகல என்று சிரித்தார்.

    'சீடனே, ஓர் உண்மை உனக்குப் புரிகிறதா? ஆற்றின் அக்கரையில் இருக்கும் ஓர் உயிரை மீட்கத் தயாரானாய். அது உன் துணிச்சல். அதே சமயம், வெறுமனே ஆற்றில் இறங்கிவிட்டால் வெள்ளம் இழுத்துச் சென்றுவிடுமே என்று அஞ்சினாய். எனவே, விவேகத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறாய். பார்த்தாயா? இங்கு ஒரு செயலை நிறைவேற்றுவதில் துணிச்சலும் பயமும் இணைந்திருக்கிறதே' என்றார் குரு.

    சீடன் வியப்புடன் குருவைப் பார்த்தான். குரு புன்னகைத்தார்:

    'துணிச்சல் என்பது வேகம். பயம் என்பது விவேகம்' என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார் குரு.

    பலரிடம் துணிச்சல் இருக்கிறது. ஆனால், பின்விளைவுகளைப் பற்றிய பயம் இல்லை. அதனால்தான், எவ்வித யோசனையுமின்றி படுபாதகச் செயல்களில் இறங்கிவிடுகின்றனர். இறுதியில், ஆபத்தான கண்ணிகளில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் திணறுகிறார்கள். தம்மைச் சார்ந்திருப்பவர்களையும் தவிக்கவிட்டு விடுகிறார்கள்.

    ஒருவரைக் கொலை செய்வதற்கு அரிவாளைத் தீட்டுகின்றவன், தன்னைத் துணிச்சல் மிக்கவனாக எண்ணிக் கொள்கிறான். அந்த மதியீனம் அவனை மிருகமாக்குகிறது. பயம் அற்றுப் போகிறது. சர்வ சாதரணமாகக் கொலை செய்கிறான். பின்னர், கம்பி எண்ணுகிறான்.

    எவன் ஒருவனுக்குத் தன்மீது, தன் குடும்பத்தின் மீது அன்பும் அக்கறையும் இல்லையோ, அவன் எந்தப் பழிபாவங்களையும் செய்யத் தயங்க மாட்டான். அதனால் ஏற்படுகின்ற மோசமான விளைவுகள், பலரையும் அல்லவா பாதிப்புகளுக்கு உட்படுத்திவிடுகின்றன.

    திருடுகின்றவனுக்கு என்னதான் மனமோ! நள்ளிரவில் திரிகின்றான். யாரோ ஒருவரின் வீட்டுப் பூட்டை உடைத்து, உள்ளே நுழைகின்றான். கையில் அகப்பட்டதைச் சுருட்டுகின்றான்.

    நல்ல சம்பளம் வாங்குகின்றவன்கூட லஞ்சம் வாங்குகின்றான். அகப்பட்டுக் கொண்டாலும் சிரிக்கின்றான். வெட்கம் என்பதே இல்லை. அவனுக்கு மட்டுமா அவமானம்? அவன் குடும்பத்திற்கே அவமானம்தானே.

    பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகின்றவர்களுக்கு, மனசாட்சி மரத்துப் போகின்றதே. அழுகுரலை அவன் செவிகள் கேட்பதில்லை. பின்வருபவைகளைப் பற்றி அவன் சிந்திப்பதே இல்லை.

    இப்படி, தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் நடைபெறுகின்ற பொல்லாத செயல்களுக்குக் காரணம் என்ன? பயமின்மை; ஒரே காரணம் அதுதான்.

    ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதற்கும், இந்தச் சமூகத்தை ஆபத்துகளில் இருந்து மீட்பதற்கும் தேவையான ஒரே ஆயுதம்; தீமைகளுக்கு அஞ்சுகின்ற பயம்! அந்தப் பயமே, வாழ்வின் ஜெயம். ஆக, பயம் நல்லது. ஏனெனில், பயம் என்பது கோழைத்தனம் அல்ல; புத்திசாலித்தனம்.

    போன்: 9940056332

    • ஆயுளை நீட்டிப்பதற்கு தாது உப்புக்கள் மிகவும் அவசியமானவை.
    • நம் உடலில் 14 வகையான முக்கிய தாதுஉப்புகள் உள்ளன.

    நம் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கும், ஆயுளை நீட்டிப்பதற்கும் தாது உப்புக்கள் மிகவும் அவசியமானவை. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினத்திற்கும் பொருந்தும்.

    இந்த தாது உப்புகளின் வேலை என்ன? குறைந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? அதைத் தடுக்க நாம் என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

    நம் உடலில் 14 வகையான முக்கிய தாதுஉப்புகள் (மினரல்கள்) உள்ளன.

    இதில் 6 தாது உப்புக்கள் அதிக அளவில் தேவைப்படக்கூடியவை, அவை கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம் ஆகும்.

    குறைந்த அல்லது மிகக் குறைந்த அளவு தேவைப்படுபவைகள் இரும்பு மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், அயோடின், கோபால்ட், செலீனியம், மாலிப்டினம் ஆகியவைகள் ஆகும். இவை அனைத்தும் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை.

    அனைத்துத் தாது உப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நம் உடலில் 300-க்கும் அதிகமான வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உயிர் வேதியியல் எதிர்வினைகள் (பயோகெமிக்கல் ரியாக்சன்ஸ்) நடக்க உதவி புரிகின்றன.


    கால்சியம்

    கால்சியம் எல்லா வயதினருக்கும் தேவையான ஒன்று. நம் எலும்புகள் மற்றும் பற்களைப் பாதுகாக்கக் கால்சியம் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அத்துடன் கசியும் நம் ரத்தத்தை உறைய வைப்பதற்கும், இதயம், தசைகள், நரம்புகள், செல்கள், திசுக்கள் சீராக இயங்குவதற்கும் இது அவசியம்.

    கால்சியத்தின் குறைபாட்டால் உடல் வலி, எலும்பு வலி, எலும்பு உடைதல், சதைகள் துடிப்பது, உடல்சோர்வு, கண்ணில் புரை விழுதல், சீரற்ற இதயத் துடிப்பு, ஞாபகமறதி ஆகியவை ஏற்படுகின்றன. எனவே நம் அன்றாட வாழ்வில் கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.

    கால்சியம் நிறைந்த உணவுகள்: பால் மற்றும் பால்சார்ந்த பொருட்கள், கொண்டைக்கடலை, கீரைகள், பாதாம், சால்மன் மீன், அத்திப்பழம், பருப்பு வகைகள், வெள்ளை பீன்ஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, விதைகள் மற்றும் ஆரஞ்சு ஆகியவையாகும்.


    பாஸ்பரஸ்

    இது ஒரு கனிமம் ஆகும். உடலில் எலும்புகள், பற்கள், உடல் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நம் உடலில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உற்பத்தியில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. தசை வலிமையைப் பாதுகாக்கிறது. சிறுநீரகங்களில் கழிவுகளை அகற்ற உதவுகிறது.

    நாம் உண்ணும் உணவுகளில் இருந்து உடலுக்குத் தேவையான பாஸ்பரஸைப் பெற்றுவிடலாம். இதன் குறைபாட்டினால் பசியின்மை, மனப்பதற்றம், எலும்பு வலி, உடல் இறுக்கம், உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படுகின்றன.

    பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகள்: முட்டை, சீஸ், தயிர், டார்க் சாக்லேட் மற்றும் பால் போன்ற உணவுகள்.


    மெக்னீசியம்

    நமது உடலிற்குத் தேவையான மிகவும் அத்தியாவசியமான 7 மினரல்களில் மிகவும் முக்கியமானது இந்த மெக்னீசியம். இதன் பற்றாக்குறையினால் நம் உடலில் எலும்பு சார்ந்த குறைபாடுகள், பசியின்மை, அடிக்கடி தலைவலி, குமட்டல், தசை வலி, தசைப்பிடிப்பு, தொடு திறன் குறைவு, தசைச் சுருக்கம் மற்றும் மன அழுத்தம் அதிகப்படியான கோபம், தூக்கமின்மை போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன.

    மேலும் இதயம் தொடர்பான சிக்கல்கள், சுவாசக் கோளாறுகள், மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலி மற்றும் வலிப்பு நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

    மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள்: உலர் பழங்கள், முந்திரி, பாதாம், முழு தானிய வகைகளான கோதுமை, சிகப்பரிசி மற்றும் கருப்பு கொண்டைக் கடலை, பச்சை காய்கறிகள், பிரக்கோலி, வாழைப்பழம், விதைகள் குறிப்பாக எள் மற்றும் சூரியகாந்தி விதை, மீன் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், இறைச்சி, சாக்லேட், காபி.


    சோடியம்

    இது உடலின் எலக்ட்ரோலைட்டுகளில் ஒன்றாகும். உடலின் பெரும்பாலான சோடியம் ரத்தத்திலும் செல்களைச் சுற்றியுள்ள திரவத்திலும் உள்ளது. சோடியம் உடலில் நீர்ச் சத்தைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

    நரம்பு மற்றும் தசைச் செயல்பாட்டில் சோடியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. சோடியமானது நம் உடலில் வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.

    நம் உடலில் சோடியத்தின் அளவானது லிட்டருக்கு 135-145 மில்லி சமநிலையில் (இணையாக/சமமாக) இருக்க வேண்டும். இதன் அளவு குறையும்போது உடல் சோர்வு, தலைவலி, வாந்தி, மயக்கம், தலைசுற்றல், தசைப் பிடிப்பு, சுயநினைவை இழத்தல், மனப்பதற்றம், கவனிக்கும் திறன் குறைதல், சிந்திக்கும் ஆற்றல் குறைதல், வலிப்பு என்று பல வகையான நரம்புக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

    சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்: கேரட், நூல்கோல், பீட்ரூட், கீரைகள் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு.


    பொட்டாசியம்

    மன ஆரோக்கியத்திற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும், தசைகள் வலுப்பெறவும், உடலில் இருக்கக் கூடிய அழுக்குகள் வெளியேறவும், திரவ அளவை உடலில் சீராக வைத்துக் கொள்ளவும், நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் பொட்டாசியம் மிகவும் அவசியமான ஒன்று.

    இதன் குறைபாட்டினால் சீரற்ற இதயத் துடிப்பு, தசைச் சோர்வு, தசைப் பிடிப்பு, மலம் இறுகல், மதமதப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.

    பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்: வாழைப்பழம், ஆரஞ்சு, தேன், திராட்சை, கீரைகள், உருளைக்கிழங்கு மற்றும் புரோக்கோலி.


    இரும்பு

    இது நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கவும், சீரண உறுப்புகள் சரியாகச் செயல்படவும் உதவுகிறது. கருவுற்ற பெண்களுக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது, எனவே உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கு இது அவசியம். இரும்புச் சத்துக் குறைவினால் ரத்தச்சோகை பற்றி பகுதி 12-இல் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகள்: கீரைகள், முந்திரி, பாதாம், வால்நட்ஸ், உலர்ந்த பழங்கள், பேரீச்சம் பழம் மற்றும் மாதுளை.

    எவ்வளவு தேவை?

    தாது உப்புகள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு தேவை என்பதை பார்ப்போம்.

    கால்சியம்-1000 மிகி

    பாஸ்பரஸ்-700 மிகி

    மெக்னீசியம்-ஆண்கள் - 400 மிகி, பெண்கள் - 310 மிகி

    சோடியம்- 1200 மிகி - 1500 மிகி

    பொட்டாசியம்- 1600 - 2000 மிகி

    கந்தகம்-1000 மிகி

    இரும்பு-ஆண்கள் - 8 மிகி, பெண்கள் - 18 மிகி

    மாங்கனீசு-ஆண்கள் - 2.3 மிகி, பெண்கள் - 1.8 மிகி

    தாமிரம்-900 மிகி

    துத்தநாகம்-ஆண்களுக்கு 11 மிகி, பெண்களுக்கு 8 மிகி

    அயோடின்-150 மைகி

    கோபால்ட்-5-8 மைகி

    செலீனியம்-55 மைகி

    மாலிப்டினம்- 45 மைகி


    தாது உப்புகள் நிறைந்த உணவுகள்:

    மேல் கூறப்பட்டுள்ள அனைத்து வகையான தாதுஉப்புகளும் நம் உடலுக்குக் கிடைக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்- காய்கறிகள், கீரைகள், பழங்கள், பால், பால் சார்ந்த பொருட்கள், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகள் முளைக்கட்டிய தானியங்கள் போன்றவைகளாகும்.

    இவற்றில் தாதுஉப்புகள் மட்டுமல்லாமல் வைட்டமின்களும் நிறைந்துள்ளதால் நாம் என்றுமே ஆரோக்கியமாகவும், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதையேதான் நம் முன்னோர்கள் "உணவே மருந்து" என்று கூறியிருக்கிறார்கள்.

    • திருமாலின் நாமத்தை ஜபித்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.
    • புரட்டாசி ஏகாதசியும் சிறப்பானதுதான்.

    சித்திரை தொடங்கிக் கணக்கிடப்படும் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் ஆறாவது மாதம். இம்மாதம் முப்பத்தியோரு நாட்களை உடையது.

    `மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்` என்று கண்ணன் கீதையில் சொன்னாலும், அன்பர்கள் புரட்டாசியையும் பெருமாளுக்குரிய மாதமாகவே கருதுகிறார்கள்.


    திருமாலின் வடிவமான திருப்பதி வேங்கடவனின் ஆசி பெற விரும்பும் அன்பர்கள், வேங்கடாஜலபதியை விசேஷமாகப் புரட்டாசியில் வழிபடுகிறார்கள்.

    அதற்கு ஒரு காரணம் உண்டு. வெங்கடாஜலபதி திருப்பதியில் அவதரித்தது ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் தான்.

    படிப்படியாய் மலையில் ஏறி திருப்பதி மலையப்பனை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், நம்மை எப்படி கடக்க முடியும் என மலைக்க வைத்த துன்பங்களெல்லாம் படிப்படியாய்க் குறைந்து நிம்மதி தோன்றும் என்று அடியவர்கள் நம்புகிறார்கள்.

    வைணவர்கள் மட்டுமல்லாமல் சைவர்களில் பலரும் கூட புரட்டாசி சனிக்கிழமையன்று நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு திருமாலின் நாமத்தை ஜபித்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.

    வேங்கடவனுக்கு மாவிளக்கு ஏற்றிப் பிரார்த்தனை செய்யும் மரபு பல குடும்பங்களில் வழிவழியாக வருகிறது. அவர்களெல்லாம் மாவிளக்கு ஏற்ற புரட்டாசி சனிக்கிழ மையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    புரட்டாசி காலஞ்சென்ற நம் குடும்ப முன்னோர்களை வழிபடுவதற்குரிய மாதமாகவும் கருதப் படுகிறது. முன்னோருக்கு நீர்க்கடன் செலுத்தும் மகாளய அமாவாசை புரட்டாசி மாதத்தில்தான் வருகிறது.

    பவுர்ணமி தொடங்கி அமாவாசை முடிய உள்ள பதினைந்து நாட்கள் அடங்கிய காலகட்டம் `மகாளய பட்சம்` எனப்படுகிறது. அந்தப் பதினைந்து நாட்களும் நம் முன்னோர் மேலுலகில் இருந்து வந்து நம்மோடு தங்கிச் செல்கிறார்கள் என்பதும் அந்த நாட்களில் அவர்களைப் பிரார்த்தனை செய்வதால் அவர்கள் ஆசியைப் பெறமுடியும் என்பதும் அன்பர்களின் நம்பிக்கை.

    பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்துதல் பழங்காலம் தொட்டே தமிழர்களிடம் நிலவிவந்த ஒரு பழக்கம். திருக்குறளும் நீத்தாருக்கு நீர்க்கடன் செய்யும் அவசியத்தைப் பேசுகிறது.

    ஒருவன் தன் சம்பாத்தியத்தை ஐந்தாய்ப் பிரித்து அதில் ஒரு பங்கை நீத்தார் கடன் செலுத்தப் பயன்படுத்தவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

    `தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்

    தான் என்றாங்கு

    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'

    என்கிற திருக்குறளில் பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லும்போது `காலமான முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான்` என்ற வரிசையில் பித்ருக்களை முதலில் வைக்கிறார் வள்ளுவர் என்பதும் கவனத்திற்குரியது.


    புரட்டாசி அமாவாசை மட்டுமா, புரட்டாசி ஏகாதசியும் சிறப்பானதுதான். அன்று உண்ணாநோன்பு மேற்கொண்டு பெருமாளைத் துளசியால் அர்ச்சித்து வழிபட்டுப் பலனடைகிறார்கள் பக்தர்கள்.

    தேவியை வழிபடும் நவராத்திரியும் இந்த மாதத்துப் பண்டிகைதான். இது பெண்களுக்கே உரிய பண்டிகை. `காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி ஆனால் கன்னியர்க்கு ஒன்பதுநாள் நவராத்திரி' என்பன கண்ணதாசன் வரிகள்.

    அழகிய படிகளைக் கட்டி பொம்மைகளை அவற்றில் வரிசையாய்க் கொலு வீற்றிருக்கச் செய்து கொண்டாடப்படும் நவராத்திரி போன்றதொரு பண்டிகை உலகில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

    மண் பொம்மைகளைச் செய்து அவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கைவினைக் கலைஞர்கள் ஆண்டுதோறும் ஆவலாக எதிர்பார்ப்பது நவராத்திரிப் பண்டிகையைத் தான். வருடம் முழுவதற்குமான அவர்களின் வாழ்க்கைக்கு புரட்டாசியில் வரும் நவராத்திரி விற்பனைதான் வழி செய்கிறது.

    கவுரி விரதம், மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம் போன்ற பற்பல வித்தியாசமான விரதங்கள் எல்லாம் புரட்டாசியில்தான் வருகின்றன.

    புரட்டாசி ஆன்மிக மாதம் என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் பற்பல மகான்கள் பிறந்திருப்பது இந்த மாதத்தில்தான் என்பதைச் சொல்லலாம்.

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் புரட்டாசியில் பிறந்தவர்தான். திருவள்ளுவரின் புலால் உண்ணாமைக் கோட்பாட்டைத் தீவிரத்தோடு வலியுறுத்திய மகான் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

    புரட்டாசி வள்ளலார் பிறந்த மாதம் என்பதால் அந்த மாதத்திலாவது அசைவ உணவை முற்றிலுமாகத் தவிர்க்கும் பழக்கம் சிலரிடம் காணப்படுவது பொருத்தமானதுதான்.

    வைணவச் சான்றோரும் தமிழ் வடமொழி இரண்டிலும் மிகச் சிறந்த நூல்களைப் படைத்தவருமான வேதாந்த தேசிகர் பிறந்ததும் புரட்டாசியில் தான்.

    திருமந்திரம் என்ற அரிய தத்துவச் செய்யுள் நூலைப் படைத்தவரும் திருவிடை மருதூரில் சமாதிக் கோயில் கொண்டிருப்பவருமான திருமூலர் அவதரித்ததும் ஒரு புரட்டாசி மாதத்தில்தான்.

    தாகூரால் மகாத்மா என அழைக்கப் பட்ட காந்தி அடிகளும் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடிகாத்த குமரன் பிறந்ததும் புரட்டாசியில்தான். ராமாயணம் என்ற மகத்தான இதிகாசத்தைப் படைத்த ஆதிகவி வால்மீகி அவதரித்ததும் புரட்டாசி அனுஷ நட்சத்திரத்தில்தான்.

    மறுமையில் வீடுபேறு அடைவதற்குரிய புண்ணியச் செயல்களைச் செய்யும் மாதம் இது என்பதாலோ என்னவோ, இம்மையில் வீடு வாங்குதல் போன்ற செயல்களைப் பொதுவாகப் புரட்டாசி மாதத்தில் செய்வதில்லை.

    புதுமனை புகுவிழாக்களையோ புது வியாபாரம் தொடங்குதல் போன்றவற்றையோ அதுபோன்ற எந்தப் புது முயற்சியையுமே புரட்டாசியில் செய்யும் வழக்கமில்லை.

    பூண்டு வெங்காயம் போன்றவற்றை இந்த மாதத்தில் உணவில் சேர்க்காமல் தவிர்ப்பவர்கள் உண்டு. புரட்டாசி மாதம் முழுவதிலும் முடியவில்லை என்றாலும் புரட்டாசி சனிக்கிழமை அன்றாவது அசைவத்தையும் பூண்டு வெங்காயத்தையும் தவிர்ப்பவர்கள் நிறையப் பேர் உண்டு.

    புரட்டாசி சனிக்கிழமையன்று முழுவதுமாக உண்ணாவிரதம் இருப்பவர்களும் கூட உண்டு.

    திருமாலைப் பற்றிய பக்திப் பனுவல்களில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நாராயணீயம் முக்கியமானது. நாராயணனைப் போற்றி நாராயண பட்டதிரி அருளிய நூலே நாராயணீயம்.

    குருவாயூரப்பனை முன்னிலைப் படுத்தி அவருடன் பேசுவது போலான உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை எப்போது பாராயணம் செய்தாலும் புண்ணியம்தான். என்றாலும் திருமாலுக்குரிய புரட்டாசி மாதத்தில் பாராயணம் செய்வது விசேஷமானது.

    ஒரு பக்தி நூலைப் பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றிச் சொல்லக் கூடியது அந்த நூலின் இறுதியில் அமைந்து ள்ள பலச்ருதி என்ற பகுதி.

    நாராயணீயத்தின் பலச்ருதி என்பது உடல் ஆரோக்கியம்தான். நம் உடல் நலனை வலுப்படுத்தக் கூடிய மந்திர சக்தி நிறைந்த சுலோகங்களைக் கொண்டது நாராயணீயம்.

    பத்துப் பத்துக் கவிதைகளாக அமைந்த நாராயணீயத்தின் நூறு தசகங்களில் ஒவ்வொரு தசகத்தின் இறுதியாக அமையும் பாடலிலும் `என் நோயிலிருந்து என்னைக் காத்தருள் இறைவா!` என்ற பொருளுடைய வாக்கியம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

    நாராயணீயத்தைப் புரட்டாசி மாதத்தில் பாராயணம் செய்வதால் நோய்நீங்கி நல்ல உடல்நலத்தோடு கூடிய ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற முடியும்.

    திருமாலின் ஆயிரம் நாமங்களைக் கூறி அவரைத் துதிக்கும் சகஸ்ர நாமத்தையும் புரட்டாசியில் நாள்தோறும் ஜபிப்பது நல்ல பலனைத் தரும்.

    புரட்டாசியில் செய்யும் ராமநாம ஜபம் அதிகப் பலன்தரக் கூடியது. வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், பாகவதம், மகாபாரதம் முதலிய திருமாலின் பெருமைகளைப் பேசும் நூல்களை இந்த மாதத்தில் பாராயணம் செய்வது சிறப்பு.

    கண்ணன் அருளிய கீதையை மனமொன்றி வாசித்து அதுசொல்லும் கருத்துகளை ஆழ்மனத்தில் சிந்திப்பதற்குரிய விசேஷ மாதமும் புரட்டாசியே.

    பலர் பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதாக மனத்தில் வேண்டிக் கொள்வதுண்டு. ஆனால் உலகச் சூழலில் பற்பல காரணங்களால் அத்தகைய நேர்த்திக் கடன்களை உடனுக்குடன் செலுத்த இயலாமல் போவதும் உண்டு.

    செலுத்தாமல் தாமதமான நேர்த்திக் கடன்களைச் செலுத்துவதற்குரிய மாதமும் புரட்டாசிதான். விட்டுப்போன நேர்த்திக் கடன்களைப் புரட்டாசி மாதத்தில் செலுத்தினால், இறைவன் அந்தத் தாமதத்தை மன்னித்து அன்பர்களுக்கு அருள் புரிவார் என நம்பப் படுகிறது.

    புரட்டாசியில் திருப்பதி, ஸ்ரீரங்கம், குணசீலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலான வைணவத் திருத்தலங்களில் பிரம்மோத்சவத் திருவிழா கொண்டாடப் படுகிறது.

    பத்து முதல் பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் காலையும் மாலையும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும். திருப்பதி பிரம்மோத்சவமும் திருவரங்க பிரம்மோத்சவமும் மிகப் பிரசித்தமானவை.

    புரட்டாசி மாதத்தில் நாம் வழிபடும் திருமால், தொன்றுதொட்டுத் தமிழர்கள் வழிபட்டுவரும் தெய்வமாவார். தொல்காப்பியம் என்ற மிகப் பழைய தமிழ் இலக்கண நூல் திருமாலை `மாயோன்` என்ற பெயரால் குறிப்பிடுகிறது.

    ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் `ஆய்ச்சியர் குரவை` என்ற பகுதியில் மதுரையில் வாழும் இடைக்குலப் பெண்கள் திருமாலைப் போற்றுவதாக அமைந்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    `மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

    கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும்

    போற்ற

    படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத்

    தூது

    நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே!

    நாராயணா என்னா நா என்ன நாவே!'

    என்றெல்லாம் அந்தப் பகுதியில் திருமாலைப் போற்றுகிறார் சமணப் புலவரான இளங்கோ அடிகள்.

    படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவை இறைச்சக்தியின் மூன்று பெரும் தொழில்கள். அவற்றில் காக்கும் தொழிலைச் செய்பவர் திருமால். அவருக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் அவரைப் பிரார்த்திப்பதன் மூலம் நம் இன்னல்கள் அனைத்திலிருந்தும் நாம் காக்கப் படுவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    • தினசரி நடைபயிற்சி மேற்கொள்வது, மற்றும் அடிவயிற்று தசை பயிற்சி செய்வது நல்லது.

    பொதுவாக சிகிச்சை முறைகள் இருவகைப்படும். ஒன்று நோய் வருமுன் காப்பது. மற்றொன்று நோய் வந்தபின் தீர்ப்பது. இப்பொழுது நாம் செய்து கொண்டிருப்பது பெரும்பாலும் இரண்டாவது வகையைத் தான்.

    நோய் வந்த பின்பு அதைத் தீர்க்க மருந்துகள், பத்தியங்கள், உணவுக் கட்டுப்பாடுகள் என்று செய்வதை விட, இவற்றையெல்லாம் (மருந்துகள் தவிர) நோய் வரும் முன்பே முறையாகக் கடைபிடித்தாலே நோய் நம்மை அண்டாது.

    ஒரு பக்கம் விண்முட்டும் விஞ்ஞான வளர்ச்சி மற்றும் எங்கும் காணப்படும் மருத்துவமனைகள், மறுபக்கம் வாழ்க்கை என்னும் கடலில் தரைதட்டி ஸ்தம்பித்து சிறிது, சிறிதாக மூழ்கிக் கொண்டுள்ளது உடல்நலன் எனும் கப்பல்.

    எங்கே தவறு செய்து விட்டோம்? எங்கே கோட்டை விட்டு விட்டோம்? ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. இல்லை பிணியுடனும், மூப்புடனும் வாழ்வதுதான் இயல்பானது என்று கூறி, அதன் வழி நடந்தோமேயானால் பிணி, மூப்பு, சாக்காட்டை வென்ற சித்தர்களின் வாழ்வியலும் அவர்கள் அருளிய "நோயில்லா நெறி" முறைகளும் தெரியாமல் இருந்துவிடும்.

    ஆக பிணியுடனும், மூப்புடனும் வாழக்கூடிய இழிவான வாழ்க்கைக்காக சித்தர் பெருமக்கள் தம் அரிய யோக முறைகளையும், வாழ்வியல் அடிப்படையாகக் கொண்ட நோயில்லா நெறிமுறைகளையும் அமைத்துச் செல்லவில்லை.

    மனித சமுதாயம் அவற்றிலிருந்து விடுபட்டு விலகி வாழ்வதற்காகத்தான் சில நெறிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அவர்கள் அருளிய "அரை வயிறு சோறு; கால் வயிறு நீரு; அவனியிலே நோயில்லை பாரு;", "உண்டி சுருங்கில் உபாயம் பல உள; பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்" போன்ற நெறிமுறைகளை நாம் வாழ்வில் கடைபிடித்து வந்தாலே போதும்.

    இவைகளைப் போலுள்ள மேலும் பல நெறிமுறைகளை நாம் செய்து நிரூபித்தாலே போதும், உலகிலுள்ள அனைத்து நோய்களையும் தீர்க்கக் கூடிய வல்லமை சித்தர்களின் வாழ்வியலில் உண்டு என்பதை உலகம் உணர்ந்து நம் நாட்டு மருத்துவமுறைக்கு தனிமாண்பே கிட்டும். அப்படிப்பட்ட முறைகளில் ஒன்றுதான் "குடலைக் கழுவி உடலை வளர்" .

    சித்தர்கள் அருளிய "காயசுத்தி" முறையில் குடலைக் கழுவி வாழ்பவருக்கு நோய்கள் அணுகாது. நாம் உண்ணும் உணவுகள் கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம். அந்தக் கழிவுகள் அல்லது நச்சுகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம்.

    சரி, இந்த குடலை எதற்காக கழுவ வேண்டும்? குடலை கழுவ வேண்டியதன் அவசியம்தான் என்ன? அவ்வாறு குடலை கழுவாவிட்டால் என்னவாகும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையாக நாம் ஒருவேளை உண்ணும் உணவே செரித்து, பின் கழிவாக வெளியேற 6 முதல் 20 மணி நேரம் எடுத்துக் கொள்ளுமேயானால் மூன்று வேளை உண்ணும் உணவுகளும், இடையிடையே வயிற்றுக்குள் திணிக்கப்படும் திண்பண்டங்களும் செரித்தபின் கழிவாக வெளியேறுவது எப்போது?

    உணவை நன்கு செரிக்கச் செய்யவும், கழிவை வெளியேற்றவும் வெளியேற்றிய பிறகு சிறிது ஓய்வெடுக்கவும் நமது உணவு மண்டலத்தை நாம் அனுமதிக்கிறோமா? அல்லது உணவுக் குடலில் தங்கிச் செரிக்கவும், கழிவாக வெளியேறவும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் அவை உள்ளேயே அழுகி விடமாக (Toxin) மாறி, அதுவே நமது அனைத்து நோய்களுக்கும் காரணம் என்பதை உணர்ந்துள்ளோமா?

    தற்காலத்தில் பட்டினியால் இறப்பவர்கள் ஒருப்பக்கம் இருக்க, உணவின் விடத்தால் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்கள் மறுப்பக்கம் உள்ளனர். அப்படியானால் இதற்கு தீர்வு தான் என்ன? இதற்கு ஒரே தீர்வு காயசுத்தி எனும் குடலைக் கழுவி உடலை வளர்க்கும் முறை ஒன்றுதான்.

    சரி, காயசுத்தி செய்வது எவ்வாறு?

    1. காலையில் எழுந்தவுடன் பல் துலக்கியவுடன் காபி, டீ அருந்தும் பழக்கத்தை விட்டுவிட்டு முடிந்தளவு நீர் குடிக்க வேண்டும். பசி எடுக்கும்போதெல்லாம் நீரையே அருந்தவும். எவ்வளவு மணி நேரம் நீரை மட்டும் குடித்துக் கொண்டிருக்க முடியுமோ அதுவரை இருக்கவும். இதனால் உணவுக் குழாயிலும், ரத்தத்திலும் படிந்துள்ள விடங்கள் சிறுநீர் மூலமும், மலகுடல் மூலமும் வெளியேறும். ஒருவேளை இடையில் பசி மிகுதிப்படின் உப்பு சேர்க்காது வேகவைத்த முட்டைகோசு, முருங்கைக்கீரை முதலியவற்றை உண்ணலாம்.

    நந்தினி

    நந்தினி

    இதனால் பசியுணர்வும் அடங்கிவிடும். உடலிலுள்ள பழைய கழிவுகளும் மலக்குடல் மூலம் வெளியேறி விடும். பின் மாலை வேளை சப்பாத்தியுடன் முட்டைகோஸ், வாழைத்தண்டு, பீட்ரூட் ஆகியவற்றை பொறியலாக மிதமாக உண்ணலாம். இம்முறையில் நமது உடலானது முழுச்சுத்தம் பெற்று புத்துணர்ச்சியுடனும், புதுவகைத் தெம்புடனும் விளங்குவதை நாம் உணரலாம். நாட்பட்ட நோய்களும் நீங்கும்.

    இதை வாரம் ஒரு முறை அல்லது 2 முறை அல்லது விடுமுறை நாட்கள் என தொடர்ச்சியாக மன உறுதியுடன் செய்து வந்தால் அதற்குரிய பலன் கிட்டும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

    2. காலையில் கண் விழித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் கழிவுகள் வெளியேறும். ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகள் அகலும்.

    3. இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமலிருக்கும். முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும்.

    4.வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்; உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும். எனவே, நமது அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது.

    5. கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, சிறிது நீர் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துக்கொள்ளலாம். இதை வாரம் ஒருநாள் குடித்தால், உடலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும்.

    6. கடுக்காய் நல்லதொரு கழிவகற்றி மட்டுமல்ல, நச்சகற்றி. ஐந்து கிராம் கடுக்காய்த்தூளை வெந்நீரில் கலந்து இரவு தூங்கப் போவதற்கு முன்னர் குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்; மலம் எளிதாக வெளியேறும். மற்றும் திரிபலா சூரணமும் கழிவுகளை அகற்றும்.

    7. சீரக தண்ணீர்: சீரக நீர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் மேம்படும். சீரகத் தண்ணீரைக் குடிப்பதால் வாயு மற்றும் வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். சீரகத் தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும்.

    8. கற்றாழை சாறு: மலச்சிக்கல் பிரச்சனையை போக்க கற்றாழை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் கற்றாழை சாறு எடுத்துக்கொள்ளலாம். கற்றாழை சாற்றை சிறிய அளவில் குடிக்கத் தொடங்குங்கள். வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். கற்றாழை சாற்றை உட்கொள்வதால் வயிறு நன்கு சுத்தமாகும்.

    தினசரி உணவில் அகத்தி கீரை, முருங்கை கீரை, மணத்தக்காளி கீரை, அத்திக்காய், அத்திப்பழம், இலந்தை பழம், உலர்ந்த திராட்சை பழம், கருப்பு திராட்சை,பேயன் வாழைப்பழம், ரோஜா குல்கந்து, கொய்யா, மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி, பேரிச்சம்பழம், கருணைக்கிழங்கு, வாழைத்தண்டு, தவிடு நீக்காத கோதுமையின் உணவுகள், கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற சிறு தானியங்கள், தேங்காய்ப்பால்சாதம், பிரண்டைத்துவையல், புதினாதுவையல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை உட்கொள்வதால் செரிமான மண்டலம் வலுவடையும். இவற்றை உட்கொள்வதால் வயிறு நன்கு சுத்தமாகும்.

    முறையாக மலம் கழிக்கும் பழக்கத்தை குழந்தை பருவத்திலிருந்தே கற்றுத்தரவேண்டும். குத்துகாலிட்டு அமர்ந்து மலம் கழித்தலே சிறந்தது.

    மலச்சிக்கல் நீங்க நாள் ஒன்றுக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகாலை எழுந்ததும் 500 மிலி வெது வெதுப்பான நீரை பருக வேண்டும். கழிப்பறை சுத்தமாகவும் வெறுப்பு அளிக்காவண்ணமும் இருக்க வேண்டும். மலம் கழிக்க உட்கார்ந்த பிறகு கவனம் முழுவதும் மலத்தை வெளியேற்ற தூண்டும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக மலம் கழிக்கும்போது செய்தித்தாள் வாசிப்பது, மொபைல் பார்ப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சை காய்கறிகள், பழவகைகள் சேர்த்து கொள்ளவும்.

    தினசரி நடைபயிற்சி மேற்கொள்வது, மற்றும் அடிவயிற்று தசை பயிற்சி செய்வது நல்லது.

    வாரம் ஒருமுறைதலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் திரேகத்தில் உள்ள உட்சூட்டை தணித்து மல குடலில் உள்ள வறண்ட நிலையை சீர் படுத்தும். இதனால் மூலாதார சூடு தணியும், கண்கள் வலுவடைந்து கண்பார்வை சீராகும். இவ்வாறு பராமரிப்பு செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் ஆரோக்கியம் காக்கவும்.

    பாஸ்ட் புட் உணவுகள், பீட்சா, பர்கர், மைதா உணவுகள், புரோட்டா, பாதுஷா, பிஸ்கட், பண்ரொட்டி, வர்க்கி, சேமியா கிச்சிடி, இவைகளை தவிர்க்கவும்.

    மருத்துவர் ஆலோசனையின்றி மலச்சிக்கல் இருக்கிறது என்று அடிக்கடி பேதி மருந்துகளை எடுத்துக்கொள்வதையும், அடிக்கடி இனிமா எடுத்துக்கொள்வதையும் தவிர்க்கவும். இதனால் மலக்குடல் வீணாக விரிந்து குடல் சுவர்களின் இயக்க சக்தி (propulsive power) குறைந்து போகும். மலச்சிக்கலின் தன்மையை அதிகப்படுத்தும்.

    இது போன்று உணவுப் பழக்க வழக்கங்களினால் குடலினை சுத்தம் செய்து மலச்சிக்கலினை போக்கி நோயில்லா சமுதாயமாக வாழ்ந்து அடுத்த தலைமுறைக்கும் பழக்கப்படுத்தி அவர்களும் ஆரோக்கியமா இருக்க வழிவகை செய்வது நம் கடமை ஆகும்.

    போன்: 9500676684


    • புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை வழங்குவதால் புத்திக்காரகன் என்று பெயர் உண்டு.
    • ஒருவரின் புத்திக் கூர்மைமையை புதனின் நிலையை வைத்து அறிய முடியும்.

    நடக்கும் என்பார் நடக்காது

    நடக்காதென்பார் நடந்துவிடும்

    கிடைக்கும் என்பார் கிடைக்காது

    கிடைக்காதென்பார் கிடைத்துவிடும் - என்ற பாடல் வரிகள் புத பகவானுக்கு மிகப் பொருந்தும். இரட்டை தன்மையான பலன்களை வழங்கி நிலை தடுமாற வைப்பதில் முன்னணி வகிப்பவர் புதன். புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை வழங்குவதால் புத்திக்காரகன் என்று பெயர் உண்டு.

    ஒருவரின் புத்திக் கூர்மைமையை புதனின் நிலையை வைத்து அறிய முடியும். ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் என்பதால் வித்யாகாரகன் என்ற பெயரும் உண்டு. அதே போல் ஒருவருக்கு அனுபவ பாடத்தைக் கற்றுத் தருவதும் புதன் தான். பிறர் சொல்லும் புத்திமதியை கேட்காமல் தானே செயல்பட்டு புத்தி தெளிந்தேன் என்பதும் புதன் தான். புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள். ஜனன ஜாதகத்தில் புதன் பலம் பெற்றவர்கள் இளமைப் பொழிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கணக்கியல், மறைமுகமான, நுணுக்கமான பிரச்சனைகளை தீர்ப்பதில் நிபுணராக இருப்பார்கள். வியாபார தந்திரம் மிக்கவராகவும், மதிநுட்பத்தை பயன்படுத்தி இருந்த இடத்திலேயே தொழில் செய்து வருமானம் செய்பவராக இருப்பர். வேர்வை சிந்தாமல் வருமானம் ஈட்ட விரும்புவார்கள். பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் புதன்

    தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவிற்கு நிகரான சக்தி உண்டு.

    புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம் என்பதால் தான் சேரும் கிரகத்திற்கு, இடத்திற்க்கு தக்கவாறு பார்க்கும் கிரகத்திற்க்கு தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார். புதன் பலம் பெற்றவர்கள் நகைச்சுவை உணர்வு மிகுந்தவுர். ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல், சிற்பம் வடித்தல், சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திர ஞானம், நுண்கலைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், உலகம் போற்றும் நகைச் சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கை துறையினர், அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், மிகச்சிறந்த வியாபாரிகள், ஆலோசகர்கள், கல்வியாளர்கள், ஓவியர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள்.

    புதன் சுப வலுப் பெற்றவர்களுக்கு புத்தி சாலித்தனம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் காரண காரியத்தோடு நன்கு யோசித்துச் செய்ய கூடிய திறன் பெற்றவராக இருப்பார். யாருடைய உதவியுமின்றி எந்த ஒரு நிகழ்வையும் கற்றுக் கொள்ளக் கூடிய திறமை இருக்கும். பார்ப்பதற்கு இளமையான தோற்றம் இருக்கும். யாராலும் எளிதில் ஏமாற்ற முடியாதவராக இருப்பார். லக்ன ரீதியாக நல்ல ஆதிபத்தியத்தை பெற்று புதன் இருக்கும் பொழுது நல்ல பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும். ஜாதகருடைய குணங்களும் மற்றவர்களால் விரும்பக் கூடியதாக, போற்றப்படக்கூடியதாக இருக்கும். லக்னத்திற்கு தீய ஆதிபத்திய நிலைபெற்று புதன் இருக்கும் பொழுது ஜாதகரின் தீய குணங்களால் பிறரின் விமர்சனங்களுக்கு உள்ளாகக்கூடிய நிலைமையையும் தரும்.

    புதன் பலம் குறைந்திருப்பவர்கள், நுண்ணறிவுத் திறன் குறையப் பெற்றிருப்பவர்கள், மனக்குழப்பம், அடைவார்கள், நுரையீரல், சிறுநீரகம், நரம்புத்தளர்ச்சி, ஜீரண உறுப்புகளின் கோளாறு, உடல் நலம் பாதிக்கும்.

    தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது, அவர் சேரும் கிரகம் சுபரானால், தன்னைச் சுபராகவும் அந்தக் கிரகம் பாபரானால் தன்னையும் பாபராகவும் தனது நிலையை மாற்றிக் கொள்வார்.

    உச்ச புதன் பெயர்ச்சி 2024

    மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் நரம்பிற்கு அதிபதி என்பதால் புதன் பலம் பெற்றால் உடலில் நரம்புகள் சிறப்பாக இயங்கி அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். இத்தகைய புதன் தனது சொந்த வீடான கன்னியில் 23. 9.2024 முதல் 10.10.2024 வரை உச்சம் பெற்று கேதுவுடன் இணைகிறார். இதனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்கு புதன் 3, 6-ம் அதிபதியான புதன், ராசிக்கு 6-ல் உச்சம் பெறுவதால் உத்தியோக மாற்றம் ஏற்படலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விண்ணப்பித்த வீடு, வாகன, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். முக்கிய ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அகலும். ஆரோக்கியத்தை உடல் நலத்தை பேணுவது நல்லது.

    பரிகாரம்: புதன்கிழமை சக்ரத்தாழ்வாரை வழிபடவும்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு 2, 5-ம் அதிபதியான புதன் ராசிக்கு 5-ல் உச்சம் பெறுவதால் புத்திர பிராப்த்தம் உண்டாகும். பிள்ளைகளால் பூர்வீகத்தால், பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு. மூளையை மூலதனமாகக் கொண்ட ஏஜென்சி, கன்சல்டிங் நிறுவனங்கள், பங்கு வர்த்தகத்தில் மிகுதியாக சம்பாதிப்பார்கள். கவுரவப் பதவி கிடைக்கும். கற்ற கல்வி பயன் தரும்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு 1, 4-ம் அதிபதியான புதன் உச்சம் பெறுவதால் வாகனம், பூமி லாபம், அரசுவகையில் ஆதாயம், உயர்ந்த பதவி அமையும். செல்வச் செழிப்பு உண்டு. சுய உழைப்பில் சொத்துச் சேர்க்கை உண்டு. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் சாதனை படைப்பார்கள். ஆரோக்கியம் மேம்படும். கல்வி ஆர்வம் கூடும்.

    பரிகாரம்: புதன் கிழமை மகா விஷ்ணுவை வழிபடவும்.

    கடகம்

    கடக ராசிக்கு 3,12-ம் அதிபதியான புதன் உப ஜெய ஸ்தானமான 3-ம்மிடத்தில் உச்சம் பெறுவதால் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். காணாமல் போன ஆவணங்கள், நகைகள், கை மறதியாக வைத்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். சகோதர ஒற்றுமை மேம்படும். வெளிநாட்டு வேலை, பயணம் உறுதியாகும்.

    பரிகாரம்: திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்யவும்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு தன, லாப அதிபதியாகிய புதன் தன ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் சாதகமான பலன் உண்டு. தொட்டது துலங்கும். வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள்.

    பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும்.

    கன்னி

    கன்னி ராசிக்கு 1, 10-ம் அதிபதியாகிய புதன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். தொழில் தந்திரம் கூடும். பல தொழில் துறை பற்றிய அறிவு கூடும். தொழில் ஞானத்தை பயன்படுத்தி பிறருக்கு ஆலோசனை கூறி சம்பாதிப்பார்கள். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு ஆதாயம் உண்டு.

    பரிகாரம்: கன்னி பெண்களுக்கு இயன்ற தானம் வழங்கவும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு புதன் 9, 12-ம் அதிபதியாகிய புதன் ராசிக்கு 12ல் உச்சம் பெறுகிறார். தொழில் உத்தியோகம், உயர் கல்வி நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லலாம். முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். பிறவிக் கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம். தந்தை வழி பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். கண் அறுவை சிகிச்சை வெற்றி தரும்.

    பரிகாரம்: மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரியால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும். மூத்த சகோதரம், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு.

    மறுவிவாக முயற்சி நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

    பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு 7, 10-ம் அதிபதியாகிய புதன் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். திருமணத் தடை அகலும். கல்வி, புகழ், அரசியல், லாபங்களும், பூர்வீக வகையில் நன்மையும் கிட்டும். வாழ்க்கைத் துணையாலும் ஆதாயம் உண்டு.

    பரிகாரம்: கோதண்ட ராமரை வழிபடவும்.

    மகரம்

    மகர ராசிக்கு 6, 9-ம் அதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். தொழிலில் மேன்மையும், அரசியல் பதவியும். செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும்.

    பித்ருக்களுக்கான நீத்தர் கடன் செய்ய உகந்த நேரம். சிலர் தந்தையின் கடனை சுமக்க நேரும். அல்லது தந்தைக்கு வைத்திய செலவு அதிகமாகும். விரும்பிய கடன் கிடைக்கும்.

    பரிகாரம்: தாய் மாமாவின் நல்லாசி பெறுவது நல்லது.

    கும்பம்

    கும்ப ராசிக்கு 5, 8-ம் அதிபதியான புதன் ராசிக்கு 8ல் உச்சம் பெறுகிறார். சிலருக்கு வம்பு வழக்கான காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு காதலால் அவமானம், வம்பு, வழக்கு உருவாகும். ஆரோக்கிய குறைபாடு அறுவை சிகிச்சையில் சீராகும்.

    குழந்தைகளால் மனச் சங்கடம் ஏற்படும். சிலருக்கு பதவியில் நெருக்கடி இருக்கும். அல்லது வேலையில் மெமோ வாங்குவார்கள். சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும்.

    பரிகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.

    மீனம்

    மீன ராசிக்கு 4,7-ம் அதிபதியான புதன் 7-ம்மிடத்தில் உச்சம் பெறுகிறார். திருமணத் தடை அகலும். நல்ல சொத்து சுகத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணைக்கு தாய் வழி சொத்து கிடைக்கும். கூட்டுத் தொழில் ஆர்வம் கூடும். தடைபட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்புகள் உள்ளது. தாயின் நல்லாசிகள் கிடைக்கும்.

    கோட்சார புதன் உச்சமடையும். இந்த காலத்தில் உரிய வழிபாட்டு முறைகளை பயன்படுத்தி பயன் பெற வாழ்த்துக்கள்.

    போன்: 98652 20406

    • மறுநாள் ஷூட்டிங். மனதுக்குள் கொஞ்சம் பயம் இருந்து கொண்டேதான் இருந்தது.
    • ஒவ்வொரு அரங்கிலும் எத்தனையோ மொழி திரைப்படங்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்.

    'இதய ஊஞ்சல்' ஆடியது காட்சியை பற்றி விளக்கினார் டைரக்டர்.

    இதய ஊஞ்சல் படப்பிடிப்பைதான் சொல்கிறேன்.

    டூவீலரை ஓட்டியடியே பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் இந்த மாதிரி டயலாக் பேசியபடியே செல்ல வேண்டும். சில விஷயங்கள் பற்றி சொல்லும் போது அதற்கேற்ப ஒரு கையையும் அசைத்து சைகை காட்டியபடி செல்ல வேண்டும் என்றார்.

    ஓ.கே. சார் வண்டி ஓட்டுவது யார்? பின்னால் இருப்பது யார்? என்றேன்.

    ஓட்டப்போவது நீதான். பின்னால் துணை நடிகை ஒருவர் இருப்பார் என்றார்.

    அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நானா...? என்றேன்.

    உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் தானே!

    ஆமாம். அப்படின்னா ஸ்கூட்டி ஓட்டுவது ஈசிதான் என்றார் சர்வ சாதாரணமாக.

    சார் நீங்க ஈசி என்று சாதாரணமாக சொல்கிறீர்கள். ஆனால் நான் ஸ்கூட்டியே ஓட்டியதில்லையே என்றேன்.

    ஆனாலும் அவர் விடவில்லை. அதைப்பற்றி எனக்கு தெரியாது. நாளை நீதான் ஸ்கூட்டி ஓட்ட வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி விட்டார். வேறு வழியில்லை என்பதால் பயிற்சி எடுத்து கொள்வதற்காக அந்த வண்டியை என் வீட்டுக்கு கொண்டுவர சொன்னேன்.

    அப்போது எங்கள் வீடு வடபழனி குமரன் காலனியில் இருந்தது.

    வீட்டுக்கு வண்டி வந்ததும் தெருவில் இரவில் வண்டியை ஓட்டி பயிற்சி எடுத்தேன். அந்த ஒரே இரவில் ஓரளவு கற்றுக் கொண்டேன். மறுநாள் ஷூட்டிங். மனதுக்குள் கொஞ்சம் பயம் இருந்து கொண்டேதான் இருந்தது.


    வழக்கமாக கார் ஓட்டும் சீன் என்றால், கார் கதவை திறப்பது வரைதான் நான். அப்புறம் டிரைவர் இருக்கையில் சில நேரம் அமர்ந்து இருப்பேன். ஆனால் நான் அற்புதமாக கார் ஓட்டுவது போல் இருக்கும். அதுதான் சினிமா டெக்னிக் என்பது.

    இதய ஊஞ்சல் படத்தில் எப்படியோ ஒரு வழியாக டூவீலரில் டபுள்ஸ் வேறு வைத்து ஓட்டி சாதித்து விட்டேன்.

    ஆனால் பிற்காலத்தில் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டேன். இப்போதெல்லாம் சூப்பராக கார் ஓட்டுவேன். தோழிகளோடு எங்காவது செல்வதாக இருந்தால் நான்தான் கார் ஓட்டிச் செல்வேன். முதல் முதலில் நான் வெள்ளை நிற அம்பாசிடர் கார் வைத்திருந்தேன். அந்த காலத்தில் இவ்வளவு சொகுசு கார்கள் வரவில்லை.

    அந்த காரில்தான் சில சமயம் படப்பிடிப்புக்கும் செல்வேன். கார் பதிவு எண்ணும் 'எம்.எஸ்.ஆர்., 'எம்.எஸ்.கியூ.' இப்படி 3 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 4 நம்பர் இருக்கும். எனது கார் என் கூட இன்னும் நினைவில் இருக்கிறது. எம்.எஸ்.ஆர்.9275 இப்போது பதிவு எண் முறையே மாறி விட்டது. இப்போதும் பழைய மாடல் பதிவெண்ணுடன் கூடிய கார்களை பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். சமீபத்தில் வடபழனியில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டி ருக்கும் சினிமா பாரம்பரிய அருங்காட்சியகத்தை பார்க்க சென்றிருந்தேன்.

    அங்கு இடம் பெற்று இருந்த ஒவ்வொரு பொருட்களையும் பார்த்ததும் பழைய நினைவுகள் என் கண்முன் வந்து வந்து போனது. ஏ.வி.எம். ஸ்டூடியோ. குழந்தையாக நான் ஓடி விளையாடிய இடம். பல அரங்குகள் உண்டு. ஒவ்வொரு அரங்கிலும் எத்தனையோ மொழி திரைப்படங்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும். பல முன்னணி கதா நாயகர்கள், கதாநாயகிகள் வந்திருப்பார்கள். அவர்களைப் பற்றி தெரிந்திராத நான் அவர்கள் முன்பே அங்கும் இங்குமாக ஓடி விளையாடுவேன்.

    குழந்தை நட்சத்திரத்தில் இருந்து கதாநாயகியாக உருவெடுத்த பிறகும் பல படங்களின் ஷூட்டிங் அங்கு வைத்துதான் நடக்கும். படப்பிடிப்பு தளங்கள் பிரமாண்டமாக இருக்கும். எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இப்போது அந்த தளங்கள் இல்லை. ஆனால் அந்த கால கட்டத்தில் சினிமா தொழிலில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், வாகனங்கள் என்று எல்லாவற்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

    அவற்றில் பல பொருட்களை பார்க்கும் போது அந்த தொழில் நுட்பத்தை வைத்தே எவ்வளவு பிரமாண்டமாக திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம்? என்று பெருமைப்பட வைத்தது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட அந்த காலத்து கேமராக்கள், லென்சுகள் ஒவ்வொன்றும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள்தான் உங்கள் மீனாவை உங்கள் கண்முன்பு நீங்கள் பார்த்து ரசிக்கும்படி கொண்டு வந்து நிறுத்தியது. மறக்க முடியுமா அவைகளை...?

    நான் சுற்றிப் பார்த்து கொண்டிருந்த போது ஏ.வி.எம். சரவணன் சாரும் அங்கு வந்தார். அன்று போல் இன்றும் கைகளை கட்டியபடி நின்றவர் 'வாம்மா.... நல்லா இருக்கியா? என்று அன்புடன் விசாரித்தார். அவருடைய அன்பில் நெகிழ்ந்து போனேன்.

    எவ்வளவு உயர்ந்த மனிதர்... எவ்வளவு சாதாரணமாக நின்று பேசுகிறார்...? என் மனதில் என்ன வெல்லாமோ ஓடியது. அவரிடம் இருந்து இந்த தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.

    என்னை இன்று இவ்வளவு உயரத்தில் கொண்டு வந்து நிறுத்தியதில் அவரது வாழ்த்தும், ஆசீர்வாதமும் முக்கியமானவை.

    அன்று எஜமானில் மீனாவுக்கு பதில் வேறு ஒருவரை போடலாமே என்று அவர் மட்டும் சொல்லி இருந்தால் உங்கள் மீனா இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பேனா என்பது சந்தேகமே. வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாராவது ஒருவர் வடிவில் வந்து கடவுள் நம்மை கை தூக்கி விடுவார் என்பார்கள். அந்த வகையில் என்னை முதல் வெற்றிப்படிக்கட்டில் தூக்கி விட்டவர் போற்று தலுக்குரிய ஏ.வி.எம். சரவணன் சார் தான். நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியாத மாமனிதர்.

    இன்னும் எத்தனை யோ நினைவுகள்... ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை... அதுபற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்)

    • சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாது இருக்கும் போது கண் பாதிப்பு ஏற்படலாம்.
    • குண்டாக இருப்பவர்களை மட்டுமே சர்க்கரை நோய் பாதிக்கும் என்பது தவறு.

    மருத்துவ விஞ்ஞானம் என்பது தொடர்ந்து ஆய்வு செய்து பல தீர்வுகளை கண்டுபிடிக்கும் வழியில் செயல்படுகிறது. 'பென்சிலின்' என்ற ஒரு மருந்து கண்டு பிடிக்கப்படாமல் இருந்திருந்தால இன்றைய ஜனத் தொகையில் முக்கால் பங்கு அழித்திருக்கும் எனலாம்.

    கடுமையான கிருமி தாக்குதல்களை தடுக்கும் மருந்துகள், நோய்களை தவிர்க்கும் முறையாக 'வாக்சின்' (தடுப்பூசி) மருந்துகள் என மக்களை தாக்கும் நோய் என்ற அரக்கனோடு மருத்துவ விஞ்ஞான ஆய்வுகள் போராடி மனித குலத்தினை காத்து வருகின்றன.

    நோய் தாக்குதலை தவிர்க்கும் முறையினையும் இந்த ஆய்வுகள் மேற்கொள்கின்றன. அவ்வகையில் சர்க்கரை நோய் பிரிவு-2ஐ தவிர்க்கும் விதமாக பல கருத்துக்களை ஆய்வுகள் வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆய்வாளர்கள் இப்போது கூறுவது என்ன தெரியுமா?

    இரவு நேரங்களில் அதிக ஒளி கொண்ட விளக்குகளின் கீழ் பணிபுரிபவர்களுக்கு உடல் நலத்தில் அதிக பாதிப்பு ஏற்படுகின்றது என்பதுதான். இந்த ஒளி நீரிழிவு பிரிவு 2 பாதிப்பினை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்கின்றனர். இதனை பல ஆய்வுகள் உறுதியும் செய்து உள்ளன.

    இரவில் அதிக ஒளி கொண்ட மின்சார விளக்குகளை தவிர்ப்பது செலவில்லாத, எளிமையான நீரிழிவு, தவிர்ப்பு முறையாகக் கூறுகின்றனர்.

    அதிக வருடங்கள் இரவு நேர ஷிப்ட் வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருக்குமாயின்- இரவு நேர செயற்கை ஒளி காரணமாக பாதிப்பு கூடுகின்றது என்கின்றனர்.

    உடலின் Circadianrhthm முறையில் சீர்குலைவு ஏற்படுவதே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். இரவு 12.30 மணி முதல் காலை 6 மணி வரையில் பாதிப்பு கூடுதலாகவே உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

    இரவில் 7 மணி முதல் 9 மணி நேர உறக்கம் என்பதும் சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு முறையாகின்றது.

    இந்த ஒரு முறை என்பது அதாவது இரவு நேரம் தொடர்ந்து அதிக செயற்கை ஒளியில் இல்லாது இருப்பது ஒன்று மட்டுமே சர்க்கரை நோய் தவிர்ப்பு அல்லது தள்ளி போடும் என்பதாகிறது. இதுவும் ஒருவர் கடைபிடிக்க வேண்டிய ஒன்று எனலாம்.

    இரவு ஷிப்ட் பார்ப்பவர்களால் நோயாளிகள் உயிர் பிழைக்கின்றனர். பல மனித சமுதாயத்திற்கான சேவைகள் அதாவது மின்சாரம், பாதுகாப்பு என பல சேவைகள் நடைபெறு கின்றன. இவர்களை நாம் கை கூப்பி வணங்குவோம். ஆனால் இரவில் நைட் ஷோ சினிமா, கேளிக்கை பார்ட்டிகள், விடிய விடிய அரட்டை இவையெல்லாம் தவிர்த்து விடலாமே.

    மின்சாரம் என்ற ஒன்று வந்த பிறகு, மனிதனின் வாழ்க்கை வெகுவாய் முன்னேற்றம் அடைந்தது. ஆனால் பகல் செயற்கை ஒளியால் நீண்டது. இரவு சுருங்கியது. தேவையில்லாது விஞ்ஞான கண்டுபிடிப்புகளை தவறாய் பயன்படுத்துவதனை தவிர்க்கலாமே.

    ஆதிகால மனிதன் உணவைத் தேடி அலைந்தான், நடந்தான், ஓடினான். வழியில் எந்த டீ கடையும், பிஸ்கட்டும் இருக்கவில்லை. உணவில்லாத நேரங்களில் பட்டினி கிடந்தான்.

    இன்றைய மனிதனோ ரைஸ்மில் போல் சாப்பிடத்தொடங்கிய நாள் முதல் மூச்சு நிற்கும் காலம் வரை எதனையோ மெல்கிறான். கொரிக்கின்றான், குடிக்கின்றான்.

    அவனது வாய்க்கும், குடலுக்கும் ஓய்வு என்பதே இருப்பதாகத் தெரியவில்லை. உபவாசம், விரதம் என மேற்கொள்பவர்கள் எப்படியோ ஒரு கட்டுப் பாட்டினை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

    ஓயாத குடல், ஜீரண மண்டல உறுப்புகளின் உழைப்பு அவைகளை பலவீனம் ஆக்குகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு என வந்து விடுகின்றன.

    உடலுக்கு உழைப்பு இல்லை, கண்ணுக்கு ஓய்வு இல்லை, குடலின் கழிவுகள் தேக்கம் என்ற வாழ்க்கை முறை மனிதனின் உடல் நலம் மன நலம் இரண்டி னையுமே கெடுத்து விடுகின்றது.

    சர்க்கரை நோய் வரும் போது கூடவே இருதய நோய் பாதிப்பு, ரத்த குழாய்கள் பாதிப்பு என கைகோர்த்து வந்து விடுகின்றன. சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகின்றது. மனிதன் பூலோகத்திலேயே நரக வாழ்க்கை வாழும் நிலை ஏற்படுகிறது.


    வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிக்கு சர்க்கரை நோயா? நீங்க உஷாராயிடுங்க. Hbaic-1 சோதனை செய்து கொள்ளுங்கள். பயிற்சியாளர் ஆலோசனைப்படி உடற்பயிற்சி முறைகளை மாற்றுவது, சற்று கூடுதல் படுத்துவது போன்றவற்றினை செய்யுங்கள்.

    உணவு முறையில் சத்துணவு நிபுணரின் அட்வைஸ் வேஸ்ட் என்று நினைக்காதீர்கள். ஒரு சேர அனைத்து முயற்சிகளும் தான் ஒருவரை ஆரோக்கியமாக வைக்க முடியும்.

    ஸ்ட்ரெஸ் என்பது ஒரு எமன். தியானமும், யோகாவும் அதனை விரட்டி அடித்து விடும். வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது சரியா? தவறா? என்று இப்போது நீங்களே உணர்ந்து இருப்பீர்கள்.

    உடல் பருமன், நடுத்தர வயது (30ஐ தாண்டி னாலே போதும்) பருத்த வயிறு இவற்றோடு நாம் போராட வேண்டாம். உடனே விரட்டி அடித்து விடுவோம். ஆரோக்கியமான முறையில் வயது கூடட்டும்.

    காலை முதல் இரவு வரை 'பொத்'தென இடித்த புளி போல் ஒரே இடத்தில் அமர்ந்து வாழ்வதால் நோய்களின் கூடாரமாக ஆகி விடுகின்றீர்கள். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஐந்து நிமிடங்கள் சுறுசுறுப்பாய் நடக்க வேண்டும்.


    * சர்க்கரை நோய் பயத்தால் சிறிது கூட சர்க்கரை வேண்டாம் என்று இருப்பவர்களையும் பார்க்கின்றோம். அடிக்கடி ஸ்வீட், கேக் என சாப்பிடுபவர்களுக்கும் எடை கூடும் போது சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் ஆகின்றது.

    * குண்டாக இருப்பவர்களை மட்டுமே சர்க்கரை நோய் பாதிக்கும் என்பது தவறு. குண்டாக இருப்பவர்களுக்கு பாதிப்பு அபாயம் அதிகம் என்பதே ஆய்வு கூறும் கருத்து.

    * சர்க்கரை நோய் உள்ளவர்கள் வண்டி ஓட்டக்கூடாது என்பது இல்லை. நல்ல கட்டுபாடு, மருந்துகள், மருத்துவ செக்-அப் இவை இயல்பான வாழ்க்கைக்கு உதவும்.

    * சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாது இருக்கும் போது கண் பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.

    * நல்ல உடற்பயிற்சியும், முறையான உணவும் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களை சுறுசுறுப்பாக வைக்கும்.

    * நீங்கள் ஆயுர் வேதம் போன்ற மாற்று முறை சிகிச்சை எடுத்துக் கொள்பவராக இருந்தால் அதனை உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் கூறுவது உங்களுக்கு பாதுகாப்பாய் அமையும்.

    * இன்சுலின் எடுத்துக் கொள்வதும் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த உதவிதான். இதில் பல பிரிவுகள் அளவு முறைகள் உள்ளன. தேவைப்படும் போது மருத்துவர் பரிந்துரை செய்வார். முறைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    'யாரும் உங்களை கொல்வதில்லை, நீங்கள் தான் உங்களை கொன்று கொண்டு இருக்கின்றீர்கள்' என்கி றார் டாக்டர் மென்டி- தலை சிறந்த சத்துணவு நிபுணர். இவர் கூறுவது "Intermitlnt Fasting" முறைகளை பயன்படுத்து வதன் மூலம் அதிக உடல் நலத்தினை பெற முடியும் என்பதுதான்.

    ஆனால் இதனை தகுந்த பயிற்சியா ளரின் வழி காட்டுதல் மூலமே மேற்கொள்ள வேண்டும். பொதுவில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தண்ணீர் தவிர வேறு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது முதல் படியாக மேற்கொள்ளலாம்.

    மாதம் இருமுறை பழம் தவிர வேறு எதுவும் எடுக்காது இருப்பது, மாதம் இரு முறை நீர் மட்டும் பருகி விரதம் இருப்பது போன்றவை அவரவராகவே மேற்கொள்கின்றனர். நன்மைகள் பல இருந்தாலும் தகுந்த வழிகாட்டுதல்கள் அவசியம்.

    இந்த "Intermitlent Fasting" முறையில் எடை குறைப்பு,சர்க்கரை அளவு கட்டுப்படுதல், கெட்ட கொழுப்பு குறைதல், நல்ல மனநிலை, உடலில் நச்சு நீக்கம் ஆகியவை ஏற்படுகின்றன.


    சில குறிப்புகள்:

    * வீட்டில் உள்ள தூசு, வெளியில் உள்ள தூசு, மாசு இவற்றின் காரணமாக உலக அளவில் மில்லியன்கள் எண்ணிக்கையில் இறப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வீட்டினை தூசு இன்றி சுத்தமாக வைத்திருங்கள். சுற்றுப்புறத்தினை சுத்தமாகவைத்திருங்கள். வெளியில் மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.

    * 12 முதல் 17 வயதுள்ள குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்ற னர் என வெளிநாட்டு ஆய்வுகள் கூறுகின்றன. நம் வீட்டு குழந்தைகள் மீதும் நாம் கவனம் செலுத்துவோமே.

    * இன்றைய மருத்துவ உலகில் கொழுப்பு, கல்லீரல் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. கல்லீரல் உடலில் எண்ணற்ற வேலை களைச் செய்கின்றது. இதன் பாதிப்பு கவனிக்கப்படா விட்டால் ஆபத்தான நிலை வரை கொண்டு விடலாம். ஆரம்ப நிலையில் கண்டு பிடித்து முறையான சிகிச்சை, உணவு முறை மூலம் சரி செய்ய முடியும்.

    பலருக்கு கொழுப்பு, கல்லீரல் பாதிப்பு என்பது ஆரம்ப நிலையில் அவ்வளவாகத் தெரிவதில்லை. ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் போன்றவை மூலம் இதனை கண்டுபிடிப்பர் எதேச்சையாக கண்டு பிடிப்பர்.

    * அதிக சோர்வு, குன்மம், நெஞ்செரிச்சல், வலது பக்க மார்பக கூடு கீழே லேசான வலி, அதிக காற்று, பசியின்மை, வயிற்றுப் பிரட்டல் போன்றவை இருந் தால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    பாதிப்பு கூடும்போது உடலில் அரிப்பு, மஞ்சள் காமாலை, சிகப்பு சிறிய திட்டுகள், இரவு கண் பாதிப்பு, வெள்ளை நகங்கள் என்ற அறிகுறிகளைக் காட்டும்.

    தகுந்த மருத்துவர் ஆேலாசனை, சத்துணவு நிபுணரின் வழி காட்டுதல் போன்றவை சிறந்த நன்மை பயக்கும். கவனத்துடன் செயல்படுவோம்.

    • பயன் நிறைந்த ஓசோன் படலத்தின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது.
    • உலக அளவில் பெருகிவரும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபடுகிறது.

    பூமியின் மேற்பரப்பில் இருந்து 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள `ஸ்ட்ராடோஸ்பியர்' என்ற அடுக்கில் அமைந்த பகுதி `ஓசோன் படலம்'. ஓசோன் வாயு மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளால் ஆனது. சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களை பூமிக்கு அனுப்பாமல் தடுக்கும் பணியை ஓசோன் படலம் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியில் விழுந்தால், அது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் புற்றுநோய், கண் பார்வை குறைபாடு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இத்தகைய பயன் நிறைந்த ஓசோன் படலத்தின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது.

    உலக அளவில் பெருகிவரும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபடுகிறது. மேலும் குளிர் சாதன பெட்டியில் இருந்து வெளி வரும் குளோரோபுளோரோகார்பன் மற்றும் புரோமின், கார்பன், குளோரின், கார்பன்டெட்ராகுளோரைடு போன்ற வேதி பொருட்கள் ஓசோன் படலத்தின் அடர்த்தியை வெகுவாகக் குறைத்து, துளையை ஏற்படுத்துகிறது. இதனால் புற ஊதாக்கதிர்கள் எளிதில் பூமியின்பரப்பில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    முதன் முதலில் 1985-ம் ஆண்டு அண்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் அடர்த்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிகழ்வு உலகளவில் அனைத்து நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகளவில் இதற்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. 1985-ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, 1987-ம் ஆண்டு மாண்ட்ரியல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. ஓசோன் படலத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறைதான் உலகின் அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட ஒரு நெறிமுறை ஆகும். இந்த மாண்ட்ரியல் நெறிமுறையின்படி, ஓசோன் படலத்தை பாதிக்கும் வகையிலான பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடுகளை குறைக்க வேண்டும். அவைகளுக்கான மாற்று பொருட்களை கண்டறிந்து அவற்றை பயன்படுத்துவது என்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

    உலக மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 16-ந் தேதியை சர்வதேச ஓசோன் தினமாக அறிவித்தது. இந்த நெறிமுறைகளை அனைத்து நாடுகளும் பின்பற்றும் பட்சத்தில் அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குள் ஓசோன் படலத்தின் அடர்த்தி அதிகமாகி இயல்பு நிலைக்கு திரும்பும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இப்புவியை அதன் தன்மை மாறாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் கைகளிலும் உள்ளது.

    • தமிழில் நாணப்படுதல், வெட்கப்படுதல் என இரண்டுசொற்கள் ஒரே பொருளில் வருகின்றன.
    • சான்றாண்மைக் குணமுடையவர்களின் செயல் என்று அடையாள முத்திரையையும் குத்திக் காட்டுகிறார்.

    தீமை செய்தோர்க்கும் நன்மையே செய்தல் வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்!.

    'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்!; தப்பைச் செய்தவன் தண்டனை பெறுவான்!' என்று பழமொழி இருக்கிறதே! பின் எப்படித், தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்! என்று கூறுகிறீர்கள்? என்று நீங்கள் கேட்கலாம். பெரும்பெரும் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளுக்கு, அரசுமுறை சார்ந்து அவர்களுக்கு நீதி வழங்கும்போது, குற்றங்களுக்கேற்ற தண்டனைகள் வழங்குவதென்பது இயல்பான நடைமுறை. ஆயினும் தனிப்பட்ட முறையில் நமக்கு மற்றவர் இழைக்கும் தீமைகளுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்கியே ஆகவேண்டும் என்று நினைக்காமல் அவர்கள் நாணப்படும்படியாக நன்மையையே தண்டனையாக வழங்கவேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

    "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

    நன்னயம் செய்து விடல்"

    இந்தக் குறளில் வள்ளுவர், நமக்குத் தீமை செய்தவர்களுக்குக் கட்டாயம் தண்டனை வழங்கியே ஆக வேண்டும்! என்றுதான் உறுதியாகக் கூறுகிறார்; 'ஒறுத்தல்' என்ற சொல்லுக்குத் 'தண்டித்தல்' என்று பொருள். ஆனால் அப்படித், தண்டனையாக வழங்கும் செயல் தீமைக்குத் தீமை என்றில்லாமல், தீமைக்கு நன்மை என்கிற பாங்கில் இருக்க வேண்டும். 'நாம் செய்த தீமைக்குத் தீமையைத் தண்டனையாக வழங்காமல் நன்மையை வழங்குகிறானே!' என்று தண்டனைக்குரியவன் நாணும்படியாக அந்த நன்மையும் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதுவே சான்றாண்மைக் குணமுடையவர்களின் செயல் என்று அடையாள முத்திரையையும் குத்திக் காட்டுகிறார்.

    "இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

    என்ன பயத்ததோ சால்பு"


    கெடுதல் செய்தவர்களுக்கும் நன்மையே செய்வதுதான் சான்றோர் எனப்படும் நல்லவர்களுக்கு அடையாளமாகும். இப்படிச் செய்வதன்மூலம், நன்மையைப் பெற்ற கெட்டவர்கள் நாணத்தினால் வெட்கித் தலைகுனியும் தண்டனையை அனுபவிப்பார்கள் என்பது வள்ளுவர் கருத்து. நன்னயம் செய்வதுகூடப், பலவேளைகளில் தண்டனைகள் போலாகித், தீயவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பை வழங்கிவிடும்.

    தமிழில் நாணப்படுதல், வெட்கப்படுதல் என இரண்டுசொற்கள் ஒரே பொருளில் வருகின்றன. பழிபாவங்களைச் செய்ய நாணப்படுதல் அல்லது வெட்கப்படுதல் என்பது அறமுணர்ந்த சான்றோர்களின் குணமாகும். ஆனால் பெண்களின் நற்குணங்களைக் கூறவந்த சான்றோர், அச்சம், மடம், நாணம், பயிற்பு ஆகிய நான்கும் நிச்சயமாகப் பெண்களிடத்தில் அமைந்திருக்க வேண்டும். இந்த நால்வகைக் குணங்களே பெண்களுக்கு அணிகலன்கள் போன்றவை என்கின்றனர். அப்படியானால் பெண்களிடத்தில் இருக்கின்ற நாணப்படுதல் என்னும் குணம் அவர்களின் அழகுக்கு அழகு சேர்க்கின்ற நேர்முறை நோக்கம் கொண்ட குணமாகும். இதைத் திருவள்ளுவரும் ஒரு குறளில் வெகு அழகாகத் தெளிவுபடுத்திக் காட்டுகிறார். 'நாண் உடைமை' அதிகாரத்தில்,

    "கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

    நல்லவர் நாணுப் பிற"

    என்னும் குறளில், பழிதரும் தீயச்செயல்களைச் செய்வதற்கு வெட்கப்பட்டு நாணுவதே நாணம் ஆகும். பெண்கள் நாணம் கொள்வது என்பது வேறு என்கிறார்.

    ஒரு செயலால் தமக்குத் தனிப்பட்ட முறையிலோ அல்லது பொது நிலையில் மற்றவர்களுக்கோ பழிபாவம் ஏற்படுமானால் அந்தச் செயலைச் செய்வதற்கு அஞ்சி, அதனைச் செய்யாமல் விட்டுவிடுவது நாணம் ஆகும். சமுதாயத்தால் அறமற்ற தீயச்செயல்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட செயல்களைச் செய்யக்கூடாது; கட்டாயத்தின்பேரில் அவற்றைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதற்காக நாணமும் வெட்கமும் பட்டு விலகி விட வேண்டும்.

    "புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்

    பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்"

    எனவரும் புறநானூற்று வரிகள், இன்னும் இந்த உலகம், பழிச்செயல்களுக்கு அஞ்சுகிற நாணமுடைய பெருமக்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறது. தனிமனித குண விசேஷங்களைப் பொதுமைப்படுத்திப் பார்க்கிற பரந்த அறிவுப் பார்வையை இதில் காணலாம்.

    "எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்

    இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்!"

    என்கிற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வீச்சு, சமுதாயத்தில் ஒருமனிதன் வறுமையின் காரணமாகப் படிப்பற்றவனாக இருந்தாலும், அதற்கான பொறுப்பை ஒட்டுமொத்தச் சமுதாய மும் ஏற்று, நாணப்படவேண்டும் என்கிறது. இங்கே எல்லாரும் கல்விகற்று அமர நிலை எய்திட வேண்டும் என்கிற மகாகவியின் கனவை நனவாக்க அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. உழைப்பும் முன்னேற்றமும் கல்வியறிவும் தனிமனித முயற்சி சார்ந்தது என்றாலும், அவற்றிற்கான இலக்குகளை அடைவதற்கான முன்னெடுப்புகளை ஒட்டுமொத்தச் சமூகமும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும்.

    இந்தச் சமூகத்தில், தம்முடைய ஒரு செயலால் தமக்கோ, அல்லது பிறருக்கோ தீங்கு வந்து விடுமென்றால் அதனைச் செய்யாமல் விட்டுவிடவேண்டும். அப்படி மீறித் தீச்செயல்களைச் சிலர் செய்தால் அவர்களாக அதற்கு வெட்கி நாணப்படும்படி, அவர்களுக்கு நற்செயல்களைச் செய்து திருத்த முயற்சி செய்ய வேண்டும்.

    ஒரு கிராமத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் நடந்த ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, கிராமங்களில் வீடுகள்தோறும் வீட்டுத் தோட்டங்கள் போட்டுக் காய்கறிகள் பயிர் செய்வதும், ஆடுமாடுகள் கோழிகள் வளர்ப்பதும் வழக்கம். அப்படி ஒரு வீட்டில் மூன்று கோழிகளை ஒருவர் வளர்த்து வந்தார். அவரது பக்கத்து வீட்டுக்காரர் கோழிகள் எதுவும் வளர்க்கவில்லை; தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் காய்கறித் தோட்டம் மட்டும் போட்டிருந்தார். இரண்டு வீட்டுக் கொல்லைப் புறத்திற்கு இடையே வேலிகளோ அல்லது மதிற்சுவர்களோ கட்டப்படவில்லை.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    ஒவ்வொருநாள் விடிந்ததும், தன்வீட்டில் பஞ்சாரத்தில் அடைக்கப் பட்டிருக்கும் கோழிகளை வீட்டுக்காரர் மேய்ச்சலுக்காகத் திறந்துவிடுவார். ஆனால் அந்த மூன்று கோழிகளும் அந்த வீட்டுக் கொல்லைப் புறத்தில் மேயாமல், பக்கத்துவீட்டுக் கொல்லைப் புறத்திற்குச் சென்று, அங்கிருந்த காய்கறிச் செடிகளைக் கொத்திக்கிளறிச் சேதப்படுத்தி மேய்ந்து கொண்டிருந்தன. பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் அப்போதைக்குக் கோழிகளை அந்த வீட்டுப்பக்கமாக விரட்டினாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து அவர் வீட்டுக் கொல்லைப்புறப் பயிர்களிலேயே மேய்ந்து கொண்டிருந்தன.கோழிக்குச் சொந்தக்காரரைப் பார்த்துக் கோழிகள் செய்வதைச் சொல்லி, அவற்றைக் கூடைகளுக்குள் அடைத்துவைத்து வளருங்கள்! அல்லது உங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலேயே மேயும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள்! என்று அறிவுரை கூறினார்.

    பக்கத்துவீட்டுக்காரரின் புகாரைக் கேட்ட கோழிவீட்டுக்காரர்," ஐயா! எனக்கு ஆயிரம் வேலைகள் வெளியில் இருக்கின்றன; எந்நேரமும் கோழிகளை உங்கள் வீட்டுப்பக்கம் வரவிடாமல் கோழிமேய்க்கும் வேலையை மட்டும் என்னால் பார்க்க முடியாது. உங்களுக்கு வேண்டுமானால், கொல்லைப்புறத்தில் ஒரு தடுப்புச் சுவரோ வேலியோ போட்டு வைத்துக் கொள்ளுங்கள்; வசதிப்பட்டால், எங்கள் வீட்டுக் கோழிகள் உங்கள் வீட்டுப்பக்கம் வராமலிருக்க ஒரு ஆளைக் காவலுக்குக்கூட அமர்த்திக் கொள்ளுங்கள்!" என்று முகத்தி லடித்தாற் போலச் சொல்லி விட்டார்.

    கோழிக்காரரை எப்படித் திருத்துவது? யோசித்தார் பக்கத்து வீட்டுக்காரர். கடைக்குச் சென்று ஐந்தாறு கோழிமுட்டைகளை வாங்கி வந்தார். அன்றுகாலை பஞ்சா ரத்தைத் திறந்துவிட்டவுடன் வழக்கம்போலக் கோழிகள், பக்கத்து வீட்டுக் கொல்லைப் புறத்துக்கு வந்து காய்கறிச் செடிகளுக்குள் புகுந்து செடிகளைக் கொத்திக் கிளற ஆரம்பித்தன. அந்த நேரத்தில் தான் கடையில் வாங்கி வந்திருந்த கோழி முட்டைகளைச் செடிகளுக்கு அடியில் வைத்துக், கோழிக்காரர் பார்க்கும்நேரத்தில், அவர் பார்க்கும்படியாக ஒவ்வொரு முட்டையாக எடுத்து வீட்டுக்குள் கொண்டு சென்றார்.

    அவ்வளவுதான் பதறிப்போய்விட்டார் கோழிக்காரர். இந்தக்கோழிகள் பக்கத்து வீட்டுக் கொல்லைப்புறத்துக்கு மேய மட்டும் செல்லாமல் அங்கு முட்டைகளையும் இட்டு வருகின்றனவா? என்று பார்த்தார். ஓடிச்சென்று மூன்று கோழிகளையும் ஒரே பிடியாகப் பிடித்துத், தன் வீட்டுப் பஞ்சாரத்திற்குள் போட்டு அடைத்து வைத்துவிட்டார். இனி எந்தக்காலத்திலும் அந்தக் கோழிகள் பக்கத்துவீட்டுக் கொல்லைப்புறத்திற்கு மேய வரப்போவதேயில்லை.

    இதுதான் அவர்நாண நன்னயம் செய்துவிடல். பக்கத்துவீட்டுக்காரர் நினைத்திருந்தால் தன்வீட்டுக் கொல்லைக்கு மேயவந்து காய்கறிச் செடிகளைச் சேதப்படுத்திய கோழிகளைப் பிடித்துச் சிறைப் படுத்தியிருக்கலாம். அல்லது அடித்துச் சமைத்தும் உண்டிருக்கலாம். ஆனால் அவை மென்மேலும் இருவீட்டார்களுக்கும் கசப்புணர்வையே வளர்த்திருக்கும். பிரச்சனைகளுக்கு எதிர் வினைகளே தீர்வாகாது. எதிரியும் உணர்ந்து திருந்தும்படி நன்மைகள்வழி நல்வழிப்படுத்துவதே சிறந்த தீர்வு.

    மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அறமற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு நாணப்பட வேண்டும். தன்மானத்திற்குத் தலைகுனிவா கவும், சுயமரியாதைக்கு இழுக்காகவும் உள்ள செயல்களைச் செய்யக்கூடாது. அவமானம் உண்டாகும் காரியத்தில் தம்மை அறியாமலும்கூட ஈடுபட்டு விடக்கூடாது. ஒரு மனிதர் எவ்விதமான துன்பம் வந்தாலும், எவ்விதமான இக்கட்டு வந்தாலும், தனது நிலையிலிருந்து தாழ்ந்துவிடக் கூடாது. அப்படி ஒரு மனிதன் தனது நிலையிலிருந்து தாழ்வதைத் தலையிலிருந்து உதிரும் மயிருக்கு உவமைகாட்டி இழிவாகக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

    நாணப்படும்படி செயல்கள் நிகழ்ந்துவிடும்போது, அக்காலத் தமிழ்மன்னர்கள் உண்ணாமல் வடக்கிருந்து உயிர் துறந்த மான வரலாற்றைச் சங்ககால வரலாறு எடுத்துரைக்கிறது. சேரமன்னன் பெருஞ்சேரலாதன், கரிகால்சோழன் எய்தஅம்பு முதுகில் புண் ஏற்படுத்தியதற்காக நாணி வடக்கிருந்து உயிர்துறக்கிறான். போரில் வீரமரணம் என்பது மார்பில் வேல்தாங்கி இறப்பது; ஆனால் கரிகாலன் எய்தஅம்பு புறமுதுகைப் புண்ணாக்கியது என்றால், அது அம்புஎய்த கரிகாலனுக்கும் இழுக்கு! அம்பைத் தாங்கிய பெருஞ்சேரலாதனுக்கும் இழுக்கு! எனவே நாணப்பட்டு வடக்கிருந்து இறக்கிறான் பெருஞ்சேரலாதன்.

    தன்னுடைய சொந்த மகன்களாலேயே தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதால், அதற்குப் பொறுக்காத கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் துறந்த வரலாறும் புகழ்மணக்கும் புறநானூற்றில் உண்டு.

    பிறக்கின்ற மனிதர் எல்லாரும் வாழ்ந்தாலும் மறைந்தாலும் ஒருசிலரின் மறையாத நிலைத்த புகழுக்கு அடிப்படையாகத் திகழ்வது, அறமற்ற செயல்களைச் செய்வதற்கு நாணப்படுவதே ஆகும். அடுத்தவர் நமக்கு அறமற்ற செயல்களைச் செய்தாலும் அவர்களாக உணர்ந்து நாணப்படும்படியாக அவர்களுக்கு நன்மையையே செய்வதுதான் சிறந்த மனிதச் செயல் ஆகும்.

    தொடர்புக்கு 9443190098

    • பொய்யானவர்களின் காலில் விழுந்தால் வாழ்க்கை வீணாகிப் பயனற்றதாகும், பாவமும் சூழும்.
    • துறவு மேற்கொள்பவன் திருமணம் செய்து கொள்ளுதல் வேண்டும்.

    அதிகாரம்: கூடா ஒழுக்கம்

    இந்த அதிகாரத்தில்,

    வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

    ஐந்தும் அகத்தே நகும்.

    என்ற குறளில் தொடங்கி

    மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்

    பழித்தது ஒழித்து விடின்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள்

    உள்ளன.

    கூடா ஒழுக்கம் எனும் அதிகாரத்தில் துறவு மேற்கொள்கின்றவர்கள் எப்படி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் கூறுகின்றார். காவி கட்டுகின்றவர்களுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிகவும் இன்றியமையாதது. மிகவும் உள்ளத் தூய்மையுடன் இருக்க வேண்டும்.

    தாம் இல்லறத்தில் இருந்து விலகிவிட்டதாக மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே காவி அணிவார்கள். அவர்கள் தங்களுடைய உணவு, உடை இருப்பிடத்திற்கு எந்தவித இன்னலும் வராமல் இருக்கத் தலைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். பொருளறிந்தவர்கள் இல்லறத்தில் இருந்தே கரை சேரலாம்.

    சிலருக்கு உண்மை புரியாமல் மனக் குழப்பத்தினாலும், மற்றவர்களிடம் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காகவும், காவி அணிவார்கள். சிலர், சமுதாயத்தில் உள்ள மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காகவே காவி உடைதரித்திருப்பார்கள்.

    பிறரை ஏமாற்றுவதற்காக காவி தரித்திருப்பவர்கள் சொல்ல முடியாத பாவங்களை ஏற்று நரகத்தில் விழுவார்கள். அவர்களை பின்பற்றி செல்பவர்கள், பொய்யான துறவு வேடத்திற்குத் துணையாக இருந்த காரணத்தாலும், அவர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த காரணத்தாலும் இவர்களும் பாவியாகி நரகத்தில் வீழ்வார்கள்.

    காவி அணிபவர்கள் உண்மையான பக்தியுடன் தலைவனை மனம் உருகி தியானம் செய்ய வேண்டும். தங்களிடம் சேருகின்ற பணத்தில் புண்ணிய காரியங்களைச் செய்தல் வேண்டும்.

    உண்மைப்பொருள் என்பது தலைவனின் திருவடியைப் பற்றி பூஜை செய்வதுதான். ஞானிகளை உருகி தியானம் செய்தால் தங்களுக்குத் தேவையானவற்றைத் ஞானிகளே கொடுப்பார்கள்.

    குணக்கேடு உள்ளவன் காவி அணிந்து கொண்டு, ருத்ராட்சம் அணிந்து யோகத்தண்டை வைத்துக் கொண்டு ஏமாற்றுவான். இவன் பொருள் வெறியும், காம வெறியும் உள்ளவனாக இருப்பான்.

    ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் தாங்கள் ஆன்மீகத்தில் தெளிவடைய, தக்க ஆசானின் துணையை நாட வேண்டும். தக்க ஆசானை நாடுவதற்கு முன் அவர்களின் செயல்பாடுகளை நன்கு நோக்கி ஆராய வேண்டும். அதற்கு பின்பே அவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாத போலித்துறவிகளிடம் சென்று ஏமாறுதல் கூடாது.

    சம்சாரம் செய்பவரிலும் ஞானி உண்டு. சந்நியாசம் கொள்பவர்களிலும் மூடன் உண்டு. துறவு மேற்கொள்கின்றவன் ஜாதிவெறி, மதவெறி, காமவெறி, பொருள் வெறி அற்றவனாக இருத்தல் வேண்டும். இல்லையேல் அவனால் மக்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளையும்.

    காவி உடை, யோகத்தண்டு, புலித்தோல் ஆசனம், ஜடாமுடி தாங்கி தோற்றத்தில் பெரிய முனிவன் போலக் காட்சியளிப்பான். அவனிடம் குணக்கேடுகள் நிறைந்து இருக்கும். இவன் கொலைக் கருவியான அம்புக்குச் சமமானவன். எனவே புறத்தோற்றத்தைக் கண்டு ஏமாறக்கூடாது.


    உண்மைத் துறவி வெள்ளாடை அணிந்து எளிமையாக மக்களோடு மக்களாக பேசுவதற்கும், பழகுவதற்கும் இனிமையாக இருப்பான். உள்ளத்தால் இறைவனை உருகித் தியானித்துக் கொண்டிருப்பான். இத்தகையவன் இனிமையான இசைதரக்கூடிய யாழ் போன்றவன், எனவே, புறத்தோற்றத்தைக் கண்டு ஏமாறக்கூடாது.

    உண்மையாகத் துறவு மேற்கொள்பவன், மற்றவர்களிடம் புண்ணியம் செய்யச் சொல்லி அவர்களின் வறுமை அகல வழி சொல்லுவான். தலைவனை நினைத்து உருகி பூஜை செய்யச் சொல்லுவான். பொய்யானவன் ஜாதகத்தைக் காரணம் காட்டி, அவனைத் தலைவனிடம் பக்தி செலுத்தச் சொல்லாமல், ஏதாவது சொல்லி அவன் வாழ்க்கையை வீணாக்கி விடுவான்.

    இத்தகையவர்கள் சமுதாயத்தில் பொய் வேடம் பூண்டு அலைவர். அவர்கள் காம எண்ணம் நீங்காதவர்களாகவும் பொருள்பற்று உடையவர்களாகவும் இருப்பார்கள். இத்தகையவர்களை பஞ்ச பூதங்கள், "என்றாவது ஒரு நாள், உன்னைப் பொசுக்கி விடுவேன், அழித்து விடுவேன்" என்று அச்சுறுத்தி எள்ளி நகைக்கும்.

    இடகலையும், பிங்கலையும் புருவமத்தியில் ஒடுங்கினால் அங்கே ஓங்காரம் கேட்கும். ஓங்காரமே அவன்தான். அவன்தான் ஓங்காரம். உண்மைப் பொருள் அறிந்தவர்களை நாம் குருவாக ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். பொய்யானவர்களின் காலில் விழுந்தால் வாழ்க்கை வீணாகிப் பயனற்றதாகும், பாவமும் சூழும்.

    எனவே மகான் திருவள்ளுவர், மகான் நந்தீசர் போன்ற முதுபெரும் ஞானிகளின் பாதங்களைப் பற்றி, பூஜை செய்வோம். பிறரின் வறுமை நிலை கண்டு மனம் இரங்கிப் பசியாற்றுவோம். மனதில் தூய்மை இல்லாதவர்களுக்கு இறவாநிலை கைகூடாது.

    துறவு பூண்டவர்கள் ஒழுக்கக்கட்டுப்பாடு இல்லாமல் தவறுகள் செய்தால் பல ஜென்மங்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் தொடரும். மனதில் உள்ள ஆசைகளை துறக்காமல் காவிதரித்து துறவு வேடம் கொள்பவர்கள் இரக்கமற்றவர்கள்.

    தவம் செய்கின்றவர்கள் எத்தகைய துன்பத்தை அடைந்தாலும் தங்களுடைய நெறியில் இருந்து தவறமாட்டார்கள். தவவலிமை உள்ளவர்களிடம் அரசனும் சிரம் தாழ்ந்து நிற்பான்.

    அதிகாரம்: கள்ளாமை

    இந்த அதிகாரத்தில்,

    எள்ளாமை வேண்டுவான் என்பான்

    எனைத்துஒன்றும்

    கள்ளாமை காக்கத்தன் நெஞ்சு.

    என்ற குறளில் தொடங்கி

    கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை;

    கள்லார்க்குத்

    தள்ளாது புத்தே ளுலகு.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    கள்ளாமை என்பது திருடாமை என்பதாகும். திருடுவது என்பது பலவகையாக உள்ளது. நேரடியாக கையில் உள்ள பொருளைத் திருடுவது, முகமூடி அணிந்து திருடுவது, ஒரு பொருளைக் காட்டி மற்றொரு பொருளை விற்பது. பொருள் மீது அதிக லாபம் வைத்து விற்பது. வசியப்படுத்திக் கொள்ளையடிப்பது. இவ்வாறாக ஏமாற்றத் தெரிந்தவர்கள் பலவகையில் மக்களை ஏமாற்றித் திருடுவார்கள்.

    இது மட்டுமன்றி, ஒரு வீட்டு மனையைப் பலரிடம் விற்று விடுவார்கள். சிலர் நூறு ரூபாய் அளவுக்கு ஒருவனிடம் வேலை வாங்கிக் கொண்டு, அவனுக்கு இருபது ரூபாய் கூலி கொடுப்பார்கள். சிலர் வேலையே செய்யாமல் ஏமாற்றி கூலி வாங்குவார்கள்.

    வாடகைக்கு இருப்பவர்கள், வீட்டு வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது, பரிதாபப்பட்டு கடன் கொடுத்தால் அதை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவது, இத்தகைய செயல்பாடுகள் எல்லாம் ஒருவகை திருட்டே.

    இத்தகைய திருட்டையும் வஞ்சகத்தையும் ஆறறிவு படைத்த மனிதனே செய்கின்றான். இத்தகைய கயமைத்தனம் மனித வர்க்கத்தில் தொன்று தொட்டு நடந்து வருகின்றது. மற்ற ஜீவராசிகள் தனக்குத் தேவையானவற்றைச் சாப்பிட்டு விட்டு மற்றவற்றை விட்டுச் சென்றுவிடும்.

    கயமைத்தனத்தில் இருந்து விடுபடவே கள்ளாமை எனும் அதிகாரத்தை திருவள்ளுவர் நமக்குத் தந்துள்ளார். இந்த அதிகாரத்தைத் துறவறவியலில் சேர்த்துள்ளதால் துறவு மேற்கொள்பவர்கள் வன்மனம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றார்.

    துறவு மேற்கொள்பவன் உடம்பையும் உயிரையும் பற்றி அறிதல் வேண்டும். துறவு மேற்கொள்பவர்கள் மற்றவர்களின் பொருள்களை வஞ்சித்து வாங்குதல் கூடாது. துறவு மேற்கொள்கின்றவன் தன்னுடைய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளுதல் வேண்டும்.

    உண்மைப் பொருளை அறிந்த, தக்க ஆசான் வழிகாட்டுதலுடன் துறவு மேற்கொள்ள வேண்டும். ஆசான் ஞான பண்டிதனைப் பூஜை செய்து மரணமில்லாப் பெருவாழ்வு அடைய வேண்டும். இல்லையெனில் துறவு என்ற பெயரில் கபட நாடகங்கள் ஆடி, தானும் கெட்டு, பிறரையும் கெடுத்து விடுவான்.

    சிலர் வறுமையாலும் பேராசையாலும் காவி வேடம் பூண்டு, மக்களை ஏமாற்றுவார்கள். இத்தகையவர்கள் ரசமணி வைத்திருப்பதாகவும், நரிக்கொம்பு வைத்திருப்பதாகவும் கூறி, அவைகளை வைத்துப் பூஜை செய்தால் எல்லா நலன்களும் அடையலாம் என்று, இல்லறத்தானை வஞ்சித்து ஏமாற்றிப் பொருள் பறிப்பார்கள். அறியாமையில் உள்ள மக்கள் இதை நம்பி ஏமாறுவார்கள். இது ஒரு பலவீனமான எண்ணம்.

    துறவு மேற்கொள்கின்றவன் இத்தகைய தாழ்ந்த எண்ணத்தால் கவரப்படாமல், பழிக்கு அஞ்சி பாவ புண்ணியம் அறிந்து துறவு மேற்கொள்ளுதல் வேண்டும். அத்தகைய எண்ணங்களை எண்ணுவதே பெரிய குற்றமாகும். ஆரம்பத்தில் பொன்னும் பொருளும் குவிவது போல் தோன்றி, இறுதியில் பாவியாகி விடுவான்.

    துறவு மேற்கொள்பவன் திருமணம் செய்து கொள்ளுதல் வேண்டும். தாய், தந்தை, மனைவிக்குச் செய்யும் கடமைகளைச் செய்தல் வேண்டும். அவர்களைத் தவிக்க விட்டு காட்டுக்குப் போய் அலைதல் கூடாது.

    பூஜையும் புண்ணியங்களும் செய்ய மனைவியே துணையாய் இருப்பாள். மனம் சாந்தப்பட்டு பொருளாதாரப் பிரச்சனை இல்லாமல் இருந்தால் முன் செய்த புண்ணியத்தால் துறவு கைகூடும்.

    தக்க ஆசான் துணைகொண்டு தலைவனை உணர்ந்து பூஜை செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்றவனே அறிவாளி.

    அறியாமையில் உள்ளவன், இவையெல்லாம் தடை என்று நினைத்து தனித்திருக்க நினைப்பான். தன்னுடைய கடமைகளில் இருந்து தப்பி விடுவான். பொய் சொல்லித் தவவேடம் பூண்டு பொருள் சேர்ப்பவன் பாவம் சூழ்ந்து பாவியாகி விடுவான். பொருள் சேர்ப்பவன் தராசுமுனை போல் நேர்மையுடன் நின்று பொருள் சேர்க்க வேண்டும்.

    ஜென்மத்தைக் கடைத்தேற்றுபவனுக்கு முன்செய்த புண்ணியபலமும் பூஜை பலமும் இருந்தால், அவன் மனமே அவனுக்கு வழிகாட்டியாக அமைந்து அவனை பாவத்தில் இருந்து காப்பாற்றிவிடும்.

    பிறரால் இகழப்படாமல் வாழுகின்றவன் புண்ணியவான். பொய் சொல்லாமலும் திருடாமலும் இருந்தால் பிறரால் இகழப்பட மாட்டான். அவன் நெஞ்சத்தில் தலைவன் தங்கியிருந்து அவனை வழிநடத்துவான். நல்லவனாக வாழ தலைவன் மீது பக்தி இருக்க வேண்டும். பண்பு உள்ளவன் மட்டுமே துறவு மேற்கொண்டு இத்துறையில் வளர முடியும். மரணமில்லாப் பெருவாழ்வு அடைய முடியும். இந்நிலையை அடைய கள்ளாமை அதிகாரத்தில் கூறிய உண்மைகள் பேருதவியாக இருக்கும். பிறர் பொருளை வஞ்சகத்தால் பெறுபவர்களின் வாழ்க்கை, பாவம் சூழ்ந்ததாக அமையும். இத்தகையவர்களுக்கு பிற்காலத்தில் துன்பம் நேரிடும்.

    அளவறிந்து வாழ்கின்றவர்கள் பிறர் பொருள்மீது பற்று வைக்கமாட்டார்கள். பிறர் பொருளை சுலபமாக அடையவேண்டும் என்ற எண்ணம், தீய எண்ணம் ஆகும். பொருள் ஈட்ட நல்ல வழிகளை விடுத்து தீயவழிகளில் பொருள் ஈட்டினால் அதனால் பாவம் மிகுந்து அவர்களும் அழிந்து, அவர்கள் சந்ததியும் அழிவார்கள்.

    ×