என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- புதன் மேட்டில் ஒரே ஒரு கொடு மட்டுமே இருக்கும் பட்சத்தில் அது நல்ல செல்வ வளம் பெருகும்.
- வாழ்வில் அடுதடுத்து திட்டம்தீட்டி முன்னோற்றம் அடைந்து வாழ்வில் உயர்வீர்கள்.
சுண்டு விரலுக்கு கீழே உள்ள மேடு புதன் மேடு ஆகும். இதைக் கொண்டு ஒருவரின் பேச்சாற்றல், எழுத்துத் திறமை, அதிர்ஷ்ட பாக்கியங்கள், வியாபாரத்தில் அவருக்கு கிடைக்கும் வெற்றி ஆகிய இவை அனைத்தையும் அறிய இயலும். இவற்றில் என்னென்ன குறியீடுகள் இருந்தால் அவை என்னென்ன பலன் தரும் என்று பார்ப்போம்...
புதன் மேட்டில் உள்ள குறியீடுகள் சொல்லும் பலன்கள் வருமாறு:-
புதன் மேட்டில் ஒரே ஒரு கொடு மட்டுமே இருக்கும் பட்சத்தில் அது நல்ல செல்வ வளம் பெருகும். வாழ்வில் செலவு செய்து வசதியை பெருக்கி கொள்வீர்கள். சமூக அந்தஸ்து கூடும்.
புதன் மேட்டில் பல கோடுகள் இருக்கும் பட்சத்தில் வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் நல்ல திறமையால் வெற்றியையும் தரும். முற்பகுதியில் கஷ்டம் பட்டாலும் பிற்பகுதியில் அரண்மனை போன்ற வீட்டில் வாழ்வீர்கள்.
புதன் மேட்டில் அதிக குறுக்கு நெடுக்கு கோடுகள் காணப்பட்டால் அவர்கள் அதிக தொழில்களை ஒரே நேரத்தில் எடுத்துக் போட்டுக் கொண்டு செய்யலாம். இதனால் தேவை இல்லாத சிரமத்தை வாழ்க்கையில் அனுபவிப்பார்கள். எதிர்காலத்தில் சிறந்த அறிவாளியாக நீங்கள் அறியபடிவீர்கள்.
புதன் மேட்டில் நட்சத்திரம் காணப்பட்டால் அது வெளிநாட்டு தொடர்பு உடைய வியாபாரத்தை தரும். அந்த வியாபாரத்தின் மூலமாக செழிப்பாக வாழ்வார்கள்.
வாழ்வில் அடுதடுத்து திட்டம்தீட்டி முன்னோற்றம் அடைந்து வாழ்வில் உயர்வீர்கள். இந்த அமைப்பினால் நல்ல முன்னோற்றம் உண்டு.
புதன் மேட்டில் சதுரம் காணப்பட்டால் நஷ்டங்களை முன்னதாகவே அறிந்து தவிர்ப்பார்கள். அப்படிப் பட்ட நல்ல புத்திசாலியாக இருப்பார்கள்.நல்ல சிந்தனை செய்யகூடிய நீங்கள் கலைகளில் அதிக ஈடுபாடு உண்டு. பிற்காலத்தில் நிறைய சம்பாதித்து செல்வத்துடன் வாழ்வீர்கள்.

அ.ச.இராமராஜன்
புதன் மேட்டில் முக்கோணம் காணப்பட்டால் வாழ்வு சக்கரம் போல காணப்படும். வெற்றியும், தோல்வியும் மாறி, மாறி ஏற்படும். பண விஷயங்களில் எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
புதன் மேட்டில் கரும் புள்ளி காணப்பட்டால் அவர்கள் வியாபாரம் செய்வது நன்மை தராது. அது பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். நீங்கள் உத்தியோகம் மூலமாக அதிகம் சாம்பாரித்து கொள்ளலாம். வாழ்வில் முற்பகுதியில் வரவும் செலவும் சமமாக இருக்கும். பிற்பகுதியில் செல்வ செழிப்புடன் வாழ்வீர் குடும்பத்துடன். புதன் மேட்டில் வலை இருந்தால் அதிக அவமானம் மற்றும் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். பிற்பகுதியில் பொருளாதாரத்தில் நல்ல முன்னோற்றம் ஏற்படும். புதன் மேட்டில் புதனின் சின்னம் காணப்பட்டால் வியாபாரத்தில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
புதன் மேட்டில் குருவின் சின்னம் காணப்பட்டால் அவர்கள் வியாபார சம்மந்தமான கல்வி பயில்வது அதிக நன்மையை தரும். உலகறிவு அதிகம் காணப்படும். குடும்பம் அடிக்கடி இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். அலைச்சல் அதிகமாக இருக்கும். திறமைகள் பல இருந்தும் வெளியே தெரியாமல் போகும். உங்கள் திறமையை வெளியே கொண்டு வர முற்படுங்கள். புதன் மேட்டில் சனியின் சின்னம் காணப்பட்டால் வாழ்வில் அதிக இடைஞ்சல்களை சந்திப்பார்கள். அவர்கள் முடிவுகள் அனைத்துமே தவறாக முடியும். எதிலும் நீங்கள் அவசார படாமல் இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுத்தால் முன்னோற்றம் ஏற்படும். எதிரிகள் விரோதிகள் அவதூரு பரப்புவர்கள் உங்களை சுற்றி இருப்பார்கள். இவை அனைத்தும் கடந்து வெற்றி பெறுவீர்கள்.

புதன் மேட்டில் சூரியனின் சின்னம் காணப்பட்டால் அவர்களுக்கு சமயத் துறை ஈடுபாடு அதிகரிக்கும். நியாயமுடன் நடந்து கொள்வார்கள்.
புதன் மேட்டில் சுக்கிரனின் சின்னம் காணப்பட்டால் அவர்கள் அதிகம் குறுக்கு வழிகளில் ஈடுபாடு கொண்டு இருப்பார்கள். நேர்மையாக செய்ய ஆற்ற மாட்டார்கள். புதன் மேட்டில் சந்திரனின் சின்னம் காணப்பட்டால் அவர்களும் ஏமாறுவார்கள் உடன் பிறரையும் ஏமாற்றுவார்கள்.
புதன் மேட்டில் செவ்வாயின் சின்னம் காணப்பட்டால் சொத்துக்களை விற்று வியாபாரம் செய்து அதில் ஆரம்பத்தில் லாபத்தையும் பின்னர் அதீத நஷ்டத்தையும் சந்திப்பார்கள். ஆகையால் சொந்த தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகம் மூலமாக பணம் வரவு உண்டு. அரசு வழியில் ஆதரவு குறைந்து காணப்படும். கல்வியில் நிறைய தடைகள் ஏற்படும். இருந்தாலும் இவற்றையெல்லாம் கடந்து வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெறுவார்கள்.
புதன் மேட்டில் ராகுவின் சின்னம் காணப்பட்டால் அவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். எனினும் அதிக உடல் நல பாதிப்புகள் ஏற்பட இடம் உண்டு. லாப நஷ்டங்கள் வாழ்க்கையில் மாறி, மாறி ஏற்படும். வாழ்வில் எண்ணற்ற ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். கடினமான உழைப்பின் மூலம் மிகப்பெரிய வெற்றி காண்பீர்கள். வண்டி வாகனங்களில் வெளியில் செல்லும்போது அதிக கவனம் தேவை.
புதன் மேட்டில் வட்டம் காணப்பட்டால் எதிர்பாராத ஒரு நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதில் இருந்து வெளி வருவது கடினமாக இருக்கும். சரியான வாய் பேச்சு இருந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
- நம் வசதிக்குத் தகுந்தவாறு சேமிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.
- கஷ்டப்பட்டு உருவாக்கிய நிதியை வேறு செலவுகளுக்கு எடுப்பதை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். சமீபத்தில் ஒரு நண்பர், "நான் மாலைமலரின் நெடுநாள் வாசகன். உங்கள் கட்டுரை மாலைமலரில் வருவது குறித்து எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏதோ முதலீட்டு ரகசியங்கள் எல்லாம் சொல்லி எங்கள் செல்வ நிலையைத் தேற்ற உதவி செய்வீர்கள் என்று பார்த்தால், செலவு, கடன், தேவையற்ற பழக்கங்கள் என்று ஏதேதோ சொல்கிறீர்களே தவிர, பணத்தை பலமடங்கு அதிகரிக்கும் வழியைச் சொல்லவில்லையே?" என்றார்.
அவருக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், முதலீடுகளைப் பற்றிப் பேசி, இதில் போட்டால் இவ்வளவு கிடைக்கும், அதில் போட்டால் அவ்வளவு கிடைக்கும் என்று சொல்வதற்கு ஒரு கால்குலேட்டர் போதும். ஆனால் நாம் முன்னெடுத்திருப்பது ஒரு பயணம். நம் செல்வநிலையை உயர்த்தும் பெரும் பயணம்.
ஒரு சாதாரணப் பயணத்துக்குக் கூட முதலில் என்ன செய்வோம்? நம் கார் எஞ்ஜினில் ஆரம்பித்து, பிரேக், டயர், ஸ்டியரிங், வீல் என்று எல்லாவற்றையும் சரி பார்த்தபின்புதானே கிளம்புவோம்? ஒரு நான்கு நாள் பயணத்துக்கே இவ்வளவு முன்ஜாக்கிரதை என்றால், ஆயுள் முழுக்கப் பயன் தரக்கூடிய செல்வநிலைப் பயணத்துக்கு எத்தனை விஷயங்கள் தயார்ப்படுத்த வேண்டும்?
மேலும் செல்வம் என்னும் அமிர்தம் கிடைப்பதே அரிது. கிடைத்ததைத் தக்க வைக்க ஓட்டை, உடைசல் அற்ற நல்ல பாத்திரம் தேவை. நம் அனைவரின் கையிலும் இருப்பதோ பணத் தவறுகள் என்ற ஓட்டைகள் நிறைந்த மண் பாத்திரம். எந்த நிமிடமும் பாத்திரம் உடைந்து மொத்தமும் பறிபோகக்கூடிய சூழல். ஆகவே நம் கையில் இருக்கும் பாத்திரங்களை சரி செய்து, திடமாக்கி நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதுதான் நம் முதன்மையான கடமை. அதன் பிறகு அமிர்தத்தைத் தேடலாம் என்று நண்பருக்குச் சொன்னேன்.
சரி செய்யவேண்டிய மற்றுமொரு தவறு
கிரெடிட் கார்டும், பர்சனல் லோன்களும் இருக்கும் தைரியத்தில், அவசர கால சேமிப்பு என்பதை நாம் ஒரு அநாவசியமான விஷயமாகத்தான் பார்க்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணிக்க இயலும்? உதாரணமாக கொரோனா வரப்போவதை அறிந்தவர் யார்? நம் ஒவ்வொருவர் வாழ்விலும் யாரும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கின்றன. அவை சந்தோஷம் தரும் நல்லவையாகவும் இருக்கலாம்; வாழ்வைப் புரட்டிப் போடும் கெட்டவையாகவும் இருக்கலாம். ஆனால் எல்லாமே செலவைக் கூடவே கூட்டிவருவனவாக உள்ளன. வருமுன் காப்போனாக அவற்றை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பது மிகவும் அவசியம்.
உதாரணமாக, உங்களுக்கு வேலை போய்விட்டால், அடுத்த வேலை கிடைக்கும்வரை மாதாந்திரச் செலவுகளை எப்படி சமாளிப்பீர்கள்? அல்லது உடல்நலம் குறைந்து விட்டால், சரி செய்யும்வரை குடும்பத்தாரின் கதி என்ன? இவ்வளவு பெரிதாகக் கூட யோசிக்க வேண்டாம். ஊரிலிருந்து சொந்த பந்தங்கள் திடீரென வந்து நின்றால் அவர்களை நல்லபடியாக உபசரித்து அனுப்ப விரும்புவோமே? அதற்குப் பணம் ஏது? நாளை நம் கார் அல்லது டூ வீலர் ரிப்பேர் ஆகிவிட்டால் ரிப்பேர் செலவுக்கு என்ன வழி?
இது போன்ற சிறிய மற்றும் பெரிய செலவுகளுக்கு நாம் தயாராக இல்லாவிட்டால், இன்றைய பிரச்சினைகளை சமாளிக்க நாளைய எதிர்காலத்தை அடகு வைக்க நேரும். ஏற்கெனவே செய்த வங்கி டெபாசிட், மியூச்சுவல் பண்ட் முதலீடு போன்றவற்றை அவசரமாகக் கலைக்க நேரும்; அல்லது கடன் வலையில் விழ நேரும் இது போன்ற நிகழ்வுகள் நம் தன்னம்பிக்கையைக் குலைத்து, வாழ்வு குறித்த பயங்களை உருவாக்குவதோடு, நம்மை நம் செல்வப் பயணத்தில் பல கட்டங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும். இதற்கு நாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இவை குறித்து எதிர்பார்த்து தயார் நிலையில் இல்லாத நம்மை மட்டுமே நாம் நொந்துகொள்ள முடியும்.
எது உதவும்?
இதுபோன்ற நேரங்களை சமாளித்து, நிம்மதியாக உறங்க நமக்கு உதவுவதுதான் எமர்ஜென்சி பண்ட். வெறும் வியாதிகளும், வெள்ளங்களும் மட்டுமல்ல; கீழ்க்கண்ட பல வேளைகளும் ரெடியாகப் பணம் தேவைப்படும் அவசரகாலங்கள்தான்.
விபத்து
உடல் நலக் குறைவு
வேலை இழப்பு
கம்பெனியே மூடப்படுவது
சட்டப் பிரச்சினைகள்
குடும்பப் பிரச்சினைகள்
சொத்துத் தகராறுகள்
பூகம்பம், வெள்ளம், காட்டுத் தீ, சுனாமி
இது போன்ற தருணங்களில், நமக்கு உதவக்கூடியவர்களும் சிக்கலில் இருக்கும்போது, யாரிடம் கேட்க முடியும்? கொரோனா லாக்டவுன் போதும், மழை வெள்ளத்தில் நகரம் மிதந்தபோதும், ஏடிஎம்களில் பணம் இல்லை. ஆஸ்பத்திரிகளிலோ ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டைக் காட்டினாலும், முன்பணம் கட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம். ஆனால், மிகுந்த முன்யோசனையுடன் துவங்கப்பட்ட வங்கி எஃப்.டி.க்களும், ஹெல்த் இன்சூரன்ஸும் கூட உதவாத இடத்தில் எமர்ஜென்சி ஃபண்ட் உதவும். அதனை எப்படி உருவாக்குவது?

சுந்தரி ஜகதீசன்
எவ்வளவு தேவை?
ஒரு குடும்பத்துக்குத் தேவைப்படும் எமர்ஜென்சி ஃபண்ட் எவ்வளவு என்பதை முதலில் கணக்கிடவேண்டும். வாடகை அல்லது வீட்டுக்கடன் இ.எம்.ஐ, உணவு, மின்சாரம், தண்ணீர், ஃபோன் போன்றவற்றுக்கான பில்கள், ஸ்கூல் ஃபீஸ், போக்குவரத்து செலவு, கடன் கட்டுதல் போன்ற அனைத்துக்குமாக உங்கள் செலவு மாதம் ரூ. 30000/ என்று வைத்துக் கொண்டால், அவசரகால நிதியாக மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்களுக்குத் தேவையான ரூ.90000/ முதல் ரூ.180,000/ வரை அவசரகால நிதியாக வைத்திருக்க வேண்டும் என்பது பொது விதி. ஆனால் சமீப காலங்களில் வெள்ளத்தால் வீடும், வீட்டு உபயோகப் பொருட்களும் மிகுந்த பாதிப்படைகின்றன; அவற்றை மீட்டெடுக்க குறைந்த பட்சம்
ரூ. 50000/ எக்ஸ்ட்ராவாகத் தேவைப்படலாம். இவையெல்லாம் பொதுவிதி மட்டுமே; நம் வசதிக்குத் தகுந்தவாறு சேமிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.
அவசரகால நிதிக்கு இவ்வளவு பணம் எப்படி சேமிப்பது என்று கவலைப்பட வேண்டாம். இது ஒரே இரவில் நடக்கக் கூடிய காரியமல்ல. ஆகவே மொத்தமாகக் கையில் பணம் சேர்ந்தபின் இந்த நிதியை உருவாக்கலாம் என்று எண்ணுவது தவறு. முன் கூட்டியே திட்டமிட்டு மாதா மாதம் அதற்கான பணத்தைத் தனியாக சேமித்துவர வேண்டும். போனஸ், சம்பள உயர்வு போன்றவை மட்டுமின்றி, கையில் கிடைக்கும் சின்ன சின்னத் தொகையைக் கூட சேமிப்பது நல்லது. தேவையென்றால் மற்ற முதலீடுகளை தற்காலிகமாகக் குறைத்துக் கொண்டு அவசரகால நிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் தவறில்லை. ஆனால் கஷ்டப்பட்டு உருவாக்கிய நிதியை வேறு செலவுகளுக்கு எடுப்பதை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.
எங்கு சேமிப்பது?
எங்கு சேமிப்பது என்பதே அடுத்த கேள்வி. பணமே ராஜா (Cash Is King) என்று ஒரு பழமொழி உண்டு. அவசரகாலத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை. எமர்ஜென்சி ஃபண்ட் என்பது அவசர காலத்தில் உடனடியாக கைக்கு எட்டும்படி வைக்க வேண்டிய ஒன்று. இதில் வட்டி எவ்வளவு கிடைக்கும்; வருமானம் எவ்வளவு வரும் என்ற கணக்கெல்லாம் செல்லாது. இதில் பணத்தைப் பலமடங்காகப் பெருக்கும் வழிகளை உபயோகிக்கும் தேவையும் இல்லை. ஆனால் பலரும் இதைப் புரிந்து கொள்ளாமல், இதனையும் பணம் பெருக்கும் மற்ற வழிகளில் ஒன்றாக எண்ணி, நல்ல வட்டி வரவேண்டும் என்று விரும்பி, தங்கள் எமர்ஜென்சி பணத்தை வங்கி எஃப்.டியிலும், மியூச்சுவல் ஃபண்ட்களிலும் வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் உணராத விஷயம் என்னவென்றால், மியூச்சுவல் ஃபண்டில் பணம் வெளிவர ஓரிரண்டு தினங்கள் ஆகும். இடையில் விடுமுறைகள் வர நேர்ந்தால் நான்கு நாட்கள் கூட ஆகலாம். வரும் பணமும் வங்கிகள் மூலமே வரும். ஆனால் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது வங்கிகளை அணுகுவது கடினம். கேரளாவிலும், சென்னையிலும் வெள்ளம் வந்த போது வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது இயலாத காரியமாக இருந்தது. வங்கிகள்தான் பத்தடி ஆழ வெள்ளத்தில் மூழ்கி இருந்தனவே?
ஆகவே, உங்கள் அவசரகால நிதி பத்திரமாக இருக்கவேண்டும்; உடனடியாக எடுக்கும்வண்ணம் இருக்கவேண்டும் என்பதால் குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்குத் தேவையான பணத்தையாவது (ரூ.30000/) வீட்டில் கேஷாக வைத்திருக்க வேண்டும். வங்கிகள் தரும் கரன்ட் அக்கவுன்ட் லிமிட் மீதியை எங்கு வைக்கலாம்? முன்பெல்லாம் பிசினஸ் செய்பவர்களுக்கு மட்டுமே வங்கியில் கரன்ட் அக்கவுன்ட் கிடைக்கும். இப்போது எஃப்.டி. வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எப்.டி. தொகையில் 75 சதவீதம் அளவுக்கு லிமிட் வழங்கப்படுகிறது.
ஆகவே ரூ.60000/த்தை எப்.டி.யாக வைத்தால், ரூ.45000/ வரை லிமிட் கிடைக்கும். எஃப்.டி.யில் நமக்குக் கிடைக்கும் வட்டி 5.5 சதவீதம் என்றால், கரன்ட் அக்கவுன்டுக்குப் போடப்படும் வட்டி சுமார் 7.5 சதவீதம் ஆக இருக்கும். இதில் மிகப் பெரிய வசதி என்னவென்றால், நூறு ரூபாய் முதல் 45000/ வரை எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம்; மீண்டும் போடலாம்; மறுபடி எடுக்கலாம். முழு லிமிட்டுக்கும் வட்டி போடப்படுவதில்லை. நாம் எடுக்கும் பணத்துக்கு மட்டுமே வட்டி போடப்படும். இந்த வசதி உங்கள் வங்கியில் இருக்கிறதா என்று பாருங்கள்.
கையில் வரக்கூடிய பணத்தில் ஒரு அளவை எமெர்ஜென்சி பண்டாக உருவாக்குவதால் பிரச்சினைகளை பதற்றமின்றி, கடனின்றி, பயமின்றி எதிர்கொள்ள முடியும். சுனாமியோ, பெருந்தொற்றோ மற்ற உலகளாவிய பிரச்சினைகளோ வருவதைத் தடுப்பது நம் கையில் இல்லை. ஆனால் அவற்றை சமாளிக்கும் கேடயமாக அவசரகால நிதி இருக்கிறது. ஆபத்து நிறைந்த நம் வாழ்க்கைப் பயணத்தில் அவசியமான இந்தக் கேடயம் உங்களிடம் இருக்கிறதா?
- பல்வேறு நரம்பு வளர்ச்சி மூளை வளர்ச்சி செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.
- சிறு வயதில் இருந்தே தயிரை பழக்கப்படுத்துங்கள்.
தயிர், ஈடு இல்லாத, ஏராளமான சத்துகள் நிறைந்த, ஒர் எளிய உணவு. இன்று பல குழந்தைகளும் தயிர் என்றாலே முகத்தை சுளிப்பதும் தயிரே சாப்பிடாமல் வளர்வதையும் சகஜமாக பார்க்க முடிகிறது. தயிர் வாசம் பிடிக்கவில்லை. புளிப்பாக இருக்கிறது என்று ஏதேதோ காரணங்கள். அதையும் மீறி சாப்பிட்டாலும் வீட்டில் உறைய வைக்கும் தயிர் அவர்களுக்கு சிறிது கூட பிடிப்பதில்லை. கடைகளில் விற்கும் டப்பா தயிரைத் தான் விரும்பி உண்ணுகின்றனர்.
இது சரியா தவறா? நல்லதா கெட்டதா? முதலில் தயிரால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம் வயதானவர்களுக்கு, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு முக்கியமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் பொழுது தயிர் சோறு அல்லது மோர் சாதத்தை முக்கியமான உணவாக கொடுப்பது நம்முடைய பழக்கம்.
இதற்கு காரணம் தயிரில் உள்ள புரோபயாடிக் என்று சொல்லக்கூடிய லாக்டோபசிலஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்கள் தான். செரிமானத்திற்கு மட்டுமல்லாது குடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்ற கெட்ட பாக்டீரியாக்கள் உடலை தாக்காமல் இருப்பதற்கும் உதவி செய்கிறது . இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
இதில் உள்ள சத்துகளான புரதம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நம் உடலுக்கு பலவிதத்திலும் தேவைப்படுகின்றன. தயிரில் உள்ள முக்கியமான ஒரு அமினோ அமிலம் டிரிப்டோப்பேன் என்பதாகும். 100 கிராம் தயிரில் 50 மில்லி கிராம் என்ற அளவில் இது உள்ளது. இந்த அமினோ அமிலத்தை நம் உடலால் தயாரிக்க முடியாது. வெளியில் இருந்து தான் உடலுக்கு கொடுக்கப்பட வேண்டும். பல்வேறு நரம்பு வளர்ச்சி மூளை வளர்ச்சி செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.

முக்கியமாக குழந்தைகளின் நல்ல தூக்கத்திற்கு, அமைதியான மனநிலைக்கு, மூளை வளர்ச்சிக்கு இந்த அமினோ அமிலம் முக்கியமானது. அதனால் தினமும் தயிர் சாதம் குழந்தைகளுக்கு சேர்த்து தரும்பொழுது குழந்தையினுடைய உடல், மனம் மற்றும் மூளை வளர்ச்சி சீராக இருக்கும். எனவே அனைவரும் தயிர் சாப்பிடலாம் குழந்தைகள் தினமும் தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறு வயதில் இருந்தே தயிரை பழக்கப்படுத்துங்கள். பல குழந்தைகள் சிறு வயதில் எடுத்துக் கொள்ளாவிட்டால் பெரியவர்கள் ஆனபோதும் தயிரை புறக்கணிப்பர்.
வீட்டில் தயிர் எப்படி தயாரிப்பது?
பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து, அதில் பழைய மோரை சிறிது ஊற்றி நன்கு கலந்து வைப்பார்கள். வெயில் காலங்களில் ஆறு மணி நேரத்திலேயே தயிர் தயாராகிவிடும். மழை மற்றும் குளிர்காலங்களில் சிறிது கூடுதல் நேரம் எடுக்கும். தண்ணீராக இருக்கும் பாலானது, கெட்டியாக தயிராக உறைந்து போயிருக்கும். அவ்வளவுதான் தயிர் ரெடி. தயிரை எப்பொழுதும் காலையில் உறைய வைத்து மதியம் எடுத்துக் கொள்ளும் போது புளிப்பு தன்மை குறைவாக இருக்கும். உடலுக்கும் மிகவும் நல்லது.
தயிர் கொடுத்தால் சளி பிடிக்கும் என்று குழந்தைகளுக்கு தயிர் கொடுப்பதை தவிர்ப்பார்கள். அவர்களுக்கு நான் முக்கியமாக சொல்லிக் கொள்வது என்னவென்றால் புதியதாக உறைய வைத்த ஃப்ரிட்ஜில் வைக்காத தயிரை நேரடியாக குழந்தைகளுக்கு சிறு கரண்டியை வைத்து ஊட்டலாம்.
பகல் நேரத்தில் கொடுங்கள். கட்டாயமாக கொடுங்கள். ஜீரண சக்தியை மேம்படுத்தும். குழந்தையினுடைய மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்.
சைனஸ் எனப்படும் காது மூக்கு தொண்டை பகுதியில் அலர்ஜி அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே தயிர் ஒத்துக் கொள்ளாது.
அவர்கள் வேண்டுமானால் தவிர்த்துக் கொள்ளலாம் 20 வருடங்களுக்கு முன்னாள் தயிர் வெளியில் இருந்து வாங்குவர், கிராமங்களில் தலையில் மண் சட்டியில் அழகாக தயிர் உடையாமல் லாவகமாக சுமந்து வருவர். மண் சட்டியில் உறைய வைத்த தயிரை தேங்காய் மூடி அகப்பையால் அழகாக எடுத்து ஊற்றுவர். அதிலும் எருமைத்தயிர், பசுந்தயிர் என்று தனித்தனியாக பிரித்து வைத்திருப்பர். குழந்தைகளுக்கு பசுந்தயிரைக் கொடுப்பர்.

ஜெயஸ்ரீ சர்மா
மாடுகள் நிறைய இருக்கும் கிராமப்புறங்களில் இது போன்ற சுத்தமான தயிரை நாம் சுவைக்கலாம். டப்பா தயிர் - இது தொழிற்சாலைகளில் பெரிய அளவில் தயாரிக்கப்படும். ஒரே மாதிரியான பாக்டீரியா கலவைகளை கலந்து தயிர் தயாரிக்கிறார்கள். இவ்வாறு தயாரிக்கப்படும் தயிர் ஒரே மாதிரியான அடர்த்தியுடனும் கெட்டியாகவும் தண்ணீர் குறைவாகவும் புளிப்பு சுவை குறைவாகவும் இருக்கும். இதையே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இது போன்ற ஒரே மாதிரியான தயிரை உண்டாக்குவதற்கு அவர்கள் சில செயற்கைப் பொருட்களையும் சேர்க்க வேண்டி இருக்கும்.
கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயண சேர்க்கை நடைபெறும். ஏற்கனவே ஏகப்பட்ட ரசாயணத்தை அறிந்தும் அறியாமலும் நாம் நம் உடலுக்குள் திணித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தெரிந்த இந்த ரசாயண சேர்க்கையை தவிர்க்கலாம்தானே. இது எதுவுமே சேர்க்காத வீட்டுத்தயிரில் இருக்கும் நன்மைகளை உணர்ந்து வீட்டு தயிரையே பயன்படுத்துங்கள். எங்காவது பயணம் செய்யும்பொழுதும் நேரமில்லாத போதும் மட்டும் டப்பா தயிர் வைத்துக் கொள்ளுங்கள்.
சமையல்:
நம் வீடுகளில் தயிர் குழம்பு அல்லது மோர் குழம்பு என்று செய்வார்கள். அது போலவே சில உணவுப் பொருட்களை மோரில் ஊறவைத்து மேரினேசன் என்று கூறுவதை செய்யும்பொழுது அந்த உணவு மென்மையாகவும் மாறுவதை காணலாம். அதுபோல வெள்ளரிக்காய், வெங்காயம் தக்காளி போன்றவற்றை தயிருடன் சேர்த்து செய்யும் ரைத்தா மிகவும் பிரபலமானது. அதனுடைய சுவை மிகவும் அருமையாக இருக்கும் உடலுக்கும் நல்லது.
அழகுக்காக இரவில் சிறிது தயிரை எடுத்து முகத்தில் நன்றாக பூசிக்கொண்டு ஐந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவலாம். மிகச்சிறந்த தோலுக்கான ஃபேஸ் பேக்காக இருக்கும். இன்னும் ஒரு சில வயதானவர்கள் தயிரை தலையில் தேய்த்து குளிப்பார்கள். தயிரில் உள்ள வெண்ணை தலைமுடிக்கு ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தயிரை தயிராக சாப்பிடமுடியாதவர்கள் மோராக, லஸ்சியாக கூட சாப்பிடுங்கள் முழுப்பலன் இல்லாவிட்டாலும் முக்கால் பலன் கிடைக்கும். இப்படி பிறந்தது முதல் நம் வாழ்க்கையில் பயன்படும் தயிர் நம் அனைவருக்கும் உயிர் என்பதை உணர்ந்து அதை நம் உணவில் வாழ்வில் அங்கமாக்கிக் கொள்வோம்.
வாட்ஸ்அப்: 8925764148
- தெய்வச் சிலைகளும் கலசங்களும் இந்த மந்திர நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு புதிய சக்தி பெறும்.
- கும்பாபிஷேகம் பெரும் பொருட்செலவில் நிகழ்த்தப்படும் ஓர் ஆன்மிக வைபவமாகும்.
கூட்டம் அலைமோதும் கோவில்களில் ஒன்றான திருச்செந்தூர்க் கோவில் உண்மையிலேயே அலைமோதும் கோவில். அது அலைகள் வந்து மோதும் கடலோரத்தில் அமைந்துள்ளது. சுனாமியின் போதும் தாக்கப்படாமல் நிலைநின்ற பெருமை பெருமையுடையது.
பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது இத்திருக்கோவில் ஜூலை ஏழாம் தேதியன்று கும்பாபிஷேகம் காண்கிறது.
கோவிலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தெய்வ சக்தியைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சில சடங்குகளின் மூலம் புதுப்பிப்பது வழக்கம். அந்தச் சடங்குகளின் தொகுப்பே கும்பாபிஷேகம் அல்லது குடமுழுக்கு எனப்படுகிறது.
புனித நீரைக் கலசங்களில் வைத்து மந்திர விற்பன்னர்கள் சுற்றிலும் அமர்ந்து மந்திரங்களை ஜபிப்பர். மந்திர உச்சாடனங்கள் மூலம் கலச நீர் மந்திர சக்தி நிறைந்ததாக மாறும்.
பின்னர் அந்தப் புனித நீர் மூலம் தெய்வச் சிலைகளையும் கோவில் மேல் உள்ள கலசங்களையும் நீராட்டுவர். தெய்வச் சிலைகளும் கலசங்களும் இந்த மந்திர நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு புதிய சக்தி பெறும்.
கும்பாபிஷேக நன்னீரை பக்தர்கள் மேலும் தெளிப்பர். அந்தப் புண்ணிய தீர்த்தம் மேனியில் பட்டால் பல பிறவியில் செய்த பாவங்கள் எல்லாம் அகன்றுவிடும் என்பது நம்பிக்கை.

ஆயிரம் முறை கோவிலுக்குப் போய் வழிபட்டு அடையும் பலனை விட, ஓர் ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டால் கிடைக்கும் பலன் அதிகம் என்று சொல்வதுண்டு.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த கும்பாபிஷேகத் திருவிழாவைக் காண்பதென்பது எளிதில் கிடைக்கும் வாய்ப்பல்ல. புண்ணியசாலிகளுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியமாகும்.
திருச்செந்தூர்க் கோவிலில் நடைபெறும் இந்தக் கும்பாபிஷேகத்தைத் தவறவிட்டால், மறுபடி அதை தரிசிப்பதற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
ஆலயங்களில் நடைபெறும் விசேஷங்களில் கும்பாபிஷேகம் மிக முக்கியமானது. கும்பாபிஷேகத்திற்கென்றே நிகழ்த்த வேண்டிய வேள்விகள் உண்டு. அந்த வேள்விகளை நிகழ்த்துவதில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அதை நிகழ்த்த உரிமையுடையவர்கள்.
வேள்விகளை நிகழ்த்துவதற்காக வேள்விச் சாலைகள் கோயிலில் அமைக்கப்படும். வேள்விச் சாலைகளை எப்படி அமைக்க வேண்டும், அதன் வடிவமைப்பு, அகல நீளங்கள் இவை பற்றியெல்லாம் சட்ட திட்டங்கள் உண்டு. கும்பாபிஷேகம் பெரும் பொருட்செலவில் நிகழ்த்தப்படும் ஓர் ஆன்மிக வைபவமாகும்.
கும்பாபிஷேகம் குறித்த முகூர்த்தத்தில் நிகழ்ந்த பிறகு, நாற்பத்தெட்டு நாட்கள் அதாவது ஒரு மண்டலம், மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும்.
பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகத்தன்று நேரில் சென்று தரிசிக்க இயலாதவர்கள் மண்டலாபிஷேகம் நிறைவடைவதற்குள் சென்று கோயிலை தரிசித்தாலும், கும்பாபிஷேகத்தன்று தரிசித்த அதே பலன் உண்டு.
திருச்செந்தூர் முருகன் ஆலயம், முருகனின் ஆறு படைவீடுகளில் இரண்டாம் படைவீடு.
`தேவர் படைத்தலைமைப் பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல்கிழித்து
கோவில்கொண்டே அமர்ந்த ஒருவீடு கடல்
கொஞ்சும் செந்தூரிலுள்ள படைவீடு'
என இக்கோவிலைப் போற்றுகிறார் கவியரசர் கண்ணதாசன். திருச்செந்தூர் முன்னர் திருச்சீரலைவாய் என அழைக்கப்பட்டது.

திருப்பூர் கிருஷ்ணன்
சூரபத்மனை வதம்செய்ய வேண்டிப் படைகளுடன் சென்ற முருகன், திருச்செந்தூரில்தான் தங்கினான். இங்கிருந்துதான் தன் படைத்தளபதி வீரபாகுவை சூரபத்மனிடம் தூதனுப்பினான். அவன் சமாதானத்திற்கு உடன்படாததால் படைகளுடன் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று சூரனை வதம் செய்தான்.
உண்மையில் சூரபத்மன் வதம் என்பது அவனை முற்றிலும் அழித்துச் செய்த வதம் அல்ல. பிற தெய்வங்கள் அசுரர்களை முழுவதுமாக அழித்த புராணங்கள் பல உண்டு.
ஆனால் முருகனோ சூரபத்மனை அழிக்காமல் அவன் பகைமை உணர்வை மட்டுமே அழித்து அவன் உருவத்தை மாற்றினான்.
மரமாக நின்ற சூரபத்மனைத் தன் வேலால் இருகூறாக்கினான். மரத்தின் ஒரு பகுதி மயிலாக மாற அதைத் தன் வாகனமாகக் கொண்டான். இன்னொரு பகுதி சேவலாக மாற அதைத் தன் கொடியாகக் கொண்டான்.
முருகன் பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கடவுள். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே முருகனைப் பற்றிய குறிப்பு உண்டு. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதிய பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகக் கடவுளைத்தான் போற்றுகிறார்.
பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப் படை முற்றிலும் முருகனைப் போற்றியே எழுதப்பட்ட நூல்.
இடைக்கால நூல் ஒன்றும் முருகன் புகழ் பாடுகின்றது. `திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்` என்ற அந்நூலை இயற்றியவர் பகழிக் கூத்தர். பகழிக் கூத்தர் முருகக் கடவுளைக் குழந்தையாக்கி, தாலாட்டுப் பாடி முத்தம் தருமாறு வேண்டி, நிலவைக் காட்டிச் சோறூட்டி என இன்னும் பல வகைகளில் பக்திப் பரவசத்துடன் பாடுகிறார். திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றில் முத்திரை பதிக்கிறது.
பகழிக் கூத்தர் பிறப்பால் வைணவர் என்றும் ஆனால் பெரும் முருக பக்தராக விளங்கினார் என்றும் கூறுவர்.
கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்ட இவர், வயிற்றுவலி திருச்செந்தூர் முருகன் அருளால் நீங்கினால் முருகனைப் பற்றிப் பிள்ளைத் தமிழ் பாடுவதாக வேண்டிக் கொண்டார். அவ்வண்ணமே வயிற்றுவலி நீங்கியதும் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் இயற்றினார்.
பிள்ளைத் தமிழ் இலக்கிய வரிசையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் போல, பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழும் பெரும் புகழ்பெற்றது.
திருச்செந்தூர்க் கோவிலில் புலவர்கள் முன்னிலையில் இந்தப் பிள்ளைத் தமிழ்நூல் அரங்கேற்றப்பட்டது. நூற்றிமூன்று பாடல்கள் நிறைந்த இந்நூல் சொற்சுவை பொருட்சுவை இரண்டும் நிறைந்தது.
எனினும் பொறாமைக் காழ்ப்பின் காரணமாகப் பிற புலவர்கள் இந்நூலை உரிய வகையில் அங்கீகரிக்கவில்லை. அதையறிந்த முருகன் தன் கழுத்தில் இருந்த மாணிக்க மாலையை பகழிக்கூத்தர் உறங்கும்போது அவர் மார்பில் அணிவித்து மறைந்தான்.
மறுநாள் பகழிக்கூத்தர் கழுத்திலிருந்த மாணிக்க மாலை பற்றிக் கேள்வி எழுந்தபோது நான் அளித்த பரிசே அது என முருகன் அசரீரிக் குரல் எழுப்பினான். வியந்த மற்ற புலவர்கள் அதன்பின் பகழிக் கூத்தரின் பெருமையுணர்ந்து அவரைப் பல்லக்கில் சுமந்து சென்று மரியாதை செய்தனர்.
வென்றிமாலைக் கவிராயர் என்ற புலவர் திருச்செந்தூர்த் தலபுராணத்தைச் செய்யுள் நூலாக எழுதியுள்ளார். ராமாயண காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைத் திருச்செந்தூர் முருகனோடு இணைத்து அந்நூல் பேசுகிறது.
ராமனும் சீதையும் இலக்குவனும் குகனைப் பிரிந்து கானக வாழ்வு வாழச் சென்றார்கள். பெரும் மன வேதனை அடைந்த குகன் உண்ணாமலும் உறங்காமலும் உடல் நலிந்தான்.
தனது வேட்டுவக் குலத்தைச் சேர்ந்த குகன் அவ்விதம் வருந்துவதைக் கந்தலோகத்தில் இருந்த வள்ளி அறிந்து வருந்தினாள்.
வள்ளி சீதையாகவும் தெய்வானை இலக்குவனாகவும் முருகன் ராமனாகவும் மாறுவேடம் தரித்து மயில்மேல் கானகம் வந்தார்கள். பின் குகனைச் சந்தித்தாள் சீதையாக வேடம் புனைந்த வள்ளி.
குகன் சரிவர உடல்நலத்தைப் பராமரிக்க வேண்டும் என்றும் பதினான்கு ஆண்டுகள் கழித்து ராமபிரான் பட்டாபிஷேகம் செய்துகொண்டு மன்னனாகும்போது குகன் உடல்வலிமை மிக்க தளபதியாக ராமனுக்குத் துணை நிற்க வேண்டும் என்றும் வள்ளிச்சீதை குகனிடம் கட்டளையிட அவன் அதை ஏற்றுக் கொண்டான்.
அதன்பின் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோர் மீண்டும் கந்தலோகம் சென்று தங்களின் சுயவடிவை அடைந்தார்கள் என்று கூறுகிறார் வென்றிமாலைக் கவிராயர்.
ஆதிசங்கரர் திருச்செந்தூர் முருகனை வழிபட வந்தார். அங்குதான் முருகன் சன்னிதியில் அவர் `சுப்ரமண்ய புஜங்கம்` என்ற சம்ஸ்க்ருத சுலோகத்தை அருளினார்.
அவர் முருகனை தரிசித்த நேரத்தில் கர்ப்பகிரகத்திலிருந்து ஒரு பாம்பு வெளிப்பட்டு வளைந்து வளைந்து சென்று வெளியேறியது.
அந்தக் காட்சியைக் கண்ட சங்கரர் அதையே முருகன் கட்டளையாக ஏற்று பாம்பு வளைந்து வளைந்து போவதுபோன்ற சந்தத்தில் `ஸதாபால ரூபாபி` என்று தொடங்கும் சுலோகத்தை இயற்றினார் என்று சொல்லப்படுகிறது.
திருச்செந்தூரில் முருகன் சன்னிதிக்கு எதிரேயுள்ள தூண்களில் ஒரு தூணில் ஆதிசங்கரர் உருவம் செதுக்கப் பட்டுள்ளது.
பாலன் தேவராயன் அருளிய கந்த சஷ்டி கவசம் திருச்செந்தூர் முருகனைப் போற்றித்தான் எழுதப்பட்டது என்றொரு கருத்து உண்டு. திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் கந்தசஷ்டி கவசம் முழுவதும் சுவரில் எழுதி வைக்கப் பட்டுள்ளது. அடியவர்கள் அதைப் படித்தவாறே ஆலயத்தை வலம் வரலாம்.
முருகனின் கையில் உள்ள ஆயுதம் வேல். மற்ற கடவுளரின் திருக்கரங்களில் உள்ள சூலம், சங்கு, சக்கரம் போன்ற ஆயுதங்கள் கடவுளரின் நாமங்களோடு அல்லாமல் தனித்த முறையில் பெயர்களாக அமைவதில்லை.
ஆனால் முருகன் கரத்திலுள்ள வேல், அப்படியே நம்மில் பலருக்குப் பெயராக அமைவது இந்த வேலின் தனிச் சிறப்பு.
வேலாயுதம், சக்திவேல், கந்தவேல், வடிவேல், ஞானவேல், தங்கவேல் என்றெல்லாம் நம் குழந்தைகளுக்குப் பெயர்சூட்டி மகிழ்கிறோம் நாம். பகைவனையும் கொல்லாது மயிலாகவும் சேவலாகவும் ஆக்கிய வேலாயுதத்தின் மேல் முருகன் அடியவர்கள் மிகுந்த பக்தி செலுத்துகிறார்கள்.
பழந்தமிழ் இலக்கியங்களிலேயே புகழப்படுவதும் மிகப் பழைமை வாய்ந்ததும் நக்கீரர், ஆதிசங்கரர் போன்றோரால் போற்றப் படுவதுமான திருச்செந்தூர்த் திருக்கோயில் கும்பாபிஷேகம் என்பது ஆன்மிக அடியவர்கள் தவறவிடக் கூடாத மாபெரும் விழாவாகும்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- கோதுமையை ஊறவைத்து அரைத்துப் பாலெடுத்து அப்படியே சாப்பிடலாம்.
- நாம் உண்ணும் உணவை முறையாகச் செரித்தால் ரத்தத்தில் ஏறும் சர்க்கரை சட்டென்று ஏறாது.
இத்தொடரின் ஆரம்பப் பகுதியில் சொன்னது போல அமெரிக்காவில் இருந்து தான் தமிழகத்திற்குக் கோதுமை அறிமுகமானது. ஒன்றிரண்டாக உடைத்த புழுங்கல் கோதுமையைச் சோறாகவே சமைத்துப் பள்ளி மாணவர்களுக்குப் போடுவார்கள். புழுங்கல் கோதுமை செரிக்கச் சற்றுக் கடினம். ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இன்றைப் போல உணவு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அதனால் கிடைக்கிற உணவு எதை உண்டாலும் செரித்து விடும். அன்றைக்கு உணவுப் பற்றாக்குறை இருந்தாலும் கிடைக்கிறவை அனைத்துமே சத்துக்கள் மிகுந்ததாக இருந்தன. இன்றோ உணவென்று எது கிடைத்தாலும் உடலுக்கு இழைக்கும் கேடு, குறைந்ததாக இருக்குமா என்றே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.
அந்தளவிற்கு நம்முடைய நிலம் இரசாயனங்களால் கேடுவிளைவிக்கப்பட்டுள்ளது. பயிரை விளைவிக்கவும், விளைச்சலை பெருக்கவும் நிலத்தில் கொட்டும் உரம் போதாதென்று களைக் கொல்லி, பூச்சிக்கொல்லி என மீண்டும் மீண்டும் இரசாயனத்தெளிப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுபோக சமைக்கத் தயார்நிலைக்குப் பொட்டலமிடும் உணவு ஆலைகள் உணவுப் பொருட்கள் கெட்டு விடக்கூடாதென்பதற்காக பூச்சிப் பிடித்து விடக்கூடாதென்பதற்காக சேர்க்கும் ரசாயனப் பொடிகள் ஒருபுறம். உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கும் குடோன்களில் எலி, பூச்சித் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க வீர்யமிக்க இரசாயன உருண்டைகளை சேமிப்பிடங்களில் வைக்கிறார்கள். இவையும் உணவுத் தானியத்தின் இயல்பான சத்துகளைக் கெடுத்து விடுவதோடு நச்சாகவும் மாற்றி விடும். எனவே முடிந்தளவு முழுத்தானியங்களை அரைத்து ஒன்றிரண்டு நீரில் அலசிக் காயவைத்து நாம் சமைப்பதற்கேற்ற வகையில் உடைத்தோ அரைத்தோ வைத்துக்கொண்டு சமைப்பதே நல்லது.

கோதுமையை ஊறவைத்து அரைத்துப் பாலெடுத்து அப்படியே சாப்பிடலாம். அதையே காய்ச்சினால் கெட்டியாக அல்வா போலத் திரளும். இதனை அப்படியே களிக்கு தொட்டுக் கொள்வதைப் போல கருப்பட்டித் தொட்டு சாப்பிடலாம். கைகால் இணைப்பு மூட்டுக்களில் வறட்சி நிலவுமானால் இந்தக் களி உடனடிப் பலன் கொடுக்கும். சிலருக்கு கால் மடக்கி உட்கார்ந்து எழுந்தாலே சடக்கென்று சத்தம் வரும். நடக்கும்போது மூட்டுக்கள் பலமின்றி துவளும். அப்படிப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கோதுமைப்பால் களி நல்ல பலத்தைக் கொடுக்கும்.
காய்ச்சல் கண்டவர்கள் ஒருவாரம் பத்துநாட்கள் படுத்து எழுந்தால் உடல் முழுதும் வற்றி பலவீனமாகக் காணப்படுவார்கள். சளிக்காய்ச்சலுக்கு எடுக்கும் மருந்துகள் கூட அதீத வெப்பத்தை உடலில் உருவாக்கி சதையை உருக்கி விட்டிருக்கும். அவர்களுக்கும் இந்த கோதுமைப்பால் களி இழந்த சதையை மீட்டு உடலை மினுமினுப்பாக்கும்.
இன்றளவும் கிராமப்புறங்களில் பிள்ளைப் பேறு முடிந்தவுடன் இளந்தாய்மார்களுக்கு இழந்த ஆற்றலை மீட்க வெந்தயக்களி கொடுப்பதுண்டு. அதற்குக் காரணம் உடலின் நீரிழப்பையும், சத்திழப்பையும் உடனே ஈடுசெய்வதற்காகும். அதுதரும் பலனையே கோதுமைப் பால் களியும் கொடுக்கும். உடலில் சத்து பற்றாத குழந்தைக்கும் கோதுமைப் பால்களி கொடுக்கலாம்.

கோதுமையை ஊறவைத்து முளைகட்டும் பக்குவத்தில் மண்ணில் தூவி மூடி விட்டால் சுமார் பத்துநாட்களில் இரண்டு மூன்று அங்குலத்தில் கோதுமைப் புல் வளரும். இதனை அறுத்து அருகம் புல் சாற்றுக்கு அரைப்பது போல அரைத்து வடிகட்டிக் குடித்தால் உடலின் உயிர்ச்சத்துக்கள் அதிகரிக்கும். கல்லீரல் பலம் குன்றிய நிலையில் கோதுமைப்புல் சாறு அருந்துவது அதனை மீட்டெடுக்க பேருதவியாக இருக்கும். கல்லீரல் நாம் உண்ணும் உணவு, மருந்து ஆகியவற்றில் உள்ள நச்சுக்களை உள்ளீர்த்து வைத்து பின்னர் நீக்கும் தன்மை உடைய உறுப்பாகும். இந்தக் கல்லீரலுக்கு கோதுமைப்புல் சாறு, அருகம் புல்ச்சாற்றினைப் போலவே நல்ல பலனைக் கொடுக்கும். கண்ணில் உள்ள பார்வை நரம்பில் போதியளவிற்கு ரத்தவோட்டம் இல்லாத போதும் கோதுமைப்புல் சாறு நல்ல பலன் தரும்.
கோதுமையை விதைத்துப் புல்லாக்கி அரைத்து சாறெடுக்க சாத்தியப்படாதவர்கள், மேலே சொன்னபடி கோதுமையை முளைக்கட்டி பாலெடுத்து அரைத்து வடித்துப் பயன்படுத்தலாம். அது கோதுமைப்புல் சாற்றின் பலனில் பாதியளவிற்கேனும் கொடுக்கும். ஆனால் உடலின் நச்சுத் தன்மையை நீக்குவதில் கோதுமைப்புல் சாறு தரும் பலன் அலாதியானது. புழுங்கல் கோதுமையை உடைத்து பாக்கெட்டாக விற்கிறார்கள். அதனை அப்படியே சோறாக சமைக்கலாம். நாம் அரிசிச்சோற்றை கொஞ்சம் பிசைந்து சின்ன உருண்டையாக்கி விழுங்கினால் மெள்ளாமல் அப்படியே விழுங்கி விடலாம். காரணம் வயிற்றினால் அதனைக் கூழாக்க முடியும். ஆகவே உடலறிவு அதனை தொண்டையினுள் செல்ல அனுமதிக்கிறது. ஆனால் கோதுமையை அப்படி உருண்டையாக்கி உள்ளே தள்ள முடியாது. தொண்டையில் சிக்கும். ஏனென்றால் புழுங்கல் கோதுமையை வயிற்றால் கூழாக்க முடியாது. எனவே கோதுமைச்சோற்றினை நாம் நன்றாக மென்ற பின்பே விழுங்க முடியும். அவ்வாறு மெள்ளும் பொழுது வாயில் சுரந்து உடன் சேரும் உமிழ்நீர் கோதுமைச்சோற்றை கூழாக்குவதோடு வயிற்றில் செரிப்பதற்குரிய நொதிகளையும் சேர்த்தே வழங்குகிறது. ஆகவே உடலால் கோதுமையின் சத்துக்களை எளிதில் உள்ளீர்க்க முடியும்.
நாம் உண்ணும் உணவை முறையாகச் செரித்தால் ரத்தத்தில் ஏறும் சர்க்கரை சட்டென்று ஏறாது. நிதானமாகவே ஏறும். உண்ணும் உணவில் உள்ள எரிசக்தி ரத்தத்தில் உடனடியாக ஏற்றப்படுவதும், அது வேறுவடிவத்திற்கு மாற்றப்படாமல் உடலினுள் கழிவாகச் சுற்றிக் கொண்டிருப்பதும் தான் உடலுபாதைகளுக்குக் காரணம். புழுங்கல் கோதுமையில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் அதிலுள்ள எரிசத்து (கார்போஹைடிரேட்) கொஞ்சங் கொஞ்சமாகவே வடிக்கப்படும். எனவே உடலில் சத்துக்கள் முறையாகச் சேமிக்கப்படும். இளவயதில் வளர்ச்சியின் பொருட்டு உள்ளுறுப்புகள் மிகவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும். வளர்ச்சி முழுமை பெற்ற நடுத்தர வயதை அடைகிற பொழுது சதை வளர்ச்சிக்கு உரிய சத்துக்கள் தேவையில்லை. எனவே உணவின் அளவை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பொதுவாக இளவயதில் உண்ட பழக்கத்தின் அளவிற்கே உண்ண விரும்புகிறோம். அதுதான் நோய்கள் உடலில் தோன்றக் காரணம் ஆகி விடுகிறது.
சத்துள்ள உணவுகளைக் குறைவாக உண்டால் நோய்கள் உருவாவதில்லை. நிறைய உணவு உண்ண விரும்புவோர் நல்ல உடலுழைப்பு செய்து சத்துக்களை எரித்து மீண்டும் உண்பதில் தவறேதும் இல்லை. ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் உழைப்பதற்கான வாய்ப்பே குறைவு. அத்துடன் உணவுவகைகள் மலிந்து விதவிதமாகக் கண்ணைப் பறிக்கின்றன. நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி இருப்பதால் அத்தனை வகையான உணவுகளையும் சுவைத்துப்பார்த்து விடவேண்டும் என்ற எண்ணம் பரவலாகி இருக்கிறது. நாம் எரிக்கும் அளவை மிஞ்சி, உண்கிற போக்கு நிலவுகிறது. சத்தான உணவுகளைத் தேர்ந்து உண்ணும் பழக்கம் இருந்தால் கண்டதையும் சுவைத்துப் பார்க்கும் எண்ணம் தோன்றாது.

கோதுமையை மேலே சொன்னவாறு சோறாகப் பொங்கி சாப்பிடுவது, நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கு மிகவும் நல்லது. கோதுமை ரவையை உப்புமாவாகச் சமைத்து உண்பதுபோல காரத்தாளிப்பு போடாமல் அப்படியே நாட்டுச்சக்கரை போட்டு இனிப்பாகச் சமைத்துச் சுவைக்கலாம். மைதாமாவில், கடலைமாவில் இனிப்பு தயாரிக்கிற பொழுது அது இறுகல் தன்மையை அடைந்து விடக்கூடாது என்பதற்காக அதனோடு நிறைய நெய் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வெள்ளைச் சர்க்கரைப் பாகும் இனிப்புப் பண்டத்தை இறுகலாக்கும். அதுவும் நெய் அல்லது எண்ணையைக் கூடுதலாகச் சேர்க்க நேரிடுகிறது. அதுவே கோதுமை ரவையில் இனிப்பு தயாரிக்கிற பொழுது எண்ணையோ, நெய்யோ அதிகமாகச் சேர்க்கத் தேவையில்லை. கோதுமை ரவையில் செய்யும் இனிப்பு ஓரிரு நாட்களுக்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாது. மற்றபடி அது இனிப்பு சாப்பிடும் வேட்கையை நன்றாகத் தணிக்கும். குழந்தைகளாக கோதுமை ரவையில் தயாரிக்கும் இனிப்பைச் சாப்பிட்டுப் பழகி விட்டால் பிசுபிசுப்பான மாவுப் பண்டங்களை அவ்வளவாக விரும்பமாட்டார்கள்.
இன்றைய மாவுப் பலகார இனிப்பு வகைகள் உடலில் சதைப்பெருக்கத்தை அதிகளவில் பெருகச் செய்வதோடு பல்லையும் விரைவில் பதம் பார்த்து விடுகிறது. பண்டத்தில் மூன்று மடங்கு ஐந்து மடங்கில் சேர்க்கப்படும் சர்க்கரையும், அதன் பிசுபிசுப்புத் தன்மையும் நிறமிகளும் வயிற்றின் செரிமானப் பகுதிகளில் ஒட்டி மலச்சிக்கலை ஏற்படுத்துவதுடன் பற்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

போப்பு, 96293 45938
குழந்தைகளுக்கு இனிப்புத் தேவைதான். ஆனால் அவர்கள் சுவைக்கும் இனிப்புகள் வயிற்றிலும் செரிமான மண்டலத்திலும் ஒட்டாத வகையில் வாயில் மென்று சுவைக்கும் வகையில் ரவைப் பதத்தில் இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் தான் பற்களோடு ஒட்டுமொத்தமான உடலாரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.
கோதுமையில் சமைக்கும் மாறுபட்ட உடலுக்கு நன்மை செய்யும் சுவையான உணவுகள் குறித்து மேலும் சில பார்க்கலாம்.
- கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை கண்டறிவதற்கு பலவிதமான பரிசோதனை முறைகள் உள்ளன.
- கடந்த 30 வருட காலத்தை எடுத்துக்கொண்டால், ஆரம்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்கிற ஒரே ஒரு பரிசோதனை முறை இருந்தது.
குழந்தைபேறு சிகிச்சையில் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அவரது கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தான், எல்லா தம்பதியினரும் முதலில் தெரிந்து கொள்வதற்கான ஆர்வமான விஷயமாக இருக்கும். அவர்களது குடும்பத்தினரும் அதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட ஒவ்வொரு பரிசோதனைகளையும் மருத்துவர்கள் செய்யும் போது, டாக்டர் குழந்தை நன்றாக இருக்கிறதா, ஆரோக்கியமாக இருக்கிறதா என்று எல்லா தம்பதிகளுமே கேட்பது வழக்கமான விஷயமாக நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆரோக்கியமான குழந்தை பெற விரும்பும் பெண்கள்:
கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உருவ அமைப்புகளில் நன்றாக இருக்க வேண்டும், மரபணு சார்ந்த குறைபாடுகள் எதுவும் இருக்கக்கூடாது, குரோமோசோம் குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற வகையில், எல்லா வழிகளிலும் ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்வதைத்தான் எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள்.
கருவில் இருக்கும் குறைபாடுகளை நாம் கண்டுபிடிக்க முடியுமா? இதை கண்டுபிடித்தால் நிறைய நேரங்களில் தேவையில்லாத, குறைபாடுகள் கொண்ட குழந்தை பிறப்பை தவிர்க்க முடியுமே என்பது தான் பலரது கேள்வியாக இருக்கும். அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய நவீன மருத்துவத்தில் பரிசோதனை முறைகள் உள்ளன.

டாக்டர் ஜெயராணி காமராஜ்
குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்
செல்: 72999 74701
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் ப்ரீநேட்டல் டெஸ்ட் எனப்படும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பது பெண்களின் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை கண்டறிவதற்கான வழிமுறைகளை கொடுத்து இருக்கிறது. மகப்பேறுக்கு முந்தைய இந்த பரிசோதனையானது கர்ப்பகாலத்தின் போது தாயின் ஆரோக்கியத்தையும், கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் அறிந்து கொள்வதற்காக செய்யப்படுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த பரிசோதனை மூலம் குழந்தைக்கு மரபணு ரீதியான குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பாதிப்புகள் இருந்தாலோ அதை எளிதில் கண்டறிய முடியும். மேலும் அதை ஆரம்பத்திலேயே சரி செய்யவும் முடியும்.
குறைபாடு உள்ள குழந்தை பிறப்பு அரிது:
கடந்த 30 வருடங்களாக நான் குழந்தையின்மைக்கான சிகிச்சைகளை அளித்துக்கொண்டு இருக்கிறேன். ஏராளமான விஷயங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு குறைபாடு உள்ள குழந்தை பிறப்பு என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. அதாவது எனக்கு தெரிந்து கடந்த 15 வருடங்களாக பிரசவத்தின் போது குழந்தைகளுக்கு பெரிய அளவிலான குறைபாடுகள் வருவது இல்லை.
இன்னும் சொல்லப்போனால் இப்போதைய காலகட்டத்தில் குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்கு ஏதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்று முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பதால் தான் இந்த வகையிலாக சாதனையை நிகழ்த்த முடிகிறது.
கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை கண்டறிவதற்கு பலவிதமான பரிசோதனை முறைகள் உள்ளன. கடந்த 30 வருட காலத்தை எடுத்துக்கொண்டால், ஆரம்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்கிற ஒரே ஒரு பரிசோதனை முறை இருந்தது.
ஆனால் இன்றைக்கு நவீன வளர்ச்சி காரணமாக, பலவிதமான பரிசோதனைகள் மூலமாக, கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிய முடியும். இதில் பரிசோதனை முறைகளில் ஏராளமான முன்னேற்றங்களும் வந்துள்ளது.
பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்:
30 வருடங்களுக்கு முன்பு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிய மார்க்கர்ஸ் எனப்படும் சில அறிகுறிகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். அந்த அறிகுறிகளை பார்த்து இது பாதிக்கப்பட்ட குழந்தை என்பதை உறுதி செய்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மார்க்கர்ஸ் என்பது மிகவும் இயல்பானது.
நான் சிகிச்சையளிக்க தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில், 8 வருடம் குழந்தை இல்லை என்று ஒரு தம்பதி என்னிடம் சிகிச்சைக்காக வந்தனர். அவர்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது. மறுபடியும் இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் போது, அந்த குழந்தைக்கு அல்ட்ரா சவுண்ட் செய்து பார்த்தபோது, இருதயத்தில் ஒரு எக்கோஜெனிக் போக்கஸ் இருந்தது.
இந்த எக்கோஜெனிக் போக்கஸ் இருந்தால் குழந்தைக்கு இருதயத்தில் ஏதாவது குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த குழந்தையின் இருதயத்தில் ஏதாவது குறைபாடு இருக்குமோ என்று பயந்து 14 வாரத்தில் அந்த கருவை வேண்டாம் என்று கருக்கலைப்பு செய்தனர். இது கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன்பு நடந்தது.
ஏனென்றால் அந்த குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு வரலாம். இதயத்துடிப்பை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்.
அதனால் அந்த குழந்தைக்கு இதயத்துடிப்புகளில் மாறுபாடு ஏற்பட்டு உயிர்வாழ முடியாத நிலை வரலாம் என்று கருதி கருக்கலைப்பு செய்யப்பட்டது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதுபோன்று நிறைய குழந்தைகளுக்கு இருக்கும் பாதிப்புகளை கண்டுபிடித்து, அதனை, தொடர்ந்து கண்காணித்து, நன்றாக சிகிச்சை அளிக்கும் போது, இது பயப்படுவதற்கான பெரிய விஷயம் இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதனை கண்டுபிடிப்பதற்கும் அடுத்தடுத்த சில நவீன முறைகள் இருக்கிறது.
ஏனென்றால் இந்த மாதிரி மார்க்கர்ஸ் இருந்தால், ஏதாவது மரபணு சார்ந்த குறைபாடுகள் இருக்கலாமா என்பது போன்று நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய தரவுகள் மற்றும் நிறைய ஆதாரங்களை கண்டுபிடித்ததில், பல பிரச்சனைகள் முந்தைய காலத்தில் குறை என்று நினைத்த நிலையில், இன்றைய காலத்தில் அதனுடன் வாழலாம், அதற்கு தீர்வு இருக்கிறது என்ற நிலை உருவாகி உள்ளது.
பரிசோதனையை எப்போது தொடங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்:
இதுதவிர குழந்தை வயிற்றில் இருக்கும் போதே சில சிகிச்சை முறைகளையும் செய்ய முடியும். உதாரணத்துக்கு சின்னச்சின்ன அறுவை சிகிச்சைகளை செய்யலாம். ரத்த மாற்றுகள் செய்யலாம். பல நேரங்களில் பல அறுவை சிகிச்சைகளையே செய்யலாம். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாமே தற்போதைய மருத்துவ வசதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்கிற அளவுக்கு பலவித முன்னேற்றங்கள் அடைந்துள்ளது.
அந்த வகையில் ஒரு பெண் கருவுற்றால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு என்னென்ன பரிசோதனை முறைகளை செய்ய வேண்டும், என்னென்ன பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஒரு கருவில் குழந்தை இயல்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான பரிசோதனையை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
மேலும் கருத்தரிப்பதற்கு முன்பே அவர்களின் உடலில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என்பதை பார்த்து, அதனால் குழந்தைகளுக்கு ஏதாவது குறைபாடுகள் உண்டாகுமோ என்பதையும் கண்டுபிடிப்பது ரொம்பவும் முக்கியம்.
உதாரணத்துக்கு ஒரு பெண்ணுக்கு ஒரு சில பால்வினை நோய்கள் இருக்கிறது என்றால், அந்த குழந்தையும் பாதிக்கப்பட்ட குழந்தையாக இருக்கும். எனவே கருத்தரிப்பதற்கு முன்பே பல பரிசோதனைகள் செய்யும் போது, குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதனை சரிசெய்த பிறகுதான் அந்த பெண் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் முதலில் கருத்தரிக்கும் பெண்ணுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? கர்ப்பகாலத்தின் போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிய என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
- புதன் சூரியனை விட்டு ஒரு ராசிக்கு மேல் விலகிச் செல்லாது.
- குரு பகவான் வருடத்திற்கு 4 முதல் 5 மாதங்கள் வரையில் வக்ரகதியில் சஞ்சரிப்பார்.
விண்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களும் சூரியனின் கதிர்வீச்சை பெற்றே இயங்குகிறது. சூரியனின் கதிர்வீச்சில் இருந்து கிரகங்கள் விடுபடும் போது அதன் சுழற்சி வேகம் குறைந்து வக்கிர கதியை அடைகின்றன. இதை மேலும் விளக்கமாக கூறுவதென்றால் சூரியன் உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மனிதர்கள் அன்றாட பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுகிறார்கள். சூரியன் மறைந்தவுடன் (அதாவது சூரிய ஒளி மறைந்தவுடன்) உடல் அலுப்பு அதிகமாகி ஒய்வு எடுக்கிறார்கள்.
அதே போல் கிரகங்களுக்கு சூரியனின் பரிபூரண ஒளிக்கதிர் கிடைக்காத போது கிரகங்கள் வக்ரகதியில் இருக்கும். கிரகங்களின் சுழல் வேகங்கள் நிலையானவை. பூமிக்கும் கிரகங்களுக்கு இடையிலான தூர வித்தியாசங்களால் ஒரு கிரகம் பின்னோக்கி செல்வது போல மாயத்தோற்றம் ஏற்படும். சூரியன், சந்திரனை தவிர அனைத்து கிரகங்களுக்கும் அதாவது செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கும் வக்ரகதி உண்டு.
ராகு, கேதுக்கள் இயற்கை வக்ர கிரகங்கள். குரு, சனி ஆகிய கிரகங்கள் சூரியன் நிற்கும் ராசியில் இருந்து 5,6,7,8,9 ஆகிய ராசிகளில் நிற்கும் போது வக்ர கதியை அடைகின்றன. செவ்வாய் சூரியன் நின்ற ராசியில் இருந்து 6,7, 8-வது ராசியில் நிற்கும் போது வக்ரம் அடையும். சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூன்றும் முக்கூட்டு கிரகம் என்பதால் சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்/பின் ராசியில் 90 டிகிரிக்குள்ளாகவே இருக்கும் என்பதால் பஞ்சாங்கத்தின் உதவியின்றி சுக்கிரன், புதனின் வக்ர கதியை பஞ்சாங்கத்தின் உதவியுடனே அறிய முடியும்.
கிரகங்களின் வக்ர காலம்
புதன் சூரியனை விட்டு ஒரு ராசிக்கு மேல் விலகிச் செல்லாது. புதன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 24 நாட்கள் வக்ரகதியில் இருக்கும்.
சுக்கிரன் 18 மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 50 நாட்கள் வரை வக்ரகதியில் சஞ்சரிக்கும்.
செவ்வாய் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சுமார் இரண்டு மாதம் முதல் 6 மாதம் வரை வக்கிரகதியில் சஞ்சரிக்கும். ஸ்தம்பனகதி என்னும் நிலையில் ஒரே ராசியில் ஆறு மாத காலம் கூட இருப்பார்.
குரு பகவான் வருடத்திற்கு 4 முதல் 5 மாதங்கள் வரையில் வக்ரகதியில் சஞ்சரிப்பார்.
சனி பகவான் வருடத்திற்கு 4 மாதம் முதல் 5 மாதங்கள் வரை வக்ரகதியில் பயணிப்பார்.

ஐ.ஆனந்தி
கிரகங்களின் வக்ர பலன்கள்
1. வக்ர கிரகம் மாறுதலான பலனைத்தரும்.
2. வக்ர கிரகம் உக்ரமான பலனைத் தரும்.
3. வக்ர கிரகம் அதிக வலிமை பெறும்
4. வக்ர கிரகம் தன் முடிவை மாற்றாது.
5. வக்ர கிரகம் அதிகம் உள்ளவர்கள் விதிக்கு கட்டுப்பட்டு வாழ மாட்டார்கள்.
6. வக்ர கிரகம் அதிகம் உள்ளவர்கள் விதியை தன் விருப்ப படி மாற்ற விரும்புவார்கள்.
7. வக்ர கிரகங்களின் கொள்கை ஜாதகரையும் பாதிக்கும் ஜாதகரை சார்ந்தவர்களையும் பாதிக்கும். ஆனால் அதைப் பற்றி வக்கிர கிரகம் கவலைப்படாது. ஒரு முறை ஒரு விஷயத்தை முடிவு செய்தால் தன் பேச்சை தானே கேட்காது.
வக்ர கிரகம் எல்லா காலத்திலும் பிரச்சினையை தராது. தசா புத்தி காலத்தில் மட்டுமே கடுமையான பாதிப்பை தரும் என்பதால் வக்கிர கிரக தசாபுத்தி அந்தர காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். கிரகங்கள் தன் கடமையை செய்யும் யாரையும் விட்டு வைப்பதில்லை. வக்ரம் எனப்படுவதற்கு மாறுதலான இயக்கம் என்று பொருள். வக்ர கிரகங்கள் எதிர்மறையாகப் பலன் தரும். ராகு/கேதுக்களுக்கு இணையாக மாறுபட்ட பலன்களைத் தரும். சுப பலன் தரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
உச்ச கிரகம் வக்ரம் பெற்றால் நீச்ச பலனைத் தரும். நீச்ச கிரகம் வக்ரம் பெற்றால் உச்ச பலனைத் தரும். வக்ரகதியில் உள்ள கிரகம் சுப கோள்களின் சாரம் பெற்றால் கொடுக்க. வேண்டிய பலனை சற்றுத் தாமதமாகக் கொடுக்கும். 6,8,12-ம் அதிபதிகள் வக்கிரம் பெறும் போதும் பாதகாதிபதிகள் வக்கிரம் பெறும் போதும் சில யோகங்களை தருவார்கள். சுப கிரகங்கள் வக்ரம் பெற்றால் மனதால் ஏற்றுக் கொள்ள முடியாத சுப பலனை கொடுக்கும்.
அசுப கிரகங்கள் வக்ரம் பெற்றால் இரட்டிப்பு அசுப பலனையும் தருவார்கள். இது போன்று வக்கிர கிரகங்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. என் அனுபவத்தில் வக்ர கிரகங்களின் தசா புத்தி அந்தர காலங்களில் ராகு/கேதுக்களுக்கு இணையாக ஜாதகருக்கு சில, பல அசவுகரியங்களை வழங்குகிறது.
தற்போது கோட்சாரத்தில் மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் 13.7.2025 அன்று முதல் 27.11.2025 வரை வக்ர கதியில் செல்லப் போகிறார்.
அதில் 13.7.2025 முதல் 3-10-2025 வரை தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் 4.10.2025 முதல் 27.11.2025 வரை பூரட்டாதி நட்சத்திரத்திலும் வக்ர கதியில் பயணிக்கிறார். சனிபகவான் தனது சுய நட்சத்திர சாரத்தில் வக்கிரமடையும் காலத்தில் நாட்டில் தொழில் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். புதிய தொழில் வரிகளால் வியாபாரிகள் மன சஞ்சலம் அடைவார்கள்.
விலைவாசியில் ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விலை அதிகமாகும். பொது மக்களை குறிக்க கூடிய கிரகமான சனி பகவான் வக்ரமடைவதால் ஆட்சியாளர்களுடன் மக்களுக்கு மன பேதம் அதிகமாகும். முதலாளி தொழிலாளிகளிடையே ஒற்றுமை குறையும். வருட கிரகங்களின் பெயர்ச்சி சுய ஜாதக தசா புத்தியுடன் இணைந்தே பலனை நிர்ணயிக்கின்றன. ஒரு கிரகம் அசுப பலனை வெளிப்படுத்தினால் இன்னொரு கிரகம் இன்பத்தை தரும். மேலும் சுய ஜாதக ரீதியான தசா புத்தி சாதகமான நிலையில் இருந்தால் கோட்சார கிரகங்களும் சுப பலனைத் தரும். தசா புக்தி சற்று ஏற்ற இறக்கமாக இருந்தால் கோட்சார கிரகங்களால் சில பாதிப்புகள் வரலாம். இதனால் 12 ராசிகளுக்கு உண்டாகப் போகும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
தற்போது மேஷ ராசிக்கு 12-ம் இடமான அயன சயன போக விரய ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் 13.7.2025 முதல் 3.10.2025 வரை தனது சுய நட்சத்திர சாரமான உத்திரட்டாதியில் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். அதாவது மேஷ ராசிக்கு 10.11-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சுய சாரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும்.
இது நாள் வரை உங்களை ஆட்டிப்படைத்த இனம் புரியாத மன சஞ்சலம் விலகும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் வெகுவாக குறையும். 4.10.2025 முதல் 27.11.2025 வரை மேஷ ராசிக்கு 9, 12ம் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ர கதியிலும் பயணிக்கிறார். அந்த காலகட்டத்தில் ஆன்மீக பயணம், வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் ஆர்வம் கூடும். வீண் விரயம், வைத்தியச் செலவுகள் குறையும். அறுவை சிகிச்சை வரை சென்ற கை, கால், மூட்டு வலி பிரச்சனைகள் தாமாக சீராகும். தந்தை, தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய காலம். காரணமற்ற இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட அலைச்சல், அலுப்புகள் குறையும். வக்ர கால பாதிப்புகள் குறைய செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தானம் வழங்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கோச்சார சனி பகவான் 13.7.2025 முதல் 3.10.2025 வரை தனது சுய நட்சத்திர சாரமான உத்திரட்டாதியில் வக்ர கதியில் சஞ்சரக்கிறார். அரசு உத்தியோக முயற்சி இழுபறியாகும். புதிய தொழில் முயற்சியில் அதிக கவனம் தேவை. முக்கிய பண பரிவர்த்தனைக்கு உரிய ஆவணங்களை கவனமாக பராமரிக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. 4.10.2025 முதல் 27.11.2025 வரை ரிஷப ராசிக்கு 8,11-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்தி ரத்தில் வக்ர கதியில் பயணிக்கிறார்.
8,11-ம்மிடம் பணபர ஸ்தானம். மறைமுக வருமானம் ஈட்டுவதையும், சட்டத்திற்கு புறம்பான செயல்களை தவிர்க்கவும். விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம் போன்ற பாதிப்புகள் குறையும். முக்கிய பஞ்சாயத்துகள் வழக்குகள் இழுபறியாகும். மூத்த சகோதரர், சித்தப்பாவை பகைக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் புரிபவர்கள் அதிக முதலீட்டில் பெரிய தொழிலில் நடத்துபவர்கள் சுய ஜாதக பரிசீலனை செய்து கொள்வது நல்லது. சிலருக்கு விபரீத ராஜயோக அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும். சனியின் வக்கிர பாதிப்புகள் குறைய வெள்ளிக் கிழமை வெள்ளை மொச்சை தானம் வழங்கவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் கோச்சாரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். ராசிக்கு 8,9 அதிபதியான சனிபகவான் தனது சுய நட்சத்திர உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரை வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். தந்தையுடன் தர்க்கம் செய்வதை தவிர்க்கவும். விபத்து கண்டம், சர்ஜரி, அவமானம், வம்பு, வழக்கு போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். தனிமை உணர்வு நீங்கும். தொழில் போட்டிகள் உருவாகலாம். அலைச்சல் வேலைப் பளு அதிகமாகும்.
4.10.2025 முதல் 27.11.2025 வரை மிதுன ராசிக்கு 7, 10 ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம். லாபம் சற்று ஏற்ற, இறக்கமாக இருக்கும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தி யோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கத் துவங்குவார்கள். இரண்டாவது குழந்தை பிறக்கும். சிலர் இரண்டாவது முறையாக கருத்தரிப்பார்கள். புதன் கிழமை பச்சைப்பயிறு தானம் வழங்கவும்.
கடகம்
கடக ராசிக்கு 7,8-ம் அதிபதியான சனிபகவான் கோட்சாரத்தில் ராசிக்கு 9ம்மிடமான பாக்யஸ்தனாத்தில் சஞ்சரிக்கிறார். இவர் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். புதிய முயற்சிகளில் கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம். தம்பதிகளுக்குள் நிவவிய பனிப்போர் விலகும். மறு விவாக முயற்சியில் நேரமும், காலமும் விரயமாகும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட பணம், பொருள், நகை, உயில், சொத்து, காப்பீட்டு பணம் போன்றவைகள் கிடைக்கலாம். 4.10.2025 முதல் 27.11.2025 வரை கடக ராசிக்கு 6, 9-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும்.
வேலை இல்லாதவர்களின் திறமைக்கும் தகுதிக்கும் தகுந்த வேலை கிடைக்கும். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடனால் மன உளைச்சல் அதிகமாகும். நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும். குடும்பப் பெரியவர்களை, இறந்தவர்களை நிந்தித்து பேசக்கூடாது. தீர்த்த யாத்திரை, ஆன்மீக யாத்திரை, முன்னோர்கள் வழிபாட்டின் மூலம் இன்னல்களில் இருந்து விடுபட முடியும்.
மீதமுள்ள 8 ராசிக்கான பலன்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.
தொடரும்...
செல்: 98652 20406
- பாண்டியமன்னனின் ஆட்சி நிலைகுலைந்தபின், குறுநில மன்னர்களின் ஆட்சி தலைதூக்கியது.
- குறுநில மன்னரான செந்தில்காத்த மூப்பனாரின் ஆட்சியில் முதலமைச்சராகப் பணிபுரிந்தவர் ஞானியார் ஆவார்.
திருச்செந்தூருக்குத் தெற்கே சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரன் பட்டினம் என்ற ஊர் அமைந்துள்ளது. பழங்காலத்தில் இவ்வூர் சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது. கோடைக் காலத்தில் இதமான தட்பவெப்ப நிலை நிலவும் இடமாக இது இருந்தது. இதனால் மன்னன் குலசேகர பாண்டியன் இவ்வூரில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
பாண்டியமன்னனின் ஆட்சி நிலைகுலைந்தபின், குறுநில மன்னர்களின் ஆட்சி தலைதூக்கியது. அந்த வகையில் இவ்வூரைச் செந்தில் காத்த மூப்பனார் என்ற குடும்பத்தார் ஆண்டு வந்தனர். திருச்செந்தூர், சாத்தான்குளம், திசையன்விளை முதலிய பகுதிகளெல்லாம் இவரது ஆளுகைக்கு உட்பட்டதாக விளங்கியது. இவரின் குலதெய்வமாக திருச்செந்தூர் முருகன் விளங்கினார்.
குறுநில மன்னரான செந்தில்காத்த மூப்பனாரின் ஆட்சியில் முதலமைச்சராகப் பணிபுரிந்தவர் ஞானியார் ஆவார். இவரது இயற்பெயர் முத்தணைந்த பெருமாள்பிள்ளை என்பதாகும். இவர் கல்வி கேள்விகளில் தலைசிறந்து விளங்கினார். நாள் தோறும் திருச்செந்தூர் முருகன் ஆலயம் சென்று, அங்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வார். பூஜை முடிந்த பிறகு சற்றுநேரம் கடற்கரையில் உலாவிவிட்டு ஊர் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது முழுப்பெயரை யாருமே சொல்வதில்லை. அந்த அளவிற்கு இவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.
இன்றைய கேரளமாநிலம் அப்பொழுது ஒன்பது வீட்டுப்பிள்ளைமார் அதிகாரத்தின் கீழ் இருந்துவந்தது. இப்பகுதியில் மலையாள மந்திரவாதிகள் அதிக பேர் வாழ்ந்து வந்தனர். தங்களது மந்திரசக்தியின் மூலம் எந்தப் பொருளையும் கொண்டு வருவது, எவ்வளவு தொலைவில் யார் இருந்தாலும், இருக்கும் இடத்திற்கு தம் மாய சக்தியால் அவரைத் தங்களிடம் கொண்டு வருவது என, பல்வேறு மாயாஜால வித்தைகளைச் செய்துவந்தனர். இவர்களில் பொல்லாப்பிள்ளை ஆசான் என்பவரும் இருந்துவந்தார். இவர் மந்திர சக்தியில் மிகவும் புகழ் பெற்றவராக விளங்கினார்.
இவரைச் சோதிக்க விரும்பிய அப்பகுதிவாழ் மன்னன், இலங்கைக் கண்டி மன்னனின் அரச குமாரியை இங்கு கொண்டு வரமுடியுமா? என்று கேட்டார். அந்த சவாலை ஏற்றுக்கொண்ட பொல்லாப்பிள்ளை ஆசான் தம் மாயசக்தியை ஏவி விட்டார். அதன்படியே அந்த அரசிளங் குமரியைக் கட்டிலோடு சில பூதங்கள் தூக்கிக் கொண்டு பறந்து வந்தன. அப்போது திருச்செந்தூர் முருகனின் பள்ளியறை பூஜையைக் கண்டு வணங்கி விட்டு ஞானியார், முருகனின் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அன்று பவுர்ணமி நாளாகும்.
ஞானியாரின் கண்களில் அரசிளங்குமரியை பூதங்கள் கடத்திச் செல்லும் காட்சி தென்பட்டது. தமது ஞான சக்தியால் முருகன் அருள்கொண்டு அதனைக் கீழே இறக்கினார். கட்டிலில் அரசிளங்குமரி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். பூதங்களும் பணிவோடு நின்று கொண்டிருந்தன.
நிலைமையை இறை அருளால் உணர்ந்து கொண்ட ஞானியார், பூதங்களைத் தமது ஞான சக்தியால் மிரட்டினார். மிரண்டு நின்ற அப்பூதங்களிடம், "கடத்திவந்த அரசிளங்குமரியை அவளுடைய இடத்திலேயே சேர்த்துவிடுங்கள்", என ஆணையிட்டார்.
பூதங்களும் அதன்படியே செய்துமுடித்தன. இந்தச் சம்பவத்தை தன் மந்திரசக்தியால் அறிந்து கொண்ட பொல்லாப்பிள்ளை ஆசான், ஞானியார் மீது மிகுந்த கோபம் கொண்டான். தனது பூதங்களைக் குலசை ஞானியாரின் மீது ஏவினான். அதனால் அவனுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை. இந்த நிலையில், கடைசி முயற்சியாக சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி, வைரவரை அனுப்பி வைத்தான். வைரவர் ஞானியாரின் வீட்டுக்கு வந்ததும், அவரது வீட்டில் திருவருள் நிறைந்திருப்பதையும், ஞானியார் முருகனாகவே தோற்றம் அளிப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டார். இதனால், ஞானியாரிடம் தம் நிலையை வைரவர் கூறினார். ஞானியார் இறையருளால் வைரவமூர்த்தியைத் தம் வீட்டில் உள்ள ஒரு பீடத்தில் அமர்த்தினார்.

வைரவர் திரும்பி வராததைக் கண்ட மந்திரவாதி பொல்லாப்பிள்ளை ஆசான் மனக் கலக்கம் அடைந்தான். அவனுக்கு இனம்புரியாத பயம் ஏற்பட்டது. அதனால், அந்த மந்திரவாதி, அப்பகுதி மன்னனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு குலசேகரன் பட்டினத்துக்கு வந்தான். ஞானியாரின் பாதக் கமலங்களில் வீழ்ந்து வணங்கினான். என்றாலும், சற்றும் கோபம் கொள்ளாமல் அவர்களை குலசை ஞானியார் உபசரித்தார்.
அதன்பின் ஞானியார் தவ வலிமையாலும், திருவருளாலும் அந்த மந்திரவாதியின் மனைவி மக்களை தம் வீட்டுக்கு வரவழைத்தார். இதைக் கண்ட மந்திரவாதிக்கு மேலும் பயம் ஏற்பட்டது.
அப்பொழுது ஞானியார், "உனது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட துயரத்தைக் கண்டு நீ மனம் கலங்குவதைப் போல, நீ செய்த தீய செயல்களால் மற்றவர்கள் மனம் கலங்குகின்றார்கள் அல்லவா? எனவே, உன்னுடைய மந்திர சக்தியைக் கொண்டு இதுபோன்ற தீய செயல்களைச் செய்யாதே, நன்மைகளை மட்டுமே செய்", என்று அறிவுறுத்தி அந்த மந்திரவாதியை அவரது குடும்பத்துடன் அனுப்பிவைத்தார். இச்சம்பவத்தின் மூலம் குலசை ஞானியாரின் புகழ் நாடு முழுவதும் பரவியது. அனைவரும் இவரைப் போற்றிப் புகழ்ந்தனர். மன்னனும் இவருக்கு மரியாதை செய்து அவரைத் தன்னுடனேயே வைத்திருந்தான்.
குலசை ஞானியார் வயதான நிலையிலும், தமது அன்றாடக் கடமையான பள்ளியறை பூஜை சமயத்தில் திருச்செந்தூர் முருகனை தரிசிப்பதில் இருந்து தவறுவதில்லை. ஒரு சமயம் மழைக்காலம் வந்தது. எங்கும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. அச்சமயம் வழி தெரியாமல் திகைத்த குலசை ஞானியாரின் முன்பாக ஒரு சிறு விளக்கொளி தோன்றியது. அந்த ஒளி அவருக்கு வழிகாட்டி திருச்செந்தூர் ஆலயத்தின் சண்முக விலாசம் வரை வந்து மறைந்தது. அவரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ஆலயத்தார் நடந்ததை அறிந்து வியந்தனர். ஞானியாரும் பள்ளியறை பூஜையைக் கண்டு வணங்கி இல்லம் திரும்பினார்.
அன்றிரவு உறங்கிக் கொண்டிருந்த ஞானியாரின் கனவில் திருச்செந்தூர் முருகன் காட்சி தந்தார். பக்தா உமக்கு வயது முதிர்ந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நீ இனி திருச்செந்தூருக்கு தினமும் வரவேண்டாம். அதற்கு பதில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும், நானே உன் வீட்டிற்கு வந்துவிடுகிறேன். அந்த சமயத்தில் நீ என்னை உன் வீட்டிலேயே வழிபடலாம்" என்று அருள்வழங்கினார். அதன்படியே, ஞானியார் வீட்டிலேயே பள்ளியறை பூஜையைச் செய்து வந்தார். அந்த உண்மையை அறிந்த ஊர்மக்கள் அவரை தெய்வத்திற்கு இணையாக மதித்து வந்தனர். அவர் வாழ்ந்த வீட்டைச் திருச்செந்தூர் முருகனின் படுக்கை வீட்டுக் கோவில் என்று அழைத்தனர். இன்றும் குலசையில் இந்த இடம் படுக்கை வீட்டுக்கோவில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாள் திருச்செந்தூர் ஆலயத்தில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஞானியார் நேராகத் திருச்செந்தூர் ஆலயம் சென்று காணும் வகையில் அனைவரும் தன்னைக் வணங்கி வழிபாடு செய்து, அப்படியேநடந்து கருவறைக்குச் சென்றார். ஆனால், அவர் திரும்ப வெளியில் வரவே இல்லை. அவரது உருவம் மறைந்துவிட்டது. இதைக் கண்டு பக்தர்கள் திகைத்து நின்றனர். அதே நேரத்தில் குலசேகரன்பட்டினத்தில் ஞானியார் தமது இல்லத்தில் உயிர் நீத்தார் என்பதை அறிந்து வியந்தனர். எந்தவிதமான மந்திர சக்தியும், மாய சக்தியும் திருச்செந்தூர் முருகன் பக்தரிடம் பலிக்காது என்பதற்குக் குலசை ஞானியார் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.
இதே போன்று திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.
- எல்லாவற்றையும் நொடியில் மாற்ற முடியாது.
- சில நேரம் எதுவும் செய்யாது சற்று அமைதியாய் அமருங்கள்.
நமக்கு சமுதாயத்தில் ஒரு மதிப்பு, மரியாதை, வேணுமா? அப்ப இதெல்லாம் அவசியம் செய்யணும்.
* சொன்ன வார்த்தையை காப்பாற்றணும். ஒரு தடவை தட்டினாலும் போச்சு.
* கொஞ்சமா பேசணும். நிறைய கவனிக்கணும். கேட்கணும்.
* புரளி பேச்சு கூடவே கூடாது. மக்கள் நம்புபவராக இருக்க வேண்டும்.
* நாம் தவறு செய்திருந்தால் ஒத்துக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.
* நம் எல்லைகள் வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
* மற்றவர்கள் கத்தும் போது நாம் அமைதியாக இருக்க வேண்டும்.
* பிறருக்கு உதவும் போது பதிலுக்கு எதனையும் எதிர்பார்க்கக் கூடாது.
* காரணமின்றி பேச வேண்டாமே.
முயற்சி செய்து பாருங்களேன்!
மேலும் நான் உபயோகமானவன். நான் உறுதியானவன். நான் என்னை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். சூரியனின் ஒரு சிறிய கதிர் நான். நான் தைரியமானவன். நான் விழிப்புணர்வு கொண்டவன். நான் என்னை நம்புகின்றேன். நான் வெற்றி பெறுவேன். நான் கட்டுப்பாடுகள் கொண்டவன். இப்படி என்றாவது உங்களைப் பற்றி நினைத்தது உண்டா? இனியாவது நினைத்துப் பாருங்கள்.
அடிக்கடி ரொம்ப ரொம்ப யோசிக்கின்றீர்களா?
* சரி. ஆனால் அதில் ஏதேனும் கிடைத்ததா?
* மண்டை நிறைய ஸ்டிரெஸ் தான் கூடியது.
* கடந்த காலத் தினை மனதில் திரும்ப திரும்ப ஓட விடக்கூடாது.
* எல்லாவற்றையும் நொடியில் மாற்ற முடியாது.
* இம் மாதிரி நேரங்களில் ஆழ்ந்து மூச்சை இழுங்கள்.

* எதற்கும் அதிகமாக ரியாக்ட் செய்ய வேண்டாம்.
* சில நேரம் எதுவும் செய்யாது சற்று அமைதியாய் அமருங்கள்.
* விழிப்புணர்வோடு இருங்கள். அவ்வளவுதான்.
உங்களுக்கு சோர்வு இருக்கா? சதைகளில் வலி இருக்கா? எலும்பு வலி இருக்கா? குறிப்பாக பின் முதுகு, கால்கள், இடுப்பு இவற்றில் வலி இருக்கா? எலும்பு முறிவு, தேய்மானம் இருக்கா? முடி கொட்டுதா? மனச்சோர்வு இருக்கா? எடை கூடுதா? காயங்கள் மெதுவா ஆறுதா? ஈறுகள் பாதிப்பு இருக்கா? சரியான தூக்கம் இல்லையா? மருத்துவரிடம் சென்று வைட்டமின் 'டி' குறைபாடு இருக்கின்றதா? என்று பரிசோதித்துக் கொள்ளலாமே.
* ஒருவர் பிறர் மீது மற்றும் நிகழ்வுகள் மீது எப்போதும் குற்றம் குறை கூறாது இருந்தால்
* பிறரை எப்போதும் எடை போடுபவராகவே இருந்தால்,
* பிறர் மீது பழி சுமத்துபவராக இல்லாமல் இருந்தால்
* பொய் சொல்லாதவராக இருந்தால்
* சண்டை, வம்பு என இல்லாமல் இருந்தால்

* தேவையில்லாத விஷயத்தில் தலையீடு செய்யாதவராக இருந்தால்
* பிறரை காயப்படுத்துபவராக இல்லாது இருந்தால் அவர் வாழ்வில் வெற்றி பெற்றவர் ஆவார்.
* கால்ஷியம் நிறைந்த உணவுகள்
பால், தயிர், சீஸ், பன்னீர், பச்சை காய்கறிகள், கொட்டைகள், விதைகள், மீன், ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட ஓட்ஸ், சோயா...
வைட்டமின் டி சத்து- முட்டை மஞ்சள் கரு, மீன், ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட பால், தயிர், கொட்டைகள், விதைகள், பருப்பு, எலும்பு சூப் போன்றவை ஆகும்.
* காலையில் சாப்பிடாமல் அல்லது வெறும் காபி, டீ என்று ஒடுபவர்களுக்கு எத்தனை சொல்லியும் கேட்கவில்லையென்றால் மருத்துவர்கள் சாமர்த்தியமாய் கையாளும் விதம் ஒன்று உள்ளது.
* உங்களுக்கு சீக்கிரம் முதுமை தோற்றம் வரும்
* தலைமுடி ரொம்ப கொட்டும் * தோல் பொலிவு இழக்கும்.
இப்படி பல காரணங்கள். ஆனால் உண்மை காரணங்களை சொல்லி விட்டால் போதும். ஒழுங்காய் காலை உணவினை எடுத்துக் கொள்வர். ஏனோ இது மாஜிக் போல் சிறுவர் முதல் முதியவர் வரை 'கிளிக்' ஆகும். தோற்றத்திற்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது.
ஓட்ஸ், ராகி, பழைய சாதம், ஏதேனும் பழம், ஸ்முதி என இப்படி சாப்பிட்டாலே போதுமே.
* நடந்து கொண்டே இருங்கள்- இது செய்யும் நன்மைக்கு அளவே இல்லை. நாள் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடமாவது நடக்க வேண்டும்.
* தனியாக உடற் பயிற்சி செய்வது கஷ்டமா? ஒரு சிறிய குரூப் உடன் சேருங்கள். மற்றவர்களைப் பார்த்து நமக்கு புத்தி வரும்.
* சத்தமில்லாத, சூடு இல்லாத அறையில், பளீர் என்று கண்ணை கூசும் வெளிச்சம் இல்லாத சூழலில் அமைதியாய் 7 அல்லது 8 மணி நேரம் உறங்குங்கள்.

கமலி ஸ்ரீபால்
* சிறு குழந்தைகளோடு சிறிது நேரம் விளையாடுங்கள்.
* ஆக்கப்பூர்வமான சிந்தனை உள்ளவர்களோடு ஒரு சில மணி நேரமாவது இருங்கள்.
* 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் அருந்துகின்றீர்களா? என்று சோதித்துக் கொள்ளுங்கள்.
* காலையில் எழுந்தவுடன் ஆக்கப்பூர்வமாக நினையுங்கள்.
* சொந்தமாக கொஞ்சம் சமைத்துதான் பாருங்களேன்.
* தினமும் முடிந்தவரை ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள்.
* வெளியே கடைக்கு செல்லும் ேபாது நன்கு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். எந்த நொறுக்கு தீனியும் வேண்டி இருக்காது.
* வெளியில் சாப்பிடுவதனை வெகுவாய் குறைத்துக் கொள்ளுங்கள்.
* அன்றைய நாளுக்கான அனைத்தையும் முதல் நாளே முறைப்படுத்திக் கொள்ளுங்கள்.
* புகை, மது கூடாது.
* 20 நிமிட பகல் குட்டி தூக்கம் நல்லதே.
* மன நிம்மதியினை பாதிப்பவர்களை கிட்டவே சேர்க்க வேண்டாம்.
* புன்னகையுங்கள்.
* அதிக மாவு சத்து உணவு இன்றைய வாழ்க்கை முறைக்கு தீமையே.
* அப்பளம், ஊறு காய், கூடுதல் உப்பு இவற்றினை நீக்கி விடுவோம்.
* தினம் 20 அல்லது 30 நிமிடம் நடக்கலாமே.
* பல் தேய்ப்பது, பிளாஸ் எனப்படும் முறையில் பற்களை சுத்தம் செய்வது பற்களுக்கு மட்டு மல்ல இருதய பாதுகாப்பிற்கும் நல்லது.
* குறைந்த அளவில் டி.வி. பாருங்கள்.
* 10 நிமிடமாவது தியானம் செய்யக் கூடாதா?
* எல்லா கோபங்களையும், ஏமாற்றங்களையும் ஒரு பேப்பரில் எழுதுங்கள். பின் அதனை கிழித்து விடுங்கள். மனதின் சுமை நீங்கி விடும்.
* ஒவ்வொரு உணவிலும் காய்கறிகள் இருக்க வேண்டும்.
* கடவுள், பிரபஞ்சம், நமக்கு வாழ்வில் உதவியவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
* நிமிர்ந்து இருங்கள்.
* ஒமேகா 3 நன்கு சேர வேண்டும். ஆளி விதை கூட சிறந்ததே.
* இருக்கும் இடம், மேஜை, பீரோ இவற்றினை சுத்தமாய் முறையாய் வைத்திருங்கள்.
* ஆரோக்கியமான உணவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள்.
* குறிப்பிட்ட நேரத்தில் காலை எழுந்து பழங்குகள்.
* நொறுக்கு தீனியினை பழம், காட்டேஜ் சீன் என மாற்றுங்கள்.
* சோடா, அதிகம் சர்க்கரை சேர்த்த பானங்கள் வேண்டாமே.
* மூளைக்கும் பயிற்சி கொடுங்கள். செஸ், குறுக்கெழுத்து போட்டி இவை உதவும்.
* பிறரையும், உங்களையும் மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
* 80 சதவீதம் வயிறு நிறைவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.
* இயற்கையோடு அதிகம் ஒன்றி இருங்கள்.
* முழு தானிய உணவிற்கு மாறி விடுங்கள்.
வயிறு-குடல்: சாப்பிட்ட வுடன் பல நேரங்களில் வயிறு உப்பிசம் தெரிகின்றதா?
* நன்கு தூங்கினால் கூட சோர்வாகவே இருக்கின்றதா?
* நீங்கள் மட்டும் இல்லை. நிறைய பேர் இப்படி இருக்கின்றார்கள்.
இது உங்கள் வயிறு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை. வயிறும், குடலும் நமது சக்திக்கான மறைவான சாவி. ஆரோக்கியம் இதன் அடிப்படையில் வெகுவாக உள்ளது. ஆரோக்கியமான குடல்-உணவுப் பாதை என்றால்
* உணவு நன்கு செரிக்க வேண்டும். * சத்துக்கள் உறிஞ்சப்பட வேண்டும்.
* உடலில் சக்தி இருக்க வேண்டும். * நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும்.
* வீக்கம், உப்பிசம் இன்றி இருக்க வேண்டும்.
ஆனால் குடல் ஆரோக்கிய மற்று இருக்கும் போது....
* உப்பிசம், குழப்பம், சரியான ஜீரணமின்மை, ஏதாவது கொரித்து கொண்டே இருக்க வேண்டும் என்ற வேகம், சரும பாதிப்பு, அடிக்கடி நோய் வாய்படுதல், மனநிலை மாறுபடுதல் என இருக்கும்.
இவர்கள் வாழைப்பழம், பச்ச பயிறு, ஓட்ஸ், கொழுப்பில்லா தயிர், பிளாக் விதை, இட்லி போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகள், தேவையான அளவு நீர் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம். சில மருந்துகள், எப்போதும் மன உளைச்சலுடன் இருப்பது ஒவ்வாத உணவுகள் இவைகளை நாமே தவிர்த்து விடலாம். இருப்பினும் மருத்துவ ஆலோசனை அவசியம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
- சிறுவயதில் தொடங்குகிற இவ்வித அச்சம், மனித வாழ்வில் பருவ வளர்ச்சிக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றது.
- அச்சம் என்பது பிறந்த குழந்தைகள் முதற்கொண்டு எல்லாருக்கும் இயல்பாக அமைவது ஆகும்.
அச்சம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள அச்சமின்றிக் காத்திருக்கும் அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்.
'அச்சம்' என்பது உள்ளத்தின் வழியாகத் தோன்றி, உடம்பின் வழியாக வெளிப்பட்டு நிற்கும் ஒருவகை உணர்ச்சியாகும்.
" நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப!"
என்னும் நூற்பாவில் தொல்காப்பியர், மனித உடம்பில் தோன்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளை, நகைத்தல், அழுதல், இகழ்தல், வியத்தல், அஞ்சுதல், வீறு கொள்ளுதல், சினத்தல், மகிழ்தல் என எட்டு வகைப்படுத்துவார். இவற்றில் கூடுதலாகச் 'சாந்தமாக இருத்தல்' என்பதையும் சேர்த்து மெய்ப்பாடுகளை வடமொழியார் ஒன்பதாக்கி, நவரசங்கள் என்று குறிப்பிடுவர். அந்த வகையில் உள்ளத்தில் தோன்றி உடம்பில் வெளிப்பட்டு நிற்கும் ஒருவகை உணர்வு அச்சம் என்பதாகும்.
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்னர், அதில் யாதானும் ஒரு துன்பமோ இடையூறோ திடீரென ஏற்பட்டுவிடுமோ என்று உள்ளம் கற்பனையில் கலங்கி, உடல் உண்மையாகவே நடுங்கிச் சீர்குலைதல் அச்சம் ஆகும். மனோதத்துவ அளவில் தொடங்கி, உடலியல் நோய்கள் வரை பெருகிடும் தொல்லைகளை அச்சம் கொண்டுவந்து சேர்க்கும்.
அச்சம் என்பது பிறந்த குழந்தைகள் முதற்கொண்டு எல்லாருக்கும் இயல்பாக அமைவது ஆகும். ஆனாலும் நாம் எதற்காகப் பயப்படுகிறோம்?; பயம் கொள்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?; முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவதுபோல, சம்பந்தமற்றவைகளைச் சம்பந்தப் படுத்திக்கொண்டு, வீண் அச்சத்திலும் கவலைகளிலும் ஆழ்ந்து போகிறோமா? என்பதை நமது அச்சங்களிலிருந்து சற்றுத் தள்ளி நின்றுகொண்டு அவற்றைக் கண்காணிக்கப் பழக வேண்டும்.
உயிரச்சம் தான் நமது எல்லா அச்சங்களிலும் தலைமையானதும் முதன்மையானதும் ஆகும். யாதானும் அஞ்சத்தக்க சூழல் உருவாகும்போது, "என்ன உயிரா போய்விடும்?; இதற்குப்போய் இப்படி பயப்படுகிறோமே?" என்று நமது மனத்தைப் பார்த்து அடிப்படையான ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டால், எந்த விதமான பயமும் நம்மை அணுகாது, நம்மைக்கண்டு பயந்து ஓடிவிடும். பாரதி," காலா! வாடா! உன்னைக் காலால் உதைக்கிறேன் வாடா!" என்று எமனையும் அச்சமின்றிக், குஸ்திக்கு அழைக்கும் துணிச்சல் அனைவருக்கும் வரவேண்டும்.
சிறு குழந்தைகளின் கண்களின் அருகில் நமது கைகளைக் கொண்டுபோய் படக்கென்று தட்டும்போது, ஏற்படும் ஓசையையும் காற்றின் விசையையும் உணர்ந்து அவை கண்களை இமைத்து மூடும்; அதையே கொஞ்சம் அதிர்ச்சியோடு விரைந்து கண்ணிமைத்து மூடும்போது குழந்தை பயந்துவிட்டது என்று நாம் பயப்படுவோம். சிறு குழந்தைகள் விளையாட்டில் 'யானைக்குப் பயப்படுவியா? பூனைக்குப் பயப்படுவியா?' என்று கேட்க, அது, 'எதற்கும் பயப்பட மாட்டேன்' என்று சொல்ல, நாம் விரைந்து கைகளைக் கொண்டு குழந்தையின் கண்களுக்குமுன் சென்று விசிற, குழந்தை, படக்கென்று கண்ணிமைக்க, நாமும் 'இதோ பயந்து விட்டது! பயந்துவிட்டது!' என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஒரே அச்ச மகிழ்ச்சிதான் போங்கள்!.

சுந்தர ஆவுடையப்பன்
சிறுவயதில் தொடங்குகிற இவ்வித அச்சம், மனித வாழ்வில் பருவ வளர்ச்சிக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றது. மருத்துவர் போடுகிற ஊசிக்கு பயம், அவர் தருகிற மருந்து உண்ண பயம், தவழ பயம், நடக்க பயம், ஓட பயம், நீந்த பயம், மழையில் நனைய பயம், மலையில் ஏற பயம், சைக்கிள் ஓட்ட பயம், கார், ரெயில், விமானம் ஏற பயம் என வாழ்வின் தொடக்கத் தருணங்கள் எல்லாம் பயமயமாகவே ஆகிப்போகின்றன.
அச்சப்படுவது சரியா? தவறா? என்கிற அடிப்படையான ஒரு கேள்விக்கு வருவோம்.
நமது ஆதிக் கருத்துக் கருவூலர் திருவள்ளுவப் பெருந்தகை அச்சம் குறித்துப் பலகுறள்களில் கருத்துக் கூறியுள்ளார். " அச்சமே கீழ்களது ஆசாரம்" என்னும் வரிகளில், 'அச்சப்படுவது கீழ்மக்களின் ஒழுகலாறு' என்கிறார். கயவர்கள் குறித்த கருத்துப் பகிர்வில் வள்ளுவப் பெருந்தகை, அவர்களிடம் எஞ்சிநிற்கும் நற்குணங்களில் ஒன்று அச்சப்படுவது மட்டுமே! என்கிறார். இங்கே அச்சப்படுவது நல்லது என்பது அவர் கருத்து. " அச்சமுடையார்க்கு அரணில்லை" எனவரும் ஓர் இடத்தில், 'எதற்கெடுத்தாலும் அச்சப்பட்டு நிற்பவர்களுக்கு வாழ்க்கையில் பாதுகாப்புக் கிட்டாது' என்று எச்சரிக்கிறார்.
இங்கே 'அஞ்சுவது கூடாது' என்கிறார். "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!" எனவரும் குறளில் தான், 'எதற்கும் நான் அஞ்ச மாட்டேன்! என்று கூறுவது முட்டாள்தனமானது!; அஞ்ச வேண்டிய செயல்களுக்கு அறிவுடையவர்கள் நிச்சயம் அஞ்சவே செய்வார்கள்!' என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார். அப்படியானால், அச்சப்படுவதையும் அறிவுக்கண் ஊடாகப் புகுத்திப் பார்த்துப், பகுத்துப் பார்த்து, அஞ்சுவதா? அஞ்சாமல் தள்ளுவதா? என்கிற முடிவுக்கு வர வேண்டும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டும்; அஞ்சத் தகாதவற்றைத் துணிச்சலோடு புறந்தள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அச்சப்படுவது என்பது, ஏற்கனவே நடந்த ஒரு துன்ப நிகழ்வை முன்மாதிரியாகக் கொண்டு, இம்முறையும் அதைப்போலவே நிகழ்ந்து விடுமோ? எனச் செயல் தொடங்கும் முன்னரே வருந்தி நிற்பது ஆகும். வரப்போகிறது வலியா? தோல்வியா? துன்பமா? என்பதை உணர முடியாமலேயே, கற்பனையாக எண்ணி அச்சப்படுவதும் உண்டு. சில மாணவர்களுக்குப் பாடப் புத்தகத்தை கையில் எடுத்தவுடன் தூக்கம் வந்து விடும்; சிலருக்கு உடனே கழிப்பறை செல்ல வேண்டும்போல ஆகிவிடும். சிலர் தேர்வுக்குப் படிக்கும்வரை அச்சமின்றிப் படித்துவிட்டு, தேர்வறைக்குள் நுழைந்து, கேள்வித் தாளை வாங்கியவுடன் படித்த எல்லாமே சரசரவென அழிந்தழிந்து மறந்து போகும்.
இவ்வகை நிகழ்வுகளுக்கு எல்லாம் தேவையற்ற கற்பனைகள், மற்றும் மனக் குழப்பங்களால் உண்டாகும் பயமே காரணம் ஆகும். அச்சத்தை அந்தந்தக் காரண காரியங்களுக்கு ஏற்பத் துணிச்சலுடன் துரத்துவதற்கு முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டால், அச்சத்தையும் வெல்லலாம்! தேர்விலும் ஜெயிக்கலாம்!. 'உயிரச்சம்' என்பது, 'இதனால் உயிருக்குத் தொல்லைகள் நேருமே!. உயிர் சார்ந்த உடம்பிற்கும் ஊறுகள் தோன்றுமே!. அமைதியாகவும், நிம்மதியாகவும், விபத்துகள், ஆபத்துகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டுவிடுமோ? என்று பயப்படுவதுதான்.
'உயிரச்சம்' என்பது எப்போதாவது ஒருமுறை தோன்றலாம்!. ஆனால் அது அன்றாடம் தோன்றினால், அது தீர்க்கப்பட வேண்டிய மனநோய் வகையில் சேர்ந்துவிடும். எந்த ஒரு உயிர்ப் பிராணிக்கும், உயிர் ஒருமுறைதான் போகும்! அதை தினமும் அச்சப்படுவதன் மூலம், அன்றாடம் போக்கிக் கொள்வது என்றால், வாழ்க்கையே அன்றாடம் செத்துப் பிழைப்பதுபோல் ஆகிவிடும். மரண பயம் மனிதனை மன நோயாளியாகவும், அதன்வழி உடல் நோயாளியாகவும் மாற்றிவிடும்.
ஒரு நாட்டில், எந்த வேலையுமே செய்யாத ஒரு இளைஞனைக் கைது செய்து சிறையில் அடைக்கும்படி அந்த நாட்டு ராஜா உத்தரவு பிறப்பித்தார். இளைஞனின் உறவினர்கள் எல்லாரும் ஒன்றுகூடி வந்து, 'அந்த இளைஞன் என்ன குற்றம் செய்தான்?; அவனை விடுதலை செய்யுங்கள்!' என்று ராஜாவிடம் முறையிட்டனர். 'அவன் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததுதான் குற்றம்!' என்று கூறிய ராஜா அந்த இளைஞனைச் சிறையிலிருந்து அழைத்து வரச் சொன்னார்.' உனக்கு நிபந்தனையுடன்கூடிய ஒரு வேலையை ஒப்படைக்க இருக்கிறேன்; ஒருமாதத்தில் அந்த வேலையைச் செய்து முடித்து விட்டாயானால், விடுதலை செய்வேன்! சம்மதமா?' என்று ராஜா கேட்டார். 'என்ன வேலை? என்ன நிபந்தனை?' என இளைஞன் ராஜாவைப் பார்த்துக் கேட்டான்.
'நான் இப்போது ஒரு செம்மறி ஆட்டையும், அந்த ஆட்டிற்குத் தேவைப்படும் ஒருமாதத்திற்கான தீவனத்தையும் தந்து விடப் போகிறேன். நீ வீட்டிற்கு எடுத்துச் சென்று நல்லபடியாச் செம்மறியாட்டை ஒரு மாதம் வளர்க்க வேண்டும். நிபந்தனை என்ன வென்றால், நீ ஆட்டைப் பெறும்போது அதனை எடைபோட்டு எடுத்துச் செல்ல வேண்டும்; ஒரு மாதம் கழித்து ஆட்டைக் கொண்டு வரும்போது ஆட்டை எடைபோட்டுப் பார்ப்போம்; ஒரு மாதத்திற்கு முன் ஆட்டை எடுத்துச் செல்லும்போது ஆடு என்ன எடை இருந்ததோ அதில் 100 கிராம் கூடக் கூடவோ, குறையவோ கூடாது. இந்த நிபந்தனைப்படி சரியாக நீ ஆட்டை வளர்த்துத் தந்தால் உனக்கு விடுதலை!' என்றார் ராஜா.
உடனே, 'எனக்கு பதில்கூற ஒருநாள் அவகாசமும், எனது வீடுவரை சென்றுவர அனுமதியும் தேவை!' என்று கேட்டான் இளைஞன். ராஜாவும் வழங்கினார். வீடு சென்ற இளைஞன் அங்கிருந்த வயது முதிர்ந்த தாத்தாவிடம் ஆலோசனை பெற்றான். மறுநாளே அரண்மனைக்கு வந்து, அரசனின் நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டு, ஆட்டையும் தீவனத்தையும் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினான். ஒரு மாதம் ஆயிற்று; ராஜா வளர்க்கத் தந்த ஆட்டோடு அரண்மனை திரும்பினான் இளைஞன். அரசவையில் ஆடு அவையோர் முன்னிலையில் எடைபோட்டுப் பார்க்கப்பட்டது. என்ன ஆச்சரியம்! ஒரு மாதத்திற்குமுன் என்ன எடையில் இருந்ததோ அதே எடையில்தான் இப்போதும் ஆடு இருந்தது.
"என்ன விதமான உணவூட்டல் முறைகளைக் கையாண்டு, ஆட்டைப் பெருக்கவும் விடாமல், இளைக்கவும் விடாமல் பார்த்துக்கொண்டாய்?. என்ன 'கலோரி' அடிப்படையில் எந்த 'டயட்' முறையைக் கையாண்டீர்?" என்றெல்லாம் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய ஆய்வுக்குழு இளைஞனைக் கேள்விமேல் கேட்டுத் துளைத்தனர். "நான் சிறப்பாக எந்த முறையையும் கையாளவில்லை; என் தாத்தா சொல்லித் தந்த முறையைக் கையாண்டேன்!. வெற்றி பெற்றேன்!" என்றான் இளைஞன்.
"அது என்ன முறை என்றால், ஆட்டைக் கட்டிப்போட்டு, அரசன் தந்த சத்தான தீவனங்களையெல்லாம் நாள்தோறும் அதன்முன் போட்டேன். கூடுதலாக என் தாத்தா சொன்னபடி ஒரு ஓநாயைக் கூட்டி வந்து ஆட்டிற்கு எதிர்த்தாற்போல பத்தடி தூரத்தில் கட்டிப்போட்டு விட்டேன். ஆட்டிற்கு ஓநாய் பகை!. என்னதான் சத்தாகச் சாப்பிட்டாலும் எந்த நேரத்திலும் தமக்கு ஓநாயால் ஆபத்துக் காத்திருக்கிறது என்கிற அச்சமே அதன் உடம்பைப் பெருக்க விடாமல் பார்த்துக்கொண்டது. இதுதான் எனது வெற்றியின் ரகசியம்" என்றான் இளைஞன். உடம்பு இளைக்க உணவு மட்டுமல்ல அச்சமும் காரணம் ஆகும்.
தேவையற்ற அச்சம் தேவையற்ற நோய்களுக்கும் செயல் தடுமாற்றங்களுக்கும் ஆதாரம். அச்சப்படுவது ஒரு வகையில் எச்சரிக்கையாக இருப்பதற்குத் தேவைதான் என்றாலும், சதா அச்சப்பட்டுக் கொண்டே இருப்பதால் எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை.
தொடர்புக்கு 9443190098
- உலகத்தில் அமைதி இருக்கவேண்டும்.
- நம்மை சுற்றியுள்ள எல்லா கிரகங்களை பற்றியும் அறிந்திருக்கலாம்.
ஆணும், பெண்ணும் கூடி வாழ்வது இல்லறம். உலக அறிஞர்கள் எல்லாம் மக்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவார்கள். பிறரிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். இனிமையாக பேசவேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆனால் வீடுபேறு பற்றி தமிழன்தான் அறிந்திருக்கிறான். வீடுபேறு என்றால் மரணமில்லாப் பெருவாழ்வு அல்லது மோட்ச லாபம் என்று பொருள்.
மனிதனுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு உண்டு என்பதை அறிந்தவர்கள் நம்முடைய ஞானிகள். மகான் ராமலிங்க சுவாமிகள் முதல் மகான் அருணகிரிநாதர் வரை, எல்லா ஞானிகளூம் மரணமில்லாப் பெருவாழ்வு எனும் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்..
உலகத்தில் அமைதி இருக்கவேண்டும். உலகத்தில் ஒழுக்கம் இருக்கவேண்டும் என்று அறிஞர்கள் எல்லாம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் பேசலாம், சொல்லலாம். உலகத்தை பற்றி அணு அணுவாக ஆராய்ந்திருக்கலாம்.
நம்மை சுற்றியுள்ள எல்லா கிரகங்களை பற்றியும் அறிந்திருக்கலாம். அணுவை பற்றி அறிந்திருக்கலாம். அணுவின் இயக்கத்தை பற்றி அறிந்திருக்கலாம். ரசாயன சேர்க்கை போன்ற விஞ்ஞானங்களை பற்றி பேசலாம்.
விஞ்ஞானிகள் நமக்கு மின்சார விசிறி, டேப்ரெக்கார்டர், கம்ப்யூட்டர், ஏ.சி., பிரிட்ஜ், மிக்ஸி, மாவாட்டுகின்ற மெஷின், துணி துவைக்கின்ற மெஷின் என்று கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் எல்லாம்மனித வர்க்கத்திற்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
அது பாராட்டப்படவேண்டியது. மெய்ஞானத்திற்கு இது தெரியும். விஞ்ஞானமும், மெய்ஞானமும் இரண்டு கண்கள் போன்றது. ஒன்றை ஒன்று அவமதித்தல் கூடாது. இதற்கும் அதற்கும் பகை இல்லை. நட்புதான்.
விஞ்ஞானம் உடம்பை பற்றி அறிகின்ற அறிவாகும். உடம்பை பற்றியும், உடம்பிற்கு நோய் வந்தால் எப்படி குணமாக்குவது என்று விஞ்ஞானம் சொல்லும். நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆனால் இந்த மருந்துகள் உடம்பை காப்பாற்ற மட்டும்தான் பயன்படும்.
விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட கருவிகளூம் அல்லது மருந்துகளும் மனித வர்க்கத்திற்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம்தான். ஆனால் அவைகள் மோட்ச லாபம் தருமா என்றால் அவைகள் தராது.
மோட்ச லாபம் என்பது உடம்பிற்குள்ளே சூட்சும தேகம் அல்லது ஒளி தேகம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிந்து அந்த ஒளி உடம்பை பெற வேண்டும்.
அந்த ஒளி உடம்பை அறிவதற்கு என்ன செய்யவேண்டும்? ஒரே வழி பக்திதான் என்று சொல்லிவிட்டார்கள். அந்த ஒளி உடம்பை பெற்றவர்கள் தான் வீடுபேறு அல்லது மோட்ச லாபம் அல்லது முக்தி நெறியை அறிந்தவர்கள்.

ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
ஒளி உடம்பை பெற்றவர்களிடம் பக்தி செலுத்த வேண்டும். அவர்கள் மீது அன்பு செலுத்தவேண்டும் என்பார் ஆசான் வள்ளுவப்பெருமான். பக்தி எதற்கு செலுத்தவேண்டும். மோட்ச லாபம் அல்லது வீடு பேறு அல்லது முக்தி அடைய பக்தி செலுத்தவேண்டும். பக்தி யார் மீது செலுத்துவது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
உலகத்தில் செலுத்துகின்ற பக்தி எல்லாம் அது ஒரு வகையாக இருக்கும். ஒரு சிலர் சிறு தெய்வ வழிபாட்டில் சொல்வார்கள். ஆக அவரவர்களுடைய அறிவிற்கு ஏற்றமாதிரி பக்தி செலுத்துவார்கள்.
எவன் முக்தி பெற்றானோ, எவன்மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றானோ, எவன் எக்காலத்திலும் அழியாக இருக்கிறானோ அவர்களுடைய ஆசியை பெறுவதற்காக அவர்கள் மீது ஞானிகள் பக்தி செலுத்துவார்கள்.
ஆசான் திருவள்ளுவர் முற்றுப்பெற்ற முனிவர். மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர். அவர் எழுதிய நூல்களில் ஒரு பிழை கூட இருக்காது. இந்தக் காலத்திற்கு மட்டுமல்ல எல்லாக் காலத்திற்கும் பொருந்தும். எந்தக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு நூலை எழுதி இருக்கிறார்.
என்ன காரணம்? ஆசான் வள்ளுவப்பெருமான் வீடு பேறு அறிந்தவர். மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர். அறியாமையை நீக்கியவர். அறியாமை நீங்கியதால்தான் அப்படி ஒரு நூலை எழுத முடிந்தது.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு பற்றி எழுதி இருப்பார். வீடு பேற்றைபற்றி சொல்லாமல் சொல்லியிருப்பார்.
ஆசான் வள்ளுவப்பெருமான் பிறவிக்கு காரணமானது எது என்பதை அறிந்தவர். பிறவிக்கு காரணம் எது? இந்த மும்மலமாகிய அறியாமையை உண்டுபண்ணக்கூடிய இந்த தேகம்தான் பிறவிக்கு காரணமாக இருக்கிறது.
ஆக, இப்படிப்பட்ட அறியாமையை உண்டுபண்ணக்கூடிய தேகத்தை நீக்கினால் அது மரணமில்லாப் பெருவாழ்வை பெறும் என்ற ரகசியத்தை ஆசான் திருவள்ளுவர் அறிந்தவர். அதனால்தான் எக்காலத்திலும், எந்த சக்தியாலும், எந்த முனிவராலும் அல்லது எந்த விஞ்ஞானிகளாலும், எந்த அறிஞர்களாலும் புறக்கணிக்க முடியாத, இது தேவையில்லை எறு சொல்ல முடியாத 1330 குறளையும் அமைத்துள்ளார்.
ஆசான் வள்ளுவப்பெருமான் பிறவியை நீக்கியவர். பிறவிக்கு காரணமான தேகத்தை நீக்கியவர். பேதமையை உண்டுபண்ணுவது இந்த உடம்பு. இந்த தேகத்தை அவர் என்ன செய்தார்?
இந்த தேகத்தை பற்றி அறிந்து அந்த தேகத்தி உள்ள மாசை நீக்கினார். இந்த உடம்பிற்கு மாசு எப்படி வந்தது. தாய், தந்தையின் சேர்க்கையினாலும், பெண்ணும், ஆணும் கூடியதால் எடுத்த மும்மலத்தாலான தேகம் இது. களிம்பு அல்லது அசுத்தம் சேர்ந்ததுதான் இந்த தேகம். அழுக்கும் அழுக்கும் சேர்ந்து எடுத்த தேகம் இது. அப்படிப்பட்ட தேகத்தை அறிந்து அதிலிருந்த மாசை நீக்கினார்.
இந்த உடம்பில் உள்ள அழுக்கை அல்லது மாசை அல்லது மும்மல குற்றத்தை நீக்கியவர் ஆசான் வள்ளுவப்பெருமான். மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் என்று சொல்லப்பட்ட இந்தமும்மல கசடை நீக்கியதால் இனி அவர் பிறக்கமாட்டார். பேதமையை நீக்கியவர். பேதமையை அல்லது அறியாமையை அல்லது தன்னை பற்றி புரிந்துகொள்ள முடியாத பலகீனத்தை உண்டுபண்ணக்கூடியது இந்த உடம்பு. இதுதான் இயற்கை. இயற்கையின் அமைப்பே இப்படித்தான் உள்ளது.
பேதமையாகிய அறியாமை அல்லது மும்மலம் எப்படி வந்தது? பசியினால்தான் மும்மலம் வந்தது. மும்மலத்தை உருவாக்குவது பசி. தாய், தந்தையின் மும்மலத்தால் அல்லது மல, ஜல, சுக்கிலத்தால் அல்லது மல, ஜல சுரோணிதத்தால் தாய், தந்தையினுடையெ களிம்பு தேகத்தால் வந்ததுதான் இந்த தேகம். இதை அறிந்து கொண்டான்.
பசியை அறிந்தான். பசியை அறிந்து அந்தப் பசிதான் உடம்பு வளர்வதற்கு காரணமாக இருக்கிறது என்பதை அறிந்தான். பசிதான் இந்த உடம்பை வளர்க்கிறது. பரிணாம வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதும் பசிதான். அதை அறிந்து வென்றுவிட்டான்.
பசியை எப்படி வென்றான்? உடம்பினுள்ளேயே ஒருவகையான உஷ்ணத்தை உண்டு பண்ணினான். இந்த புற உடம்பு கழிய கழிய புற உடம்பு என்று சொல்லப்பட்ட மாசு தேகம் அல்லது அசுத்த தேகம் அல்லது அழுக்கு தேகம் நீங்க நீங்க உள்ளே ஒரு ஜோதி தோன்றுகிறது. உள்ளே ஒரு உஷ்ணம் தோன்றுகிறது. அந்த உஷ்ணத்தின் துணை கொண்டுதான் புற உடம்பை நீக்கினான்.
மும்மல சேறு நீங்கியது. களிம்பு நீங்கியது. அது நீங்க, நீங்க ஒரு ஒளி உடம்பு உண்டாகிறது. அமிழ்தபானம் சாப்பிடுகிறான். அந்த அமிழ்தபானம் சாப்பிடும்போது பசி அற்றுப்போகிறது. அதுவே பசியை நீக்குகிறது.
எந்த உடம்பில் உஷ்ணம் இருக்கிறதோ, அந்த உடம்பில் பசிக்கு காரணமாக இருப்பது அதே வெப்பம்தான்.
அந்த வெப்பத்தின் துணை கொண்டு உள்ளே முறையோடு, வகையோடு உஷ்ணத்தை ஏற்றினால் இந்த உடம்பிற்குள்ளேயே அமிழ்தபானம் சிந்தும் என்பார். அந்த அமிழ்த பானத்தை உண்ணுகின்ற மக்கள்தான் பிறவியற்றுப்போவார்கள்.
மகான் மஸ்தான்,
ஆடிய கூத்தினைப் போற்றி - அருள்
ஆனந்த்ஞ் சேரர்க்கு அருளினிற் றோற்றி
ஓடிய காற்றினை யேற்றி - அதில்
உருகியொழுகும மிர்தத்தை தேற்றி.
(மகான் மஸ்தான் சாகிபு-ஆனந்தக்களிப்பு- கவி எண் 13)
-என்பார். ஆக உடம்பில் உள்ள கனலை கபாலத்தில் ஏற்றி அதன் மூலமாக அமிழ்தபானத்தை உண்ணுகின்ற மக்களுக்குப் பசி இருக்காது. பசி அற்றுப்போனதால் தேகத்தில் உள்ள மலக்குற்றம் நீங்கும். மலக்குற்றம் நீங்கினால் உடம்பின் உள்ளே ஜோதி தோன்றும்.
இப்படிப்பட்ட வரம் பெற்றவர்கள்தான் ஞானிகள். இவர்கள் எதையும் செய்வார்கள். அவர்கள் வல்லமைக்கு ஈடே கிடையாது. இதை ஆசான் வள்ளுவப் பெருமான் சொல்லுவார்,
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
-திருக்குறள்-தவம்-குறள் எண் 269.
என்பார். ஆசான் அகத்தீசர், ஆசான் நந்தீசர், ஆசான் திருமூலதேவர் போன்றஞானிகள் மீது அன்பும், பக்தியும் செலுத்தினால் அவர்கள் பக்தி செலுத்தியவனுக்கு மேலான் இந்த அறிவை தருகிறார்கள்.
வாசி வசப்படச் செய்து ஓடுகின்ற காற்றை புருவமத்தியில் செலுத்தி, அதன்மூலமாக கனலை ஏற்றச் செய்து, அந்தக் கனல் மூலமாக இந்த உடம்பில் இருக்கிற கசடை நீங்க செய்து அதன் மூலமாக் அமிழ்தபானத்தை ஊட்டுகிறார்கள்.
இப்படிப்பட்ட செயலை ஞானிகள்தான் செய்ய முடியும். ஞானிகளின் திருவடியை பற்றினால்தான் அந்த உண்மையை உணர்த்துவார்கள். அப்படி உணர்த்தினால்தான் மலக்கசடு, பேதமை நீங்கும்.
நமக்கு அறியாமையை உண்டுபண்ணுகின்ற கசடு நீங்கும். இதை ஆசான் வள்ளுவப்பெருமான் 'சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின்' என்பார்.
சார்பு உண்ர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றால், எல்லா உயிரையும் சார்ந்திருப்பது மும்மலம். மும்மலம் என்று சொல்லப்பட்ட களிம்பு தேகத்தை அல்லது அசுத்த தேகத்தை உணர்த்துவார்.
எல்லா உயிரையும் நரகத்திற்கு தள்ளக்கூடிய மும்மலத்தை உணர்ந்து அதை நீக்க கற்றுக்கொண்டால், மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்- மீண்டும் இவனை அழித்து, மீண்டும் மீண்டும் இவனுக்கு பிறவியை உண்டாக்கி இவனை மறுபடியும் அழிக்கும். இந்த உடம்பிற்கு மரணம் வந்து இவன் மீண்டும் பிறக்கமாட்டான் என்பார்.
இதை ஆசான் வள்ளுவப்பெருமான்,
சார்புஉணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.
(திருக்குறள் - மெய் உணர்தல் -
குறள் எண் 359)
என்கிறார். இந்த நிலைகள் எல்லாம் யோகிகளுக்கு மட்டும் தெரியும். யோகிகள் மீது பக்தி செலுத்தினால் சொல்லுவார்கள். இந்த ரகசியத்தை அறிந்தவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு பெறலாம் என்கிறார் திருவள்ளுவர்.
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.
(திருக்குறள் - மெய் உணர்தல் -
குறள் எண் 357)
ஓர்த்து-ஆராய்ந்து, உள்ளது உணரின் - உண்மைப்பொருளை உணர்ந்தால், ஒருதலையாப் - ஒருதலைப்பட்சமாக, உள்ளது உணரின் - அப்படி ஆராய்ந்து உணரப்பெற்றால்
ஒருதலையாப் பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு - மீண்டு பிறக்க அவசியம் இல்லை. நீ சாகமாட்டாய் என்கிறார் திருவள்ளுவர்.
இதில் இப்படி ஒரு மர்மம் இருக்கிறது. இதை பெறுவதற்கு ஞானிகள் என்ன செய்தார்கள்? தினம் தினம் தலைவனை(இறைவனை) பூஜை செய்து ஆசிபெற்றார்கள். அவர்கள் எப்படி பூஜை செய்கிறார்கள்?
உலக நடையில் இருக்கும் மக்களை போல பூஜை செய்ய மாட்டார்கள். ரகசியமாய் உட்கார்ந்து தியானம் செய்வார்கள். யாரை நினைத்து தியானம் செய்யவேண்டும்? இப்படிப்பட்ட் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்ற ஞானிகளை நோக்கி தியானம் செய்யவேண்டும்.
ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூல தேவாய நம, ஓம் கருவூர் தேவாய நம என்று சொல்லி நாம ஜெபம் செய்கிறார்கள்.
- அனைத்து விவரங்களையும் குறிக்கும் மேடு தான் சூரிய மேடு.
- சூரியனது பலம் பூரணமாக உள்ளது என்று அர்த்தம்.
சூரிய மேட்டின் முக்கியத்துவம் அதில் உள்ள குறியீடுகளுக்கான விளக்கங்கள் குறித்து பார்ப்போம்..
மோதிர விரலின் அடிப்பாகம் தான் சூரிய மேடு. நம் உழைப்பு நமக்குப் பயன் தருமா? இல்லை எந்த அளவிற்குப் பலன் தரும். சமூகத்தில் கிடைக்கும் புகழ், அரசியலில் ஈடுபடலாமா? போன்ற அனைத்து விவரங்களையும் குறிக்கும் மேடு தான் சூரிய மேடு.
ஒருவர் கையில் சூரிய மேடு உப்பலாகவும், நன்கு கம்பீரமாகவும் அமைந்து இருக்கும் பட்சத்தில் அவருக்கு சூரியனது பலம் பூரணமாக உள்ளது என்று அர்த்தம்.

சூரிய மேட்டில் ஒரு செங்குத்து ரேகையும், அதன் மேல் ஒரு நட்சத்திரக் குறியும் அமைந்து இருந்தால் அந்த நபர் நல்ல புத்தியுடன் திகழ்வார். அது மட்டும் அல்ல, அவர் அதிக அதிர்ஷ்டம் உடையவரும் கூட. அதுவே சூரிய மேட்டில் வெறும் செங்குத்து ரேகை மட்டும் காணப்பட்டால் அவருக்கு புகழ், கீர்த்தி, செல்வம், செல்வாக்கு இருக்கும். அதிர்ஷ்டம் என்பதை விட அவர் உழைப்பினால் முன்னேறுவார். பெயர் பெறுவார். சூரிய மேட்டில் பெருக்கல் குறி அல்லது சதுரக்குறி காணப்பட்டால் அவர் எளிமையான செல்வந்தராக இருப்பார். டாம்பீகம் அறவே அவருக்குப் பிடிக்காது. சூரிய மேட்டில் வட்ட வளையம் இருந்தால் புகழ் மட்டுமே கிடைக்கும். அந்தப் புகழை அடைய பல காலம் காத்திருக்க வேண்டும்.
சூரிய மேடு மிகவும் மெல்லியதாக வழுக்குன்றி இருந்தால் அவருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பில்லை.
சுய தொழில் செய்து முன்னேறுவார். சூரிய மேட்டில் முக்கோணம் இருந்தால் அந்த நபர் ஏதேனும் சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபடுவார்.
சூரிய மேட்டில் எந்த ரேகையுமே காணப்படாமல் வெறும் ஒரு நட்சத்திரக் குறி மட்டும் இருந்தால் அந்த நபர் பல காலம் கஷ்டப்பட்டு பின்னரே முன்னேறுவார். அது மட்டும் அல்ல, வாழ்வில் அதிக ஏற்றத் தாழ்வுகளை சந்திப்பார். சூலக் குறியுடன் காணப்படும் சூரிய மேடு திடீர் அதிர்ஷ்டத்தை பெற்றுத் தரும். அரசியலில் ஜெயிக்க இந்த சூரிய மேடு தெளிவாகவும், கரும் புள்ளிகள் இல்லாமலும், அழுத்தமாகவும் இருத்தல் வேண்டும்.
சூரிய மேட்டில் உள்ள குறிகள் சொல்லும் பலன்கள்:
சூரிய மேட்டில் ஒரு கோடு மட்டுமே இருந்தால் அது நல்ல செல்வ நிலையை தரும். கௌரவம் மரியாதை ஆகிய இவற்றை மேம்படுத்தும்.

ஜோதிடர் அ.ச.இராமராஜன்
சூரிய மேட்டில் கரும் புள்ளிகள் காணப்பட்டால் வாழ்வில் அதிக ஏமாற்றம் ஏற்படும். நிறைய இழப்புக்களையும் சந்திக்க நேரிடும்.
சூரிய மேட்டில் பெருக்கல் குறிகள் காணப்பட்டால் வாழ்வில் புகழ் பெற்றாலும் கூட விரைவில் அந்தப் புகழை எல்லாம் இழந்து, பெருமைகளையும் உடன் இழந்து பெருத்த அவமானங்களை அந்த ஜாதகர் சந்திக்க நேரிடும். சூரிய மேட்டில் நட்சத்திரம் காணப்பட்டால் அது கலைத்துறையில் அதிக ஈடுபாட்டை அளிக்கும். திறமை, செல்வம், உயர் பதவிகள் கூட தேடி வரும்.
சூரிய மேட்டில் பல கோடுகள் இருக்கும் பட்சத்தில் கலைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் பதவிகள் உங்களை தேடி வரும்.
சூரிய மேட்டில் சதுரம் காணப்பட்டால் வாழ்வில் ஏமாற்றங்களை சுதாரித்து வென்று காட்டுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
சூரிய மேட்டில் முக்கோணம் காணப்பட்டால் கலைத் துறையில் கவுரவம் அதிகரிக்கும். சூரிய மேட்டில் சூரியனின் சின்னம் காணப்பட்டால் செல்வாக்கு, புகழ், பெருமை என அனைத்து விதங்களிலும் நல்ல பலனை தரும். சூரிய மேட்டில் சந்திரனின் சின்னம் காணப்பட்டால் வாழ்வில் நல்ல உயர்வு உண்டு. இலக்கியத்தில் கூட அதிக ஈடுபாட்டை இந்த அமைப்பு ஏற்படுத்தும். சூரிய மேட்டில் செவ்வாயின் சின்னம் காணப்பட்டால் போர்த் தொழிலில் ஈடுபாடு அதிகரிக்கும். தலைவராகும் தகுதியை தரும்.
சூரிய மேட்டில் சனியின் சின்னம் காணப்பட்டால் அவர் பிறரை ஏமாற்றும் தன்மைகளுடன் இருப்பார். குறுக்கு வழிகளில் கூட அதிகம் ஈடுபடுவார்.
சூரிய மேட்டில் குருவின் சின்னம் காணப்பட்டால் அது அரசியல் வாழ்வில் வெற்றி தரும். நல்ல அறிவாற்றலையும், புகழையும் பெற்றுத் தரும்.
சூரிய மேட்டில் சுக்கிரனின் சின்னம் காணப்பட்டால் உலக சுகங்கள் அனைத்தையும் அனுபவிப்பார்கள். சூரிய மேட்டில் ராகுவின் சின்னம் காணப்பட்டால் அவர்களுக்கு உடல் நலம் வெகுவாக பாதிக்கும். மருத்துவத்திற்கு என்று ஒரு பெரும் தொகையை எதிர்காலத்தில் மாதாமாதம் செலவழிப்பார்கள். சூரிய மேட்டில் கேதுவின் சின்னம் காணப்பட்டால் எப்போதும் தவறான தீர்மானங்களை அதிகம் எடுத்து வாழ்க்கையில் அதனால் நிறைய சிக்கல்களை சந்திப்பார்கள்.
சூரிய மேட்டில் வலை சின்னம் காணப்பட்டால் கலைத்துறையில் தோல்வியை காண்பார்கள். தொடர்ந்து பல தோல்விகளை சந்திப்பார்கள்.
சூரிய மேட்டில் வட்டம் காணப்பட்டால் பல வெளிநாடுகளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கப்பெறும். நல்ல புகழை தேடித் தரும்.
செல்-9965799409






