என் மலர்
புதுச்சேரி
சுப்ரீம் கோர்ட்டின் இடஒதுக்கீடு தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் எம்.பி.ராமதாஸ் பெருமிதம் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இதனால் நாடு முழுவதும் 4 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர். தாமதப்படுத்தப்பட்ட, மறுக்கப்பட்ட நீதியாக இருந்தாலும், இன்றாவது இத்தீர்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இதர பிற்படுத்தப்பட்டோரில் மிக பிற்படுத்தப்
பட்டோரும் சேர்க்கப்படுவார்கள். இதனால் மிக பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் பயனடைவர் என தெரியவில்லை.
எனவே இடஒதுக்கீடு மாநில அளவில் இருக்க வேண்டும். அகில இந்திய அளவில் இருக்கக்கூடாது. மாநில அரசே 100 சதவீத இடத்தையும் நிரப்ப வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தமிழகத்துக்கு கிடைத்த வெற்றியாக இருந்தாலும் 69 சதவீத இடஒதுக்கீடை உறுதிபடுத்திய ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுவை சின்னசுப்புராய பிள்ளை வீதியில் ஹார்டுவேர்ஸ் என்ற கடை பெயரில் போதை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை சின்னசுப்புராய பிள்ளை வீதியில் ஹார்டு வேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை என்ற பெயரில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரியக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்&இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த கடையில் சிலர் வந்து செல்வதுமாக இருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் ஏராளமானவை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தை போலீசார் கண்டனர். இதையடுத்து அந்த கடையில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் புதுவை தென்னஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 36), உருளையன்பேட்டை ஜான்சிநகரை சேர்ந்த ஜெமராசன் (48) மற்றும் சின்னசுப்புராயபிள்ளை வீதியை சேர்ந்த மோகன்லால் (25), பெங்களூருவை சேர்ந்த ராஜாராம் (32) என்பது தெரியவந்தது.
இவர்களில் மகேந்திரனும், ஜெமராசனும் கூட்டாக சேர்ந்து ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை என்ற பெயரில் போதை பொருட்கள் விற்பனை செய்ததும், இவர்களது கடையில் மோகன்லால் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
மேலும் மகேந்திரனுக்கும், ஜெமராசனுக்கும் பெங்களூருவை சேர்ந்த ராஜாராம் போதை பொருட்களை சப்ளை செய்துள்ளார். இதற்கான பணத்தை வசூல் செய்ய வந்தபோது அவரும் போலீஸ் பிடியில் சிக்கி கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 4 செல்போன்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் விற்பனை பணம் ரூ-.3 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரோனா பரவல் எதிரொலியாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் பக்தர்கள் நீராட மீண்டும் தடை விதித்து காரைக்கால் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், கோவில் ஐதீகமுறைப்படி, முதலில் நளன்குளத்தில் புனித நீராடுவார்கள். நீராடாதவர்கள், குறைந்தபட்சம் நளன் குளத்தில் இறங்கி, தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு, குளத்தையும் அங்குள்ள விநாயகரையும் வணங்கிவிட்டு, தர்பாராண்யேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்றுவிட்டு, கடைசியாக சனீஸ்வரரை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில், நாடெங்கும் கொரோனா தொற்று பரவியதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், நளன் குளத்தில் பக்தர்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நளன் குளத்தில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நளன் குளத்தில் பக்தர்கள் நீராட மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையிலும் மாவட்டத்தில் தொற்றுப் பரவலை தவிர்க்கும் வகையிலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி வரும் 31-ந் தேதி நள்ளிரவு வரை உடனடியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
அதன்படி மறு அறிவிப்பு வரும் வரை, திருநள்ளாறு நளன் தீர்த்தம் மற்றும் பிற தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்படுகிறது. முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதியோர், குழந்தைகள், இணை நோய்கள் உள்ளோர், திருநள்ளாறு யாத்திரை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை அவசியம் போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை காட்டினால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலெக்டர் அர்ஜூன் சர்மாவின் இந்த உத்தரவையடுத்து சனீஸ்வரர் கோவிலில் உள்ள நளன்குளத்தில் பக்தர்கள் உள்ளிட்ட யாரும் நீராட முடியாத அளவிற்கு, குளத்தில் இருந்த ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்கலாம்....நாளை முழு ஊரடங்கு: பவானி கூடுதுறையில் பரிகாரம், புனித நீராட தடை
இந்தநிலையில், நாடெங்கும் கொரோனா தொற்று பரவியதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், நளன் குளத்தில் பக்தர்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நளன் குளத்தில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நளன் குளத்தில் பக்தர்கள் நீராட மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையிலும் மாவட்டத்தில் தொற்றுப் பரவலை தவிர்க்கும் வகையிலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி வரும் 31-ந் தேதி நள்ளிரவு வரை உடனடியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
அதன்படி மறு அறிவிப்பு வரும் வரை, திருநள்ளாறு நளன் தீர்த்தம் மற்றும் பிற தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்படுகிறது. முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதியோர், குழந்தைகள், இணை நோய்கள் உள்ளோர், திருநள்ளாறு யாத்திரை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை அவசியம் போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை காட்டினால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலெக்டர் அர்ஜூன் சர்மாவின் இந்த உத்தரவையடுத்து சனீஸ்வரர் கோவிலில் உள்ள நளன்குளத்தில் பக்தர்கள் உள்ளிட்ட யாரும் நீராட முடியாத அளவிற்கு, குளத்தில் இருந்த ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்கலாம்....நாளை முழு ஊரடங்கு: பவானி கூடுதுறையில் பரிகாரம், புனித நீராட தடை
சூப் குடித்துவிட்டு பணம் தராமல் வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூரை அடுத்த மங்கலம்-உறுவையாறு புதுபாலத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் சூப் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று சூப் கடையில் ஒருவர் தகராறு செய்வதாகவும், பொதுமக்களை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டுவதாக மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் புதுக்கடை- மடுகரை சாலையை சேர்ந்த தேவநாதன் மகன் பார்த்தசாரதி என்பது தெரியவந்தது.
ரவுடியான பார்த்தசாரதி மீது ஏற்கனவே ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் கொலை, 2 அடி-தடி வழக்கு உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து பார்த்தசாரதியை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்க உள்ளனர்.
பிரதமர் பாதுகாப்பு குளறுபடிக்கு பஞ்சாப் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் முதல்-அமைச்சரும், கவர்னரும் இணைந்து செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் இதுபோல இல்லாததால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இப்போது அந்த நிலை இல்லை. புதுவை கவர்னர் தமிழிசையின் முழு ஒத்துழைப்போடு அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எதிர்கட்சிகள் கூறுவது போல எந்த தடையும் இல்லை.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்றும். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் குறைந்தவுடன் பிரதமர் மோடியை சந்திப்போம். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகள் முதல்-அமைச்சர்கள் வரை ஊழல் செய்கின்றனர். இதற்கான ஆதரம் உள்ளது என குற்றச்சாட்டை கூறியுள்ளார். அந்த ஆதாரங்களை என்னிடம் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்.
புதுவை அரசு பொறுப்பேற்று 7 மாதங்களில் எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். இன்னும் 5 ஆண்டுகள் உள்ளது. அனைத்து அறிவிப்புகளையும், வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றும். கொரோனா பாதிப்பு அதிகமானால் ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய 3 இடத்தை தேர்வு செய்துள்ளோம். டாக்டராக கவர்னர் ஆலோசனை வழங்குகிறார். இதில் என்ன தவறு உள்ளது? மாநில அந்தஸ்து கேட்டு ஆண்டுதோறும் வலியுறுத்துகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். பிரதமர் மோடியை சந்திக்க பயம் என்பது தவறான குற்றச்சாட்டு.
பிரதமர் மோடி மிக நெருங்கிய நண்பர். அவரை விரைவில் கண்டிப்பாக சந்திப்பேன். பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கப்பவிடவில்லை. இதற்கு முழு பொறுப்பையும் பஞ்சாப் அரசு ஏற்க வேண்டும். ஒரு மாநிலத்துக்கு பிரதமர் வரும்போது அதன் முழு பாதுகாப்பையும் மாநில அரசு ஏற்பதுதான் கடமை. பிரதமருக்கு சங்கடத்தை உருவாக்கியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவையில் 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 367 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 129, காரைக்காலில் 41, மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 64, காரைக்காலில் 19, மாகியில் 9 பேர் என 92 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 8, காரைக்காலில் 5, மாகியில் ஒருவர் என 14 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 998 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 555 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 334, காரைக்காலில் 108, ஏனாமில் 2, மாகியில்26 பேர் என 470 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 562 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 881 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 14 லட்சத்து 37 ஆயிரத்து 971 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் வருகையை தடுக்கவே தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளை திறக்க தற்போதைய தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது.
இவ்விழாவில் பங்கேற்பதோடு, மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக பிரதமரின் தமிழக வருகையை தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் ஊரடங்கும், கொரோனா கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலத்திலிருந்து வந்து புத்தாண்டை கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்துக்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது வாய் திறக்காமல் மவுனமாக இருந்த தி.மு.க. தற்போது பிரதமர் வருகையை அரசியல் நோக்கத்தோடு எதிர்க்கிறது.
புதுவை மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது எதிர்க்காத தி.மு.க. மலிவு விளம்பர அரசியல் செய்ய தற்போது பிரதமர் வருகையை எதிர்க்கின்றனர். புதிய அரசு பொறுப்பேற்றது முதல் அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. ஆனால் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அடிமை அரசு என விமர்சித்துள்ளார்.
கவர்னர் புதுவை அரசுக்கு உறுதுணையாக உள்ளார். அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைத்து அனுமதியளிக்கிறார். மத்திய அரசும் புதுவை அரசு திட்டங்களுக்கு அனுமதியளித்து வருகிறது. அறிவித்த எதையும் நிறைவேற்றாமல் இருண்ட ஆட்சி நடத்திய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.
தொடர்ந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில் மாநில அந்தஸ்து கிடைத்தால் மட்டும்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற நிலை இல்லை என்பதையும் கூறி வருகிறோம்.
ரங்கசாமி தலைமையிலான அரசு மழை நிவாரணம், முதியோர் உதவித்தொகை உயர்வு, தீபாவளிக்கு சர்க்கரை, அரிசி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், ரேசன்கடைகள் திறப்பு என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிதி கசிவை தடுத்தாலே புதுவையில் இன்னும் பல திட்டங்களை அரசால் நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் 10 பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என ரங்கசாமி கூறினார்
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, உலர்திராட்சை உட்பட 10 பொருட்கள் அடங்கிய ரூ.490 மதிப்பிலான பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். இந்த பொங்கல் பரிசு பொருட்களை வரும் 10-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
புதுவையில் தேசிய இளைஞர் விழா வரும் 12-ந்தேதி முதல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. இப்போது காணொலியில் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காணொலியில் விழாவை தொடங்கி வைப்பார். அந்தந்த மாநிலங்களில் இருந்தபடியே இளைஞர்கள் இந்த விழாவை கொண்டாடுவர்.
புதுவையில் கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுஇடைங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். இலவசமாக முக கவசம் வழங்க அரசு நடடிக்கை எடுத்து வருகிறது.
புதுவையில் கூடுதலாக 10 ஆயிரம் முதியோர், விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். விடுபட்ட 6 ஆயிரம் பேருக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கனமழையால் சேதமடைந்த புதுவையின் அனைத்து சாலைகளையும் புதிதாக அமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. விரைவில் அனைத்து சாலைகளும் புதிதாக போடப்படும்.
புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. புதுவையில் காவலர் பணியிடங்களை நிரப்ப உடல் தகுதி தேர்வு வரும் 19-ந்தேதி நடத்தப்படுகிறது. தொடர்ந்து ஐ.ஆர்.பி.என். உட்பட ஆயிரம் காவலர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் நமோ கிரிக்கெட் போட்டிக்கான கோப்பை மத்திய மந்திரி அறிமுகம் செய்து வைத்தார்.
புதுவை:
கொரோனா தோற்றல் நாட்டு மக்கள் பாதிக்காத வகையில் பிரதமர் மோடி அவர்களின் முயற்சியால் இதுவரை இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.
பிரதமர் மோடியின் இந்த செயலை பாராட்டும் விதமாக புதுவை பா.ஜனதா இளைஞரணி சார்பில் நமோ கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டது. அதனடிப்படையில் 8.1.2022 அன்று காலை 8 மணிக்கு தாகூர் கலைக்கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
கிரிக்கெட் போட்டியை புதுவை பா.ஜனதா இளைஞரணி மாநில துணைத்தலைவர் உமாசங்கர் தலைமையில் இளைஞரணி துணைத்தலைவர் ராக் பேட்ரிக், பொதுச்செயலாளர் வேல்முருகன், செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.
போட்டியை புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா நிர்வாகிகள் தொடங்கி வைக்கின்றனர்.
முன்னதாக புதுவை வந்த மத்திய இளைஞர் நலம் விளையாட்டு மற்றும் தகவல் தொடர்பு மந்திரி அனுராக் தாகூர் நமோ கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்பட உள்ள கோப்பைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு, நமோ கிரிக்கெட் டைட்டில் பான்சர் ஜி.கே.ஆர். ரியல் எஸ்டேட் மற்றும் கன்செக்ஷன் உரிமையாளர் ஜி.கே.ராஜன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளை தொடங்க உள்ள இந்த நமோ கிரிக்கெட் போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனத்தைச் சேர்ந்த 50&க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகளும் போட்டியில் தனிநபர் சாதனைக்கான ரொக்கப்பரிசு கோப்பைகளும் வழங்கப்படுகிறது.
புதுவையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 8 மாடுகள் பரிமாக இறந்தன.
புதுச்சேரி:
புதுவை லாம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்தவர் சம்பத் (வயது 36). இவர் 20 மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மாடுகளை தினமும் வயல்வெளி நகர் பகுதியில் உள்ள காலிமனைகளில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
அதுபோல மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். பின்னர் மாலை 6 மணிக்கு மேய்ச்சலில் இருந்து மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்துள்ளார்.
விக்டோரியா நகர் பகுதியில் அவர் மாடுகளுடன் வந்தபோது அங்கு மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்து கிடந்தது. சில நாட்களுக்கு முன் விழுந்த அந்த மின் கம்பி குறித்து அப்பகுதி மக்கள் மின்துறைக்கு புகார் தெரிவித்தும் அதனை சரி செய்யவில்லை என தெரிகிறது.
இதனால் மாடுகளை மின்கம்பி விழுந்து கிடந்த பகுதிக்கு செல்லாமல் சம்பத் ஓட்டி வந்தார். ஆனாலும், 8 மாடுகள் மின்கம்பியை
மிதித்தது. இதில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து சம்பவ இடத்திலேயே அவை பரிதாபமாக உயிரிழந்தன. இதனை கண்ட சம்பத் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து சம்பத் போலீசில் புகார் அளித்தார். முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மாடுகள் குறித்து விசாரணை நடத்தினர். மாடுகளை அடக்கம் செய்யும் பணி நடைபெற்றது.
புதுவையில் மாணவர்கள் மோதும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் ஒருவருக்கு ஒருவரை தாக்கிக்கொள்ளும் வீடியோ அனைத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பள்ளி சீருடையுடன் மாணவர்கள், இரு மாணவரை மாறி, மாறி தாக்குவதும் அதனை அங்கிருந்தவர்கள் ஏன் தாக்குகிறார்கள்? என்று கேள்வி எழுப்புவதும் பதிவாகி உள்ளது. பள்ளி சீருடையுடன் சிறிது நேரம் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் மாணவர்களை சமாதானப்படுத்தும் ஒரு மாணவன் அனைவரையும் கிளம்பும்படி கூறுவதும், வீடியோ எடுத்தவரிடம் எதற்கு எடுக்கிறீர்கள்? என கேள்வி கேட்பதும் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புகார் வரவில்லை என்றாலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முத்தியால்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுவையில் 50 சதவீத இருக்கைகளுடன் உணவகங்கள் இயங்கின.
புதுச்சேரி:
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் புதுவையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெரிய வணிக நிறுவனங்களில் காற்றோட்ட வசதியுடன் 50 சதவீத நபர்களுடன் அனுமதிக்கப்படுகிறது. வெளிமாநில பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒட்டல்கள், உணவகங்கள், ஆடிட்டோரியம், பியூட்டி பார்லர், சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், யோக பயிற்சி கூடம், சினிமா தியேட்டர் ஆகியவற்றிலும் 50 சதவீத நபர்கள் அனு மதிக்கப்படுகிறார்கள்.
உணவகங்களில் கொரோனா தடுப்பு வழி முறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. 4 பேர் அமர்ந்து உணவு அருந்தும் மேஜைகளில் 2 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டு வாடிக்கையாளர்ளுக்கு உணவு பரிமாறப்படுகிறது.
இந்த நடவடிக்கை மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






