என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நமோ கிரிக்கெட் கோப்பையை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிமுகம் செய்து வைத்தார்.
    X
    நமோ கிரிக்கெட் கோப்பையை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிமுகம் செய்து வைத்தார்.

    புதுவையில் நமோ கிரிக்கெட் போட்டி

    புதுவையில் நமோ கிரிக்கெட் போட்டிக்கான கோப்பை மத்திய மந்திரி அறிமுகம் செய்து வைத்தார்.
    புதுவை:

    கொரோனா தோற்றல் நாட்டு மக்கள் பாதிக்காத வகையில் பிரதமர் மோடி அவர்களின் முயற்சியால் இதுவரை இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. 

    பிரதமர் மோடியின் இந்த செயலை பாராட்டும் விதமாக புதுவை பா.ஜனதா இளைஞரணி சார்பில் நமோ கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டது.  அதனடிப்படையில் 8.1.2022 அன்று காலை 8 மணிக்கு தாகூர் கலைக்கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. 

    கிரிக்கெட் போட்டியை புதுவை பா.ஜனதா இளைஞரணி மாநில துணைத்தலைவர் உமாசங்கர் தலைமையில் இளைஞரணி துணைத்தலைவர் ராக் பேட்ரிக், பொதுச்செயலாளர் வேல்முருகன், செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.

     போட்டியை புதுவை  பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா நிர்வாகிகள் தொடங்கி வைக்கின்றனர்.

    முன்னதாக புதுவை வந்த மத்திய இளைஞர் நலம் விளையாட்டு மற்றும் தகவல் தொடர்பு மந்திரி அனுராக் தாகூர்  நமோ கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்பட உள்ள கோப்பைகளை அறிமுகம் செய்து வைத்தார். 

    இந்த அறிமுக நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு,  நமோ கிரிக்கெட் டைட்டில் பான்சர் ஜி.கே.ஆர். ரியல் எஸ்டேட் மற்றும் கன்செக்ஷன் உரிமையாளர் ஜி.கே.ராஜன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    நாளை தொடங்க உள்ள இந்த நமோ கிரிக்கெட் போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி  மற்றும் ஏனத்தைச் சேர்ந்த 50&க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகளும் போட்டியில் தனிநபர் சாதனைக்கான ரொக்கப்பரிசு கோப்பைகளும் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×