search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இடஒதுக்கீடு தீர்ப்பு: அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி - முன்னாள் எம்.பி.ராமதாஸ் பெருமிதம்

    சுப்ரீம் கோர்ட்டின் இடஒதுக்கீடு தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் எம்.பி.ராமதாஸ் பெருமிதம் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


    அகில  இந்திய  ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது. 

    இதனால் நாடு முழுவதும் 4 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர். தாமதப்படுத்தப்பட்ட, மறுக்கப்பட்ட நீதியாக இருந்தாலும், இன்றாவது இத்தீர்ப்பு  கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 

    இதர பிற்படுத்தப்பட்டோரில் மிக பிற்படுத்தப்
    பட்டோரும் சேர்க்கப்படுவார்கள். இதனால் மிக பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் பயனடைவர் என தெரியவில்லை. 

    எனவே இடஒதுக்கீடு மாநில அளவில் இருக்க வேண்டும். அகில இந்திய அளவில் இருக்கக்கூடாது. மாநில அரசே 100 சதவீத இடத்தையும் நிரப்ப வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தமிழகத்துக்கு கிடைத்த வெற்றியாக இருந்தாலும் 69 சதவீத இடஒதுக்கீடை உறுதிபடுத்திய ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கிடைத்த வெற்றியாகும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×