என் மலர்
புதுச்சேரி
பாகூர் அன்னுசாமி பள்ளியில் கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
புதுச்சேரி:
பாகூர், பேராசிரியர் அன்னுசாமி ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை எழுதவுள்ள மாணவ-மாணவிகளுக்கான கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
விரிவுரையாளர் மோகன் வரவேற்றார். ஆசிரியர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நீலம் அருள்செல்வி தொடக்க வுரை நிகழ்த்தினார். தாளாளர் இருதயமேரி நீலமேகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கை குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். எழுத்தாளரும், பயிற்சியாளருமான அரிமதி இளம்பரிதி கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட பாகூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். துணை முதல்வர் நீலம் அன்புசெல்வி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை விஜயலட்சுமி செய்திருந்தார்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் எல்லையம்மன் கோவில் தெருவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளர் தனுசு, நிர்வாகிகள் பழனி, ரவிதேவ் மற்றும் திரளான காங்கிரசார் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாகனத்தை தட்டுவண்டியில் கட்டி வைத்திருந்தனர். கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பில் சமையல் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி பேசியதாவது:-
5 மாநில தேர்தலுக்காக 127 நாட்கள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது புதுவையில் விலை சதமடித்துள்ளது.
கியாஸ் விலை ரூ.50 உயர்ந்து ரூ.ஆயிரத்தை தாண்டியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது. ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களை ரூ.5 லட்சத்துக்கு மோடி அரசு விற்பனை செய்துள்ளது.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை மூலம் ரூ.36 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் எங்கே போனது? என தெரியவில்லை. மத்திய அரசு கஜானாவை காலி செய்து திவாலாக்கி வருகிறது. இதனால் இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் உருவாகும். இதைப்பற்றி ரங்கசாமிக்கு எந்த கவலையும் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி கடிதம் எழுதுகிறார். தன் பதவியை காப்பாற்ற ரங்கசாமி மவுனமாக உள்ளார்.
ரங்கசாமியை வீழ்த்த பா.ஜனதா கங்கணம் கட்டி செயல்படுகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் படலமும் தொடங்கியுள்ளது. சட்டசபை கூடியுள்ள நிலையில் உள்துறை அமைச்சரும், 4 எம்.எல்.ஏ.க்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.
அவர்கள் வெளிநாட்டில் எவ்வளவு முதலீடுகளை கொண்டுவந்தார்கள்? என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் நிலையை பா.ஜனதா செய்து வருகிறது. அரசியலில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல. மக்கள் மத்தியில் மோடி அரசு நம்பிக்கையை இழந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் அம்பலத்தடையார் மடத்து வீதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சீனியர் தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார்.
காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மனித உரிமை பிரிவு சுரேஷ்பாபு, ஆர்.டி.ஐ. பிரிவு ராமலிங்கம், மூத்த வக்கீல் சுரேஷ், சிறுபான்மை பிரிவு சார்லஸ், நிர்வாகிகள் ராமலிங்கம், தியாகராஜன், ஜோசப், பிரதீஷ் இருதயராஜ், ராஜ்குமார், சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதேபோல புதுவையில் உள்ள அனைத்து தொகுதிக ளிலும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பியதில் ரூ.40Ñ லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை பொதிகை நகர் 3-வது கிராசில் வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.புதுவையில் உள்ள பல்வேறு வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்பும் பணியை அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பியதை அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது புதுவை பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 3 இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பியதில் லட்சகணக்கில் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் பணம் நிரப்பும் பணியை செய்த தனியார் நிறுவன ஊழியரான லாஸ்பேட்டை சாந்தி நகர் இளங்கோ தெருவை சேர்ந்த சிவரஞ்சன் (50) என்பவர் ரூ.40 லட்சத்து 22 ஆயிரத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் மின் கட்டணம் ரூ.45 ஆயிரத்தையும் கையாடல் செய்திருப்பது தெரிந்தது.இதனையறிந்த சிவரஞ்சன் தலைமறைவானார்.
பின்னர் இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி குமார் பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவரஞ்சனை தேடிவருகின்றனர்.
ஏனாம் பிராந்தியம் கோலாகபத்துல்லா வீதியில் தனியார் ஏஜென்சியின் ஏ.டி.எம் மையம் உள்ளது.
மாலை 4 மணிக்கு ஏ.டி.எம் மையத்திற்குள் சென்ற வாலிபர், தன் கையில் கொண்டு வந்த கம்பியால் எந்திரத்தை உடைத்துள்ளார். அலாரம் உதவியால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சித்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் ஏனாம் அம்பேத்கர் வீதியை சேர்ந்த மோகன சந்திரராவ் (எ) நாகாராவ்(19)என தெரியவந்தது.
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான நாகாராவ், பணம் இல்லாததால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சித்தது தெரிந்தது. திருட்டு முயற்சியால் ஏ.டி.எம் எந்திரம் உடைந்து பழுதானது. கைது செய்யப்பட்ட நாகாராவ், ஏனாம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன்(வயது31). மீனவர். இவர் பெரியகாலாப்பட்டில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் அடகு வைத்த நகையை மீட்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து ரூ-.1லட்சத்து 63 ஆயிரம் ரொக்கப்பணமும், அரை பவுன் மோதிரமும் கொண்டு சென்றார்.
மோட்டார் சைக்கிளை வங்கி முன்பு நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 60ஆயிரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணம் ரூ-.3 ஆயிரம் மற்றும் மோதிரத்தை வைத்துவிட்டு வங்கி சென்றார்.
பின்னர் நகையை மீட்டுக் கொண்டு அய்யனாரப்பன் வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதில் வைத்திருந்த ரூ-.3ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் அரை பவுன் மோதிரம் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அய்யனாரப்பன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் பதிவு எண் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வங்கி எதிரே நின்று வங்கிக்கு செல்வோரை கண்காணிப்பதும், பின்னர் அதில் ஒருவன் அய்யனாரப்பனின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்து நகை-பணத்தை திருடிக்கொண்டு தயாராக நின்றுக்கொண்டிருந்த மற்றொரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ரமலான் நோன்பை முன்னிட்டு பள்ளி வாசல்களுக்கு ரூ.30 ஆயிரம் நிதியை விரைந்து வழங்கவேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமியை மாநில தி.மு.க. செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, நாக.தியாகராஜன், சம்பத் ஆகியோர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், ரமலான் நோன்பை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி காய்ச்ச தலா ரூ.30 ஆயிரம் நிதி வழங்குவது வழக்கம்.
அடுத்த சில நாட்களில் ரமலான் நோன்பு விழா தொடங்க உள்ளது. அதனால், வழக்கம்போல் அனைத்து பள்ளி வாசல்களுக்கும் தேவையான நிதியை வழங்க
வேண்டும்.
தினசரி நோன்பு திறக்க ஏதுவாக, அதிகாலையில் பொதுப் பணித்துறை சார்பில் தண்ணீர் வினியோகத்தை சீர் செய்யவேண்டுறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் அருகே தொழிலாளியை தாக்கி மோட்டார் சைக்கிள்-செல்போன் பணத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்த்திட்டு வெற்றிவிநாயகர் நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது56). மொசைக் தொழிலாளி. தற்போது இவர் மேட்டுப்பாளையத்தில் மொசைக் வேலை செய்து வருகிறார்.
இவர் தினமும் வேலை முடிந்து ரெட்டியார்பாளையம் கம்பன்நகர் வழியாக வயல் வெளிநகரை கடந்து வீடு திரும்புவது வழக்கம்.
அதுபோல் கோவிந்தசாமி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வயல்வெளிநகர் வழியே வந்து கொண்டிருந் தார். அங்குள்ள சாய்பாபா கோவில் அருகே வந்த போது 2 வாலிபர்கள் திடீரென கோவிந்தசாமியை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் கோவிந்தசாமி சட்டைபையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோவிந்தசாமி வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால், கோவிந்தசாமி செல்போனை கொடுக்க மறுத்து கையால் இறுக்கமாக பிடித்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த தடியை எடுத்து கோவிந்தசாமியை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடமிருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு அதிவேகமாக சென்றனர்.
உடனே கோவிந்தசாமி அலறல் சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் கோவிந்தசாமியிடம் நடந்த விவரங்களை கேட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற நபர்களை பிடிக்க பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த கோவிந்தசாமி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வாலிபர் களை தேடி வருகிறார்கள்.
காரைக்கால் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது53). இவரது மகன் முரளிதரன்(19).
இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முரளிதரன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். மேலும் முரளிதரன் கடந்த நாட்களாக வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று முரளிதரன் உள்ளிட்ட வீட்டில் அனைவரும் இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். தொடர்ந்து காலையில் முரளிதரனின் தாய் கலைச்செல்வி எழுந்து பார்த்தபோது முரளிதரன் படுக்கையில் இல்லை. இதற்கிடையே முரளிதரன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சேலையில் தூக்குப்போட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
தொடர்ந்து முரளிதரன் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முரளிதரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து குமார் கோட்டுச்சேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் தொழிற்சாலைகளை கொண்டுவர புதிய தொழில் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும் என சட்டசபையில் சிவா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-
புதிய அரசாவது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என மக்கள் எதிர்பார்த்தனர். மத்திய அரசு புதுவைக்கு
ரூ.ஆயிரத்து 729 கோடி நிதியை ஒதுக்கியது. அதற்குமேல் மத்திய அரசு நிதி தரப்போவதில்லை. மத்திய அரசின் துணைத்திட்டங்கள் மூலம் நிதி பெற முடியும்.
எனவே முழுமையான பட்ஜெட்டையே தற்போது தாக்கல் செய்திருக்கலாம். கடந்த 5 ஆண்டாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப் படவில்லை.
தற்போது இரட்டை என்ஜினில் அரசு இயங்குவதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இரட்டை என்ஜினும் எதிரெதிர் திசையில் இயங்குவதால் அரசு எந்திரம் ஸ்தம்பித்துள்ளது. புதுவையில் உள்ள 19 வாரியங்கள் இயங்குகிறதா? என தெரியவில்லை. அந்த வாரியங்களில் பணிபுரியும் 6 ஆயிரத்து 500 ஊழியர்கள் 20 முதல் 70 மாதம் வரை சம்பளமின்றி உள்ளனர்.
தி.மு.க. ஆட்சியில் புதுவையில் சர்க்கரை ஆலை கொண்டு வரப்பட்டது. இந்த ஆலை தற்போது மூடிக்கிடக்கிறது. ஆனால் மத்திய அரசு நாடு முழுவதும் 170 ஆலைகளை புனரமைத்து திறந்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு தேவைப்படும் எத்தனால் தயாரிக்க இந்த ஆலைகளை திறந்துள்ளனர்.
அதேபோல நாமும் சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கலாம். பஞ்சாலை களையும் புனரமைத்து திறக்க வேண்டும். அப்போதுதான் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பிரதமர் மோடி பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என கூறியதை நம்பி மக்கள் வாக்களித்தனர்.
மத்திய அரசில் இருந்து வாரந்தோறும் அமைச்சர்கள் வருகின்றனர். ஆனால் புதுவைக்கான ஒரு திட்டத்தைக்கூட அறிவிப்பதில்லை.
இன்றையதினம் மத்திய உள்துறை மந்திரி, யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தை நேரடி யாக நாங்களே செயல் படுத்துவோம் என கூறி யுள்ளார்.
அப்படியென்றால் உங்கள் மாநில அந்தஸ்து கோரிக்கை என்ன ஆனது? அதை மறந்துவிட்டீர்களா? புதுவை அரசு கடந்த காலத்தில் செயல்படுத்திய காப்பீடு திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. பிரதமரின் காப்பீடு திட்ட மாக மாற்றிய பிறகு பயனற்று போய்விட்டது. காப்பீடு அட்டையை ஜிப்மர் மருத்துவமனை கூட ஏற்பதில்லை.
எனவே இதை மாற்றியமைக்க முதல்-அமைச்சர் முடிவு செய்ய வேண்டும். மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால் அங்கு இடஒதுக்கீடு கோர முடியாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழிற் சாலைகளை வரவேற்பதாக தொடர்ந்து அரசு கூறி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளிலும், புதிய ஆட்சியின் 10 மாதத்திலும் ஒரு தொழிற்சாலையாவது வந்துள்ளதா? புதிய தொழிற்சாலைக்கு என்ன சலுகை தர போகிறீர்கள்? புதிய தொழில்கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்.
சிறப்புக்கூறு நிதியை அரசு முழுமையாக செயல் படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சினை பூதாகரமாக உருவாகி வருகிறது. இதையும் தீர்க்க வேண்டும். மத்திய அரசோடு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா? என புதுவை காங். எம்.எல்.ஏ.வுக்கு வி.பி.ராமலிங்கம் சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் நியமன உறுப்பினர் ராமலிங்கம் பேசியதாவது:-
மத்திய அரசும், பிரதமரும் நாட்டின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வரும்போது அதை பாராட்ட வேண்டும், வரவேற்க வேண்டும். உக்ரைனில் போரில் சிக்கி தவித்த 18 ஆயிரம் மாணவர்களை மத்திய அரசு மீட்டு வந்துள்ளது.
கொரோனா காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கியுள்ளனர். மத்திய அரசின் செயல்பாட்டுக்கு 5 மாநில தேர்தலில் 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றதே மக்கள் அளித்த அங்கீகாரம் தான்.
புதுவையில் கடந்த ஆட்சியைவிட தற்போதைய ஆட்சி நன்றாகவே உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கட்சி தலைவர்போல செயல்பட்டதால்தான் எதிர்பாராத பல விளைவுகள் ஏற்பட்டது என பேசினார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர் வைத்தியநாதன் குறுக்கிட்டு பேசினார். இதனால் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்கள் விட்டுக்கொடுத்ததால்தான் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்.
புதுவையில் லாஸ்பேட்டை தொகுதியில் மட்டும்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். நான் இப்போது சவால் விடுகிறேன். நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருகிறேன். தைரியமிருந்தால் நீங்களும் ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள். தேர்தலில் போட்டியிடலாம். யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்த்துவிடலாம் என ராமலிங்கம் சவால் விட்டார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உங்களிடம் பணம் உள்ளது. தேர்தலை சந்திப்பீர்கள் என தெரிவித்தார்
முத்தியால்பேட்டை அ.தி.மு.க. சார்பில் காந்தி வீதியில் நீர்மோர் பந்தலை வையாபுரி மணிகண்டன் திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் காந்திவீதியில் உள்ள போலீஸ் நிலையம் அருகே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து குளிர்ந்த நீர், மோர், இளநீர், பதநீர் போன்ற பானங்களையும், வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி போன்ற பழங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கஜேந்திரன், பழனிசாமி, ராஜாங்கம், உதயசூரியன், செல்வம், மோகன், முருகேசன், விஸ்வநாதன், அந்துவான், கண்ணன், கார்த்திக், சிவா, சத்தியா, ராஜேஷ், மன்னாகட்டி, முனியாண்டி, நாகராஜ், ராமலிங்கம், பிரபா, நடராஜ், தனசேகர், ராதா, தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காலி பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் ஏறக்குறைய 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அவற்றை நிரப்ப அரசு இதுவரை எந்தவித நடவடி க்கையும் எடுக்க வில்லை. சமீபத்தில் காவலர் பணிக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் மற்ற துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங் களை நிரப்புவதற்கு ஒரு நிரந்தர மான பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கி அதன் மூலம் நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தி காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான 5 மாதங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 613 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் வழக்கமாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
கடந்த 10 ஆண்டாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஜூன் முதல் ஆகஸ்டு மாதத்துக்குள் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததால் மத்திய அரசு புதுவைக்கான இடைக்கால பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று கடந்த ஆகஸ்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டுக்கான பூர்வாங்க பணிகள் முடிவடையாததால் இந்த நிதியாண்டுக்கும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்தது.
இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கூடிய சபையின் தொடர்ச்சியாக இன்று சட்டசபை கூடியது. காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான 5 மாதங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 613 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்தார்.
இதை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாக்கெடுப்பு நடத்தி சபையின் ஒப்புதலை பெற்றார்.
தொடர்ந்து 2021-22-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களை முதல்- அமைச்சர், அமைச்சர்கள் துறைவாரியாக முன் மொழிந்தனர். இதற்கும் சபையில் குறள் வாக்கெடுப்பு நடத்திய சபாநாயகர் செல்வம் ஒப்புதல் பெற்றார்.
சபையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்- அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சித்தலைவர் சிவா குறுக்கிட்டு, ஏன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை?
கடந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டது. முழுமையான பட்ஜெட்டை எப்போது தாக்கல் செய்வீர்கள்? மத்திய அரசு நிதி தரவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
அவருடன் தி.மு.க- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று கேள்வி எழுப்பினர். தி.மு.க- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நீட், மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயம் ஆகியவை தொடர்பான பேனர்களை தூக்கி காண்பித்தனர்.
அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, உறுப்பினர்கள் அமைதியாக இருக்கும்படியும், முதல்-அமைச்சர் உரிய நேரத்தில் பதிலளிப்பார் என்றும் கூறினார்.
ஆனால் தி.மு.க- காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து பேசினர். சிவா பேசும்போது, டெல்லிக்கு முதல்-அமைச்சர் செல்லாததால் பட்ஜெட்டுக்கு அனுமதி தரவில்லை என கூறுகின்றனர். யாரோ ஒருவரின் கைப்பாவையாக இந்த அரசு செயல்பட வேண்டாம். ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடக்க வேண்டாம்.

முதல்-அமைச்சர் மிரட்டப்படுவதாக தகவல் வெளியாகிறது. இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினார். அவருடன் தி.மு.க- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் வெளியேறினர்.
இதையும் படியுங்கள்... சென்னை சென்ட்ரலில் மத்திய சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்