என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்த காட்சி.
பள்ளி வாசல்களுக்கு ரூ.30 ஆயிரம் நிதி-தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
ரமலான் நோன்பை முன்னிட்டு பள்ளி வாசல்களுக்கு ரூ.30 ஆயிரம் நிதியை விரைந்து வழங்கவேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமியை மாநில தி.மு.க. செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, நாக.தியாகராஜன், சம்பத் ஆகியோர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், ரமலான் நோன்பை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி காய்ச்ச தலா ரூ.30 ஆயிரம் நிதி வழங்குவது வழக்கம்.
அடுத்த சில நாட்களில் ரமலான் நோன்பு விழா தொடங்க உள்ளது. அதனால், வழக்கம்போல் அனைத்து பள்ளி வாசல்களுக்கும் தேவையான நிதியை வழங்க
வேண்டும்.
தினசரி நோன்பு திறக்க ஏதுவாக, அதிகாலையில் பொதுப் பணித்துறை சார்பில் தண்ணீர் வினியோகத்தை சீர் செய்யவேண்டுறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
Next Story






