என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கம் நடந்த காட்சி.
    X
    கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கம் நடந்த காட்சி.

    கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கம்

    பாகூர் அன்னுசாமி பள்ளியில் கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
    புதுச்சேரி:

    பாகூர், பேராசிரியர் அன்னுசாமி ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 10  மற்றும் பிளஸ்-2  பொதுத்தேர்வுகளை எழுதவுள்ள  மாணவ-மாணவிகளுக்கான கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. 

    விரிவுரையாளர் மோகன் வரவேற்றார். ஆசிரியர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்  நீலம் அருள்செல்வி தொடக்க வுரை நிகழ்த்தினார்.  தாளாளர் இருதயமேரி நீலமேகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கை குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். எழுத்தாளரும், பயிற்சியாளருமான அரிமதி இளம்பரிதி கலந்து கொண்டு  மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.   

    கருத்தரங்கில்  300-க்கும் மேற்பட்ட பாகூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். துணை முதல்வர் நீலம் அன்புசெல்வி நன்றி கூறினார். விழாவிற்கான  ஏற்பாடுகளை ஆசிரியை விஜயலட்சுமி செய்திருந்தார்.
    Next Story
    ×