என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போலீசாரை கண்டித்து வியாபாரிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை புதிய பேருந்து நிலையம் பின்புறம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் பேன்சி ஸ்டோர் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    விலை மலிவாக பொருட்கள் கிடைப்பதால் நரிக்குறவர்கள் இங்கு வந்து மணி, கொண்டை ஊசி, கம்மல், வளையல் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கி சென்று சில்லறை வியாபாரம் செய்வது வழக்கம். 

    இங்கு கடை வைத்திருப்-பவர் சங்கர் லால்(47).    இவரின் கடைக்கு 12 வயது நரிக்குறவ சிறுமி பொருட்களை வாங்க வந்துள்ளார். பின்னால் அவரது பெரியம்மா வந்துக்கொண்டிருந்தார்.
     
    அந்த சிறுமியிடம் சங்கர்லால் சிலுமிஷம் செய்ததாக  அவரது பெரியம்மாவிடம் கூறியுள்ளார். அவர் இது குறித்து  உருளையன்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தார். 

    உருளையன்பேட்டை போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில், சிறுமியின் உடலில் அவர் தவறான முறையில் கைவைத்தது உறுதியானது. இதனையடுத்து உருளையன்பேட்டை போலீசார் சங்கர்லாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.

    தகவலறிந்த சங்கர்லாலின் உறவினர்கள், புதிய பேருந்து நிலையத்தின் பின் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் இன்று கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

    பின்னர் அவர்கள் உருளையன் பேட்டை போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். சிறுமியை தவறான எண்ணத்தில் சங்கர்லால் தொடவில்லை, போலீசார் பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.
    உருளையன்பேட்டை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
    போக்குவரத்து அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    சி.ஐ.டி.யூ. ஆட்டோ சங்கம் சார்பில் போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். ஆட்டோ சம்மேளன தமிழ் மாநில பொதுச் செயலாளர் சிவாஜி கண்டன உரையாற்றினார். ஆட்டோ  சங்கபிரதேச கவரவத் தலைவர் முருகன், பொதுச் செயலாளர் மது என்ற லிங்கேசன், நிர்வாகிகள் மதிவாணன், விஜயகுமார், நூர் முகமது, ராமு, செந்தில்குமார், மனோகர், பழனிபாலன் உள்ளிட்ட திரளான ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். 

    ஆர்.டி.ஒ. கட்டண உயர்வையும் அபராதம் முறையும் வாபஸ் பெற வேண்டும். ஆட்டோ பெர்மிட் உரிமையாளர் இல்லாத வாகனங்களை சரண்டர் எடுத்து கொண்டு தற்போது பயன்படுத்திய ஓட்டுனர் களுக்கு புதிய பர்மிட் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உடனடியாக நல வாரியத்தை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கமும், புதுவை மாநில அனைத்து விளையாட்டு வீரர்கள் நலச்சங்கமும் இணைந்து மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம் நடத்தியது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கமும், புதுவை மாநில அனைத்து விளையாட்டு வீரர்கள் நலச்சங்கமும் இணைந்து மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாமை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடத்தியது.

    இந்த பயிற்சி முகாமுக்கு விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் இளங்-கோவன் தலைமை தாங்கினார். கராத்தே சங்கத்தின் தேசிய நடுவர்கள் அமிர்தராஜ், அய்யனார், கிருஷ்ணராஜ், மோகன், பிரவீன்குமார், விநாயாகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி-கள் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி முகாமில் தற்காப்பு பயிற்சி மற்றம் புதிய விதிமுறைகளின் படி கட்டாப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற சி.கே. பள்ளி மாணவர்களுக்கு புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் புதுவை விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் இளங்கோவன், துணைத்-தலைவர் மகேந்திரன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
    புதுவை-கடலூர் சாலை சீரமைப்பு பணி விரைவில் தொடங்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை முறையாக பராமரிக்-கப்படாமல் உள்ளது. 

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவது தொடர் கதையாக உள்ளது.சாலை முழுவதும் பள்ளம் ஏற்பட்டு, மோசமான தன்மையால், விபத்துக்கள் அதிகரித்து பலர் உயிரிழந்துள்ளனர். 

    மேலும் பலர் தங்களின் உடல் உறுப்புகளை இழந்து, வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்து வரு-கின்றனர்.

    இதனால், புதுவை-கடலூர் சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

    இதனையடுத்து, சுமார் ரூ.17 கோடி செலவில், இந்த சாலையை சீரமைத்து தரம் உயர்த்திட முடிவு செய்யப்பட்டது. மேலும், காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது போல் சாலையின் நடுவே தடுப்பு கட்டை அமைக்க கூடுதலாக 3 கோடி ரூபாய் மதிப்பீடு செய்-யப்பட்டது. 

    இதற்கான கூடுதல் நிதி கிடைக்காத நிலையில், சாலை தரம் உயர்த்தும் பணியும் தடைப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் புதுவை-கடலூர் சாலையை சீரமைப்பது எப்போது என பொது மக்கள் கேள்வி எழுப்பு-கின்றனர். 

    மேலும் சாலையில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளதையும் அவசர வேலையாக எடுத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.

    இந்த நிலையில், விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் உத்தரவின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், முதல் கட்டமாக அதிக விபத்து ஏற்படும் நோணாங்குப்பம், எடையார்பாளையம் முக்கிய சந்திப்புகளில் பேரிகார்டுகள் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.


    12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பேன்சி ஸ்டோர் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை சுப்பையா நகரை சேர்ந்தவர் சங்கர்லால் (வயது 42). இவர், புதிய பஸ் நிலையம் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். 

    இந்த கடையில் நரிக்குறவ பெண்கள் ஊசி பாசி மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி பஸ் நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில்  விற்பது வழக்கம். 

    அதுபோல் கணவரை இழந்த ஒரு நரிக்குறவ பெண் தனது 12 வயது மகளுடன் சங்கர்லால் கடைக்கு சென்று  ஊசி பாசி மணிகள் வாங்கி வந்தார்.

    ஒரு முறை தனது மகளை அனுப்பி சங்கர்லால் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது சங்கர்லால் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறி முறையிட்டார். 

    இதையடுத்து  அந்த பெண் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சங்கர்லாலை கைது செய்தனர்.
    அரியாங்குப்பம் அருகே நம்பிக்கை துரோகம் செய்ததாக தொழிலாளி சரமாரியாக தாக்கப்பட்டார்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருகே மணவெளி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 44). கட்டிட தொழி-லாளி.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுந்தரமூர்த்திக்கு பழக்கமான தவமணி என்பவரின் 5 வயது ஆண் குழந்தை கிணற்றில் விழுந்து இறந்து போனது. 

    இது சம்பந்தமாக அரியாங்-குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு-கின்றனர்.
     
    இதற்கிடையே தவமணி தனது குழந்தை இறப்புக்கு அங்கு விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் தான் காரணம் என்று கவர்னர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்.  அதற்கு சுந்தரமூர்த்தி உதவி செய்தார். 

    இந்த நிலையில் தவமணி அனுப்பிய புகார் மனுவில் சுந்தரமூர்த்தியின் உறவினர் மகனான தென்னரசு (19) என்பவரது  பெயரையும் சேர்த்து இருந்ததால் அந்த புகார் மனுவின் நகலை தவமணிக்கு தெரியாமல் சுந்தரமூர்த்தி சிவபாலனுக்கு கொடுத்ததாக கூறப்-படுகிறது. 

    இதனை அறிந்த தவமணி சுந்தரமூர்த்தி மீது ஆத்தி-ரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுந்தர-மூர்த்தி தனது வீட்டில் இருந்தார். 

    அப்போது தவமணி தனது கூட்டாளிகளான பார்த்திபன் மற்றும் பாலு ஆகியோரை அனுப்பி சுந்தர-மூர்த்தியை கடைக்கு செல்லலாம் என கூறி அழைத்து வருமாறு கூறிய-தாக தெரிகிறது.

    அதன்படி பார்த்திபனும், பாலுவும் சேர்ந்து சுந்தர-மூர்த்தியை மோட்டார் சைக்கிளில் தவமணி வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு தயாராக இருந்த தவமணி தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு பைப்பால் சுந்தர-மூர்த்தி தலையில் தாக்கினார். மேலும் பார்த்திபன் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த மர சட்டத்தால் தாக்கினார். 

    இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சுந்தரமூர்த்தி ரத்தம் கொட்டி மயங்கி போனார். 

    இதுபற்றி அறிந்த சுந்தரமூர்த்தியின் அண்ணன் கோவிந்தன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுந்தரமூர்த்தியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். 

    பின்னர் இதுகுறித்து சுந்தரமூர்த்தி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதகடிப்பட்டு பாளையம் பகுதியில் ரூ.16 லட்சம் செலவில் வாய்க்கால் அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலை பிரிவு தெற்கு கோட்டத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட மதகடிப்பட்டு பாளையம் சாலையில் ரூ.16 லட்சத்து 24 ஆயிரம் செலவில் வாய்க்கால் அமைக்கப்படுகிறது.

    சுமார் 300 மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட உள்ள இந்த வாய்க்கால் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணவாளன், உதவிப்பொறியாளர் தனசேகரன், இளநிலை பொறியாளர் கிருஷ்ணன், ஒப்பந்ததாரர் சரவணன் மற்றும் ஊர் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
    தேசிய அளவிலான யோகா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கவர்னரிடம் வாழ்த்து பெற்றனர்.
    புதுச்சேரி:
     
    சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் யோகாசன போட்டிகள் நடந்தது. இதில் வெற்றிப் பெற்றவர்கள்  கர்நாடக மாநிலம் பெங்களூரில்  கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் கலந்துக் கொண்டனர்.

    யோகா பயிற்சியாளர் சுரேந்திரன்,  குழு மேலாளராக விஜயகுமாரி சென்றனர்.  இப்போட்டியில் சீனியர் ஆண்கள் பிரிவில் புதுவையை சேர்ந்த  தினகரன்,  அஸ்வின்குமார் 6-வது  இடத்தையும் பெண்கள் ஜோடி யோகா போட்டியில்  கிருத்திகா, ரேவதி ஸ்ரீ  முதல் இடத்தையும் பெற்றனர்.  11-மாநிலங்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் புதுவை மாநிலம் 2-வது இடத்தை பெற்றது.

    வெற்றி பெற்ற  மாணவ-மாணவிகள் கவர்னர்  தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சங்க துணைத்தலைவர் கஜேந்திரன், சங்க பொருளாளர் சண்முகம், செயலாளர் தயாநிதி, துனை செயலாளர்கள் டாக்டர் பாலாஜி,  சதீஷ்குமார் உடனிருந்தனர். தொடர்ந்து அவர்கள் விவியன் ரிச்சர்ட் எம்.எல்.ஏ.விடமும் வாழ்த்துப் பெற்றனர்.

    மேலும் தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு மூத்த துணைத்தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி மாணவ-மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார்.
    பாரதியார் பல்கலைக் கூடத்துக்கு உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சமூக ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சமூக ஜனநாயக இயக்கங்களின் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு மனுஅளித்தனர். 

    அந்த மனுவில் புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்துக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த சந்திப்பின் போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் களம் செயலாளர் அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் பாவாடைராயன்,  தன்னுரிமைக் கழக தலைவர், சடகோபன்,  மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், செம்படுகை நன்னீரகம் தலைவர் ராமமூர்த்தி, ராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் அபிமன்னன்,  படைப்பாளர் இயக்க பொறுப்பாளர் தமிழ்நெஞ்சன் ஆகியோர் சென்றிருந்தனர். 

    இந்த நிகழ்ச்சியின் போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.
    சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது அவர்களுடைய போராட்டம் பல நாட்கள் நீடிக்கக்கூடும்.

    சேதராப்பட்டு:

    சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் என 75-க்கும் மேற்பட்டோர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தனர்.

    இதற்காக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க வானூர் ஒன்றிய தலைவர் தீன வெண்மதி தலைமையில் சத்துணவு ஊழியர்கள் இன்று அதிகாலை திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இருந்து ஒரு பஸ்சில் புறப்பட்டனர். இது ஆரோவில் போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், வீரமணி, உளவுப்பிரிவு போலீசார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பஸ்சை புறப்பட விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது சத்துணவு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது அவர்களுடைய போராட்டம் பல நாட்கள் நீடிக்கக்கூடும்.

    இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் உணவு சமைக்கும் பணி தடைபட்டு மாணவர்கள் பாதிக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இருந்து புறப்பட்ட பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் மற்ற ஊழியர்கள் வானூர், தைலாபுரம், கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    ஆனால், போலீசார் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பஸ்சை சிறை பிடித்த தகவல் மற்ற சத்துணவு ஊழியர்களுக்கு தெரியவரவே அனைவரும் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆதிதிராவிடர் நலதுறை சார்பில் கொம்பாக்கம் காலனியில் சிறப்பு- முகாமை சிவா எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்திருந்தார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையாவை அவரது அலுவல-கத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா சந்தித்து பேசினார்.  

    அப்போது வில்லியனூர் தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செய்யப்பட வேண்டிய பணிகள் பல தேங்கி கிடப்பது பற்றி எடுத்து கூறினார்.    

    சிறப்புக்கூறு நிதி மூலம்  மேற்கொள்ள வேண்டிய பணிள் மற்றும் மனைப்பட்டா பிரச்சினை குறித்தும் விவாதிக்க அனைத்து காலனி பகுதிகளிலும் சிறப்பு முகாம்களை நடத்தி ஆதிதிராவிட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், முகாமில் நில அளவைத்துறை இயக்குனரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 
     
    மேலும் காலனி பகுதிகளில் விளையாட்டுத் திடல், நூலகம் உள்ளிட்டவைகளை அமைத்துத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

    இதனைத் தொடர்ந்து துறை இயக்குனர் யஷ்வந்தையா காலனி பகுகளில் உள்ள பிரச்-சினைகளை தீர்க்க  சிறப்பு முகாம்களை நடத்துவதாகவும், முதல் கட்டமாக (புதன்கிழமை)  கொம்பாக்கம் காலனியில் முகாம் நடத்துவதாக உறுதி அளித்தார்.

    இந்த சந்திப்பில் தி.மு.க. நிர்வாகிகள் மணி-கண்டன், அங்காளன், செல்வநாதன், ராஜேந்திரன், பாஸ்கரன், அன்பு, அரிகிருஷ்ணன், ம.தி.மு.க. கபிரியேல், விடுதலை சிறுத்தைகள் அமுதவன், தமிழ்செல்வன், எழில்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    இந்திரா நகர் தொகுதி திலாஸ்பேட்டையில் சாலை பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.
    புதுச்சேரி:

    இந்திரா நகர் தொகுதி திலாஸ்பேட்டையில் சாலை பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.

    இந்திரா நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட திலாஸ்பேட்டையில் பாஞ்சாலி அம்மன் கோவிலை சுற்றியுள்ள அய்யனார் கோவில் வீதி, மேட்டு வீதி, தேரோடும் வீதி சிமெண்ட் சாலையாக மாற்றப்பட உள்ளது.

    பொதுப்பணித் துறை மூலம் நிதி ஒதுக்கி விரைவில் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இச்சாலை அமைப்பதற்கான பகுதிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர்,  மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
    ×