என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நடுரோட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தவர் இறந்து போனார்.
    புதுச்சேரி:

    புதுவை ரங்கப்பிள்ளை வீதி-காந்தி வீதியில் ஒரு தனியார் அரிசி கடை அருகில்  50 வயது மதிக்கதக்க ஒருவர் திடீரென ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். 

    உடனே அங்கிருந்த ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி மணிகண்டன்(வயது28) என்பவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி விழுந்தவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவரிடம் அங்கிருந்த போலீசார் விசாரித்த போது அவர் பெயர் மூர்த்தி என்றும் ஈரோட்டை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மூர்த்தி சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பதியில் இருந்து புதுவை வந்த ரெயிலில் போதை பொருட்கள் கடத்திய வட மாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக போலீஸ் ஐ.ஜி. சந்திரன் கஞ்சா தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டு கஞ்சா தடுப்பு வேட்டை நடத்தப்படும் என கூறினார். 

    அதன் பேரில் இன்று திருப்பதியிலிருந்து புதுவை வந்த ரெயிலில் போதைபொருட்கள் கடத்தி வருவதாக புதுவை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் ஐ.ஜி. சந்திரன் மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு வம்சிதா ரெட்டி தலைமையில் சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசாருடன் ரெயில்வே போலீசாரும் சேர்ந்து அதிரடி சோதனை நடத்தினர். 

    ரெயிலில் வந்த ஒடிசாவை சேர்ந்த வட மாநில வாலிபர்களின் உடைமைகளை சோதனை செய்த போது அதில் கிலோ கணக்கில் குட்கா, ஹான்ஸ், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போதை பொருட்களை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த வட மாநிலத்தை சேர்ந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் ஐ.ஜி சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் இன்று நடந்ததை போல கஞ்சா மற்றும் போதைபொருள் தடுப்பு சோதனை தொடர்ந்து நடைபெறும். வரும் காலத்தில் கஞ்சா இல்லாத மாநிலமாக புதுவை மாறும். தற்போது நடந்த சோதனையில் வடமாநிலங்களிலிருந்து வந்த வாலிபர்களிடமே போதைபொருட்கள் பறிமுதல் செய்ப்பட்டது. இவர்கள் குறிப்பாக ஆந்திராவில் இருந்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவருகிறது. 

    கஞ்சா நடமாட்டத்தை குறைக்கும் வகையில் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை எடுப்போம்/
    இவ்வாறு அவர் கூறினார். 
     ஏற்பட்டது.
    புதுவை அரசின் மின்துறையில் கட்டுமான தொழிலாளர்கள் பிரிவில் 350 பேர் பணியாற்றி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    கடந்த 6 ஆண்டாக துறையில் பணியாற்றினாலும் ஒர்க் சார்ஜ் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஊழியர்கள் பணிநிரந்தரம்  செய்யப்படவில்லை. 

    இதனால் தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்துறை தொழில்நுட்ப சான்றிதழாளர் நலச்சங்கத்தின்  சார்பில் உப்பளத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் துறை தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

    அறையை சுற்றிலும்  தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடர்பாக சான்றிதழாளர் நலச்சங்கத்தின் தலைவர் அருள்மொழி  கூறியதாவது:-

    மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து சமீபத்தில் போராட்டம் நடந்தது. மின்துறை தனியார் மயமானால் நேரடியாக பாதிக்கப் படுவது நாங்கள் தான். 

    ஏனெனில் பணிநிரந்தரம் செய்யப்படாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களை உடனடியாக பணி நிர ந்தரம் செய்ய வேண்டும். ஏற்கனவே உதவியா-ளர்களாக பணியாற்றியவர்களுக்கு வயர்மேன் பதவி வழங்க வேண்டும். 
    அந்த பதவியில் எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

     4  ஆண்டாக எங்களுக்கு ஓ.டி.ஏ. வழங்கப்படாமல் உள்ளது. அதை வழங்க வேண்டும். எங்கள் போராட்டத்துக்கு தோழமை சங்கங்களான மின்துறை தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ. பில் கலெக்டர் கூட்டமைப்பு, எம்.என்.ஜி.டி.  ஆகிய சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளது. 

    கோரிக்கையை தீர்க்காவிட்டால் அனைத்து ஊழியர்களையும் ஒன்று திரட்டி, தோழமை சங்கங்களுடன் இணைந்து அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
    புதுவையில் 2026-ல் முழுமையான பா.ஜனதா ஆட்சி அமையும் என்று மாநில தலைவர் சாமிநாதன் பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் பிறந்தநாள் விழா லாஸ்பேட்டை கொல்லி மேடு மைதானத்தில் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சி மாநில துணை தலைவர் உமா சங்கர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அஸ்வின்குமார், அமல்ராஜ், மாநில செயற் குழு உறுப்பினர் டி.எம்.வருண், இளைஞர் அணி பொது செயலாளர் வேல்முருகன், மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட பிறந்தநாள் விழா நிகழ்ச்சி யில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக சாமி நாதனின் 53 வயதை குறிக்கும் வகையில் 53 கிலோ பிரமாண்ட பிறந்த நாள் கேக்கை மேடையில் வெட்டி குடும்பத்தினருடன் கொண்டாடினார். சாமிநாதனுக்கு பா.ஜனதா மாநில துணை செயலாளர் உமா சங்கர் மற்றும் 
    பா.ஜனதா நிர்வாகிகள் ஆளுயர ரோஜா மாலையை சாமி நாதனுக்கு அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

    இந்நிகழ்ச்சியில் சபா நாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச் சிவாயம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், விவிலியம் ரிச்சர்ட், வெங்கடேசன், அசோக்பாபு, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், பா.ஜனதா மாநில பட்டியலின அணி தலைவர் தமிழ்மாறன் மற்றும்  அரசியல் கட்சி நிர்வாகிகள், பா.ஜனதாவை சேர்ந்த பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் சாமி நாதனுக்கு மாலை சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

    பிறந்த நாள் நிகழ்ச்சியில் சாமிநாதன் பேசியதாவது:-

     நாட்டு நலனுக்காக கடந்த 25 ஆண்டுகளாக பா.ஜனதாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். தேர்தலில் தோற்றால் 5 ஆண்டுக்கு பிறகு தான் மறுபடி வருவார் கள். ஆனால் நான் தோற்ற மறுநாளில் இருந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். முதல் தேர்தலை நான் சந்திக்கும் பொழுது 10 நபர்கள் கூட என் அருகில் இல்லை. யாரெல்லாம் பா.ஜனதாவை சிறுமைப் படுத்தி பேசினார்களோ அவர்களெல்லாம் இன்றைக்கு பா.ஜனதாவில் இணைத்துள் ளனர். 

    இந்தியா முழுவதும் 19 மாநிலங்களில் பா.ஜனதா முதல்-அமைச்சர்கள் உள்ளனர். வருகிற 2026 தேர்தலில் புதுவையில் 
    பா.ஜனதா முழுமையாக ஆட்சி அமைக்கும்.  வரும் சட்டமன்ற தேர்தலில் வலிமையான அமைச்சரை உருவாக்கும் தொகுதியாக லாஸ்பேட்டை தொகுதி இருக்கும். வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சி என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு மோடி தலைமையிலான ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

    பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் லாஸ்பேட்டையில் நெசவாளர் நகர், சிவானந்த புரம் ஆகிய பகுதிகளில் சாலை அமைக்க அடுத்த மாதம் பூமி பூஜை நடக்க உள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியா காங்கிரஸ் இல்லாத புதுவை  இதுவே நம்முடைய லட்சிய பயணம். உங்களுக் காக பணியாற்ற பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களை அவர்களது அலுவலகத்திலும் நீங்கள் சந்தித்து குறைகளை சொல்ல லாம். பா.ஜனதா கட்சி அலுவலகத்திலும் நீங்கள் அவர்களை சந்தித்து மக்கள் பிரச்சினைக்காக பேசலாம்.உங்களுக்காக பணியாற் றுவதற்கு பா.ஜனதா தயாராக உள்ளது இவ்வாறு பேசினார். 
    வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
    புதுச்சேரி:

    அகில இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து  வேலைநிறுத்த வெளிநடப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

    இதன்படி புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்த வெளிநடப்பு போராட்டம் நடத்தினர். 

    போராட்டத்துக்கு புதுவை கிளை தலைவர் உமா மகேஷ்வரி தலைமை வகித்தார். செயலாளர் அனிருத்ஷர்மா முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் கணேசன், மண்டல செயலாளர் கோவிந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பதவி உயர்வு, மாநில வேலை மாற்றம், பணியாளர்களின் விதிகளை இறுதி செய்தல் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அதிகாரிகள், ஊழியர்கள் இதில் பங்கேற்று கோஷம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். பொருளாளர் சிற்றரசன் நன்றி கூறினார்.
    பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் பங்கேற்றார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெறும்.

    புதுவை, சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து  ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வருவது வழக்கம். விழுப்புரம் கூவாகத்தில் நடப்பது போன்று திருநங்கைகளுக்கான அழகிப்-போட்டியும் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்பு கூத்தாண்டவர் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றது. 

    திருத்தேர் உற்சவ விழா கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் சாமி திருக்கல்யாணம், பக்தர்கள் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. 

    திருநங்கைகளும் புதிய உடைகள், அணிகலன்களை அணிந்து பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டனர். தொடர்ந்து மிஸ் பிள்ளையார்குப்பம் அழகிப்போட்டி நடந்தது. திருநங்கைகளுக்கு பேஷன் ஷோ, நடனம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.  

    இதில் முதல் பரிசை புதுவையை சேர்ந்த கரிஷ்மா பெற்றார். மிஸ் பிள்ளையார்குப்பமாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு புதுவை ஐ.ஜி. சந்திரன் ஒரு பவுன் தங்க காசு வழங்கினார். 2-ம் பரிசு வென்ற புதுவையை சேர்ந்த ஷியமலாதேவிக்கு 4 கிராம் தங்ககாசும்,  3-ம் பரிசு வென்ற புதுவையை சேர்ந்த மெகந்திக்கு 2 கிராம் தங்க காசும், 4-ம் பரிசு வென்ற இந்துவுக்கு 2 கிராம் தங்க காசும், 5-ம் பரிசு வென்ற சென்னையை சேர்ந்த திரிஷாவுக்கு 2 கிராம் தங்க காசும் வழங்கப்பட்டது. 

    மேடையில் ஒருமுறை மட்டுமே ஏறியவருக்கு எப்படி முதல் பரிசு கொடுத்தீர்கள்? எனக்கூறி ஒருசில திருநங்கைகள் கூச்ச-லிட்டனர். நேர்மையாக இந்த தேர்வு நடைபெறவில்லை என்றும், ஒருதலை பட்சமாக நடை-பெற்றதாக திருநங்கைகள் கூச்சலிட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்று கூத்தாண்டவர் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகள், பக்தர்கள். ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை அழுகள நிகழ்ச்சியும், அடுத்த மாதம் 5-ந்தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை புதுவை மாநில வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    மத்திய மந்திரி அமித்ஷா புதுவை வருகையின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள்  குறித்து காவல்துறை தலைமையகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில்  போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

    போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்ற--னர். 

    கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகையின் போது காவல்துறை சார்பில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்மந்தமாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். 

    அமித்ஷா வருகை புதுவை மாநில வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். முக்கியத் திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை முதல்-அமைச்சர் தெரிவிப்பார். காவல்துறை சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு நாம் வைத்துள்ளோம். 

    அதனை ஒவ்வொன்றாக செய்து கொடுக்க அவர்கள் தயாராக உள்ளனர். அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரதமரும், உள்துறை மந்திரியும் புதுவை மாநில வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    70 சதவீத நிதி உதவி வாக்குறுதியை அமித்ஷா அறிவிக்க வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் மத்திய அரசின் நிதி உதவியையே  அதிகம் நம்பி உள்ளது. 

    இதனால் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை அடிக்கடி சந்தித்து புதுவையின் தேவைகள் குறித்து ஞாபகப்படுத்தி, கேட்டுப்பெற வேண்டிய அவசியமான நிலை இருந்து வருகிறது. 

    ஆனால்  முதல்அமைச்சர் ரங்கசாமி டெல்லி செல்லவே தயங்கி வருகிறார். ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் நிலையிலும் கூட இதுவரை ரங்கசாமி டெல்லி சென்று புதுவையின் தேவைகள் குறித்து பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தவில்லை. 

    அதேசமயம் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் இருந்து வருகின்றனர். 

    மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 24-ந் தேதி புதுவை வரவுள்ளார். அவரிடம் புதுவை பா.ஜ.க.வினர் தேர்தல் அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற  வலியுறுத்த வேண்டும். அமித்ஷாவும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனக்கும் பங்கும், கடமையும் உள்ளது என்பதை உணர்ந்து நிறைவேற்ற முன்வர வேண்டும். 

    குறைந்தபட்சம் புதுவைக்கு தனி தேர்வாணையம், மத்திய அரசின் நிதி உதவியை 70 சதவீதமாகவும் உயர்த்துவது ஆகிய 2 அறிவிப்புகளையாவது நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.
    சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகையணை கட்ட பொதுப்பணிதுறை தலைமை என்ஜினீயரிடம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை எதிர்க்கட்சி தலைவர் சிவா பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்யமூர்த்தியை அவரது அலுவலகத்தில் சந்தித்து தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சுல்தான்பேட்டை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஜெனரேட்டர்  அமைத்து மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டிக் கொடுக்க வேண்டும்.

    சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட  வேண்டும். வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டுவர  வேண்டும். வாய்க்கால்களை  தூர்வார வேண்டும். ஹைமாஸ் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற வேண்டும்.  புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்.

    முருங்கப்பாக்கம் வில்லியனூர் சாலை பணியை  துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்த சந்திப்பின்போது செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன், முருகானந்தம், உதவி பொறியாளர்கள் வைத்தியநாதன், சவுந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தொடர் தாக்குதலை தடுக்க பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
    காரைக்கால்:

    காரைக்கால் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின், காரைக்கால் நகர செயலாளர் சபி, செயற்குழு உறுப்பினர்கள் பதுருதீன், கபிர், ஊடக பொறுப்பாளர் பைசல் உள்ளிட்ட நிர்வாகிகள், ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மாவிடம் ஓர் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தொடர் தாக்குதல் நடைபெற்று வருவது கண்டனத்திற்குரியது. மேலும், இஸ்லாமியர்கள் குறித்து சில அமைப்புகள் தவறான கருத்துக்களை பரப்பி வருவதும் கண்டனத்திற்குரியது. இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாதவாறு தடுத்து நிறுத்த, அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல் குடிமகனாக இருக்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    காரைக்கால் அம்பகரத்தூரில் புல் அறுக்க சென்றவரை தாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த காரைக்கால் அம்பகரத்தூர் நல்லெழந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன்(வயது55). விவசாயியான இவர், வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, வளத்தாமங்களம் மெயின் சாலையை ஒட்டிய உமாகாந்தன் என்பவரது பம்புசெட் அருகே, இளங்கோவன் வயலில் புல் அறுக்க சென்றார். அப்போது ஏற்கெனவே முன் விரோதத்தில் இருந்த உமாகாந்தன்(69) இளங்கோவனை வழிமறித்து எங்கே போகிறாய் என கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

    தொடர்ந்து, உமாகாந்தன், கீழே கிடந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து, இளங்கோவின் கண்ணில் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த இளங்கோவன், தேனூர் அரசு சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல்சிகிசைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபரம் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த திருநள்ளாறு காவல்நிலைய போலீசாரிடம், இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து, உமாகாந்தனை தேடி வருகின்றனர்.

    தவளக்குப்பம் அருகே பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார்சாலை அமைக்கும் பணியை சபாநாயகர்ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி :

    புதுவையில் தினமும் 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இக்கழிவுகளை அகற்றுவது நிர்வாகத்திற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இவைகள் வடிகால், ஆறுகள் மற்றும் கடல்களில் சேருகிறது. மழைக்காலத்தில் கழிவுகளால் கடுமையாக பாதிப்படைகிறது.

    இந்த நிலையில் புதுவை சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துடன் இணைந்து  இடையார் பாளையத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார்சாலை அமைக்கும் முயற்ச்சியை மேற்கொண்டுள்ளது.  இதன் தொடக்க  விழா  நடந்தது.  சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டு தார்சாலை போடும் பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் மற்றும் மாசு கட்டுப் பாட்டு வாரிய மூத்த செயற் பொறியாளர் ரமேஷ், பொதுப் பணித்துறை செயற் பொறியாளர், மணவாளன் உள்ளாட்சித்துறை செயற் பொறியாளர்கள் லட்சுமணன், திருநாவுக்கரசு, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், அலுவலக மேலாளர் வீரம்மாள், இளநிலை பொறியாளர்கள் ரகுராமன், சரஸ்வதி பங்கேற்றனர். மேலும் இந்த சோதனை தார்சாலை அமைக்கும் பணியினை பார்வையிட புதுவை நகராட்சி, உழவர்கரை நகராட்சி, பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, காரைக்கால், கோட்டுச்சேரி ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளில் இருந்து உதவி பொறியாளர்கள் இளநிலை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி, இடையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், நாகராஜ், பழனி, சீனுவாசன், செழியன், மோகன்குமார், ராஜா, கிருஷ்ணமூர்த்தி, மணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
    ×