என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரெயிலில் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் கிலோ கணக
    X
    ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரெயிலில் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் கிலோ கணக

    ரெயிலில் போதை பொருட்கள் கடத்தல்

    திருப்பதியில் இருந்து புதுவை வந்த ரெயிலில் போதை பொருட்கள் கடத்திய வட மாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக போலீஸ் ஐ.ஜி. சந்திரன் கஞ்சா தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டு கஞ்சா தடுப்பு வேட்டை நடத்தப்படும் என கூறினார். 

    அதன் பேரில் இன்று திருப்பதியிலிருந்து புதுவை வந்த ரெயிலில் போதைபொருட்கள் கடத்தி வருவதாக புதுவை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் ஐ.ஜி. சந்திரன் மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு வம்சிதா ரெட்டி தலைமையில் சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசாருடன் ரெயில்வே போலீசாரும் சேர்ந்து அதிரடி சோதனை நடத்தினர். 

    ரெயிலில் வந்த ஒடிசாவை சேர்ந்த வட மாநில வாலிபர்களின் உடைமைகளை சோதனை செய்த போது அதில் கிலோ கணக்கில் குட்கா, ஹான்ஸ், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போதை பொருட்களை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த வட மாநிலத்தை சேர்ந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் ஐ.ஜி சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் இன்று நடந்ததை போல கஞ்சா மற்றும் போதைபொருள் தடுப்பு சோதனை தொடர்ந்து நடைபெறும். வரும் காலத்தில் கஞ்சா இல்லாத மாநிலமாக புதுவை மாறும். தற்போது நடந்த சோதனையில் வடமாநிலங்களிலிருந்து வந்த வாலிபர்களிடமே போதைபொருட்கள் பறிமுதல் செய்ப்பட்டது. இவர்கள் குறிப்பாக ஆந்திராவில் இருந்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவருகிறது. 

    கஞ்சா நடமாட்டத்தை குறைக்கும் வகையில் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை எடுப்போம்/
    இவ்வாறு அவர் கூறினார். 
     ஏற்பட்டது.
    Next Story
    ×