என் மலர்
புதுச்சேரி
நோணாங்குப்பம் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமன ஆணையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி நோணாங்குப்பம் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன் கோவிலுக்கு புதிதாக அறங்காவல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழு தலைவராக பூபாலன், துணைத்தலைவராக கோவிந்தன், செயலாளராக திருமுருகன், பொருளாளராக முருகையன், உறுப்பினராக சித்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நியமன ஆணையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
கொரோனா நிவாரணம் பெற போலி ஆவணம் சமர்பித்தால் பேரிடர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தவின்படி கொரோனா காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் கருணைத்-தொகை அளிக்கப்படுகிறது. புதுவை ஒன்றியத்தில் ஆயிரத்து 898 பேருக்கு கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் கருணைத் தொகை பெற தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பித்து பயனடைந்திருப்பார்கள் என கருதப்படுகிறது. சுப்ரீம்கோர்ட்டு கடந்த 24-ந் தேதி பிறப்பித்த ஆணையில், கொரோனா தொடர்பாக தவறான முறையில் பயன்பெறுவதை தடுக்க காலம் வரையறைத்துள்ளது.
இதன்படி கடந்த 20-க்கு முன்பு நிகழ்ந்த இறப்பு தொடர்பாக 24.3.2022-ல் இருந்து 60 நாட்களுக்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கருணைத்தொகை பெற விரும்புவோர் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணத்தால் மேல் வரையறை செய்யப்பட்ட காலத்துக்குள் விண்ணப்-பிக்க இயலாதவர்கள், குறைதீர்ப்பு குழுவின் மூலமாக விண்-ணப்பித்து பயன்-பெறலாம். பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இந்த ஆணையை கருத்தில் கொண்டு பயன்பெற விரும்புவோர் காலவரையறையை கடைபிடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தவறான முறையில் தங்கள் விண்ணப்பத்தை சமர்பித்து நிவாரணம் பெற முற்படுபவர்கள் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் பிரிவு 52-ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் இருந்து செட்டிப்பட்டு கிராமத்திற்கு தினமும் 4 பஸ்கள் சென்று வந்தன. கொரோனாவால் போக்குவரத்து முடக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் செட்டிப்பட்டு கிராமத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறைக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று காலை செட்டிபட்டுக்கு வந்த தனியார் பஸ்சை மக்கள் சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் பஸ் வழக்கம் போல 4 முறை இயங்கும் என உறுதியளித்தனர்.இதனை தொடர்ந்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
சம்பளம் வழங்காததை கண்டித்து தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை அரசு என் ஜினீயரிங் கல்லூரி சில மாதங்களுக்கு முன்பு புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சுமார் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 310 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
கல்லூரியாக இருந்த போது மாதந்தோறும் சரியான முறையில் சம்பளம் வழங்கி வந்த நிர்வாகம் தற்போது பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட பிறகு மாத சம்பளத்தை சரியான தேதியில் வழங்கவில்லை என்று பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததை கண் டித்தும் உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினார்.
கழிவு நீரை அகற்ற கோரி மதகடிப்பட்டில் வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை விரிவாக்கப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிக்காக மதகடிப்பட்டு கடைவீதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கடையின் எதிரே சுமார் கிலோமீட்டர் தூரம் பள்ளம் தோண்டப்பட்டது.
இதனால் சாலை ஓரத்தில் இருந்த கழிவுநீர் வாய்க்கால் அகற்றப்பட்டது. புதிய கழிவுநீர் வாய்க்கால் கடந்த 2 மாதம் கடந்தும் கட்டப் படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் கடைகளின் எதிரே தேங்கி நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் கடைக்கு பொருட்கள் வாங்க வருவது குறைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று பரவும் நிலை உள்ளது. கழிவுநீரை அகற்றக்கோரி வியாபாரிகள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுநாள் வரை கழிவுநீர் அகற்றப்படவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த வியாபாரிகள் இன்று காலை விழுப்புரம் - புதுவை தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுக்கு இதுபற்றி தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.
இதனை ஏற்று வியாபாரிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கல்லூரி பேராசிரியர்கள் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பில் கல்லூரி பேராசிரியர்கள் வீட்டில் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். புதுவை நெல்லித்தோப்பு மடத்து வீதியை சேர்ந்தவர் மோகன செல்வம் (வயது 47). இவர் மூலகுளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூரணி. இவரும் தமிழக பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் புதுவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
தினமும் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன்-மனைவி இருவரும் கல்லூரிக்கு பணிக்கு செல்வது வழக்கம். அதற்கு முன்பாக வீட்டு சாவியை வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருபவரிடமும் சில சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரரிடமும் கொடுத்து செல்வது வழக்கம்.
அதுபோல் சம்பவத்தன்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன்-மனைவி இருவரும் பணிக்கு சென்றனர். பின்னர் மாலையில் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை மாயமாகியிருந்தது. வீட்டு கதவு எதுவும் உடைக்கப்படவில்லை. யாரோ வீட்டை திறந்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்று-ள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
இதுகுறித்து மோகனசெல்வம் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டுக்கதவு உடைக்கப்படாததால் நன்கு அறிமுகமான நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து வீட்டின் மாடியில் வசிப்பவர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வீட்டுவேலை செய்யும் பெண் மற்றும் ஏசி பழுதுபார்க்கும் மெக்கானிக் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
கிழக்கு கடற்கரை சாலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மதுக்கடை அருகே மது குடித்து விட்டு 3 வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறாக ஆபாச வார்த் தைகளால் பேசி ரகளை செய்வதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை மெயின் ரோடு புதுப்பேட்டையை சேர்ந்த தமிழ்மணி(19), விஜயகுமார்(19), மதன்(18), என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது போல் கோரிமேடு இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பொது இடத்தில் மது குடித்து விட்டு கத்தியுடன் ரகளை செய்த சண்முகாபுரம் பாரதிபுரத்தை சேர்ந்த பூபதி(23), மற்றும் திலாஸ்பேட்டை கருணாஜோதி தெருவை சேர்ந்த லட்சுமணன்(20), ஆகிய 2 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தருமாபுரி எஸ்.ஆர்.எம். வித்யா மந்திர் பள்ளியில் பல் மருத்துவ முகாமை ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை தருமாபுரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளியில், இந்திராகாந்தி பல் மருத்துவமனையும், எஸ்.ஆர்.எம். வித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளியும் இணைந்து பல் மருத்துவ முகாமை நடத்தின.
இந்நிகழ்ச்சியில் இந்திராநநர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.டி ஆறுமுகம், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனர் முத்துராமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.
பள்ளி தாளாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். இம்முகாமில் இந்திராகாந்தி பல் மருத்துவமனை டாக்டர் சிவசங்கர், டாக்டர் திவி அனுஷா, முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம் நாராயணன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பல் பரிசோதனை மற்றும் அடைத்தல், பல் சுத்தம் செய்தல், பல் அகற்றுதல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். இம்முகாமை பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
காங். உறுப்பினர் சேர்க்கையில் புதுவை மாநிலம் முதலிடம் பிடித்ததையடுத்து சீனியர் துணை தலைவர் தேவதாசுக்கு ராகுல்காந்தி எம்.பி. பாராட்டியுள்ளார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் டிஜிட்டல் முறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 15-ந் தேதி வரை நடந்தது.
புதுவையில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்கை ஒருங்கிணைப்பாளராக சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் நியமிக்கப்பட்டு சேர்க்கை நடந்து வந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் புதுவையில் உள்ள 954 பூத்துகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
நாடு முழுவதும் நடந்த உறுப்பினர் சேர்க்கையில் புதுவை முதலிடத்தையும், தெலுங்கானா 2-ம் இடத்தையும், கர்நாடகா 3-ம் இடத்தையும் பிடித்தது. இதையடுத்து டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பாளர்களின் கூட்டம் நடந்தது.
இதில் ராகுல்காந்தி எம்.பி., அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபால், உறுப்பினர் சேர்க்கை தலைவர் பிரவீன்சக்ரவர்த்தி ஆகியோர் பங்கேற்று பொறுப்பாளர்களை கவுரவித்தனர்.
அப்போது புதுவை சீனியர் துணைத்தலைவர் தேவதாசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சக்தி உறுப்பினர் சேர்க்கையிலும் பொறுப்பாளராக தேவதாஸ் செயல்பட்டு தீவிரமாக உறுப்பினர்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் நமச்சிவாயம் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கூனிச்சம்பட்டில் நடந்தது.
புதுவை மாநில பா.ஜனதா வர்த்தக பிரிவு தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். பா.ஜனதா காப்பீடு திட்ட புதுவை பொறுப்பாளர் ஜெயக்குமார் மத்திய அரசு காப்பீட்டு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். கூட்டத்தில் தொகுதி மண்டல பொறுப்பாளர் கண்ணன், நிர்வாகிகள் லோகு, வேதாச்சலம், சேகர், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேக்வாண்டோ வீரர்களுக்கு பதக்க வழங்கி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான தேக்வாண்டே போட்டிகளில் பங்கு பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா அமேசிங் தேக்வாண்டே மார்ஷியல் ஆர்ட் அகடமி மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் விருது வழங்கும் விழா கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அலுவலகத்தில் நடைபெற்றது.
அமைச்சர் நமசிவாயம் மாணவமாணவிகளை வாழ்த்தினார். விழாவில் அமேசிங் டேக்வாண்டோ பள்ளி தலைவர் வேலு, தொழில்நுட்ப இயக்குநர் தாமஸ் மற்றும் பொருளாளர் அருள் மொழி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு அகடமி செயலாளர் ராஜ் மோகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் செல்வகணபதி செய்திருந்தார்.
காரைக்கால் அருகே திருமணமான இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்களாச்சேரியை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 30). இவருக்கும், திருவிடைக்கழியைச் சேர்ந்த சுந்தரி(26) என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வினோத்குமார் வேலை நிமித்தமாக அடிக்கடி ஆந்திரா சென்றுவிடுவது வழக்கமாம். அவ்வாறு ஆந்திரா செல்லும்போது, மனைவியை அவரது தாய் வீட்டில் விடுவது வழக்கம்.
இந்நிலையில், தாய் வீட்டில் இருந்த சுந்தரிக்கும் தரங்கம்பாடி காட்டு வீதியைச்சேர்ந்த அய்யப்பன்(36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியே சுற்றிவந்தனர். திடீரென கடந்த 7-ந் தேதி சுந்தரி மாயமானார்.
வினோத்குமார் இதுகுறித்து விசாரித்தபோது சுந்தரி அய்யப்பனுடன் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். சுந்தரியின் தாய் பொறையார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் இருவரையும் தேடி கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் அறிவுரை கூறி அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து திருவிடைக்கழிக்கு வந்த வினோத்குமார் சம்பவத்தன்று காரைக்கால் அருகே தென்னங்குடியில் உள்ள சுந்தரியின் உறவினர் விட்டுக்கு சுந்தரியை அழைத்து சென்று அங்கு வசித்து வந்தார்.
தொடர்ந்து கடந்த 11-ந் தேதி சுந்தரி மீண்டும் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் சுந்தரி கிடைக்கவில்லை. இதுகுறித்து வினோத்குமார் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்களாச்சேரியை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 30). இவருக்கும், திருவிடைக்கழியைச் சேர்ந்த சுந்தரி(26) என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வினோத்குமார் வேலை நிமித்தமாக அடிக்கடி ஆந்திரா சென்றுவிடுவது வழக்கமாம். அவ்வாறு ஆந்திரா செல்லும்போது, மனைவியை அவரது தாய் வீட்டில் விடுவது வழக்கம்.
இந்நிலையில், தாய் வீட்டில் இருந்த சுந்தரிக்கும் தரங்கம்பாடி காட்டு வீதியைச்சேர்ந்த அய்யப்பன்(36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியே சுற்றிவந்தனர். திடீரென கடந்த 7-ந் தேதி சுந்தரி மாயமானார்.
வினோத்குமார் இதுகுறித்து விசாரித்தபோது சுந்தரி அய்யப்பனுடன் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். சுந்தரியின் தாய் பொறையார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் இருவரையும் தேடி கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் அறிவுரை கூறி அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து திருவிடைக்கழிக்கு வந்த வினோத்குமார் சம்பவத்தன்று காரைக்கால் அருகே தென்னங்குடியில் உள்ள சுந்தரியின் உறவினர் விட்டுக்கு சுந்தரியை அழைத்து சென்று அங்கு வசித்து வந்தார்.
தொடர்ந்து கடந்த 11-ந் தேதி சுந்தரி மீண்டும் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் சுந்தரி கிடைக்கவில்லை. இதுகுறித்து வினோத்குமார் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






