search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் புதுவை சீனியர் தலைவர் தேவதாஸ் பங்கேற்றார்.
    X
    டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் புதுவை சீனியர் தலைவர் தேவதாஸ் பங்கேற்றார்.

    காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில் புதுச்சேரி மாநிலம் முதலிடம்

    காங். உறுப்பினர் சேர்க்கையில் புதுவை மாநிலம் முதலிடம் பிடித்ததையடுத்து சீனியர் துணை தலைவர் தேவதாசுக்கு ராகுல்காந்தி எம்.பி. பாராட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் டிஜிட்டல் முறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 15-ந் தேதி வரை நடந்தது.

    புதுவையில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்கை ஒருங்கிணைப்பாளராக சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் நியமிக்கப்பட்டு சேர்க்கை நடந்து வந்தது. 

    காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் புதுவையில் உள்ள 954 பூத்துகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 

    நாடு  முழுவதும் நடந்த உறுப்பினர் சேர்க்கையில் புதுவை முதலிடத்தையும், தெலுங்கானா 2-ம் இடத்தையும், கர்நாடகா 3-ம் இடத்தையும்  பிடித்தது. இதையடுத்து டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பாளர்களின் கூட்டம் நடந்தது. 

    இதில் ராகுல்காந்தி எம்.பி., அகில இந்திய  பொதுச்செயலாளர் வேணுகோபால், உறுப்பினர் சேர்க்கை தலைவர் பிரவீன்சக்ரவர்த்தி ஆகியோர் பங்கேற்று பொறுப்பாளர்களை கவுரவித்தனர். 

    அப்போது புதுவை சீனியர் துணைத்தலைவர் தேவதாசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சக்தி உறுப்பினர் சேர்க்கையிலும்  பொறுப்பாளராக தேவதாஸ் செயல்பட்டு தீவிரமாக உறுப்பினர்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×