என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல் மருத்துவ முகாமை ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    பல் மருத்துவ முகாமை ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    பல் மருத்துவ முகாம்: ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    தருமாபுரி எஸ்.ஆர்.எம். வித்யா மந்திர் பள்ளியில் பல் மருத்துவ முகாமை ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை தருமாபுரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளியில், இந்திராகாந்தி பல் மருத்துவமனையும், எஸ்.ஆர்.எம். வித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளியும் இணைந்து பல் மருத்துவ முகாமை நடத்தின.

    இந்நிகழ்ச்சியில் இந்திராநநர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.டி ஆறுமுகம், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனர் முத்துராமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். 

    பள்ளி தாளாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். இம்முகாமில் இந்திராகாந்தி பல் மருத்துவமனை டாக்டர் சிவசங்கர், டாக்டர் திவி அனுஷா, முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம் நாராயணன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். 

    முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பல் பரிசோதனை  மற்றும் அடைத்தல், பல் சுத்தம் செய்தல், பல் அகற்றுதல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். இம்முகாமை பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
    Next Story
    ×