என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

    தனியார் பஸ் சிறைபிடிப்பு

    தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து செட்டிப்பட்டு கிராமத்திற்கு தினமும் 4 பஸ்கள் சென்று வந்தன.  கொரோனாவால் போக்குவரத்து முடக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் செட்டிப்பட்டு கிராமத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்வோர்,  வேலைக்கு  செல்வோர் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதுகுறித்து போக்குவரத்து துறைக்கு தகவல் தெரிவித்து  நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று காலை செட்டிபட்டுக்கு வந்த தனியார் பஸ்சை மக்கள் சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  தனியார் பஸ் வழக்கம் போல 4 முறை இயங்கும் என உறுதியளித்தனர்.இதனை தொடர்ந்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    Next Story
    ×