என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழகம் முன்பு பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் திடீர் போராட்டம்
சம்பளம் வழங்காததை கண்டித்து தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை அரசு என் ஜினீயரிங் கல்லூரி சில மாதங்களுக்கு முன்பு புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சுமார் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 310 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
கல்லூரியாக இருந்த போது மாதந்தோறும் சரியான முறையில் சம்பளம் வழங்கி வந்த நிர்வாகம் தற்போது பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட பிறகு மாத சம்பளத்தை சரியான தேதியில் வழங்கவில்லை என்று பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததை கண் டித்தும் உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினார்.
Next Story






