என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    புதுச்சேரி;

    இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் ஈஸ்டர் பெருநாள்,  கொண்டாடப்பட்டது.


    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்ததன் மூலம் அவர் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் தானே எடுத்து கொண்டார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

    புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-ம் நாள் உயிர்த்-தெழுந்த நிகழ்வு தேவாலயங்களில் நடத்தப்பட்டது. நள்ளிரவு திருப்பலிகள் நடந்தன.  

    இதனையொட்டி புதுவையில் உள்ள தூய இருதய ஆண்-டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம், நெல்லித் தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா ஆலயம், ஆட்டுப்பட்டு அந்தோணியார் ஆலயம், உழவர்கரை ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்-பலியுடன் பிரார்த்தனைகள் நடந்தது.   இதில் கிறிஸ்-தவர்கள் ஏராள மானோர் பங்கேற்றனர்.  
    இன்று காலையும் சிறப்பு ஆராதனை, திருப்பலிகள் நடந்தன. கிறிஸ்தவர்கள் புத்தாடை உடுத்தி தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்-கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    புதுச்சேரி:

    தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ந் தேதியை, தை மாதம் 1-ந் தேதி என காரணம் கூறி கவர்னர் அழைத்த புத்-தாண்டு தினத்தை புறக்கணித்ததாக தி.மு.க.வினர் கூறியுள்ளார்கள். 

    தமிழக தி.மு.க. ஆட்சியில் தை மாதம் 1-ந்  தேதியை தமிழ் புத்தாண்டாக தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின்  கொண்டாடவில்லை என்பதை கூட மறந்து விட்டு புதுவை தி.மு.க.வினர் கவர்னரின் தமிழ் புத்தாண்டு சித்திரை விழாவை புறக்கணிக்க பொய் காரணத்தை கூறியுள்ளனர். 

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெறும் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்று எரிச்சலில் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.

    நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை இவற்றை வைத்து மிரட்டி சிலரை போட்டியிடாமல் செய்ததாகவும், சிலர் கட்சிமாறி போட்டியிட்டதாகவும் நாராயணசாமி குற்றம் சொல்கிறார். 

    இது உண்மை என்றால் 5 காலம் முதல்&அமைச்சராக இருந்த நாராயணசாமியை மத்திய அரசின் எந்த அமைப்பு இவரை போட்டியிடாமல் மிரட்டினார்கள்? ஏன் இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒட்டு-மொத்த காங்கிரசுக்கும் ஒரு பின்னடைவை ஏன் இவர் ஏற்படுத்தினார் என்பதை பகிரங்கமாக சொல்ல வேண்டும்.

    எந்த அமைச்சர் எந்த பிரச்சனையில் லஞ்சம் வாங்கினார் என ஆதாரத்துடன் கூற நாராயணசாமி முன்-வருவாரா? எடுத்ததெற்கு எல்லாம் கவர்னரை குறை சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். 

    கடந்த 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்தவர் தனது ஆட்சியின் போதும் தன்னுடைய மலிவு விளம்பர அரசியலுக்காக கவர்னரை தினசரி விமர்சனம் செய்து மாநிலத்தின் வளர்ச்சியை 5 காலம் பின்னுக்கு தள்ளி விட்டார்.

    தற்போது மாநில நலனுக்காசு கவர்னரும் இணைந்து செயல்படுவதை பொறுத்துக்    கொள்ள முடியாமல் குறை கூறுவதை நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கிருமாம்பாக்கம் அருகே நள்ளிரவில் மின்கம்பத்தில் வாகனம்மோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் போலீசார்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  முள்ளோடை பகுதியில்  நள்ளிரவில் ரோந்து பணியில் இருந்தபோது தனியார் திருமண மண்டபத்திற்கு அருகில்  அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மின் கம்பத்தில்  மோதிவிட்டு நிற்காமல் சென்றது. 

    இதனால் மின்கம்பம் சாய்ந்து மின் வயர் அறுந்து விழுந்தது. இந்த தகவல் அறிந்த ரோந்து போலீசார் மணிவண்ணன், ஹரி, பழனிச்சாமி, ஞானமூர்த்தி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு இருள் சூழ்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மின் வயர்கள்  ரோட்டில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விபத்தை தவிர்க்க புதுவை-கடலூர் சாலையில் செல்லும் வாக-னங்களை இருபுறமும் தடுத்து நிறுத்தினர். 

    இதுபற்றி போக்குவரத்து போலீசார் மற்றும் மின்துறை ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.  மேலும் கடலூர்-புதுவையில் இருந்து வந்த வாகனங்களை பாகூர் வழியாக திருப்பி மாற்று வழியில் அனுப்பினர்.சம்பவ இடத்திற்கு மின்துறை ஊழியர் ஒருவர் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின் வயர்களை போலீசார் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி துண்டித்தார். 

    மேலும் அப்பகுதி மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து மின் வினியோகம் செய்யப்பட்டது. மின் வயர் அறுந்து கிடந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  சம்பவ இடத்தில் இருந்து  உடனடியாக சென்று மாற்று ஏற்பாடு செய்த போலீ-சாருக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டினர்.
    புதுவையில் ரங்கசாமி ஆட்சி நீடிக்காது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை பொறுப்பு கவர்னர் தமிழிசையை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுவையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக தமிழிசை பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் அந்த வேலை முடித்த பின், தற்போதைய முதல்-அமைச்சர் ரங்கசாமியை மிரட்டி கூட்டணி அமைத்-தார். 

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை வருமான வரித்துறை, அமலாக்கம் மற்றும் சி.பி.ஐ.க்களை கொண்டு மிரட்டினர். 

    அவர்களை தேர்தலில் நிற்க வைத்து பண பலம் மற்றும் அதிகார பலத்தை வைத்து வெற்றி பெற்று ஆட்சி நடத்துகின்றனர். 

    புதுவையில் ஊழலை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. கர்நாடகாவில் பா.ஜனதா மந்திரிகள் 40 சதவீதம் கமிஷன் வாங்குகின்றனர். 

    இங்குள்ள அமைச்சர்கள் 30 சதவீதம் கமிஷன் வாங்குகின்றனர். 10 சதவீதம்தான் வித்தியாசம். இந்த ஆட்சி எத்தனை காலம் நீடிக்கும் என்பது தெரிய-வில்லை. 

    ரங்கசாமி முதல்-அமைச்சராக நாட்களை எண்ணிக் கொண்டுள்ளார். கவர்னர் தமிழிசை சூப்பர் முதல்வராக இருந்து மாநிலத்தில் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தலையிட்டு வருகிறார். 

    ரங்கசாமி டம்மி முதல்வர். மத்திய பா.ஜனதா அரசு, புதுவைக்கு நிரந்தர கவர்னரை நியமிக்க வேண்டும். கவர்னர் தமிழிசையை திரும்ப பெற வேண்டும்.
     
    இவ்வாறு அவர் பேசினார்.
    புதுவையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சித்திரை முழு நிலவு விருந்தளித்தார்.

    இதில் புட்டு, ஆப்பம், குழிப்பணியாரம், முடக்கத்தான் தோசை, இளநீர் பாயாசம் உள்பட பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. 

    தொடர்ந்து மல்லர் கம்பம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, நாதஸ்வர கச்சேரி நடந்தது. 

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
     
    விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவையின் கடற்கரை திருவிழா மூலம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதுவை வியாபார தலமாக மாறியுள்ளது. பல வீடுகள் கடைகளாக மாறியுள்ளன. புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அனைத்து அம்சங்களும் உள்ளன. 

    புதுவையை மெருகூட்டும் வகையில் பாரம்பரிய விழாக்கள் உள்பட பல விழாக்களை எடுத்து வருகிறோம். மாநில உள்கட்டமைப்புகளையும் மேம்-படுத்தி வருகிறோம். 

    புதுவை கலை அம்சத்துடன் கட்டப்பட்ட கட்டிடங்கள் நிறைந்த மாநிலம். அந்த கட்டிடங்களை பழமை மாறாமல் பராமரித்து வருகிறோம். கவர்னர் மாளிகை பாரம்பரியம் மிக்கது. 

    இந்த கட்டிடம் பழமை மாறாமல் புனரமைக்கப்படும். கவர்னர் மாளிகையில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இது நல்ல விஷயம். சித்திரை திருவிழாவை தொடர்ச்சியாக கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்கும். 

    இவ்வாறு அவர் பேசி-னார்.
    புதுவை அரசு துறைகளில் 10 ஆயிரம் காலி பணியிடங்களை அடுத்த ஆண்டுக்குள் கட்டாயம் நிரப்ப வேண்டும் என்று சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஏற்பாட்டில் பாகூர் தொகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், புதுவை அரசின் வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 

    இதற்கான தொடக்க விழா பாகூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோதண்டம் வரவேற்றார். 

    சிறப்பு அழைப்பாளராக எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, வேலைவாய்ப்பு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.அவர் பேசியதாவது:&

    பாகூர் எம்.எல்.ஏ. புதுவை அரசிடம் அதிக நிதி பெற்று தனது தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணி-களை செய்து வருகிறார். சட்டசபையில் காலிப்பணியிடங்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    புதுவை அரசு காலி பணியிடங்களை நிரப்பி, 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த வருடம் இல்லாவிட்டாலும், அடுத்த வருடம் கட்டாயம் நிரப்பிட வேண்டும்.

    அரசு துறைகளில் பணி ஓய்வு பெறுவோர் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, எல்.டி.சி., யூ.டி.சி., பற்றாக்குறை உள்ளது. துணை தாசில்தார் எடுத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 

    காவல் துறையில் குறைந்த அளவிலேய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இன்னும், ஊர்காவல் படை, ஐ.ஆர்.பி.என். உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் எடுக்க வேண்டியது உள்ளது.

    எனவே, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தை பயன்-படுத்தி இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும். பாகூர் தொகுதி  வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இது அடுத்த ஆண்டு தெரியும்.

    இவ்வாறு அவர் பேசி-னார்.

    இந்த பயிற்சி மையத்தில், புதுவை அரசின் எல்.டி.சி., யூ.டி.சி. உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் தவமுருகன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கரன், அரி, கீர்த்தி, பிரகாசம், கிரி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் தி.மு.க. தொகுதி செயலாளர் பாண்டு அரிக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
    அன்பான அழைப்பை அரசியலாக்க வேண்டாம் என கவர்னர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் தமிழ் புத்தாண்டையொட்டி, கவர்னர் தமிழிசை சித்திரை முழு நிலவு விருந்து தேனீர் விருந்தளித்தார்.

    இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். விருந்தை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் புறக்கணித்தனர். இதுகுறித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

     தமிழகத்தில் கூட்டாஞ்சோறு உண்ணும் பழக்கம் இருந்தது. இதனால்தான் தமிழக பாரம்பரிய உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

    தமிழர்கள் பெருமை எல்லா வகையிலும் நிலை நிறுத்த வேண்டும் என்பதே விருந்தின் நோக்கம். இதில் அரசியலை கலப்பது பண்பாட்டுக்கு உகந்தது அல்ல. ஒரு சகோதரியாக விருந்துக்கு அழைப்பு விடுத்தேன். நான் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதாக சிலர் போராடுகின்றனர்.

    முதல்-அமைச்சர் சுதந்திரமாக செயல்படுகிறார். எல்லாவற்றிலும் அரசியலை புகுத்தினால் யாரும் நல்லுறவு, நட்புணர்வோடு இருக்க முடியாது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அன்பான அழைப்பை அரசியலாக்க வேண்டாம். 

    அதிகாரத்தை கையில் எடுத்துவிட்டேன் என ஆதாரம் இல்லாமல் கூறுகின்றனர். இதை அவர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கவர்னர் விருந்தில் பங்கேற்காதது குறித்து எதிர்கட்சித்தலைவர் சிவா  எம்.எல்.ஏ.வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     புதுவையில் என்.ஆர்.காங். பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசும், அரசு நிர்வாகமும் பவுர்ணமியாக இல்லை. தேய்பிறையாகத்தான் உள்ளது. 

    தை முதல் தேதிதான் தமிழ் புத்தாண்டு, சித்திரை இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் போல் பிரதமர், மத்திய அமை-ச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை வைக்கின்றார். அவர் அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார். 

    அவரது கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப்படவில்லை. மக்கள் நல பிரச்சினைகளை சட்ட-சபையில் விவாதிக்க தடையாக இருந்து பா.ஜனதா கொள்கைகளை மட்டும் புதுவையில் அமல்படுத்தும் வகையில் செயல்படுகிறார். பிரதமர், உள்துறை, நிதி அமைச்சர்களால்  உறுதி அளிக்கப்பட்ட மாநில அந்தஸ்து, கூடுதல் நிதியுதவி, கடன் தள்ளுபடி எதுவும் நிறைவேற்றவில்லை. 

    புதுவையின் வளர்ச்சியும், மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் கவர்னர் விருந்தை புறக்கணித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
    கோவிந்தசாலையில் மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியானார்
    புதுச்சேரி:

    புதுவை கோவிந்த சாலை வாஞ்சிநாதன் வீதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தவர்  ஜெயலட்சுமி. (வயது 72) இவரது கணவர் மற்றும் 2 மகன்கள் இறந்து விட்ட நிலையில் வேல்ராம்பட்டு ஏரிக்கரைவீதியில் வசிக்கும் மகள் மாலதி அவ்வப்போது ஜெயலட்சுமிக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். ஜெயலட்சுமிக்கு வயது முதிர்ச்சி காரணமாக குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது.

    இந்த நிலையில்  வீட்டின் மாடியில் இருந்து ஜெயலட்சுமி படிகட்டில் இறங்கிய போது திடீரென மயங்கி கிழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயலட்சுமியை வீட்டின் உரிமையாளர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்து போனார். 

    இது குறித்து அவரது மகள் மாலதி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தவளகுப்பத்தில் மது குடித்து விட்டு வீட்டுக்கு தாமதமாக வந்ததை தட்டிக் கேட்ட மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    புதுச்சேரி:

    தவளகுப்பம் அருகே தானாம் பாளையம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். சலவை தொழிலாளி இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

    சண்முகத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பாரிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்தார். 

    இதனால் கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில்  சண்முகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு தாமதமாக வந்தார். இதனை ராஜேஸ்வரி தட்டிக்கேட்டார். 

    இதில் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. பின்னர் ராஜேஸ்வரி குழந்தை-களுடன் தூங்கி விட்டார். ஆனால் ஆத்திரம் தீராத சண்முகம் 3.30 மணியளவில் வீட்டில் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து ராஜேஸ்வரியின் வயிற்றில் சராமாரியாக குத்தினார். மேலும் கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று ராஜேஸ்வரியை மிரட்டி விட்டு சண்முகம் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அருகில் உள்ள உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராஜேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதுகுறித்து ராஜேஸ்-வரியின் சகோதரர் ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை தேடிவருகிறார்கள்.
    செல்போன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
    புதுச்சேரி:

    மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

    அப்போது வழுதாவூர் சாலையில் செல்போன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் பிள்ளைத்தோட்டம் நவீனா கார்டனை சேர்ந்த திருப்பதி மகன் விக்னேஷ் (வயது22)

    மற்றொருவர் கதிர்காமம் தட்சிணா மூர்த்தி நகர் 3-வது கிராசை சேர்ந்த தணிகாசலம் (49)என்பதும் இவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் ரூ.2,400 பறிமுதல் செய்தனர்.
    புதுவை வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆன்மிக நடைபயணம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    வில்லியனூரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது.

    அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற 6 சிவாலயங்களும், 18 சித்தர் ஜீவ சமாதியும் உள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் போல வில்லியனூர் திருகாமீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் ஆன்மிக நடைபயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

    நடை பயணத்தில் பங்கேற்ற பக்தர்கள் நான்கு  மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம் உட்பட பல்வேறு கோவில்களின் தரிசனத்துடன் நடைபயணத்தை மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலில் நிறைவு செய்தனர். 

    சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல முடியாத  புதுவை, தமிழக பகுதியை சேர்ந்த பக்தர்களும், வில்லியனூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிவனடியார்கள், சிவ பக்தர்கள் அதிக அளவில் இந்த  நடைபயணத்தில் பங்கேற்றனர்.
    ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி

    நாளை ஈஸ்டர் பண்டிகையையொட்டி புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு அன்பையும், அமைதியையும், இளைப்பாறுதலையும் வழங்கும் கருணா மூர்த்தியாகிய ஏசுபிரான்  மீண்டும் உயிர்த்தெழுந்த மகிமையை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    ஏசுபிரான் போதனைகள் மனிதகுலத்துக்கு வழிகாட்டு-கிறது. கடும் துன்பம், துயரங்கள், சோதனை-களை கடந்து புதிய ஒளிப்பிர-வாகமாக  இயேசு உயிர்த்தெழுந்த புனிதநாள். இந்தநாள் நமக்கு உறுதி, நம்பிக்கை, புது வாழ்வை தரட்டும். அவர் போதித்த கருணை, இரக்கம் நம்  அனைவரின் நெஞ்சங்களிலும் நிலை கொள்ளட்டும். 
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    புதுவை மாநில தி.மு.க.அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்கள்  அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள். ஈஸ்டர் என்பது ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா என கொண்டாடப்படுகிறது.  

    ஏசு கிறிஸ்து  சிலுவையில் அறைந்து அடக்கம் செய்யப்பட்டு 3&ம் நாள் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் விதமாக  கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஈஸ்டர் ஆகும். இது கிறிஸ்தவ வழிபாட்டில் மிக முக்கியமான திருநாளாகும். 

    கிறிஸ்துவின்  கருணையும், இரக்கமும் மக்கள் அனை-வரின்  உள்ளங்களிலும், இல்லங்களிலும் தழைத்தோங்கட்டும். ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

    இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க தேர்தல் பிரிவு செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் வாழும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனப்படும் புனிதரின் உயிர்ப்பு நாள்  வாழ்த்துக்கள். 

    ஏசு மீண்டும் உயிர்த்-தெழுந்து விண்ணுலகம் சென்ற  நாள் ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு திருநாளாக கொண்டாடப்படுகிறது. புதுவை மாநில மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் போக்கி, பாவங்களிலிருந்து விடுவித்து, ஏசு பிரான் நம்மை காத்து நல்வழி  காட்டுவார் என நம்பிக்கை கொள்வோம். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×