என் மலர்
உள்ளூர் செய்திகள்

யோகா போட்டி வெற்றி பெற்றவர்கள் கவர்னர் தமிழிசையிடம் வாழ்த்து பெற்ற காட்சி.
யோகா போட்டி வெற்றி பெற்றவர்கள் கவர்னரிடம் வாழ்த்து
தேசிய அளவிலான யோகா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கவர்னரிடம் வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி:
சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் யோகாசன போட்டிகள் நடந்தது. இதில் வெற்றிப் பெற்றவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் கலந்துக் கொண்டனர்.
யோகா பயிற்சியாளர் சுரேந்திரன், குழு மேலாளராக விஜயகுமாரி சென்றனர். இப்போட்டியில் சீனியர் ஆண்கள் பிரிவில் புதுவையை சேர்ந்த தினகரன், அஸ்வின்குமார் 6-வது இடத்தையும் பெண்கள் ஜோடி யோகா போட்டியில் கிருத்திகா, ரேவதி ஸ்ரீ முதல் இடத்தையும் பெற்றனர். 11-மாநிலங்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் புதுவை மாநிலம் 2-வது இடத்தை பெற்றது.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சங்க துணைத்தலைவர் கஜேந்திரன், சங்க பொருளாளர் சண்முகம், செயலாளர் தயாநிதி, துனை செயலாளர்கள் டாக்டர் பாலாஜி, சதீஷ்குமார் உடனிருந்தனர். தொடர்ந்து அவர்கள் விவியன் ரிச்சர்ட் எம்.எல்.ஏ.விடமும் வாழ்த்துப் பெற்றனர்.
மேலும் தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு மூத்த துணைத்தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி மாணவ-மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார்.
Next Story






