என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் சென்ற பஸ்சை ஆரோவில் போலீசார் சிறை பிடித்து வைத்துள்ளதை படத்தில் காணலாம்
    X
    சத்துணவு ஊழியர்கள் சென்ற பஸ்சை ஆரோவில் போலீசார் சிறை பிடித்து வைத்துள்ளதை படத்தில் காணலாம்

    சென்னை போராட்டத்துக்கு சென்ற சத்துணவு ஊழியர்கள் பஸ்சை போலீசார் சிறைபிடிப்பு

    சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது அவர்களுடைய போராட்டம் பல நாட்கள் நீடிக்கக்கூடும்.

    சேதராப்பட்டு:

    சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் என 75-க்கும் மேற்பட்டோர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தனர்.

    இதற்காக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க வானூர் ஒன்றிய தலைவர் தீன வெண்மதி தலைமையில் சத்துணவு ஊழியர்கள் இன்று அதிகாலை திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இருந்து ஒரு பஸ்சில் புறப்பட்டனர். இது ஆரோவில் போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், வீரமணி, உளவுப்பிரிவு போலீசார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பஸ்சை புறப்பட விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது சத்துணவு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது அவர்களுடைய போராட்டம் பல நாட்கள் நீடிக்கக்கூடும்.

    இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் உணவு சமைக்கும் பணி தடைபட்டு மாணவர்கள் பாதிக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இருந்து புறப்பட்ட பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் மற்ற ஊழியர்கள் வானூர், தைலாபுரம், கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    ஆனால், போலீசார் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பஸ்சை சிறை பிடித்த தகவல் மற்ற சத்துணவு ஊழியர்களுக்கு தெரியவரவே அனைவரும் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×