என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார். அருகில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்ளார்.
    X
    சாலை பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார். அருகில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்ளார்.

    சாலை பணிகளை ரங்கசாமி ஆய்வு

    இந்திரா நகர் தொகுதி திலாஸ்பேட்டையில் சாலை பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.
    புதுச்சேரி:

    இந்திரா நகர் தொகுதி திலாஸ்பேட்டையில் சாலை பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.

    இந்திரா நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட திலாஸ்பேட்டையில் பாஞ்சாலி அம்மன் கோவிலை சுற்றியுள்ள அய்யனார் கோவில் வீதி, மேட்டு வீதி, தேரோடும் வீதி சிமெண்ட் சாலையாக மாற்றப்பட உள்ளது.

    பொதுப்பணித் துறை மூலம் நிதி ஒதுக்கி விரைவில் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இச்சாலை அமைப்பதற்கான பகுதிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர்,  மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×