search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர்  யஷ்வந்தையாவை சிவா எம்.எல்.ஏ. சந்தித்து பேசிய காட்சி.
    X
    ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையாவை சிவா எம்.எல்.ஏ. சந்தித்து பேசிய காட்சி.

    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம்

    ஆதிதிராவிடர் நலதுறை சார்பில் கொம்பாக்கம் காலனியில் சிறப்பு- முகாமை சிவா எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்திருந்தார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையாவை அவரது அலுவல-கத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா சந்தித்து பேசினார்.  

    அப்போது வில்லியனூர் தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செய்யப்பட வேண்டிய பணிகள் பல தேங்கி கிடப்பது பற்றி எடுத்து கூறினார்.    

    சிறப்புக்கூறு நிதி மூலம்  மேற்கொள்ள வேண்டிய பணிள் மற்றும் மனைப்பட்டா பிரச்சினை குறித்தும் விவாதிக்க அனைத்து காலனி பகுதிகளிலும் சிறப்பு முகாம்களை நடத்தி ஆதிதிராவிட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், முகாமில் நில அளவைத்துறை இயக்குனரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 
     
    மேலும் காலனி பகுதிகளில் விளையாட்டுத் திடல், நூலகம் உள்ளிட்டவைகளை அமைத்துத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

    இதனைத் தொடர்ந்து துறை இயக்குனர் யஷ்வந்தையா காலனி பகுகளில் உள்ள பிரச்-சினைகளை தீர்க்க  சிறப்பு முகாம்களை நடத்துவதாகவும், முதல் கட்டமாக (புதன்கிழமை)  கொம்பாக்கம் காலனியில் முகாம் நடத்துவதாக உறுதி அளித்தார்.

    இந்த சந்திப்பில் தி.மு.க. நிர்வாகிகள் மணி-கண்டன், அங்காளன், செல்வநாதன், ராஜேந்திரன், பாஸ்கரன், அன்பு, அரிகிருஷ்ணன், ம.தி.மு.க. கபிரியேல், விடுதலை சிறுத்தைகள் அமுதவன், தமிழ்செல்வன், எழில்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×