என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே பயிற்சி  பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட காட்சி.
    X
    கராத்தே பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட காட்சி.

    மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம்

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கமும், புதுவை மாநில அனைத்து விளையாட்டு வீரர்கள் நலச்சங்கமும் இணைந்து மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம் நடத்தியது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கமும், புதுவை மாநில அனைத்து விளையாட்டு வீரர்கள் நலச்சங்கமும் இணைந்து மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாமை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடத்தியது.

    இந்த பயிற்சி முகாமுக்கு விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் இளங்-கோவன் தலைமை தாங்கினார். கராத்தே சங்கத்தின் தேசிய நடுவர்கள் அமிர்தராஜ், அய்யனார், கிருஷ்ணராஜ், மோகன், பிரவீன்குமார், விநாயாகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி-கள் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி முகாமில் தற்காப்பு பயிற்சி மற்றம் புதிய விதிமுறைகளின் படி கட்டாப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற சி.கே. பள்ளி மாணவர்களுக்கு புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் புதுவை விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் இளங்கோவன், துணைத்-தலைவர் மகேந்திரன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
    Next Story
    ×