என் மலர்
புதுச்சேரி
ராஜீவ்காந்தி கொலையாளிகளை காங்கிரஸ் கட்சி மன்னிக்காது என்று மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் இருந்து பிரித்து, தமிழ் ஈழத்தை தனிநாடாக ஆக்க முடியாத சூழ்நிலை அப்போது நிலவியதால், இலங்கை நாட்டிலேயே, தமிழ் ஈழம் ஒரு மாநிலமாக உருவாக்கி தருகிறேன்.
இதனால் தமிழர்கள், தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தோடு தனித்தன்மையுடன், (தமிழ்நாடு போல) தலை நிமிர்ந்து சகல உரிமைகளுடன் வாழலாம் என ராஜீவ் காந்தி கூறினார். தமிழினத்துக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு ராஜீவ்காந்தி கூறிய ஆலோசனையை அன்றைய தமிழீழ போராளிகள் நிராகரித்தனர்.
தன்னிகரற்ற, உலகம் போற்றிய நமது இளம் பாரத பிரதமரை மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தனர். இதனால் இந்திய தேசமே தனது ஒரு மாபெரும் தலைவரை இழந்தது.
இதனால் இலங்கையில் தமிழ் இனம் தங்களது நிலப்பகுதிகளை இழந்து, உரிமைகளை இழந்து, அடிமைகள் போல் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழ்கின்றனர். இந்த படுகொலைக்கு காரணமான கொலையாளிகளை, இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ராஜீவ்காந்தியின் மனைவி, மகன் மற்றும் மகள் மன்னித்தாலும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியும் மன்னிக்காது. ராஜீவ் காந்தியோடு இந்த மனித வெடிகுண்டு தாக்குதலால் உயிரிழந்த 16 இந்திய தமிழர்களை பற்றியும் இந்த விடுதலையை போற்றி மகிழ்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமய பண்பாட்டு பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வாழைக்குளம் பகுதியில் கல்வி பயிற்சி மையத்தில் இந்து சமய பண்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதனை வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிஷத் லட்சுமிநாராயணன், அகில பாரதீய வித்யார்தி பரிஷத் ராம் ஆகியோர் பங்கேற்று பயிற்சி வகுப்பை நடத்தினர்.
ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா தலைவர் நாகராஜன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் பாண்டியன், கதிரவன், மாலதி, முத்துக்குமார், உமாமகேஸ்வரி, பட்டாபி, இளவரசன், அருண்குமார், கருணாகரன், சதீஷ்குமார், ராம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், ஸ்கெட்ச் பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இந்த நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைந்தனர்.
புதுவை மின்துறையை தனியார் மயமாக்க ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கா? கவர்னருக்கா? என்பதை மட்டும் விசாரித்த கோர்ட்டு, மாநில அரசின் காலதாமதம் காரணமாக ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறி-வாளனை விடுவித்துள்ளது.
மத்திய அரசு முடிவெடுக்காத நிலையே பல கட்டங்களில் இத்தீர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 8 பேரும் குற்றவாளிகள்தான். அவர்களை ராஜீவ் குடும்பமோ, மற்றவர்களோ மன்னித்தாலும், காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
கொலை குற்றவாளியை விடுவித்ததை கொண்டாடும் வகையில் சில அமைப்புகள் பட்டாசு வெடிப்பதும், இனிப்பு வழங்குவதும் அவர்களின் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது. இது எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. ராஜீவ்காந்தியோடு குண்டு வெடிப்பில் உயிரிழந்த குடும்பத்தினர் நிலையையும் நாம் யோசித்து பார்க்க வேண்டும்.
மத்திய பா.ஜனதா அரசின் 8 ஆண்டுகால சாதனைகளை கூட்டம் நடத்தி, தெரிவிக்கப் போவதாக மாநில பா.ஜனதா கூறியுள்ளது. மோடி அரசில் 8 ஆண்டுகளில் சாதனைகள் ஏதும் கிடையாது. மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை.
விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், தொழில்கள் நசிவு போன்றவைதான் ஆட்சியின் சாதனைகள். இதை மக்களிடம் சொன்னால் அவர்கள் விரட்டியடிப்பார்கள்.
அமித்ஷா புதுவை வந்தபோது புதிய திட்டத்துக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர் வந்து சென்ற பின்னால் கடந்த 9-ந் தேதி புதுவை மின்துறையை தனியார்மயமாக்க ஒப்புதல் அளித்து ரங்கசாமி, மத்திய அரசுக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
மின்துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு சொத்து உள்ளது. மின்துறையால் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. தனியார்மயமானால் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.8-க்கு பெற வேண்டியிருக்கும். அங்கு பணியாற்றும் 3 ஆயிரத்து 500 ஊழியர்களின் நிலை என்ன? பணி பாதுகாப்பு உண்டா? அவர்கள் அரசு ஊழியர்களாக தொடர்வார்களா? மின்துறை தனியார் மயமாக்கும் முடிவை அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்தார்களா?
அடுத்தகட்டமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் புதுவை அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. காந்தி சிலை முதல் பாகூர் வரையிலும், காரைக்காலில் டி.ஆர்.பட்டினம், திருநள்ளாறு பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளனர். இதன் மூலம் புதுவை சுடுகாடாகும். கேசினோ நடத்த அனுமதி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
புதுவை மாநிலத்தை மத்திய பா.ஜனதா தன் கையில் எடுத்துக்கொண்டு டம்மி முதல்-அமைச்சரை வைத்து ஆட்டி படைக்கின்றனர். இதனால் புதுவையின் தனித்தன்மை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு பா.ஜனதாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதுவை என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசின் ஊழல் பட்டிலை தயாரித்து வருகிறோம். விரைவில் இதை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் உடனிருந்தார்.
கிருமாம்பாக்கம் அருகே ஓசியில் மதுபானம் கொடுக்கா-ததால் ஆத்திரமடைந்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் மதுக்கடை மானேஜரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புதுச்சேரி:
அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் சகாயஜான்போப் (வயது38). இவர் கிருமாம்பாக்கம் அருகே முள்ளோடையில் உள்ள ஒரு தனியார் மதுக்கடையில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை சகாயஜான்போப் மதுக்கடை-யில் மது விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது மணப்பட்டை சேர்ந்த மணி என்ற சி.டி.மணி, அவரது சகோதர் மனோகர் மற்றும் கிருமாம்பாக்கம் காலனியை சேர்ந்த சுரேஷ் ஆகிய 3 பேர் சகாயஜான்போப்பிடம் ஓசியில் மதுபானம் கேட்டனர். அதற்கு சகாயஜான்போப் தர மறுத்து ஓசியில் மதுபானம் வேண்டுமானால் மதுக்கடை உரிமையாளரிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி சகாயஜான்போப்பை தடியால் அடித்து கொலை செய்து விடுவோம் என்று கூறி அவரை கையால் சரமாரியாக தாக்கினர்.
வலி தாங்காமல் சகாய-ஜான்போப் அலறியதால் மது குடிக்க வந்தவர்கள் ஒன்று திரண்டனர். இதனை பார்த்து மணி உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சகாய-ஜான்போப் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன்-தம்பி உள்பட 3 பேரையும் தேடி வருகி றார்கள்.
திருக்கனூர் அருகே கூலி தொழிலாளியின் வீட்டில் புகுந்து படமெடுத்து ஆடிய நல்ல பாம்புகள் பிடிப்பட்டது.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு சரண்யா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயா (வயது 45) கூலித் தொழிலாளி.
7 மணி அளவில் அவரும், அவரது குழந்தைகளும் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்கு சென்றனர்.
அப்போது சலசலவென சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்த போது பாத்திரங்கள் அடுக்கி வைக்கும் இடத்தில் 2 நல்ல பாம்புகள் இருப்பதைக் கண்டு ஜெயா அதிர்ச்சியடைந்தார். பாம்பை பார்த்ததும் அவர் அலறினார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்–பக்கத்தினர் வந்து புதுவை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர் கண்ணதாசன் இரவு 11 மணியளவில் மண்ணாடிப்பட்டு வந்தார். அதற்குள் ஒரு பாம்பு ஓடி விட்டது.
ஒரு நல்ல பாம்பு மட்டுமே சிக்கியது. அதனை லாவகமாக பிடித்த அவர் சாக்கு பையில் போட்டு எடுத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரும்பார்த்தபுரம் எழில் நகரில் சாலை - தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர கோரி அதிகாரிகளிடம் எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி அரும்பார்த்தபுரம் எழில் நகரில் சுமார் 150 குடும்பங்கள் 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அந்த பகுதியில் போக்குவரத்து வசதிக்காக சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சாதாரண நாட்களில் கூட சாலைகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. அதுவே மழைக்காலமாக இருந்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவாவிடம் முறையிட்டனர்.
அப்போது நீண்ட காலமாக சாலை வசதியில்லாத எங்கள் நகருக்கு சாலை வசதிகளையும், தெரு விளக்குடன் மின் கம்பம் வசதியும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அரும்பார்த்தபுரம் எழில் நகரில் ஆய்வு மேற்கொண்டு சாலை மற்றும் மின்கம்ப வசதிகளை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
கிருமாம்பாக்கம் சாய்பாபா கோவிலில் கவர்னர் தமிழிசை வழிபாடு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு விழாவிற்கு காரைக்கால் சென்றார். பின்னர் புதுச்சேரி திரும்பினார். வரும் வழியில் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு திடீரென சென்றார்.
அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்து வரவேற்றனர். சாய்பாபாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ் கொலை குற்றவாளிகளை மாநில அரசு விடுதலை செய்யும் என 19.02.2014-ல் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
அவரை தொடர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என 9.9.2018-ல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு ஜெயலலிதா வுக்கும் அவரைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசின் தொடர் சட்டரீதியான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் இயக்கம் அ.தி.மு.க. தனது விடுதலைக்காக துணைநின்ற அ.தி.மு.க. முன்னாள் முதல் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை பேரறிவாளன் சந்தித்து நன்றியை தெரிவித்ததே அவரின் விடுதலைக்கு அ.தி.மு.க.தான் காரணம் என்பதை தி.மு.க.வினர் உணர வேண்டும்.
இத்தீர்ப்பை புதுவை அரசு முன்னுதாரணமாக எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஆயுள் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க அரசும், முதல்- அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், பிரதேச குழு செயலாளர் ராஜாங்கம், பிரதேச செயற்குழு உறுப்பினர் பெருமாள், சீனுவாசன், சத்தியா, பிரதேச குழு சங்கர், வக்கீல் தட்சிணாமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் திருபுவனை தொகுதி செயலாளர் ஈழவளவன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொகுதி அமைப்பாளர் தமிழ்க் கனல், தொகுதி துணைச் செயலாளர் சிந்தனைச்செல்வன் மற்றும் புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கொம்யூன் செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ராஜீவ் காந்தி கொலையாளிகளை இறைவன் மன்னிக்க மாட்டான் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
ராஜீவ் கொலையாளியான பேரறிவாளனை சுப்ரீம்கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.
பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று காங்கிரஸ் சார்பில் மாவட்டந்தோறும் மவுன போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் புதுவையில் காங்கிரஸ் எம்.பி.வைத்திலிங்கம் பேரறிவாளன் விடுதலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை நீதிமன்றம் மன்னித்தாலும் இறைவன் மன்னிக்க மாட்டான்.
நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனை. காங்கிரஸ் பேரியக்கத்திற்கு நேற்றைய தினம் கருப்பு தினம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவை முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
இந்திய அரசின் எதிர்கால விடிவெள்ளியாக திகழ்ந்தவர் வெளியுறவு மற்றும் அணுகுண்டு கொள்கையில் திறம்பட செயல்பட்டவர், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் ராஜீவ்காந்தி.
அவரின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியாதது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மன்னித்தாலும் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன், மன்னிக்க மாட்டான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆரோவில் நிர்வாகத்திற்கு எதிராக வெளிநாட்டினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்
புதுச்சேரி:
ஆரோவில் நிர்வாக அலுவலகத்தை ஆரோவில் வாசிகள் திடீரென முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரோவில் சர்வதேச நகரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னையின் கனவு திட்டமான பசுமை வழிச்சாலை அமைக்க பணிகள் நடைபெற்றது.
ஒருதரப்பு ஆரோவில் வாசிகள் இத்திட்டத்தினை எதிர்த்தனர். இதனால் வளர்ச்சி திட்ட பணிகளை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் மரங்களை வெட்டாமல் வீடுகளை இடிக்காமல் பணிகள் தொடரலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் நேற்று நிர்வாக குழு கூட்டம் நடந்தது. ஆரோவில் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக இன்று காலை 500-க்கும் மேற்பட்ட ஆரோவில் வாசிகள் ஆரோவில் நகர நிர்வாக செயலகம் அலுவலகத்தில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆரோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உருளையன்பேட்டை முல்லைநகர் பகுதியில்பு திய சிமெண்டு சாலை அமைக்கும் பணி நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் விரிவு மலர் வீதியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் ரூ.14 லட்சம் செலவில் பழைய சார் சாலையை மாற்றி புதிய சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. இப்பணியை தொகுதி எம்.எல்.ஏவான நேரு பூமி பூைஜ செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையர் சிவக்குமார், செயற்ெபாறியாளர், சிவபாலன் பொறியாளர் நமச்சிவாயம், மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களான ராமலிங்கம், , சிவராஜ், குணசேகரன் வேலாயுதம், கராத்தே சுந்தர்ராஜன், ஜெக விநாயகம், வேல்முருகன் வக்கீல் ஆதித்யன், பூவரசன் ,வெங்கடேஷ், வாசு, ரெனோ, , சக்திவேல், தினகரன், சரவணன், தேவி, பாரதி, சரவணன், விக்டோபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






