என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மதுக்கடை மானேஜரை தாக்கி கொலை மிரட்டல்

    கிருமாம்பாக்கம் அருகே ஓசியில் மதுபானம் கொடுக்கா-ததால் ஆத்திரமடைந்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் மதுக்கடை மானேஜரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    புதுச்சேரி:

    அரியலூர் மாவட்டம் வரதராஜன்  பேட்டையை சேர்ந்தவர் சகாயஜான்போப் (வயது38). இவர் கிருமாம்பாக்கம் அருகே முள்ளோடையில் உள்ள ஒரு தனியார் மதுக்கடையில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை சகாயஜான்போப் மதுக்கடை-யில் மது விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

    அப்போது மணப்பட்டை சேர்ந்த மணி என்ற சி.டி.மணி, அவரது சகோதர் மனோகர் மற்றும் கிருமாம்பாக்கம் காலனியை சேர்ந்த சுரேஷ் ஆகிய 3 பேர் சகாயஜான்போப்பிடம் ஓசியில் மதுபானம் கேட்டனர். அதற்கு சகாயஜான்போப் தர மறுத்து ஓசியில் மதுபானம் வேண்டுமானால் மதுக்கடை உரிமையாளரிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி சகாயஜான்போப்பை தடியால் அடித்து கொலை செய்து விடுவோம் என்று கூறி அவரை கையால் சரமாரியாக தாக்கினர்.

    வலி தாங்காமல் சகாய-ஜான்போப் அலறியதால் மது குடிக்க வந்தவர்கள் ஒன்று திரண்டனர். இதனை பார்த்து மணி உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சகாய-ஜான்போப் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன்-தம்பி உள்பட 3 பேரையும் தேடி வருகி றார்கள்.
    Next Story
    ×