search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிடிப்பட்ட நல்லபாம்பு
    X
    பிடிப்பட்ட நல்லபாம்பு

    கூலி தொழிலாளி வீட்டில் புகுந்து பாம்புகள்

    திருக்கனூர் அருகே கூலி தொழிலாளியின் வீட்டில் புகுந்து படமெடுத்து ஆடிய நல்ல பாம்புகள் பிடிப்பட்டது.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு சரண்யா நகர் முதல் தெருவை  சேர்ந்தவர் ஜெயா (வயது 45) கூலித் தொழிலாளி.

    7 மணி அளவில் அவரும், அவரது குழந்தைகளும் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்கு சென்றனர்.

    அப்போது சலசலவென சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்த போது பாத்திரங்கள் அடுக்கி வைக்கும் இடத்தில் 2 நல்ல பாம்புகள் இருப்பதைக் கண்டு ஜெயா அதிர்ச்சியடைந்தார். பாம்பை பார்த்ததும் அவர் அலறினார்.
    அவரது அலறல்  சத்தத்தைக் கேட்டு அக்கம்–பக்கத்தினர் வந்து புதுவை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர் கண்ணதாசன் இரவு 11 மணியளவில் மண்ணாடிப்பட்டு வந்தார். அதற்குள் ஒரு பாம்பு ஓடி விட்டது. 

    ஒரு நல்ல பாம்பு மட்டுமே சிக்கியது. அதனை லாவகமாக பிடித்த அவர் சாக்கு பையில் போட்டு எடுத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×