என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • திருக்காமீஸ்வரர் கோவில் விநாயகர் தேருக்கு புதிய இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
    • திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாளை (11-ந் தேதி) தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன், விநாயகர், அம்மன், திருக்காமீஸ்வரர் ஆகிய 3 தேர்களின் உறுதித்தன்மை குறித்து திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் விநாயகர் தேரில் பழுதாகி இருந்த மர சக்கரத்தை சரிசெய்ய குழு பரிந்துரைத்தது. சிவா எம்.எல்.ஏ. விநாயகர் தேருக்கு இரும்பு சக்கரத்தை தனது செலவில் அமைத்து தருவதாக தெரிவித்தார்.

    அதன்படி, ரூ.3 லட்சம் செலவில், 3 டன் எடையில் இரு அச்சுகள் மற்றும் 4 சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு, நேற்று மாலை கோவிலுக்கு வந்தது.

    சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் புதிய சக்கரத்திற்கு பூஜை செய்து, கரிக்கோலம் நடந்தது. கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன், முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் மண்ணாங்கட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குடோனில் வைக்கப்பட்டுள்ள 30 டன் ரேசன் அரிசி மக்கி துர்நாற்றம் வீசியதாக தி.மு.க குற்றச்சாட்டுகிறது.
    • புதுவை மரப்பாலம் சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான அங்காடி வளாகம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மரப்பாலம் சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான அங்காடி வளாகம் உள்ளது.

    அதை குடோனாக பாப்ஸ்கோ செயல்படுத்து கிறார்கள். கீழ் பகுதியில் உள்ள 2 கடைகளில், ரேஷனில் விநியோகிக்கப்படும் இலவச அரிசி மூட்டைகளை வைத்துள்ளார்கள்.

    கொரோனா காலத்து க்கு முன்பேயே அரிசி வைக்கப்ப ட்டதால் உள்ளேயே மக்கி, புழு பூத்து நாற்றம் வீசத் தொடங்கியது. அதையடுத்து எம்.எல்.ஏ. சம்பத்திடம் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    அவரும், எதிர்க்கட்சி த்தலைவர் சிவாவும் அங்கு வந்து குடோனை திறந்து பார்த்தனர். 2 அறைகளிலும் 100-க்கணக்கான அரிசி மூட்டைகள் மக்கி புழு பூத்து துர்நாற்றம் வீசியது. அவை முற்றிலும் வீணாகிபோயிருந்தது. மொத்தம் 30 டன் வரை அரிசி வீணாகியிருந்தது தெரிய வந்தது.

    இதுபற்றி எதிர்க்கட்சி த்தலைவர் சிவா கூறுகையில், "பாப்ஸ்கோ நிறுவனமானது அரசு துறைக்கு சொந்தமான வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகராட்சி இடங்களில் பொருட்களை போட்டு மூடி வாடகையும் தராமல் உள்ளனர்.

    பாப்ஸ்கோ நிறுவனம் வாடகை தராமல் உள்ளதால் நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியாத நிலை உள்ளது. அரிசி மூட்டைகளை இங்கு ஏன் வைத்தார்கள் - விநியோகம் ஏன் செய்யவில்லை என்ற கேள்வி உள்ளது. அரிசிக்கு பணம் தந்தது பாப்ஸ்கோவா, குடிமை பொருள் வழங்கல்துறையா என தெரியவில்லை.

    நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வைத்துள்ளது ஏன் எனவும் தெரியவில்லை. மக்களுக்கு தரவேண்டிய அரிசி கணக்குகாட்டாமல் வைத்துள்ளார்களா என்ற விவரங்கள் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். மக்களுக்கு வழங்கவேண்டிய அரிசி முற்றிலும் வீணாகி போயுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • சொகுசு கப்பலில் சூதாட்ட கேசினோ விடுதி இருப்பதால் கப்பலை புதுவை பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா அரசின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • கவர்னர் தமிழிசை, கப்பல் நிற்பது தொடர்பாக கோப்பு ஏதும் என்னிடம் வரவில்லை. அப்படியே கப்பல் வந்தாலும் கலாச்சார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுவை அரசு அனுமதிக்காது என்று கூறினார்.

    புதுச்சேரி:

    தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை-விசாகப்பட்டினம்- புதுவை இடையே இயங்கும் தனியார் சொகுசு கப்பலை சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

    சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுவை உப்பளம் துறைமுக பகுதிக்கு வந்து சிறிய படகுகள் மூலம் பயணிகளை இறக்கி புதுவையை சுற்றிக் பார்க்க வைக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

    இதன் பிறகு புதுவையிலிருந்து மீண்டும் சென்னைக்கும் இந்த கப்பல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சொகுசு கப்பலில் சூதாட்ட கேசினோ விடுதி இருப்பதால் கப்பலை புதுவை பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா அரசின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    மேலும், சொகுசு கப்பல் புதுவை கடலில் நிற்க புதுவை அரசு அனுமதி தந்துள்ளதா.? அப்படி அனுமதி தந்திருந்தால் அந்த கப்பல் நிற்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இதற்கு கவர்னர் தமிழிசை, கப்பல் நிற்பது தொடர்பாக கோப்பு ஏதும் என்னிடம் வரவில்லை. அப்படியே கப்பல் வந்தாலும் கலாச்சார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுவை அரசு அனுமதிக்காது என்று கூறினார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று புதுவை கடல் எல்லை பகுதிக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணியவில் சொகுசு கப்பல் வந்தது.

    புதுவை கடற்கரையில் இருந்து பார்த்த போது தனியார் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. சொகுசு கப்பலை பார்க்க புதுவை நகர பகுதி மக்கள் கடற்கரையில் கூடினர்.

    சொகுசு கப்பல் பயணிகள் உப்பளம் துறைமுகத்துக்கு சிறிய படகுகளில் வந்து சுற்றி பார்க்க இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், காலை 8.30 மணியளவில் புதுவை கடல் பகுதியில் இருந்து கப்பல் புறப்பட்டு சென்றது.

    இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சொகுசு கப்பலை புதுவை கடலில் நிறுத்தி பயணிகளை உப்பளம் துறைமுகத்தின் வழியே இறங்கி செல்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.

    ஆனால், புதுவை அரசு இதுவரை அனுமதி தரவில்லை. இதற்கான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதனால் பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் புதுவை கடலில் நின்று விட்டு திரும்பிவிட்டது என கூறினர்.

    • சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் செய்தது.

    சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் கப்பலில் சுற்றுலா சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காத நிலையில் கீரப்பாளையம் லைட் ஹவுஸ் அருகே சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • புதுவை தவளகுப்பம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி பிளஸ் -2 மாணவர் பலியானார்.
    • சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி மாணவர் இறந்த சம்பவம் அவருடன் வந்த நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    பாகூர்:

    திண்டுக்கல் சிறுமலை தாழகடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கபிலன் (வயது 18). இவர் பிளஸ் -2 தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்காக காத்திருந்தார். இந்த நிலையில் கபிலனும் அவரது நண்பர்கள் 7 பேரும் புதுவைக்கு பஸ்சில் சுற்றுலா வந்தனர். புதுவையில் பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்த அவர்கள் இன்று காலை தவளகுப்பம் அருகே புதுக்குப்பம் கடற்கரைக்கு வந்தனர். கடல் அழகை ரசித்த அவர்கள் பின்னர் கடலில் இறங்கி குளித்தனர்.

    அப்போது எழுந்த ராட்சத அலையில் கபிலன் சிக்கிக்கொண்டார். அவரை அருகில் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் இயலவில்லை. கபிலனை அலை இழுத்துச் சென்றது. உடனே அவரது நண்பர்கள் அபய குரல் எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்த மீனவர்கள் விரைந்து வந்து கடலில் மூழ்கிய கபிலனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கபிலன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி மாணவர் இறந்த சம்பவம் அவருடன் வந்த நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • புதுவை அருகே நடு ரோட்டில் கார் கவிழ்ந்தது பெண் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்
    • புதுவையில் கார் கவிழ்ந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கார் கவிழ்ந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் இவரது மனைவி நளினி உள்ளிட்ட 4 பேர் இன்று சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

    திண்டிவனம்-புதுவை பைபாஸ் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது காருக்குப் பின்னால் வந்த டிப்பர் லாரி உரசுவது போல் வந்தது. காரை ஓட்டிய நளினி பயந்து சாலை நடுவே இருந்த கட்டையில் மோதினார்.

    அப்பொழுது கார் பல்டி அடித்து தலை குப்புற சாலையில் கவிழ்ந்தது.

    இதில் லேசான காயத்துடன் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 14 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விற்பனைகுழு ஊழியர்கள் தொடர்ந்து 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
    • ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    புதுச்சேரி:

    10 மாத சம்பள நிலுவை, பணி நிரந்தரம் உட்பட கோரிக்கைகைளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. விற்பனை குழு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    அப்போது லாஸ்பேட்டையில் விவசாயி களை உழவர்சந்தையில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்கள் வீணானது.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 9 நிரந்தர, 5 தற்காலிக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேநேரத்தில் புதுவை உழவர்சந்தையில் விவசாயிகள் வழக்கம் போல் வியாபாரம் செய்தனர்.

    இந்த நிலையில் 2-வது நாள் போராட்டம் தொடர்ந்தது. தட்டாஞ்சாவடி விற்பனை குழுவின் குடோனில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கோசம் போட்டனர். போராட்டத்தால் விவசாயி களுக்கு வழங்கப்படும் தராசு, எடை கற்கள் வழங்கப்பபடவில்லை. ஆனால், உழவசந்தைகள் இயங்கியது.

    • முதலியார்பேட்டை தொகுதியில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
    • பள்ளிகள் துவங்குவதற்கு முன் அரசு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைத் தேவைகள் குறித்த ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்

    புதுச்சேரி:

    பள்ளிகள் துவங்குவதற்கு முன் அரசு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைத் தேவைகள் குறித்த ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு முதலியார் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் தலைமை தாங்கினார். இதில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிட பிரிவு கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீதரன், இளநிலைப் பொறியாளர்கள் ஜெயராமன், கோபிநாத் மற்றும் முதலியார் பேட்டை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 23-ந் தேதி பள்ளி திறப்பதற்கு முன் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஒவ்வொரு பள்ளியில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    குறிப்பாக மாணவருக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிவறை வசதி இருப்பதை பொதுப்ப ணித்துறை சார்பில் கள ஆய்வு மேற்கொண்டு குறை பாடுகளை சரி செய்வதாக பொதுப்பணித்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    • திருக்கனூரில் செப்டிக் டேங்க் லாரியில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து இறந்து போனார்.
    • தினமும் செப்டிக் டேங்க் லாரியை திருக்கனூர் கடை வீதியில் ஒரு ஆயில் மில் எதிரே நிறுத்துவது வழக்கம்.

    புதுச்சேரி:

    கடலூர் திருப்பாபுலியூர் சுரேஷ்நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது41). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    தினமும் செப்டிக் டேங்க் லாரியை திருக்கனூர் கடை வீதியில் ஒரு ஆயில் மில் எதிரே நிறுத்துவது வழக்கம்.

    இந்தநிலையில் அந்த லாரியை டிரைவர் திருக்கனூர் கடை வீதியில் நிறுத்திவிட்டு சென்றார். ஜெயக்குமார் லாரியின் டிரைவர் இருக்கையில் தூங்கினார். பார்த்த போது இருக்கையில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

    குடிபோதையில் அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமார் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்து போன ஜெயகுமாருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது காண்டிராக்டர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • இவருக்கு ராணி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மற்ற 2 மகள்கள் படித்து விட்டு வீட்டில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைபிள்ளை சாவடி வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்தவர் அப்பாவு. இவர் மொசைக் காண்டிராக்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மற்ற 2 மகள்கள் படித்து விட்டு வீட்டில் உள்ளனர்.

    கடந்த 25 நாட்களுக்கு முன்பு அப்பாவுவுக்கு கண் கோளாறு ஏற்பட்டது. இதற்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    வாரந்தோறும் அவர் தனது மனைவியுடன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கண் பரிசோதனை செய்து கொண்டு வருவது வழக்கம்.

    அதுபோல் அப்பாவு தனது மனைவி ராணியுடன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கண் பரிசோதனை செய்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பு கொண்டிருந்தார்.

    மறைமலை அடிகள் சாலையில் அந்தோணியார் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென அப்பாவுவுக்கு மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி ராணி கணவரை ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அப்பாவு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனைவி பிரிந்து பிரான்சில் வசிப்பதால் நகராட்சி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவருக்கு 2009-ம் ஆண்டு தமிழ் செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது.

    புதுச்சேரி:

    உப்பளம் நேத்தாஜி நகர் அசோகன் வீதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது57). இவர் புதுவை நகராட்சியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு 2009-ம் ஆண்டு தமிழ் செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்செல்வி கணவரை விட்டு பிரிந்து பிரான்சில் வசித்து வருகிறார். இதனால் லோகநாதன் தனது சகோதரர் ராமகிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே லோகநாதனுக்கு இதய நோய் மற்றும் நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மனைவி பிரிந்து பிரான்சில் வசித்து வந்ததால் லோகநாதன் மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருந்த அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.80 செலவில் மேம்பாட்டு பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • ரூ.77 லட்சத்து 86 ஆயிரம் செலவில்

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதிக்குட்பட்ட மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பட்டாபிராமர் கோவில் வளாகத்தில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சத்து 99ஆயிரம் செலவில் பொதுக் கழிப்பிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து ரூ.77 லட்சத்து 86 ஆயிரம் செலவில் உச்சிமேடு தாங்கல் வடிகால் வாய்க்கால், மணப்பட்டு - காட்டுக்குப்பம் வாய்க்கால், மணப்பட்டு ஆத்துவாய்க்கால், மேல்பரிக்கல்பட்டு தாங்கள், சோரியாங்குப்பம் ஓடைவெளி வாய்க்கால், சோரியாங்குப்பம் தாங்கள் வாய்க்கால், சோரியாங்குப்பம் ஏரி வாய்க்கால் ஆகியவற்றை துார்வாரும் பணியை, அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், தி.மு.க., தொகுதி நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×