என் மலர்
புதுச்சேரி
- வம்பாகீரப்பாளையத்தில் படகுகளுக்கு இடையூறாக உள்ள கற்களை அகற்றும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- தெற்குப் புறத்தில் கருங்கற்கள் கொட்டியதால், மீனவர்கள் பாலத்தின் வடக்குப் புறமாக தொழில் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வம்பாகீரப்பாளையம் பழைய துறைமுகம் பாலத்துக்கு தெற்குப் புறமாக, கட்டுமரம் மூலமாக கடலுக்கு சென்று மீன்பிடித் தொழிலை மீனவர்கள் செய்து வந்தனர். தெற்குப் புறத்தில் கருங்கற்கள் கொட்டியதால், மீனவர்கள் பாலத்தின் வடக்குப் புறமாக தொழில் செய்து வருகின்றனர்.
பாலத்திற்கு வடக்குப் புறம் உள்ள தூண்டில் வளைவானது, தானே புயலில் சரிந்து கடலில் சிதறியதால், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
படகுகளை நிறுத்தவும், கடலுக்கு செல்லவும் சிரமப்படுவதால், இப்பகுதியில் உள்ள கற்களை அகற்றி கொடுக்கும்படி, தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அனிபால் கென்னடியின் முயற்சியால் பொதுப்பணித்துறை மூலமாக கருங்கற்களை அகற்றும் பணி தொடங்கியது. அந்த பணிகளை கென்னடி எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொகுதி தி.மு.க., செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ரவி, பொருளாளர் சண்முகம், மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- சித்தர்கள் வாழ்ந்து புண்ணிய பூமியாக இருந்த புதுவை தற்போது கொலை நகரமாக மாறி விட்டது.
- நாள் தோறும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.
புதுச்சேரி:
கோவிந்தசாலை-கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுவையில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. ரவுடிகள் தங்கள் எதிரிகளை வெடிகுண்டு வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும் சிறு, சிறு பிரச்சினைகள் இருந்தால் கூட ரவுடிகள் அதனை முன் விரோதமாக கருதி எதிராளிகளை கொலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக ரவுடிகள் சிறு வயது இளைஞர்களை தங்களது கூட்டாளிகளாக மாற்றி அவர்களுக்கு மது, கஞ்சா போன்றவற்றை வழங்கி அவர்கள் மூலம் வஞ்சம் தீர்த்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அத்திபூத்தாற் போன்று வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்து வந்த நிலையில் தற்போது வெடிகுண்டு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
சித்தர்கள் வாழ்ந்து புண்ணிய பூமியாக இருந்த புதுவை தற்போது கொலை நகரமாக மாறி விட்டது.
நாள் தோறும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.
மாலைப் பொழுதில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அஞ்சும் நிலை உள்ளது. இதனை கட்டுப்படுத்த புதுவை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு ரவுடிகளை கைது செய்தாலும் புதிது, புதிதாக ரவுடிகள் உருவாகிறார்கள்.
அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடை விதிக்கப்பட்டாலும் ஒரு சில நாட்கள் மட்டும் ரவுடிகள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்து விட்டு மீண்டும் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.
இந்த நிலையில் கண்டாக்டர் தோட்டம், கோவிந்தசாலை மற்றும் டி.வி. நகர் பகுதிகளில் ரவுடிகள் வீடுகளில் தங்கி இருப்பதாக தகவல் வந்ததின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டுகள் சுபம்கோஷ், வம்சித ரெட்டி ஆகியோர் தலைமையில் அதிரடி போலீசார் மற்றும் பெரியக்கடை, ஒதியஞ்சாலை போலீசார் இன்று காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை 2 மணி நேரம் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 6 ரவுடிகள் போலீசாரின் சோதனையில் சிக்கினர். மேலும் ஒரு ரவுடியின் வீட்டில் சாராயமும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த ரவுடியின் தாயாரை போலீசார் கைது செய்தனர். அதே வேளையில் ரவுடிகளின் வீடுகளில் எந்த ஆயுதமும் சிக்கவில்லை. போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் மற்ற ரவுடிகளிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
- தவளக்குப்பம் அருகே கழிவுநீர் வாய்க்கால் தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கெங்கையம்மாள்(வயது50).
இவர் தனது வீட்டின் எதிரே கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த நித்தீஷ்(25) என்பவர் கெங்கையம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி ஏன் கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்கிறாய்? என கேட்டு தகராறு செய்தார்.
இதனை கெங்கையம்மாள் தட்டி கேட்ட போது அவரை கையில் வைத்திருந்த சவுக்கு தடியால் தலையில் தாக்கினார். மேலும் நித்தீசின் மனைவி கோமதி மற்றும் நித்தீசின் அண்ணன் மகன் தமிழ்வாணன் ஆகியோரும் கெங்கையம்மாளை கிழே தள்ளி வயிற்றிலும், முகத்திலும் எட்டி உதைத்தனர்.
அதோடு 3 பேரும் சேர்ந்து இனிமேல் எங்கள் குடும்பத்தாரிடம் பிரச்சினை செய்தால் உங்கள் குடும்பத்தையே எரித்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த கெங்கையம்மாள் தனது உறவினர் மூலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நல்லவாடு பள்ளிகூட வீதியை சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி வித்யா (38). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கமுள்ள வேலுமணி மது குடித்து விட்டு வித்யாவை கையாலும், மரக்கட்டையாலும் தாக்கினார்.
மேலும் நீ உயிரோடு இருந்தால் எனக்கு தொல்லையாக இருக்கும். எனவே கொலை செய்து விடுகிறேன் பார் என்று கூறி மீண்டும் வித்யாவை தலையில் தாக்கினார்.
இதுகுறித்து வித்யா தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
- இவர் எலி மருந்து தின்று விட்டார்.
புதுச்சேரி:
புதுவை பீச்சைவீரன்பேட் புதுநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகசந்தர்(வயது27). இவர் அங்குள்ள ராதாகிருஷ்ணன் நகரில் ஏ.சி. மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
இவர் எலி மருந்து தின்று விட்டார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லோகசந்தர் பரிதாபமாக இறந்து போனார். அவர் தற்கொலை செய்தற்காக காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து லோக சந்திரனின் உறவினர் கனகராசு கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியாங்குப்பம் மணவெளி அண்ணா வீதியை சேர்ந்தவர் பத்மநாராயணன். இவரது மனைவி தமிழ்செல்வி(60). இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வி அங்கே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கவர்னர் தமிழிசை வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
- கடந்த 3-ந் தேதி கொடி–யேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்கா–மீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 3-ந் தேதி கொடி–யேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 13 நாட்கள் நடக்கும் விழாவில் 6-ந் தேதி பாரிவேட்டை நடந்தது. 8-ந் தேதி அலங்கரிக்கப்பட்ட 63 நாயன்மார்களுடன் உற்சவர்கள் வீதியுலா நடந்தது.
10.30 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் வீதியுலா நடந்தது. திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை தொடங்கி வைக்க வந்த கவர்னர் தமிழிசைக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கவர்னர் தமிழிசை வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேரோட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்க்கட்சித்தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். தெப்ப உற்வசமும், 14-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.
- கணக்குகுழு கூட்டம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது
- ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை மாநில அரசு அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் கணக்காய்வு துறைக்கு சமர்ப்பிக்கப் படாமல் உள்ள கணக்கு அறிக்கைகள் குறித்தும் கணக்காய்வு அலுவலகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் இருப்பது குறித்தும் அதுதொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுக் கணக்கு குழு தலைவர் கே. எஸ். பி. ரமேஷ் எம்.எல்.ஏ. புதுவை அரசின் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, நிதித்துறை செயலர் பிரசாந்த், கோயல் தமிழ்நாடு மற்றும் புதுவை முதன்மை கணக்காய்வு தலைவர் அலுவலக தணிக்கை அதிகாரிகள் ,முதன்மை கணக்காய்வு தலைவர் ஆனந்த், முதுநிலை துணை கணக்காய்வு தலைவர் வர்ஷினி அருண், சட்டப்பேரவை செயலர் முனுசாமி, சபாநாயகரின் தனிச் செயலர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கணக்காய்வு துறைக்கு சமர்ப்பிக்கப் படாமல் உள்ள கணக்கு அறிக்கைகள் மற்றும் கணக்காய்வு துறைகளுக்கு உரிய பதில் அளிக்காதது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் பொது கணக்கு குழு தலைவர் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோர் முன்னிலையில் அனைத்து அரசுத் துறை செயலர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டுக் கூட்டத்தை விரைந்து கூட்டுவது என்றும் அக்கூட்டத்தில் கணக்காய்வு அறிக்கைகள் குறித்து விரிவாக விவாதிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
- கொலை மிரட்டல் விடுத்தயொட்டி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மணவெளி தொகுதிக்குட்பட்ட அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது
புதுச்சேரி:
மணவெளி தொகுதிக்குட்பட்ட அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கவர்னர், முதல்-அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட தலைவர்களின் பேனரில் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் முன்தினம் அப்பகுதியில் இருந்த சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உருவம் பொறித்த 2 பேனர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்து விட்டு சென்று விட்டனர்.
இதனால் சந்தேகத்தின் பேரில் அபிஷேகப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி ஹேமாமாலினி என்பவர் அப்பகுதியை சேர்ந்த வடிவேலு, தட்சணாமூர்த்தி என்ற திவாகர், பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சந்துரு ஆகியோரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ஹேமமாலினியை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து ஹேமமாலினி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து வடிவேலு, தட்சிணாமூர்த்தி, சந்துரு ஆகிய 3 பேரை கைது செய்து உள்ளனர்.
- மணப்பட்டு கிராமத்தில் மகளிர் உணவு பாதுகாப்பு குழுவினர் சார்பில் செக்கு எண்ணெய் தயாரிப்பு விற்பனையை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தர்.
- மகளிர்கள் உணவு பாதுகாப்பு குழு ஆரம்பித்து அப்பகுதியில் ஈஸ்வரன் செக்கு எண்ணெய் உற்பத்தியாளர் குழு என தொடங்கியுள்ளனர்
புதுச்சேரி:
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் மூலம் மத்திய அரசின் வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் ரூ 85 லட்சத்திற்கு மிகாமல் எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம், ஆத்மா மற்றும் மகளிர் உணவு பாதுகாப்பு குழு குழுவிற்கு வழங்கப்பட்டு வருகிறது
இத்திட்டத்தின்கீழ் மணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 5 மகளிர்கள் உணவு பாதுகாப்பு குழு ஆரம்பித்து அப்பகுதியில் ஈஸ்வரன் செக்கு எண்ணெய் உற்பத்தியாளர் குழு என தொடங்கியுள்ளனர்.
இந்த குழுவின் மூலம் செக்கு எண்ணெய் தயாரிக்கும் மையத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார். இந்நிகழ்ச்சிக்கு பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை வேளாண் இயக்குனர் சந்தானகிருஷ்ணன், துணை வேளாண் இயக்குனர் சிவசுப்பிரமணியன், வேளாண் அலுவலர் வளர்மதி வாசுதேவன், உதவி வேளாண் அலுவலர்கள் ராமமூர்த்தி, நாராயணசாமி மற்றும் சுய உதவிக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆத்மா வட்டார தொழில்நுட்ப பிரிவு மேலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
- கிருமாம்பாக்கம் அருகே வேன்-கார் நேருக்கு நேர் மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர்.
- இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. வேனும் நடுரோட்டில் கவிழ்ந்து போனது.
புதுச்சேரி:
மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மின்துறை ஊழியர்கள் 11 பேர் அடங்கிய குழுவினர் சங்கத்தின் சார்பில் சென்னையில் அமைச்சரை சந்திக்க இன்று காலை ஒரு வேனில், சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
புதுவை-கடலூர் சாலையில் பிள்ளையார் குப்பம் சந்திப்பு அருகே வந்த போது, எதிரே காரைக்கால் நோக்கி சென்ற காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு ள்ளனது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. வேனும் நடுரோட்டில் கவிழ்ந்து போனது.
தகவலறிந்த கிருமா ம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் இணைந்து, விபத்தில் காயமடைந்த மின் துறை ஊழியர்களை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் மின் ஊழியர்கள் மணிமாறன் (45), கிருஷ்ணமூர்த்தி (57), லெனின் (47), சிவசண்முகம் (57) ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அதேபோல், காரில் பயணம் செய்து காயம் அடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பாகூர் அருகே 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ரூ.3லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.
- இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் இவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
புதுச்சேரி:
பாகூர் அருகே உள்ள ஆதிங்கப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமு (வயது 60), கூலி தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் இவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோமு தனது குடும்பத்தினருடன் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீ பிடித்து எரிந்த குடிசை மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள பாரதிராஜா வீட்டின் மடியில் மேல் கூரை வீட்டில் வசித்து வந்த கோவிந்தன் என்பவரின் வீட்டிலும், தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளும், முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இதில் சோமு, கோவிந்தன் ஆகியோரது வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள், மின்சாதன பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றவை தீயில் எரிந்து சேதமானது.
இதன் சேத மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார். இன்று காலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உருளையன்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன
புதுச்சேரி:
உருளையன்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
உருளையன்பேட்டை புதிய பஸ் நிலையம் எதிரே அம்மன்கோவில் தெருவில் சித்தி விநாயக சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா 6-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.
கடந்த 8-ந் தேதி மாலை முதல் கால யாக பூஜையும் நேற்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும் மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடந்தது.
இன்று (வெள்ளிக்–கிழமை) காலை 5 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரம், பரிவார தெய்வங்கள் மற்றும் மூலவமூர்த்திக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா, உருளையன் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சுந்தரேசன், ஆணையாளர் சிவசங்கரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பால்குட ஊர்வலமும், மதியம் 12.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு சிவகாமி சமேத நடராஜர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண நிகழ்ச்சியும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் சிறப்பு அதிகாரியும், புதுவை பொதுப்பணித்துறை என்ஜினீயருமான சண்முகம், திருப்பணி குழுவினர் மற்றும் தேவாங்ககுல மரபினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- புதுவைக்கு ரத யாத்திரை வந்தது
- சிலை கடத்தல், புதையல் வேட்டை பற்றி கிஷோர் இயக்கத்தில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதையில் மாயோன் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
சிலை கடத்தல், புதையல் வேட்டை பற்றி கிஷோர் இயக்கத்தில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதையில் மாயோன் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் நடிகர் சிபிராஜ், தான்யா ஆகியோர் நடித்துள்ளனர். சிலை கடத்தல் பற்றி திரில்லர் படமாக உருவாக்கப் பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்துக்காக பெருமாள் சிலையுடன் கூடிய ரத யாத்திரை தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது.
சென்னையில் தொடங்கி வேலூரில் இந்த ரத யாத்திரை நிறைவு பெறுகிறது. இந்த ரத யாத்திரை புதுவைக்கு வந்தது. புதுவை முருகா திரையரங்கு வந்த ரத யாத்திரைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன. தொடர் ந்து கலைஞ ர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.






