என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chamundeeswari Amman Temple Kumbabhisheka"

    • உருளையன்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    உருளையன்பேட்டை புதிய பஸ் நிலையம் எதிரே அம்மன்கோவில் தெருவில் சித்தி விநாயக சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா 6-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.

    கடந்த 8-ந் தேதி மாலை முதல் கால யாக பூஜையும் நேற்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும் மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடந்தது.

    இன்று (வெள்ளிக்–கிழமை) காலை 5 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரம், பரிவார தெய்வங்கள் மற்றும் மூலவமூர்த்திக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா, உருளையன் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சுந்தரேசன், ஆணையாளர் சிவசங்கரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பால்குட ஊர்வலமும், மதியம் 12.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.

    இரவு 8 மணிக்கு சிவகாமி சமேத நடராஜர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண நிகழ்ச்சியும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் சிறப்பு அதிகாரியும், புதுவை பொதுப்பணித்துறை என்ஜினீயருமான சண்முகம், திருப்பணி குழுவினர் மற்றும் தேவாங்ககுல மரபினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    ×