என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பிறந்த நாளுக்கு தந்தை லேப்டாப் வாங்கிதரததால் பல்கலைக்கழக மாணவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • பத்துக்கண்ணு சவுந்தர்யா கோல்டன் சிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் முத்துராமன்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பத்துக்கண்ணு சவுந்தர்யா கோல்டன் சிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் முத்துராமன். இவர் கோரிமேட்டில் உள்ள உணவு மற்றும் மருந்து ஆய்வு துறையில் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார்.

    இவரது மூத்த மகன் மாறன் (வயது 19). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். மாறன் சிறு வயது முதலே பிடிவாதம் கொண்டவர். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் தந்தையிடம் பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுக்குமாறு வலியுறுத்துவார். அப்படி வாங்கித் தராவிட்டால் பிரச்சனை செய்வார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாளின் போது மாறனுக்கு அவரது தந்தை புதியதாக சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். அதனை மாறன் மட்டுமே உபயோகப் படுத்தி வந்தார். அவரது சகோதரர் யோகேஸ்வரனுக்கு சைக்கிளை கொடுக்க மாட்டார். ஒரு முறை சைக்கிளை யோகேஸ்வரன் ஓட்டியபோது இதனை பார்த்த மாறன் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார். அதுபோல் ஒரு பிறந்தநாளின் போது தந்தை செல்போன் வாங்கித் தராததால் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இந்த நிலையில் இந்த வருட பிறந்த நாளுக்கு லேப்டாப் வாங்கித் தரும்படி தனது தந்தையிடம் மாறன் வலியுறுத்தி வந்தார். அதற்கு அவரது தந்தையும் ஒரு சில நாட்களில் வாங்கித் தருவதாக உறுதியளித்தார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மாறன் நான் கேட்ட உடனேயே தந்தை லேப்டாப் வாங்கிதரவில்லையே என விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இரவு வழக்கம் போல் மாறன் சாப்பிட்டு விட்டு வீட்டு மாடிக்கு தூங்க சென்றார். எதச்சையாக அவரது பெரியப்பா மகன் ராஜகிரி மாடிக்கு சென்று மாறனை பார்க்க சென்றார். அப்போது மயக்க நிலையில் இருந்த மாறனிடம் ராஜகிரி விசாரித்த போது லேப்டாப் வாங்கி தராததால் தந்தையை மிரட்ட எலி மருந்து தின்று விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜகிரி உடனடியாக இது பற்றி தனது சித்தப்பா குடும்பத்தாரிடம் கூறினார். பின்னர் உடனடியாக மாறனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாறன் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது தந்தை முத்துராமன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஊசுடு தொகுதி ராகவேந்திரா நகரில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் உறுதி அளித்தார்.
    • குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் குருமாம்பேட் ராகவேந்திரா நகரில் பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் குருமாம்பேட் ராகவேந்திரா நகரில் பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.

    பொது மக்கள் ஆர்வமாக வந்து வாய்மொழியாகவும், மனுக்கள் மூலமாகவும் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமாரிடம் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து புகார் அளித்தனர்.

    அவர்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் ராகவேந்தர் நகரில் சாலை அமைக்க 35 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கான பூமிபூஜை விரைவில் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும் அந்த பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் எனவும், எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்குகளை சரி செய்து உடனடியாக எரிய வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

    இந்த பொதுமக்கள் குறைகேட்பு சந்திப்பின்போது ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் தியாகராஜன், மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசின் அனுமதி இல்லாததால் பயணிகளை இறக்காமல் கப்பல் திரும்பிச்சென்றது.
    • கடல் பகுதியில் உலா வர மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதால், சொகுசு கப்பல் புதுவையை ஒட்டிய கடலோர பகுதியில் உலா வந்து சென்றது.

    புதுச்சேரி:

    சென்னை-விசாகப்பட்டினம்-புதுவை இடையே இயங்கும் தனியார் சொகுசு கப்பலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

    சென்னையில் இருந்து புறப்படும் கப்பல் ஆழ்கடலுக்கு சென்று நங்கூரமிட்டு நிற்கும். பின்னர் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கு வந்து பயணிகளை இறக்கி நகரை சுற்றிப்பார்த்த பின் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கப்பலில் கேசினோ என்னும் சூதாட்டங்கள் உள்ளதால் புதுவைக்கு வர அனுமதி அளிக்கக் கூடாது என ஆளும் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    கவர்னர் தமிழிசையும், கலாச்சார சீர்கேடு தொடர்பான் எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்காது. கப்பலில் சூதாட்டங்கள் ஏதும் இல்லை என்றால் அதை அனுமதிப்போம். சொகுசு கப்பலுக்கு அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    கடந்த 10-ந் தேதி புதுவை கடல் பகுதியில் சொகுசுகப்பல் நிறுத்தப்பட்டது. கடற்கரையிலிருந்து பொதுமக்கள் பிரம்மாண்ட கப்பலை கண்டுகளித்தனர்.

    புதுவை அரசின் அனுமதி இல்லாததால் பயணிகளை இறக்காமல் கப்பல் திரும்பிச்சென்றது. ஆழ்கடலுக்குள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பல் இன்று அதிகாலை மீண்டும் புதுவை கடலோர பகுதிக்கு வந்தது.

    கடற்கரை சாலை காந்தி திடலின் பின்புறம் கடலில் உலா வந்த சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் புதுவையின் அழகை ரசித்தனர். அரசின் அனுமதி இல்லாததால் புதுவை எல்லையில் நங்கூரமிட்டு கப்பலை நிறுத்தாமல் ஆழ்கடலுக்கு திரும்பிச்சென்றனர்.

    கடல் பகுதியில் உலா வர மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதால், சொகுசு கப்பல் புதுவையை ஒட்டிய கடலோர பகுதியில் உலா வந்து சென்றது.

    புதுவை அரசின் அனுமதி கிடைக்காததால் சொகுசு கப்பல் நிறுவனத்தினர், அடுத்த பயணத்தின் போது கடலூரில் கப்பலை நிறுத்தவும், அங்கிருந்து பயணிகளை பஸ்களில் ஏற்றி புதுவைக்கு அழைத்து வந்து சுற்றிப் பார்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • புதுவை சக்திநகரில் தாய்-மகளை தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • சம்பவத்தன்று இவரும் அவரது மகள் அங்காள பரமேஸ்வரியும் தங்களது வீட்டில் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி சூரியகலா (வயது56).

    சம்பவத்தன்று இவரும் அவரது மகள் அங்காள பரமேஸ்வரியும் தங்களது வீட்டில் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சூரியா கலாவையும், அவரது மகள் அங்காள பரமேஸ்வரியையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    இதனை சூரிய கலா தட்டிக்கேட்ட போது அவரை சீனிவாசன் மற்றும் கஸ்தூரி, அவரது மகள் மற்றும் கிச்சனா ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.

    மேலும் அங்காள பரமேஸ்வரியையும் அவர்கள் தாக்கினர். இதில் வலி தாங்காமல் தாய்-மகள் அலறவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்தும் சீனிவாசன் உள்பட அவரது தரப்பினர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சூர்யகலா மற்றும் அவரது மகள் அங்காளபரமேஸ்வரி ஆகிய இருவரும் ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து சூரியகலா உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுகுடித்து விட்டு ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி-கேண்டீன் வீதி சந்திப்பில் 2 பேர் மது குடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரகளை செய்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குயவர்பாளையம் டி.ஆர்.நகரை சேர்ந்த கமல்ராஜ்(வயது41) மற்றும் பழைய சாரம் பகுதியை சேர்ந்த குமார்(44) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் ஒருவர் குடிபோதையில் நின்றுக்கொண்டு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்களை கிண்டல் செய்தார்.

    இதுபற்றி மேட்டுப்பாளையம் போலீ சாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு பெண்களை கிண்டல் செய்த வரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் முத்திரையர்பாளையம் காந்திதிருநல்லூர் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த மகாதேவா பாண்டா(42) என்பது தெரியவந்தது. இதையடுத்து மகாதேவா பாண்டாவை போலீசார் கைது செய்தனர்.

    • தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் வீடு கட்டித்தரப்படும் என லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
    • இவர் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி, ஆதிங்கப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமு (வயது 60), கூலி தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவி அருகில் இருந்த பாரதிராஜா வீட்டின் மேல் கூரை வீட்டில் வசித்து வந்த கோவிந்தன் என்பவரின் குடிசை வீடும் தீக்கிரையானது.

    இதில் சோமு, கோவிந்தன் ஆகியோரது வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, துணி வகைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றவை தீயில் எரிந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    தகவலறிந்த லட்சுமிகாந்தன் எம். எல். ஏ. நேரில் சென்று, பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு பாதித்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மேலும் விரைவில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

    அரசு மற்றும் தனது சொந்த செலவில் துணி வகைகள், அரிசி மற்றும் பண உதவிகள் செய்தார். இதில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்ச் சங்கத் தலைவருக்கு குறள் நெறிக் காவலர் விருது வழங்கப்பட்டது.
    • வி.முத்துவுக்கு குறள் நெறிக் காவலர் விருதினை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் துணை வேந்தர்திருவள்ளுவன் வழங்கினார்.

    புதுச்சேரி:

    திருச்சி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் மாநாடு நடந்தது. மாநாட்டில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்துவுக்கு குறள் நெறிக் காவலர் விருதினை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர்திருவள்ளுவன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், திருக்குறள் புலவர் நாவை சிவம், பேராசிரியர் கடவூர் மணிமாறன், தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச் செயலாளர் உடையார்கோவில் குணா, கவிமாமணி துரை. ராசமாணிக்கம், துரைமுருகன், நெல்லை சுப்பையா, கவிஞர் தாமரைப்பூவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்டத்திலிருந்து தென் பெண்ணையாற்றில் நீந்தி இங்கு வந்து மதுபிரியர்கள் மது குடித்து விட்டு செல்கிறார்கள்.
    • பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் கிராமத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் 11 மதுக்கடை மற்றும் சாராயக்கடைகள் இருந்து வருகிறது.

    புதுச்சேரியின் நெற்கள ஞ்சியமாக விளங்கும் பாகூர் பகுதி தற்போது மது பார்களின் களஞ்சியமாக மாறியுள்ளது. கடலூர் மாவட்டத்தை ஒட்டி பாகூர் பகுதி இருந்து வருவதால், கடலூர் பகுதி மது பிரியர்களுக்கு ஏதுவாக மதுக்கடைகள், சாராயக்கடை. கள்ளுக்கடைகள் ஏராளமாக இங்கு உள்ளன.

    கடலூர் மாவட்டத்திலிருந்து தென் பெண்ணையாற்றில் நீந்தி இங்கு வந்து மதுபிரியர்கள் மது குடித்து விட்டு செல்கிறார்கள்.

    இங்குள்ள மதுக்கடைகளை நகைக்கடை போல அலங்கரித்து, மது பிரியர்களை உற்சாகப்படுத்திய உள்ளனர்.

    மேலும் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களை அறிவித்து விருகின்றனர். குறிப்பாக பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் கிராமத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் 11 மதுக்கடை மற்றும் சாராயக்கடைகள் இருந்து வருகிறது.

    எவ்வளவு கடைகள் வந்தாலும் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனால் பல சிறு, சிறு திண்பண்டம் கடைகள் உருவாகி வருகிறது. தமிழகப் பகுதியான கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறைந்த விலையில் புதுவை பகுதியில் மது கிடைப்பதாலும் பலவகையான மது கிடைப்பதாலும் கூட்டாளிகளுடன் மது வாங்கி விலை நிலத்திலும் காலிமனை பிரிவிலும் குடித்துவிட்டு அங்கேயே பாட்டிலை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.

    இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் நன்கு விளைந்த நிலங்களை மனைக்காக விற்பது அல்லது விவசாயத்தை நிறுத்தி காலி நிலமாக வைத்துள்ளனர்.

    • மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து காங்கிரஸ் கோர்ட்டுக்கு செல்லும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    • இத்தகைய போக்கு எதிர்காலத்தில் பா.ஜனதாவுக்கும் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவற்றை பயன்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மாநிலங்களில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய போக்கு எதிர்காலத்தில் பா.ஜனதாவுக்கும் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக பகுதியில் உள்ள ஆதீனங்கள் அரசியல் செய்ய தொடங்கியுள்ளனர். அவர்கள் மத கடமைகளை விட்டுவிட்டு அரசியல் செய்வது இந்து மத கோட்பாடுகளுக்கு இழுக்கை ஏற்படுத்தும் . ஆதீனங்கள் தங்கள் பதவி பொறுப்புகளிலிருந்து விலகி அரசியல் செய்ய வேண்டும். ஆதீனங்கள் அரசியல் செய்வதை ஏற்க முடியாது.

    மின்துறை தனியார்மயமாக்கும் கோப்பை ரகசியமாக அனுப்பியுள்ளனர். அதுபற்றிய தகவல்கள் ஏதும் மின்துறையில் இல்லை. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற இருக்கிறோம். மேலும் காங்கிரஸ் மூத்த வக்கீல்களுடன் கலந்து பேசி கோர்ட்டுக்கு செல்வதற்கு முடிவெடுப்போம்.

    சம்பளம் கேட்டு போராடிய விற்பனை குழு உறுப்பினர்கள் 14 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். உரிமைக்காக போராடிய ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். சம்பளம் வழங்கினால் அவர்கள் ஏன் போராட்டம் நடத்த போகிறார்கள்.?

    புதுவை காரைக்காலில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையின் குண்டு கலாச்சாரம் மாகியிலும் பரவியுள்ளது. மாகியில் குண்டுகள் கைப்பற்றப் பட்டுள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, நிலம், வீடு அபகரிப்பு ஆகியவை நாள்தோறும் நடக்கிறது. இதனால் புதுவையின் அமைதி குலைந்துள்ளது.

    ரேசன் அரிசியை பாழாக்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.பா.ஜனதா செய்தி தொடர்பாளர் இஸ்லாமிய இறை தூதரை விமர்சித்து பேசியது உலக அளவில் இந்தியாவுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • நோணாங்குப்பம் படகு குழாமில் கர்ப்பிணிகள்-ஊனமுற்றோருக்கு நுழைவு கட்டணம் இல்லை என்று சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
    • லே கபே மீண்டும் திறக்கப்படும் வரை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மற்ற இடங்களில் செயல்படும் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்

    புதுச்சேரி:

    புதுவை அரசு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் ஜார்ஜ் கே மாரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை கடற்கரை சாலை லேகபே உணவகம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் உணவகத்தின் சேவைகள், செயல்பாடுகள் பொது மக்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லே கபே மீண்டும் திறக்கப்படும் வரை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மற்ற இடங்களில் செயல்படும் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

    வரும் காலங்களில், கடற்கரையில் உள்ள சீகல்ஸ், நோணாங்குப்பம் படகு இல்ல வளாக உணவகம் ஆகியவை பொதுமக்களின் வசதிக்காக நாள் முழுவதும் செயல்படும். அரசின் வழிகாட்டுதலின்படி மதுபானங்களும் விற்பனை செய்யப்படும். நோணாங்குப்பம் படகு குழாமில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி 6 மணி முதல் தொடங்கப்படும்.

    6 மணி முதல் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அனுமதிக்கப்படுவர். கர்ப்பிணிப் பெண்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் சுண்ணாம்பார் படகு இல்லத்தில் நுழைவு கட்டணம் இல்லை. மேற்கண்ட நடவடிக்கைகள் சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதோடு, பார்வை யாளர்களுக்கு கூடுதல் வசதியும் கொடுக்கும்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 2 கம்பெனிகளின் மின் இணைப்பு துண்டித்துள்ளது.
    • புதுவை அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது

    புதுச்சேரி:

    புதுவை அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

    இந்த தடை ஆணையை அமல்படுத்த உள்ளாட்சி துறை கொம்யூன் ஆணையர்கள், தாலுக்கா தாசில்தார் அடங்கிய குழுக்களை அரசு அமைத்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

    இருப்பினும் இவற்றின் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. கிராமப்புறங்களில் மறைமுகமாக இத்தகைய தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக இயங்குவது கன்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மின் இணைப்புகளை புதுவை மாசுக்கட்டுப்பாடு குழுமம் புகாரின் பேரில் மின்துறை துண்டித்து வருகிறது.

    இதுபோல் வில்லியனூரை அடுத்த சேந்தமங்களம் கிராமத்தில் 2 தொழிற்சாலைகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வந்ததாக புகார் வந்தது.

    அதன் அடிப்படையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து. அந்த 2 தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்க, மற்றும் வணிக உரிமத்தை ரத்து செய்ய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், விதி 5-ன்படி, சுற்றுச்சூழல் செயலாளர் ஸ்மித்தா உத்தரவிட்டார்.

    • இளைஞர்களை சீரழிக்கும் சூதாட்ட கப்பலை தொடர்ந்து எதிர்ப்போம்அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    • சூதாட்ட கப்பலில் இருந்து பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ முதல்-அமைச்சர் அனுமதி வழங்காததால் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திருப்பி அனுப்ப ப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட சூதாட்ட கப்பலில் இருந்து பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ முதல்-அமைச்சர் அனுமதி வழங்காததால் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திருப்பி அனுப்ப ப்பட்டது. இதற்கு கவர்னர், முதல் -அமைச்சர் ரங்கசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழக தி.மு.க. அரசு புதுவை நிர்வாகத்தில் தேவையற்ற முறையில் குறுக்கீடு செய்வது தவறான ஒன்றாகும்.

    புதுவையில் சுற்றுலா என்ற பெயரில் கப்பல்கள் வருவதற்கு எந்தவித தடையும் இல்லை.

    ஆனால் சுற்றுலா என்ற பெயரில் இளைஞர்களை சீரழிக்கும் சூதாட்ட கப்பலுக்கு அ.தி.மு.க. எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கும்.

    ஒரு வேளை சொகுசு கப்பல் நிறுவனம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதுவை அரசை மிரட்டி அனுமதி பெற்றால் தலைமையின் அனுமதி பெற்று புதுவை அ.தி.மு.க. எதிரான முடிவை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×