என் மலர்
நீங்கள் தேடியது "Lakshmikanthan M.L.A. Confident"
- தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் வீடு கட்டித்தரப்படும் என லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
- இவர் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி, ஆதிங்கப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமு (வயது 60), கூலி தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவி அருகில் இருந்த பாரதிராஜா வீட்டின் மேல் கூரை வீட்டில் வசித்து வந்த கோவிந்தன் என்பவரின் குடிசை வீடும் தீக்கிரையானது.
இதில் சோமு, கோவிந்தன் ஆகியோரது வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, துணி வகைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றவை தீயில் எரிந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
தகவலறிந்த லட்சுமிகாந்தன் எம். எல். ஏ. நேரில் சென்று, பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு பாதித்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் விரைவில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
அரசு மற்றும் தனது சொந்த செலவில் துணி வகைகள், அரிசி மற்றும் பண உதவிகள் செய்தார். இதில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






