என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு -   அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் உறுதி
    X

    ஊசுடு தொகுதி ராகவேந்திரா நகர் பொது மக்களிடம் அமைச்சர் சாய். ஜெ. சரவணன் குமார் குறைகளை கேட்டறிந்த போது எடுத்த படம்.

    குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் உறுதி

    • ஊசுடு தொகுதி ராகவேந்திரா நகரில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் உறுதி அளித்தார்.
    • குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் குருமாம்பேட் ராகவேந்திரா நகரில் பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் குருமாம்பேட் ராகவேந்திரா நகரில் பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.

    பொது மக்கள் ஆர்வமாக வந்து வாய்மொழியாகவும், மனுக்கள் மூலமாகவும் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமாரிடம் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து புகார் அளித்தனர்.

    அவர்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் ராகவேந்தர் நகரில் சாலை அமைக்க 35 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கான பூமிபூஜை விரைவில் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும் அந்த பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் எனவும், எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்குகளை சரி செய்து உடனடியாக எரிய வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

    இந்த பொதுமக்கள் குறைகேட்பு சந்திப்பின்போது ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் தியாகராஜன், மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×