என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
சூதாட்ட கப்பலை தொடர்ந்து எதிர்ப்போம்- அன்பழகன் அறிக்கை
- இளைஞர்களை சீரழிக்கும் சூதாட்ட கப்பலை தொடர்ந்து எதிர்ப்போம்அன்பழகன் தெரிவித்துள்ளார்.
- சூதாட்ட கப்பலில் இருந்து பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ முதல்-அமைச்சர் அனுமதி வழங்காததால் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திருப்பி அனுப்ப ப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட சூதாட்ட கப்பலில் இருந்து பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ முதல்-அமைச்சர் அனுமதி வழங்காததால் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திருப்பி அனுப்ப ப்பட்டது. இதற்கு கவர்னர், முதல் -அமைச்சர் ரங்கசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக தி.மு.க. அரசு புதுவை நிர்வாகத்தில் தேவையற்ற முறையில் குறுக்கீடு செய்வது தவறான ஒன்றாகும்.
புதுவையில் சுற்றுலா என்ற பெயரில் கப்பல்கள் வருவதற்கு எந்தவித தடையும் இல்லை.
ஆனால் சுற்றுலா என்ற பெயரில் இளைஞர்களை சீரழிக்கும் சூதாட்ட கப்பலுக்கு அ.தி.மு.க. எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கும்.
ஒரு வேளை சொகுசு கப்பல் நிறுவனம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதுவை அரசை மிரட்டி அனுமதி பெற்றால் தலைமையின் அனுமதி பெற்று புதுவை அ.தி.மு.க. எதிரான முடிவை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






