என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிளாஸ்டிக் கம்பெனியில் மின் துண்டிப்பு
    X

    வில்லியனூர் பகுதியில் இயங்கி வந்த பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையை சுற்றுச்சூழல் சீனியர் செயற்பொறியாளர் ரமேஷ் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    பிளாஸ்டிக் கம்பெனியில் மின் துண்டிப்பு

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 2 கம்பெனிகளின் மின் இணைப்பு துண்டித்துள்ளது.
    • புதுவை அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது

    புதுச்சேரி:

    புதுவை அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

    இந்த தடை ஆணையை அமல்படுத்த உள்ளாட்சி துறை கொம்யூன் ஆணையர்கள், தாலுக்கா தாசில்தார் அடங்கிய குழுக்களை அரசு அமைத்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

    இருப்பினும் இவற்றின் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. கிராமப்புறங்களில் மறைமுகமாக இத்தகைய தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக இயங்குவது கன்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மின் இணைப்புகளை புதுவை மாசுக்கட்டுப்பாடு குழுமம் புகாரின் பேரில் மின்துறை துண்டித்து வருகிறது.

    இதுபோல் வில்லியனூரை அடுத்த சேந்தமங்களம் கிராமத்தில் 2 தொழிற்சாலைகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வந்ததாக புகார் வந்தது.

    அதன் அடிப்படையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து. அந்த 2 தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்க, மற்றும் வணிக உரிமத்தை ரத்து செய்ய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், விதி 5-ன்படி, சுற்றுச்சூழல் செயலாளர் ஸ்மித்தா உத்தரவிட்டார்.

    Next Story
    ×