என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தாய்-மகள் மீது தாக்குதல்
    X

    கோப்பு படம்

    தாய்-மகள் மீது தாக்குதல்

    • புதுவை சக்திநகரில் தாய்-மகளை தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • சம்பவத்தன்று இவரும் அவரது மகள் அங்காள பரமேஸ்வரியும் தங்களது வீட்டில் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி சூரியகலா (வயது56).

    சம்பவத்தன்று இவரும் அவரது மகள் அங்காள பரமேஸ்வரியும் தங்களது வீட்டில் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சூரியா கலாவையும், அவரது மகள் அங்காள பரமேஸ்வரியையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    இதனை சூரிய கலா தட்டிக்கேட்ட போது அவரை சீனிவாசன் மற்றும் கஸ்தூரி, அவரது மகள் மற்றும் கிச்சனா ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.

    மேலும் அங்காள பரமேஸ்வரியையும் அவர்கள் தாக்கினர். இதில் வலி தாங்காமல் தாய்-மகள் அலறவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்தும் சீனிவாசன் உள்பட அவரது தரப்பினர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சூர்யகலா மற்றும் அவரது மகள் அங்காளபரமேஸ்வரி ஆகிய இருவரும் ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து சூரியகலா உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×